திண்ணை

சூரிய கதிர் பதில்கள் 16.2.2012
பிரவீன்குமார், நெல்லை.

சங்கரன்கோவில் இடைத் தேர்தல் தொடர்பான தி.மு.க. ஆலோசனைக் கூட்டத்தை கட்சியின் பொருளாளரான மு.க.ஸ்டாலின் புறக்கணித்தது சரியானதா?

அது அவர்களுடைய உட்கட்சிப் பிரச்சினை. நமக்கு சம்பந்தமில்லாதது.

கணேசன், திருப்பத்தூர்.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் ப சிதம்பரத்தை இணைக் குற்றவாளியாக்கி விசாரிக்கத் தேவையில்லை என்று சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்திருக்கிறதே?

ராசாவை ஒரு கட்டத்துக்கு மேல் தடுக்காமல் விட்டதுதான் சிதம்பரத்தின் குற்றம். மன்மோகன்சிங்கின் குற்றம். ஆனால் சட்ட்ப்படி அது குற்றமல்ல. அப்படி தடுக்காமல் விட்டதற்கு இவர்களுக்கு உள் நோக்கமும் இருந்து இவர்களும் லஞ்சம் வாங்கியிருந்ததாக நிரூபிக்கமுடியுமானால் மட்டுமே இவர்களும் குற்றவாளிகளாக நீதிமன்றத்தின் முன்பு  நிறுத்தப்படும் வாய்ப்பு உண்டு.  இப்போது இல்லை.

முனுசாமி, விழுப்புரம்.

நாக்கைக் கடித்து எதிர்த் தரப்பை எச்சரிப்பது போல விஜயகாந்த் நடந்து கொண்டது அரசியலில் அவருக்குப் போதிய பக்குவம் இல்லாததையே காட்டுகிறது என்கிறாரே திருமாவளவன்?

உண்மைதான். அரசியலில் நேரில் சிரித்துக் கொண்டே பேசிவிட்டு பின்னர் அடியாட்களையும் ஆட்டோக்களையும் அனுப்புவதுதான் பக்குவமாகக் கருதப்படும்.

முத்துவேல், சென்னை.

2.ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக நிதி அமைச்சக அறிவுரைகளை ஆ. ராசா நிராகரித்தார் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ள கருத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி எதிர்ப்புத் தெரிவித்துள்ளாரே?

அது ஒன்றும் கபில் சிபல் கண்டுபிடித்த விஷயம் அல்ல. உச்ச நீதிமன்றமே அதைச் சொல்லியிருக்கிறது. அதற்கு ஏன் கருணாநிதி கடும் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கிறார் ?

கோபால், மதுரை.

ப.சிதம்பரத்துக்கு சாதகமாக சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டதாலேயே மத்திய அரசு மீதான ஊழல் கறை மறைந்துவிடாது என்று பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கருத்துத் தெரிவித்திருக்கிறாரே?

ஸ்பெக்ட்ரம் ஊழல் நிச்சயம் மத்திய அரசு மீதான கறைதான். காங்கிரஸ் மட்டுமல்ல, பி.ஜே.பியும் இதற்குப் பொறுப்பு. அவர்கள் காலத்திலேயே இதற்கான விதைகள் போடப்பட்டுவிட்டன.

கருணாகரன், சென்னை.

மு.க.ஸ்டாலினை தி.மு.க.வின் அடுத்த தலைவராக முன்னிறுத்துவதை அக்கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன், சேலம் மாவட்ட செயலாளர் வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர் வெளிப்படையாக எதிர்த்துள்ளனரே?

அழகிரியை சமாதானம் செய்ய இப்போதைக்கு இது நடந்திருக்கலாம். ஆனால் தி.மு.கவுக்குள் அடுத்த தலைவர் ஸ்டாலினா, அழகிரியா என்று ரகசிய தேர்தல் வைத்தால் ஸ்டாலினுக்கே வாய்ப்பு மிக அதிகம்.

வெங்கட், சென்னை.

என் மனைவிகள் கூட தீவிர அரசியலிலிருந்து நான் ஓய்வெடுக்க வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள், கருணாநிதி கூறியுள்ளாரே? அவரை ஓய்வெடுக்க சொல்லுங்கள் என  ஓ.பக்கங்களில் நீங்கள் தானே முதலில் இந்த வார்த்தையை துவக்கிவைத்தீர்கள்?

நான் அவரை முதல்வர் பொறுப்பிலிருந்து ஓய்வு எடுத்துக் கொண்டு கட்சிப்பணியை மட்டும் கவனிக்கச் செல்லும்படி எழுதியது சுமார்

ஐந்தரை ஆண்டுகளுக்கு முன்பு. அப்போதே அவர் அதைச் செய்திருந்தால், கனிமொழி கவிஞராக மட்டுமே இருந்திருப்பார். ஸ்பெக்ட்ரம் ஊழல் நடக்காமலே கூட போயிருக்கலாம். அரசியல் வேறு திசையில் மாறியிருந்திருக்கலாம்.

பாலசுப்ரமணியம், திருநெல்வேலி.

“சி.பி.ஐ நீதிமன்றத் தீர்ப்பு எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் நான் மேல் முறையீடு (அப்பீல்) செய்வேன். சிபிஐ நீதிமன்ற தீர்ப்பால் நான் ஏமாற்றம் அடைய வில்லை. மேல் முறையீட்டில் தீர்ப்பு மாறும் என்று உறுதியாக நம்புகிறேன்,” என்கிறாரே சுப்ரமணியசாமி?

சுப்பிரமணியன் சுவாமி பத்து விஷயம் சொன்னால் அதில் ஒன்று நடக்கும். மீதி ஒன்பது என்ன ஆயிற்று என்றே தெரியாமல் போய்விடும். ராசாவுக்கு அடுத்த கைது தயாநிதி என்றும் அதற்கு அடுத்த மாதம் சிதம்பரம் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். தயாநிதி பற்றி இப்போதெல்லாம் பேசுவதே இல்லை.

செல்வம், தேனி.

வரும் 2016-ம் ஆண்டு தமிழகத்தில் பா.ம.க. ஆட்சிதான் என்பதில் சந்தேகம் வேண்டாம் என்கிறாரே ராமதாஸ் ?

நிச்ச்யம் சாதிக்கக்கூடியதுதான். எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அதன் பெயரை பா.ம.க என்று மாற்றிவிட்டால் போதுமே. இரண்டு மந்திரி பதவி கொடுத்தால், பெயரை விட்டுக் கொடுக்க ராமதாஸ் சம்மதக் கடிதம் கொடுத்துவிடப் போகிறார், இல்லையா? வேறு வழி எதுவும் எனக்குத் தெரியவில்லை.

செந்தில், சென்னை.

சட்டப்பேரவைக்கே வராமலேயே வெளியே இருந்து விமர்சனம் செய்து கொண்டிருப்பதை எப்போது நிறுத்தப்போகிறார் கருணாநிதி?

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரோடும் இருக்கும் அரசியல் வேறுபாட்டை தனிப்பட்ட பகையாக நினைப்பதை அவர் தொடங்கிய காலத்திலிருந்து இந்த சிக்கல் தொடர்கிறது. இவர் வந்தால் அவர் வரமாட்டார். அவர் வந்தால் இவர் வரமாட்டார் என்ற நிலையை ஏற்படுத்திவிட்டார்கள். இது ஆரோக்கியமான அரசியலே அல்ல.

யோகநாதன், திருச்சி.

நம்மிடையே ஒற்றுமை இல்லாததால்தான் சட்டசபைத் தேர்தலிலும், பின்னர் வந்த உள்ளாட்சித் தேர்தலிலும் தோல்வி அடைய நேரிட்டது என்கிறாரே கருணாநிதி? குடும்ப ஆட்சியும், ஊழலும் தான் தோல்விக்கு காரணம் என அவருக்கு இன்னமும் புரியவில்லையே ஏன்?

அவர் நம்மிடையே ஒற்றுமை இல்லை என்று சொல்வது சரிதான். நீரா ராடியா டேப் பேச்சுக்களைக் கேட்டாலே தெரியுமே. ஸ்டாலின், அழகிரி, மாறன்கள், கனிமொழி எல்லாரும் ஆளுக்கு ஒரு திசையில் தனித்தனியே இயங்காமல், ஒற்றுமையாக இருந்திருந்தால் , எல்லாரும் சேர்ந்தே ஸ்பெக்ட்ரம் ஊழலை செய்திருக்கலாமே. அது அப்போது வெளியே வந்திருக்கும் வாய்ப்பும் குறைந்திருக்கும். வந்தாலும், சேர்ந்து எதிர்த்திருக்கலாம்.

சிவராம், சென்னை.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது உறுதி என்கிறாரே அத்வானி? இதைத்தவிர வேறு அரசியல் அவருக்கு தெரியாதா? ஒரே பல்லவியை பாடிக்கொண்டிருக்கிறாரே?

மதவெறியைத் தூண்டிவிட்டே ஓட்டு வாங்கிப் பதவிக்கு வந்த கட்சியின் தலைவரால் வேறு என்ன சிந்திக்க முடியும் ? மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என்று கட்சியில் ஒரு பிரிவினர் சொல்லும் நிலையில், அத்வானி மதவெறியில்தானே மோடியுடன் போட்டி போடமுடியும் ?

ஜீவானந்தம், சென்னை.

சிறப்பாக செயல்படாத ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிப்பதற்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளதே?

நல்ல திட்டம். ஆனால் அவர்களுக்கு பென்ஷன் சலுகைகள் எல்லாம் அப்படியே இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது சரியல்ல. திறமையற்றவர்கள், சரியாக செயல்படாதவர்கள் என்று வேலை நீக்கம் செய்தபின் எதற்கு பென்ஷன் தரவேண்டும் ?

வெண்ணிலா, கரூர்.

எனது கணவர் ஒரு பிசினஸ்மேன். அதில் அவர் மகிழ்ச்சியாகவே இருக்கிறார். எனவே அரசியலுக்கு வர மாட்டார் என்று ராபர்ட் வதேராவின் மனைவியான பிரியங்கா கூறியுள்ளாரே?

அப்படியே இருந்தால் நமக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் பிசினெஸ்மேன் என்பதால், வியாபரம் நடத்த ஏற்ற புது துறையாக இருக்கிறது, இதில் போய் கொஞ்சம் பிசினெஸ் செய்து பார்ப்போமே என்று வதேரா நினைக்காமல் இருந்தால் நல்லது.

விஸ்வநாதன், திருப்பூர்.

ஆ.ராசா குற்றம் செய்தார் என நாங்கள் கூறவில்லை என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியிருப்பதை கவனித்தீர்களா?

நீதிமன்றம் தண்டித்தபிறகும் கூட தி.மு.கவுடன் கூட்டணி தொடருமானால் அப்போதும் சிங்வி இதையே சொல்வார். “ராசா குற்றம் செய்தார் என்று நாங்கள் சொல்லவில்லை. நீதிமன்றம்தான் சொல்கிறது.”

நேசமணி, சென்னை.

விஜயகாந்த் கட்சி சட்டசபையில் எதிர்க்கட்சியாக இருந்தாலும், சரியான எதிர்கட்சியாக செயல்படவில்லை. தி.மு.க. தான் உண்மையில் எதிர்க்கட்சியாக செயல்படுகிறது என்று இல.கணேசன் கூறியிருக்கிறாரே?

அதில் ஆச்சரியம் இல்லை. விஜய்காந்த்திடம் இருப்பது சுமார் 10 சதவிகித ஓட்டு. தி.மு.கவிடம் இருபதுக்கு மேல் இருக்கிறது. மக்களவை தேர்தலில் யார் முதுகிலாவது சவாரி செய்துதானே பி.ஜே.பி டெல்லிக்கு போக வேண்டும். அதனால் தேர்தல் வரும் வரை  மாறி மாறி தி.மு.கவையும் அ.தி.மு.கவையும் அட்ஜஸ்ட் செய்து பேசிக் கொண்டே இருப்பார்கள்.

சூரியக்கதிர் பிப்ரவரி 16,2012

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? மற்றும் எழுத்துலக அரசியல்
சென்ற வாரம் அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒபாமாவின் வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு நிகழ்வை என் கவனத்துக்குக் கொண்டுவந்தார் அமெரிக்கா வாழ் நண்பர் அருள்.  ஒரு சிறுவன் விளையாட்டு பீரங்கி போன்ற ஒன்றை இயக்கிக் கொண்டிருக்கிறான். அதிலிருந்து வீசப்படும் மிட்டாய்கள் எங்கே எவ்வளவு தொலைவு போகின்றன என்று கண்ணை அகல விரித்துக் கொண்டு குழந்தை போல ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கிறார் ஒபாமா.

வெள்ளை மாளிகையில் இரண்டாவது வருடமாக நடக்கும் சிறுவர் – இளைஞர்களின் அறிவியல் கண்டுபிடிப்புக் கண்காட்சியின்போது நடந்த நிகழ்ச்சி அது.  அமெரிக்காவின் பல மாநிலங்களிலிருந்து சுமார் 100 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுடைய கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. பள்ளிக்கூடங்களில் வழக்கமாக மாணவர்களுக்கு பயிற்சிக்காக நடத்தப்படும் அறிவியல் கண்காட்சி போன்றது அல்ல இது.

மாணவர்களின் கண்டுபிடிப்புகள் வியப்பூட்டுகின்றன.  லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த ஹேலீ  அமெரிக்காவின் காபிக் கடைகளில் சர்க்கரைப் பொடிகளை அடைத்துத் தரும் காகித பேக்கெட்டுகளுக்கு மாற்றைக் கண்டுபிடித்திருக்கிறாள்.  “ஸ்டார்பக்ஸ் கம்பெனியின் காபிக் கடைகளில் மட்டுமே  வருடத்துக்கு 20 லட்சம் பவுண்ட் குப்பை சேர்கிறது. இதை ஒழிக்க இந்தக் கண்டுபிடிப்பு உதவும் அதனால்தான் ஹேலிக்கு இந்த ஐடியாவை வியாபாரமாக மாற்ற மாஸ்டர் கார்ட் கம்பெனி பத்தாயிரம் டாலர் பரிசு அளித்திருக்கிறது.” என்று சொன்னார் ஒபாமா. ஹேலீ கண்டுபிடித்தது கரையக்கூடிய சர்க்கரைப் பை. உருளைக்கிழங்கு ஸ்டார்ச்சிலிருந்து தயாரித்தது. ஹேலீக்கு வயது 16 !

கான்சாஸ் நகரில் ஆறாவது படிக்கும்வெஸ்லியும் தாம்ப்சனும் மதிய சாப்பாடு எடுத்துச் செல்லும் டிபன் பாக்ஸை உருவாக்கியிருக்கிறரகள். இது வெறும் டிபன் பாக்ஸ் அல்ல. இதில் காலையில் வைத்த சாப்பாட்டை மதியம் எடுக்கும்போது சாப்பாடு கெடாமல் இருப்பதற்காக அல்ட்ரா வயலட் கதிர்கள் செயல்பட்டு உணவில் கிருமிகள் இல்லாமல் அழித்துவிடும்.

டென்னசி மாநிலத்தை சேர்ந்த மேரியானா ஆடு வளர்ப்பில் மரபியல் அறிவியலைப் பயன்படுத்தியிருக்கிறாள். தங்கள் பண்ணையில் வளர்க்கும் ஆடுகளின் ரோமம் செயற்கையான நிறத்தில் வளர்க்கப்படுவதை மாற்றி இயற்கையான நிறத்தில் வளர்வதற்கு மரபியல் கூறை ஆராய்ந்து மாற்றங்களை செய்திருக்கும் மேரியானாவுக்கு வயது 18.

அறிவியல் ஆய்வுகள் செய்து புதுக் கண்டுபிடிப்புகளைச் செய்ய மாணவர்களுக்கு தேவையான நிதியை அவர்கள் பல விதங்களில் திரட்டியிருப்பதை ஒபாமா தன் பேச்சில் சுட்டிக் காட்டுகிறார். டெக்சாஸ் மாநிலத்திலேயே வசதிக் குறைவான பகுதியான் பிரசிடோவில் மாணவர்கள் ராக்கெட் தொழில்நுட்ப ஆய்வு செய்தார்கள்.  ” இதற்கு பணம் திரட்டுவதற்கு, ஆசிரியர்கள் தின்பண்டங்கள் சமைத்து சர்ச் வாசலில் விற்றார்கள். ஒரு ஆட்டை ஏலம் விட்டார்கள். 200 மைல் தொலைவில் போய் மலிவாக உணவு வாங்கிவந்து லாபத்துக்கு விற்றார்கள்” என்று ஒபாமா சொன்னார்.

கடலில் எண்ணெய்க் கசிவுகள் ஏற்படுவதால் கடல் நாசமாவதை தடுக்க, ஒரு மாணவன்  ஒரு படகைக் கண்டுபிடித்திருக்கிறான். இந்த ஆளில்லாத படகை எண்ணெய்ப் படலம் உள்ள கடல்பரப்பில் இயக்கினால், அது அந்தப் படலத்தை நீரின் மேற்பரப்பிலேயே துடைத்து எடுத்துவிடும். இன்னொரு மாணவன் நியூயார்க்கைச் சேர்ந்த ஏய்டன் டையர் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கம்போது அதிக நேரம் சூரிய ஒளியைப் பெறுவது எப்படி என்று ஆய்வு செய்தான். மரங்களின் கிளைகள் மிக அதிக அளவு சூரிய ஒளியைப் பெற வசதியான வடிவத்தில் வளர்வதை கவனித்து அதைப் பின்பற்றி சோலார் பேனல்களை அமைத்தால் அதிக சூரிய ஒளிபெறமுடியும் என்று நிரூபித்திருக்கிறான்.கிளைகளின் அமைப்புகள் கணிதமுறையில் Fibonacci (ஃபிபனாச்சி) எண் அடிப்படையில் இருப்பதே அவன் ஆய்வுக்கு அடிப்படை.

( முதல் இரு  எண்களின் கூட்டுத்தொகையாக அடுத்த எண் இருப்பதே Fibonacci எண் வரிசை 0,1,1,2,3,5,8,13,21,34,55….. என்று போகும்.) இந்த சிறுவனுக்கு வயது13.

கலிபோர்னியா மாணவி ஏஞ்செலா புற்று நோயை குணப்படுத்தும் மருந்து நேரடியாக புற்று நோய்க்கான ஸ்டெம் செல்களுக்கே சென்று வேலை செய்ய வைப்பதற்கு நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஆய்வு செய்திருக்கிறாள். இந்த ஆய்வைத் தொடர்வதற்காக அவளுக்கு சீமென்ஸ் நிறுவனம் ஒரு லட்சம் டாலர் பரிசளித்திருக்கிறது. ஏஞ்செலாவின் வயது 17. ஜார்ஜியாவில் படிக்கும் இந்திய சிறுவன் ஆனந்த் சீனிவாசன் தன் மூளையின் மின்னனலைப் பதிவுகளிலிருந்து (EEG) எடுத்த தகவல்களைவைத்து கணினிக்கு ஒரு செயல் நிரலியை எழுதி அதைக் கொண்டு ஒரு ரோபோ கையை இயக்கமுடியுமா என்று ஆய்வு செய்திருக்கிறான். கை,கால், துண்டிக்கப்பட்டவர்கள், முடக்கு வாதத்தில் செயலிழந்தவர்களுக்கு இந்த கண்டுபிடிப்பு பயன் தரக் கூடும்.  ஆனந்தின் வயது 15. விரல்களில்லாத ஒரு சிறுமி எழுத உதவுவதற்காக செயற்கைக் கையை உருவாக்கியிருக்கும் அயோவாவைச் சேர்ந்த கேபி, மெக்கன்சி, கேட்மூவரும் நடுநிலைப்பள்ளி மாணவர்கள்.

நெவாடாவை சேர்ந்த டெய்லர் வில்சன், சிறு அளவில் அணுக் கதிரீயக்கமுள்ள பொருட்களை யாரேனும் எடுத்துச் சென்ரால் கண்டறியக்கூடியமானிட்டரை உருவாக்கியிருக்கிறான். துறைமுகங்களில் சரக்கு கண்ட்டெய்னர்களில்  யுரேனியம் 234, ஆயுதத்துக்கான புளூட்டோனியம்,செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருந்தால் இந்த மானிட்டர் சொல்லிவிடும். டெய்லரின் வயது 17.

ஜெசிகா, காட்டன், ஆனா மூவரும் உருவாக்கியிருப்பது புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடிழந்தோரை தங்க வைப்பதற்கான குடில். இதில் சுத்தமான குடி நீர், விளக்கொளி எல்லாம் மறுசுழற்சி முறையில் அமைக்கப்பட்டுள்ளன.

கலிபோர்னியா மாணவன் பெனெடிக்ட் விளையாட்டு வீரர்களின் ஹெல்மெட்டில் பொருத்த கண்டுபிடித்துள்ள கருவி, விளையாடும்போது ஹெல்மெட்டில் அடிபட்டால், அந்த அடி விளையாட்டு வீரரின் மூளையை பாதிக்கும் அளவு பலமானதா என்பதை உடனே கண்டறிந்து தெரிவித்துவிடும். உடனே வீரரை களத்திலிருந்து வெளியேற்றி சிகிச்சைக்கு அனுப்ப முடியும். இதே போல ராணுவ் அவீரர்களுக்கான் ஹெல்மெட்டுக்கான கருவியை வர்ஜீனியாவை சேர்ந்த ஜாக் டட்லியும் சிட்னி டயானியும் உருவாக்கியிருக்கிறார்கள். எல்லாரும் எட்டாவது படிக்கும் மாணவர்கள். பென்சில்வேனியா மாணவன் மரியன் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிப்பதற்காக விலை மலிவான கருவியை உருவாக்கியிருக்கிறான். இவன் வயது 17.

அமெரிக்காவில் ஸ்டெம் எனப்படும்  சயன்ஸ் (எஸ்), டெக்னாலஜி ( டி) , எஞ்சினீயரிங் ( ஈ), மேதமேட்டிக்ஸ் ( எம்) ஆகியவற்றைப் பயிற்றுவதற்கான ஒரு லட்சம் பள்ளி ஆசிரியர்களை உருவாக்க, ஒபாமா எட்டு கோடி டாலர்களையும் இந்தத் துறைக் கல்வியை மேம்படுத்த இன்னொரு 10 கோடி டாலர்களையும் ஒதுக்கியிருக்கிறார்.

பணம் மட்டுமே இதில் விஷயம் அல்ல. இந்தியாவில் சில சமயங்களில் இதை விட அதிக பணம் கூட ஒதுக்கப்படுகிறது. அணுகுமுறையே முக்கியமானது. கல்வித் துறையின் அமைச்சர்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆகியோரின மனநிலை பெரும்பாலும் கூலிக்கு மாரடிப்பதாகவே இருக்கிறது. விதிவிலக்கானவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

குழந்தைகளின் வாசிப்புப் பழக்கத்தை எடுத்துக் கொள்வோம். அமெரிக்காவில் பொது வாழ்க்கையில் இருக்கும் பல பிரபலங்கள் ஆரம்பப் பள்ளிக்கூடங்களுக்குச் சென்று குழந்தைகளுக்கு புத்தகம் வாசித்துக் காட்டி அவர்களையும் கூடவே படிக்கச் செய்யும் நிகழ்ச்சிகளில் கல்ந்துகொள்கிறார்கள். இது ஓர் இயக்கமாகவே அங்கே செயல்படுகிறது. பல குடிய்ரசுத் தலைவர்கள், அவர்களுடைய மனைவிகள், எழுத்தாளர்கள் இதைச் செய்கிறார்கள். அண்மையில் கூட ஒபாமா, டெக்சாஸ் கல்லூரியில் உரையாற்ற சென்றபோது அதற்கு முன்னர் ஒரு மழலையர் பள்ளியில் குழந்தைகளுக்குக் கதை படித்துக் காட்டினார். அவர்களின் வயது 5க்குக் கீழே. மொத்தம் எட்டே குழந்தைகள். அவரை சுற்றிலும் அரைவட்டமாக உட்கார படக்கதையைப் படித்தார். நம் நாட்டில் எண்ணூறு மாணவர்களை தன்னைச் சுற்றி உட்காரவைத்துக் கொண்டு போஸ் கொடுத்து இமேஜ் கட்டும் வேலை மட்டும்தான் நடந்திருக்கிறது. குடியரசு மாளிகையில் அறிவியல் கண்காட்சி ஏதும் நடந்ததும் இல்லை.

இந்தியாவிலும் இளம் விஞ்ஞானிகளுக்கான விருதுகள், பரிசுகள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் அவை அரசின் விஞ்ஞானத்துறையின் கீழ் உள்ள ஆய்வகங்கள் சார்ந்ததாகவும் உயர்கல்வி முடித்தவர்களுக்கானவையுமாகவே இருக்கின்றன. பெரும்பாலும் பெலோஷிப் என்ப்படும் உபகாரத் தொகைகள். அவை. பள்ளி மட்டத்திலேயே ஆய்வை ஊக்குவிக்கவும் உதவவும் கூடிய சூழல் இங்கு இல்லை.

சென்ற வருடம் மத்திய அரசின் கவுன்சில் ஃபார் சயன்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச்சின் பொன்விழா விருதுகள் சிறுவர்களுக்கானவை அறிவிக்கப்பட்டன. மொத்தம் வந்த கண்டுபிடிப்புகள் 353. இரண்டே பரிசுகள்தான் தரப்பட்டன. ரூ.பத்தாயிரம் பரிசுகள் பார்வையற்றோருக்கான இன்ஃப்ரா ரெட் கதிர் பயன்படுத்தி வழிகாட்டும் ஸ்மார்ட் கமபுகளை உருவாக்கிய டெல்லி மாணவன் சந்தனுவும், பைகள்,ஜெர்கின்களில் இருக்கும் ஸிப்புகளைப் பூட்டுவதற்கு புது மாடல் பூட்டை உருவாக்கியதற்காக பஞ்சாபைச் சேர்ந்த அன்கித் குமாரும் பெற்றனர். முதல் பரிசான ரூ 50 ஆயிரத்துக்கு தகுதியாக எந்தக் கண்டுபிடிப்பும் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

வெளிநாடுகளுக்கு நாம் ஏற்றுமதி செய்யும் மெத்தப் படித்த இளைஞர்களில் கூடப் பெரும்பாலோர் ஒரே வேலையை திரும்பத் திரும்ப சலிக்காமல் நேர்த்தியாக செய்து தரும் நல்ல வேலையாடகளாகவே தயாரிக்கப்பட்டிருக்கிறார்கள். உயர் ஆய்வுகள் செய்வதற்கான மனநிலை, துடிப்பு, உழைப்பு, அதற்கேற்ற வசதிகள், நெளிவு சுளிவான விதிமுறைகள்  முதலியவற்றுடன் நம் இளைஞர்கள் உருவாவதற்கேற்ற சுழல் இங்கே நம் பள்ளிகள் தொடங்கி பல்கலைக்கழகங்கள் வரை இல்லை.  இவற்றில் அக்கறை காட்டக்கூடிய அதிகாரிகள், அரசியல்வாதிகள் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவே இருக்கிறது. இன்னொரு பக்கம் நம்மிடம் இல்லாததே இல்லை; எல்லாம் இருந்தது என்று கற்காலப் பெருமைகள் பற்றிப் புலம்புவோரும் அதையும் மெய்யென நம்புவோருமாக ஒரு கூட்டம் இருக்கிறது. எப்போது, எப்படி மாற்றம் வரும் ? உங்களோடு சேர்ந்து நானும் ஏங்குகிறேன்.

இந்த வாரப் பூச்செண்டு:

விவாதத்துக்குரிய முடிவானாலும், திருப்பாலையில் தன் மகளிடம் முறைகேடாக நடக்க முயன்ற தந்தை வீரணனை தடுக்கத் தாக்கிய தாய் உஷாராணி மீது கொலைக் குற்றம் சுமத்தத் தேவையில்லை என்றும் இந்திய தண்டனைச் சட்டம் 100 மற்றும் 120-ன் பிரகாரம், ஒரு பெண் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் போராட்டத்தில் கொலை செய்ய நேரிட்டால், அது தண்டனைக்கு உரிய குற்றம் இல்லை என்பதால் இந்த பிரிவின்படி உஷாராணியை விடுதலை செய்கிறோம் என்றும் அறிவித்திருக்கும் காவல் அதிகாரி ஆஸ்ரா கர்க்கிற்கு இ.வா.பூ.

கல்கி 18.2.2012

எழுத்துலக அரசியல்

அண்மைக்காலமாக கடுமையாக தாக்கிப் பேசுவது, நையாண்டி செய்வது, போட்டி விளம்பர உத்திகளைக் கையாள்வது என்று சில எழுத்தாளர்களும் அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுப்பது வியாபாரத்துக்கு உதவும் என்று கருதும் சில பதிப்பாளர்களும் களமிறங்கியிருக்கிறார்கள்.இந்த சர்ச்சைகளில் இப்போது அடிபடும் பெயர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, சு.வெங்கடேசன்,மனுஷ்யபுத்திரன், பத்ரி சேஷாத்ரி. (ஜெயமோகன் சமண தலயாத்திரை போய்விட்டதால், அவர் தொடர்பான சர்ச்சை எதுவும் இந்த சீசனில் எழவில்லை.)

இந்த சீசனில் அதிக சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருக்கக்கூடியவர் இதுவரை சர்ச்சைகளில் சிக்காத எஸ்.ராமகிருஷ்ணன்தான்( எஸ்ரா). சங்கீத சீசனுக்கு முன்பாக இலக்கிய சீசன் ஒன்றை சென்னையில் ஸ்தாபிக்கவேண்டும் என்ற கருத்தில் அவர் உலகப் புகழ் பெற்ற சில படைப்புகள் பற்றிய இலக்கியப் பேருரையை ஒரு வாரம் தொடர்ந்து நடத்தினார்.அதில் அவர் காந்தி-டால்ஸ்டாய் பற்றி சொன்னதில் சர்ச்சை ஏற்பட்டது. டால்ஸ்டாய் காந்திக்கு எழுதிய கடிதத்தில் திருக்குறளையும் வள்ளுவரையும் குறிப்பிட்டிருப்பதாகவும் அதிலிருந்துதான் காந்திக்கு குறள் மீது கவனம் ஏற்பட்டதாகவும் எஸ்ரா பேசியிருந்தார். அடுத்து காந்திக்கு கணிதத்தில் பேரார்வம் இருந்ததாகச் சொல்லியிருந்தார். தன் வாழ்நாளில் காந்தி சத்தியசோதனை, ஹிந்த் ஸ்வராஜ் இரு நூல்கள் மட்டுமே எழுதியதாக்வும் தெரிவித்தார்.  இந்த மூன்று கருத்துக்களுக்கும் கடுமையான மறுப்புகள் வந்தன. ஆனால் எஸ்ரா பல வாரம் பதில் சொல்லவே இல்லை.

கடைசியாக தன் இணையதளத்தில், “பொதுவாக நான் அவதூறுகள், அருவருப்பான கேலிகளுக்கு பதில் சொல்வதே கிடையாது, ஒரு நண்பர் தினமணியில் காந்தி பற்றிய எனது உரை தவறானது என்று வெளியிடப்பட்டுள்ள செய்தியைச் சுட்டிக்காட்டி இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். இது போன்ற அவதூறுகள், எதையும் ஆழ்ந்து படிக்காதவர்களால் உருவாக்கப்படுவது என்று பதில் சொல்ல தயங்கிவிட்டுவிட்டேன், அதே அவதூறு தற்போது மறுபடியும் கிளம்பும் போது பதில் சொல்லியாக வேண்டிய அவசியமிருக்கிறது “ என்று எழுதி பதில் சொன்னார். தான் வாசித்த ஒரு கட்டுரையில் இருந்து தான் டால்ஸ்டாய் திருக்குறளை வாசித்த தகவலை தெரிவித்ததாக்ச் சொன்னவர், அது என்ன கட்டுரை, யார் எழுதியது , எப்போது எழுதியது என்பதையெல்லாம் சொல்லவில்லை.

ஆனால் தன் மீதான அவதூறுகள் “எதையும் ஆழ்ந்து படிக்காதவர்களால் உருவாக்கப்படுவது என்று பதில் சொல்ல தயங்கிவிட்டுவிட்டேன்” என்று எஸ்ரா சொன்னது மிகவும் தவறானது. ஏனென்றால் தினமணியில் எஸ்ராவை மறுத்து விவரமாக எழுதியவர் காந்தியின் எழுத்துகள் அனைத்தையும் தொகுக்கும் பணியில் பல்லாண்டுகள் பணியாற்றிய ஆசிரியர் குழு உறுப்பினர் லா.சு.ரங்கராஜன்.  காந்தியும் டால்ஸ்டாயும் பரிமாறிக் கொண்ட கடிதங்கள் எத்தனை, ஒவ்வொன்றிலும் என்ன எழுதப்பட்டிருந்தது என்ற விவரங்களுடன், ஒரு இடத்தில் கூட டால்ஸ்டாய் வள்ளுவரையோ, குறளையோ சொல்லவில்லை என்பதை நிறுவியிருந்தார் லா.சு.ரா. காந்தியின் கணித ஆர்வத்துக்கு ஆதாரமாக எஸ்ரா காட்டிய ஒரே சான்று 1944ல் வீட்டுச் சிறையில் இருந்தபோது மனு காந்திக்கு கற்பிப்பதற்காக காந்தி வரைந்த ஜியாமெட்ரி படம். இந்த லாஜிக்படி ஒவ்வொரு நடுத்தர வர்க்கக் குடும்பத்திலும் கணிதத்தில் பேரார்வம் உடையவர்கள் நிறைந்திருப்பதாக சொல்லிவிடலாம். தங்கள் வீட்டுக் குழந்தைக்கு கணக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது ஒரு துறை ஆர்வமாகிவிடாது.

லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான மார்க்வெஸ் சொன்ன ஒரு மேற்கோள் எனக்குப் பிடித்தமானது. ஒரு கற்பனைக் கதை  ஒரே ஒரு உண்மையை முன்வைத்தாலே அது இன்னும் மேலான பரிமாணத்தை அடைந்துவிடும். ஒரு கட்டுரையில் ஒரே ஒரு பொய்( தவறு) இருந்தால் கூட அது அந்த முழு கட்டுரையையும் சிதைத்துவிடும் என்கிறார் மார்க்வெஸ்.

எஸ்.ராமகிருஷ்ணன் தன் எழுத்திலும் பேச்சிலும் உலகின் பல மூலைகளிலும் இருகக்க்கூடிய நூல்கள், சினிமாக்கள் ஆகியவற்றில் இருந்து மேற்கோள்களை அள்ளிக் குவிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவர். அது அவர் எழுத்துக்கு மெருகூட்டுபவை. எனவே அதில் ஒரு சிலவற்றில் கடும் தவறுகள் ஏற்படும்போது அவர் எழுத்தின் முழு நம்பகத்தன்மையே குலைந்து போய்விடுகிறது. இந்த ஆபத்தை அவர் சரியாக உணரவில்லை எனப்தையே காந்தி-டால்ஸ்டாய் சர்ச்சையில் அவர் எதிர்வினை காட்டுகிறது.

இலக்கியப் பேருரை சீசன் முடிந்து சென்னைப் புத்தகக் காட்சி தொடங்கிய சமயத்தில் சாகிதய அகாதமி விருது அறிவிக்கப்பட்டது.சாகித்ய அகாதமி விருதுகள் பெரும்பாலான நேரம் சர்ச்சைக்குள்ளாகக் கூடியவைதான். எழுத்தாளருடைய மொத்தமான பங்களிப்புக்காக  விருதா, அவருடைய குறிப்பிட்ட நூலுக்கு விருதா என்பதே இன்னும் குழப்பமானது.  ஏனென்றால் பல எழுத்தாளர்களுக்கு அவர்களுடைய சுமாரான நூல்களுக்கே பரிசு தரப்பட்டிருக்கிறது.

தன் முதல் நாவலான காவல் கோட்டத்துக்காகப் பரிசைப் பெற்ற சு.வெங்கடேசன் எஸ்ராவின் பழைய நண்பர். நாவல் வெளியான சமயத்தில் அதை குப்பை என்று கடுமையாக விமர்சித்தார் எஸ்.ரா. இல்லை, அது ஒரு முக்கியமான படைப்பு என்று பதில் கட்டுரை எழுதினார் ஜெயமோகன். அது ஒரு திருட்டுப் படைப்பு என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தன்னுடன் சுற்றிக் கொண்டிருந்த நணபனும் எழுத்தாளனாக மாறி பெரிய நாவல் எழுதிவிட்டான் என்பதை தாங்கமுடியாத் உளவியல் சிக்கலில் எஸ்.ரா இருப்பதாக வெங்கடேசன் கருத்து சொன்னார்.

உளவியல் சிக்கலில் எழுத்தாளர்கள் இருப்பது உண்மைதான். பல எழுத்தாளர்கள் இப்போது பாராட்டுவிழாக்கள், வெளியீட்டு விழாக்களை பிரும்மாண்டமாகவும் கட் அவுட், ப்ளெக்ஸ் பலகைகளோடும், சினிமா மீடியா பிரபலங்களின் ஆசியோடும் நடத்துவது என்பது வாடிக்கையாகிவிட்டது.  மதுரையில் வெங்கடேசனுக்கு நடத்திய பாராட்டில் மலர் கிரீடம் சூட்ட்ப்பட்டு கையில் வீரவாள் தரப்பட்டதாக அதைக் கண்டித்து பெத்தானியாபுரம் முருகானந்தம் என்பவர் இணைய தளத்தில் எழுதியிருக்கிறார். ஒரு மார்க்சிஸ்ட் இப்படியெல்லாம் செய்யலாமா என்பது அவர் கேள்வி.

இன்னொரு பக்கம் சென்னையில் ’சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த், ’கவிப்பேரரசு’ வைரமுத்து முதலிய பிரபலங்கள் இயல் விருது பெற்றதற்காக எஸ்ராவைப் பாராட்ட அழைக்கப்பட்டனர். எஸ்ராவைப் பாராட்ட ரஜினி அழைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை இணைய தளத்தில் ஏற்படுத்தியது. ரஜினியை அழைப்பதில் எனக்கு  எந்த எதிர்ப்புமில்லை. ஒரு எழுத்தாளனை சமூகத்தில் யார் வேண்டுமானாலும் பாராட்டலாம். ரஜினியும் பாராட்டலாம். ஆனால் அழைப்பிதழில் ரஜினி படத்தைப் பெரிதாகப் போட்டு எஸ்ரா படத்தை சிறியதாக அச்சடித்தது எழுத்தாளனை செருப்பாலடிப்பது போல அவமானப்படுத்துவதாகும் என்று நான் எழுதியிருந்தேன். விழா அன்று எஸ்ராவுக்கு ரஜினிக்கு சமமான சைசில் ஃப்ளெக்ஸ் கட் அவுட் வைத்து கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிவிட்டார்கள்.

ரஜினியை அழைத்து எஸ்ராவைப் பாராட்டியதை சாரு நிவேதிதாவால் தாங்கவே முடியவில்லை. நான் கல்ந்துகொண்ட அவருடய எக்சைல் புத்தக விமர்சனக்கூட்டத்தில் அவர் தன் நாவல் பற்றி பேசாமல் இதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். இணைய தளத்திலும் எழுதித் தள்ளினார்.  “ ரஜினி…  இயல் விருதை சர்வதேச விருது என்கிறார்களே, இதைப் பற்றி விசாரித்து அறிந்தீர்களா?  கனடாவில் உள்ள ஒரு தமிழ் அமைப்பு தமிழ் எழுத்தாளருக்கு ஒரு விருது கொடுத்தால் அதற்குப் பெயர் சர்வதேச விருதா?    மெல்பேர்ன் நகரில் (ஆஸ்திரேலியா) உள்ள தமிழர்கள் ஒரு ரெக்ரியேஷன் கிளப் வைத்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் என்னுடைய நண்பர்கள்.  என்னை அங்கே அழைத்து ஒரு பொங்கல் தினத்தில் முயல் படம் ஸாரி கங்காரு படம் போட்ட ஒரு மெமண்டோவைக் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.  உடனே நான் சர்வதேச விருது கொடுத்து விட்டதாக சொல்லிக் கொள்ளலாமா?  சினிமா நடிகர்களைக் கொண்டு, பாராட்டு விழா நடத்திக் கொள்ளும் அளவுக்கு, தமிழ் இலக்கியவாதிகள் தரம் தாழ்ந்து வருகிறார்கள்.இலக்கியம் சார்ந்த அறம் வீழ்ச்சியடைந்துவிட்டது ”

பதிலுக்கு மனுஷ்யபுத்திரன் எழுதினார்: “ ஜோதிர்மயி என்று ஒரு கவிஞர் ஒரு முறை சாருவின் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டு இலக்கிய சொற்பொழிவாற்றினார். குஷ்பு என்ற ஒரு நாவலாசிரியர் சாருவின் ஒரு புத்தக வெளியீட்டுக் கூட்டத்தில் கலந்துகொள்வதாக ஊரெல்லாம் பத்திரிகை வைத்து கடைசிநிமிடத்தில் வராமல் போனார். சாருநிவேதிதா என்ற நடிகர் ஒரு படத்தில் தனது விரல்கள் பத்து செகண்டுகள் நடித்தற்காக அந்த இயக்குனரைப் புகழ்ந்து அவர் பத்துப் பதிவுகள் எழுதினார்… அதிகபடியான குடி மட்டுமல்ல, அதிகபபடியான வயிற்றெரிச்சலும் கடும் memory loss ஏற்படுத்தும்…”

சர்ச்சைகளும் விழாக்களும் எழுத்தாளர்கள் திட்டமிட்டே விளம்பரம் தேடுகிறார்கள் என்பதன் அடையாளம்தான். ஏன் இப்படி? இது பற்றி  பதிப்பாளர்கள் தெளிவாக இருக்கிறார்கள். கவிஞர் அய்யனார் கேட்டார்: கவிஞர் .தேவதச்சனுக்கு விளக்கு விருது மதுரையில் ரகசியமாகக் கொடுக்கப்பட உள்ளது. கவிஞர் .தேவதச்சன் நூல்களை வெளியிட்டு வருவது மனுஷயபுத்திரனின் வெளியீட்டு நிறுவனம்தான். அவருக்கும் ஒரு பிரபல சினிமா நடிகரின் தலைமையில் பாராட்டு விழா நடத்தலாமே.  எஸ்ராவின் பதிப்பாளர் உயிர்மை மனுஷ்யபுத்திரன் பதில் : இதுவும் வெளி நாட்டு விருதுதான். ஆனால் அதைக் கொடுப்பவர்கள் பிரபலமில்லாதவர்கள். தேவதச்சனும் பிரபலமில்லாதவர். அவருக்கு எந்த சினிமா நடிகரையும் தெரியாது. கூட்டம் போட்டால் 50 பேருக்குமேல் வரமாட்டார்கள் . என் பதிப்பக நூல்களை விற்க முடியாது. ராமகிருஷ்ணன் ஸ்டார் எழுத்தாளர். அவர் புத்தகம் மட்டுமல்லாது , என் பதிப்பக நூல்கள் எல்லாவற்றையும் விற்க ஒரு வாய்ப்பு.

சாருவின் பதிப்பாளர் கிழக்கு பத்ரி சேஷாத்ரி எழுதிய ஒரு கட்டுரையில் அப்பட்டமாகவே சொல்கிறார்.: “நான் புத்தகங்களை வெறும் பண்டமாகத்தான் பார்க்கிறேன். இதை வெளிப்படையாகச் சொல்வதில் எனக்கு வெட்கமே இல்லை. தமிழின் இலக்கிய வானில் சில பதிப்பாளர்கள் அற்புதமான பணியாற்றி, சிறந்த இலக்கியத்தை வெளியே கொண்டுவர உதவுகிறார்கள். நான் அப்படிப்பட்டவன் அல்லன். புத்தகம் உருவாக்கி விற்பது எனக்கு ஒரு தொழில் மட்டுமே. நான் ஒரு வணிகன். எல்லாவிதமான புத்தகங்களையும் பதிப்பிக்க விரும்புகிறேன். அவை நன்றாக விற்கும் என்றால். காசு கொடுத்துப் பெரும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்வது ஒரு பதிப்பாளனுக்கு இயலாத காரியம். அப்படிச் செய்யும் செலவை, விற்பனையால் ஈடுகட்டவே முடியாது. எனவே வேறு வழிகளையே ஒரு பதிப்பாளனும் எழுத்தாளனும் கையாளவேண்டியுள்ளது.அங்குதான் இணையம் வருகிறது. தமிழின் சில எழுத்தாளர்களே இதனை ஒழுங்காகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரைச் சொல்வேன். அதிலும் சாரு நிவேதிதா, ஃபேஸ்புக் தளத்தை மிக அற்புதமாகப் பயன்படுத்திவருகிறார். அவருடைய வாசகர்கள் தம் சொந்த செலவில் சமீபத்தில் அவருடைய எக்ஸைல் நாவல் வெளியீட்டை காமராஜர் அரங்கத்தில் வைத்துக் கொண்டாடினார்கள். போஸ்டர் அடித்துத் தெருவில் ஒட்டுவதுமுதல், துண்டுப் பிரசுரங்களைப் பல இடங்களில் விநியோகிப்பதுவரை, அனைத்தையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தார்கள். ஓர் இலக்கிய நிகழ்வுக்கு இதைவிடப் பெரிய கூட்டம் வந்ததில்லை. அதேபோல ஜெயமோகன் வாசகர்கள் தீவிரமான ஒரு குழுவாக இயங்குகிறார்கள். இலக்கியக் கூட்டங்கள், விருது வழங்கும் விழா என்று அமர்க்களப்படுத்துகிறார்கள்.  இம்மாதிரியான நிகழ்வுகளே நாற்பது, ஐம்பது என்பதிலிருந்து நானூறு, ஐந்நூறு என்று வாசகர் வட்டத்தை விரிவாக்குபவை.நான் பதிப்பிக்கும் சில எழுத்தாளர்களை ( சேத்தன் பகத் போன்ற) பிராண்டுகளாக ஆக்குவதற்கு எந்தவகையில் பங்களிக்கலாம் என்று முயற்சி செய்வதே என் வேலை. அப்போதுதான் தமிழில் 25,000 அல்லது 50,000 என்று புத்தகங்களை விற்கவைக்க முடியும். நானும் பணம் பண்ணமுடியும்”

நாற்பது வருடங்களுக்கு முன்பு இந்த சிக்கல்கள் இல்லை. சர்ச்சைகள் இருந்தன. ஜெயகாந்தன் கதையையும் இந்திரா பார்த்தசாரதி கதையையும் பத்திரிகைகள் பாதியில் நிறுத்தியபோது நடந்த சமரசங்கள் பற்றி வெங்கட் சாமிநாதன் ‘யாருக்காக அழுவது ?” என்று எழுதினார். அதற்கு அசோகமித்திரன் “ யாருக்காகவும் அழவேண்டாம். வாயை மூடிக் கொண்டு இருந்தால் போதும்” என்று பதில் எழுதினார். பிரமிளும், செல்லப்பாவும், வெ,.சாவும் க.நா.சுவும் ஜெயகாந்தனும் நிறைய சர்ச்சித்திருக்கிறார்கள். அவையெல்லாம் கோட்பாடு, மதிப்பீடு , ரசனை பற்றிய விவாதங்கள்.

இப்போது நடப்பவை முழுக்க முழுக்க வணிக நோக்கம் சார்ந்தவை., ஏனென்றால் இப்போது எந்த கோட்பாடு, கொள்கை பிரச்சினைகளும் எழுத்தாளர்களுக்கு முக்கியமாக இல்லை. உலக மயமாக்கலும் தாராளப் பொருளாதார அமைப்பும் சினிமா உலகப் பிரவேசமும்தான் இந்த சிக்கலை ஏற்படுத்தியிருக்கின்றன. அவற்றின் அரசியல் கலாச்சாரம் எழுத்துலகின் அரசியலை பாதித்திருக்கிறது.

இந்த வாரக் கேள்வி:

அடையாறு புற்று நோய் நிலையத்தை பல வருடங்களாக நிர்வகித்துவரும் புகழ் பெற்ற மருத்துவர் வி. சாந்தாவை தங்கள் பிரசாரத்துக்கு அணுசக்திதுறை பயன்படுத்துகிறது. ‘ கதிரியக்கத்தால் புற்று நோய் வராது’ என்று சாந்தா சொல்லும் டி.வி. விளம்பரங்களை அணுசக்தித் துறை வெளியிட்டுள்ளது. இதே சாந்தாவின் அடையாறு புற்று நோய் நிலையத்தின் இணைய தளத்தில் புற்று நோய்க்கான காரணங்கள் பட்டியலில் ‘அயனைசிங் ரேடியேஷன்’ குறிப்பிடப்பட்டிருக்கிறது ! (http://www.cancerinstitutewia.org/abtcancer.htm).

எது உண்மை ? சாந்தா அணுசக்தி விளம்பரத்தில் சொல்வதா? தன் கேன்சர் செண்ட்டரின் இணையதளத்தில் சொல்வதா?  இரண்டில் ஒன்றுதானே உண்மையாக் இருக்க முடியும் ?

கல்கி: 11.2.2012

கேணியில் ஞானக்கூத்தன்
கேணி கூட்டம்: பிப்ரவரி 12, ஞாயிறு மாலை 4 மணி. பேசுபவர்: கவிஞர் ஞானக்கூத்தன். இடம்: 39 அழகிரிசாமி சாலை கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 78. அன்புடன் அழைக்கிறோம். ஞாநி, பாஸ்கர் சக்தி.

தேவைப்படும் மூன்று சட்டத்தீர்வுகள் :1.அரசியல் 2.சினிமா 3.கல்வி
1.அரசியல்:

இந்தியாவில் ஊழலை ஒழிக்கவோ கட்டுப்படுத்தவோ லோக்பால் மாதிரி புதிய சட்டங்கள் தேவையில்லை; இருக்கும் சட்டங்களில் போதிய திருத்தங்கள் செய்தாலே போதுமானது என்ற என் கருத்தை மறுபடியும் வலுப்படுத்தியிருக்கிறது உச்ச நீதி மன்றம். அரசு அதிகாரிகள் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய அரசின் முன் அனுமதி தேவை என்ற விதி தொடர்பாக மிக முக்கியமான தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொடுத்துள்ளனர்.

இதுவரை இந்த விதியின் கீழ் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் எதிராக வழக்கு பதிவு செய்ய லேசில் அனுமதி தரமாட்டார்கள். சி.பி.ஐ மட்டும் 169 அதிகாரிகள் மீது வழக்கு போட அனுமதிக் கேட்டு காத்திருக்கிறது. அனுமதியை இழுத்தடிக்கும் அமைச்சகங்களிலேயே முதன்மையானது நிதி அமைச்சகம்தான். மத்திய அரசின் அனுமதிக்காக டிசம்பர் 2010 வரையிலும் முடிவு தெரியாமல் காத்திருந்த விண்ணப்பங்கள் மட்டும் 236. இதே போல வெவ்வேறு மாநில அரசுகளின் முன்பும் நூற்றுக்கணக்கில் விண்ண்பபங்கள் காத்திருக்கின்றன.

இந்த சூழலில்தான் அரசியல் பிரமுகர் சுப்பிரமணியன் சுவாமி போட்ட் வழக்கில் நீதிபதிகள் சிங்வியும் கங்குலியும் எந்த விண்ணப்பத்தையும்  நான்கு மாதங்களுக்கு மேல் பதில் சொல்லாமல் வைத்திருக்கக்கூடாது என்றும் அப்படி வைத்திருந்தால், வழக்கு தொடுக்க அனுமதி தரப்பட்டு விட்டதாகவே சட்ட்ப்படி எடுத்துக் கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளனர். தேவைப்பட்டால் இதற்கான சட்டத்திருத்தங்களை ஊழல் தடுப்புச் சட்டத்தில் நாடாளுமன்றம் மூலம் செய்யும்படி அரசுக்கு ஆலோசனை தெரிவித்திருக்கிறார் கங்குலி.

ஒரு அதிகாரி மீதோ அமைச்சர் மீதோ ஊழல் வழக்கு தொடுக்க அனுமதி கேட்டால், அதுபற்றி பூர்வாங்க விசாரனை நடத்தியபின்தான் முடிவெடுக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. மனுவில் உள்ள விவரங்களின் அடிப்படையில் முடிவெடுக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் அதற்குப் பின் அட்டர்னி ஜெனரல் ஆலோசனையும் கேட்கத்தேவையிருந்தால் இன்னும் ஒருமாதம் எடுத்துக் கொள்ளலாம்.

சுப்ரமணியன் சுவாமி 2008 நவம்பர் 29ந்த்த்டேதி பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அனுப்பிய கடிதத்தில் அமைச்சர் ஆ.ராசா மீது ஸ்பெக்ட்ரம் ஊழலுக்காக வழக்கு பதிவு செய்ய அனுமதி கேட்டார். மன்மோகன்சிங் இதற்கு பதிலளிக்கவே 16 மாதங்கள் ஆயிற்று. இதை எதிர்த்து சுவாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் போட்ட் அவழக்கு தள்ளுபடி செய்யப்ப்ட்டது. அதன் மீது சுவாமி உச்ச நீதிமன்றத்தில் செய்த முறையீட்டில்தான் இப்போது இந்த வரலாற்று முக்கியத்துவம் உள்ள தீர்ப்பு வந்திருக்கிறது.

சுவாமியின் கடிதத்தை பிரதமர் அலுவலகம் ராசாவுக்கே அனுப்பி வைத்ததையும் நீதிமன்றம் கண்டித்திருக்கிறது.

ஊழல் வழக்கு பதிவு செய்யும் அனுமதி மூன்று மாதங்களுக்குள் தரப்படவேண்டும் என்பது லோக்பால் மசோதாவில் ஒரு அம்சம். இன்னும் லோக்பால் சட்டமாகவில்லை. அதே விஷயத்தை எளிதாக இப்போது உள்ள சட்டத்திலேயே ஒரு திருத்தம் மூலம் செய்துவிடலாம் என்பதை இப்போதைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு காட்டுகிறது. இது போல பல லோக்பால் அம்சங்களை இருக்கும் சட்டங்களின் திருத்தம் மூலமே கொண்டு வரமுடியும். ஒரு வழக்கை எத்தனை காலத்துக்குள் விசாரித்து முடிவு தெரிவிக்கவேண்டும் என்ற வரையறையையும் அடுத்துக் கொண்டு வரவேண்டும்.

சுப்பிரமணியன் சுவாமி தனக்கென்று கட்டுக்கோப்பான ஒரு  கட்சியோ தொண்டர்களோ ஓட்டோ ( கொள்கையோ ?!) இல்லாத ஒரு அரசியல்வாதியானபோதும், மக்கள் நலனுக்குரிய இந்த தீர்ப்பை பெற்றிருப்பதற்காக அவருக்கு இ.வா.பூ.

2.கல்வி:

கல்லால் அடித்து சிவனை வழிபட்ட கதைக்குரிய சாக்கிய நாயனாரின் வம்சாவழியாக சென்னை கல்லூரி மாணவர்கள் சிலர் புறப்பட்டிருக்கிறார்கள்.

பஸ் டே, பேருந்து விழா என்றெல்லாம் அடிக்கடி சென்னையிலும் சில ஊர்களிலும் நடக்கும் தெருவிழாக்கள் முதன்முதலில் ஆரம்பித்தது அண்ணாவின் ஆட்சியில் நடந்த ஒரு மோதலுக்குப் பின்னர்தான். அப்போது சென்னையில் பேருந்து ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே வன்முறை மோதல் ஏற்பட்டபோது அண்ணா மிகுந்த மனவேதனைக்குள்ளானார். பதற்றமான சூழல் தணிந்தபின்னர், சில மாதங்கள் கழித்து சில காவல் அதிகாரிகளும், சில போக்குவரத்து அதிகாரிகளும் சேர்ந்து மாணவர்-பஸ் ஊழியர் நல்லெண்ணத்தை வளர்க்க முக்கியமான பஸ் ரூட்களில் மாணவர்களைக் கொண்டு பஸ் டே கொண்டாடும் வழக்கத்தை அறிமுகப்படுத்தினார்கள். இதெல்லாம் சுமார் 40 வருடப் பழைய கதை.

டிரைவருக்கும் கண்டக்டருக்கும் மாலை போடுவது, பஸ் பயணிகள் எல்லாருக்கும் இனிப்பு வழங்குவது, பஸ்சில் தோரணங்களும் வாழை மரமும் கட்டுவது என்றெல்லாம் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் பஸ் டே நடந்தது சில வருடங்களில் சில சந்தர்ப்பங்களில் மட்டும்தான்.

ஆரம்பித்த ஒரு சில வருடங்களிலேயே பஸ் டே அதன் அசல் நோக்கத்தையும் உணர்வையும் இழந்தது. கும்பல் மனோபாவத்தில் தெருவில் ரகளை செய்வதும் ,குறிப்பாக பஸ்சில் வரும் பெண்களை சீண்டி கேலி செய்வதுமாக அது சீரழிந்தது. இதில் போட்டி வேறு உருவாகி ஒரு கல்லூரியின் ரவுடிகளுக்கும் இன்னொரு கல்லூரியின் ரவுடிகளுக்குமான மோதலாக அது பல இடங்களில் மாறியது. இப்படிப்பட்ட சூழலில் பஸ் டே நடக்காமல் இருந்தாலே தேவலை என்ற மனநிலைக்கு ரெகுலர் பஸ் பயணிகளும் பஸ் ஊழியர்களும் வந்துவிட்டார்கள்.

காவல் துறை பஸ் தினக் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துவிட்டது. இந்த நிலையில் இந்த வாரம் ஒரு கல்லூரி மாணவர்கள் பஸ்சை மறித்து பஸ் டே பதாகையைக் கட்டி ரகளை செய்ததும் போலீஸ் அவர்களை வந்து தடுத்தது.

பஸ்சைக் கல்லால் அடித்து உடைத்து, பஸ் பயணிகளை தாக்கி வழிபாடு நடத்தி பஸ் டே சாக்கிய நாயனார் பாணியில் நடந்து முடிந்தது. எந்த பஸ்சுக்கு தோரணமும் வாழை மரமும் கட்டி ஆராதிக்கப் போவதாக சொன்னார்களோ அதையே கல்லால் அடித்ததுதான் அவர்களின் அசல் மனநிலை. தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக இந்த பஸ் டே கொண்டாட்டங்களை ஒட்டு மொத்தமாகத் தடை செய்து அறிவிக்க வேண்டும்.

பஸ்சில் மாணவர்கள் உள்ளிட்ட பயணிகளுக்கும் பஸ் ஊழியர்களுக்கும் இடையே நல்லுறவைப் பேணுவதற்கு போக்குவரத்து கொள்கைகளில் மாற்றம் தேவை. நியாயமான கட்டணங்கள், படிக்கட்டில் நிற்கத் தேவையில்லாத அளவுக்கு போதுமான பஸ்கள், வாசற்கதவு பூட்டப்படும் வசதியுடையதாக எல்லா பஸ்களையும் மாற்றுதல், ஊழியர்களிடம் தினமும் போதுமான சில்லறைக் காசுகளை டெப்போவிலேயே கொடுத்து அனுப்புதல் என்று நடவடிக்கைகளை எடுத்தால் நல்லுறவு தானே வரும்.

3.சினிமா:

தமிழ் சினிமா படப்பிடிப்புகள் மறுபடியும் நின்றுவிட்டன. காரணம் வழக்கமான சம்பளப் பிரச்சினைதான். சினிமாகாரர்கள் எதையும் தப்புத்தப்பாகவும் மிகைப்படுத்தியுமே சித்திரித்து பழக்கப்பட்டவர்கள். இப்போதைய பிரச்சினையிலும் நடப்பது வேலை நிறுத்தம் அல்ல. தொழிலாளி வேலை செய்ய மறுத்தால் அதற்கு பெயர் ஸ்டிரைக்- வேலை நிறுத்தம. முதலாளி  தொழிலை நடத்த முடியாது, நிறுத்திக் கொள்கிறேன் என்று சொன்னால் அதற்கு பெயர் ஸ்டிரைக் அல்ல. லாக் அவுட்- கதவடைப்பு. இப்போது நடப்பது முதலாளிகளான தயாரிப்பாளர்கள் அறிவித்திருக்கும் லாக் அவுட். இது ஸ்டிரைக் அல்ல.

எஸ்.ஏ.சந்திரசேகரன் முதல் சேரன் வரை ஆளுக்கு ஆள் உளறிக் கொட்டுவதை நிறுத்திவிட்டு, தொழிலாளர் நல ஆனையர் முன்பு பிரச்சினையைக் கொண்டு போனால், ஒரே நாளில் தீர்ந்துவிடக் கூடியது இது. மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தயரிப்பாளர்களும் தொழிலாளர் கூட்டமைப்பான பெப்சியும் சம்பள ஒப்ப்ந்தம் போடுகிறார்கள். கடைசியாகப் போட்ட ஒப்பந்தம் டிசம்பர் 2010ல் முடிந்துவிட்டது. ஜனவரி 2011 முதல் டிசம்பர் 2013 வரை நடைமுறைக்கு வரவேண்டிய சம்பள விகிதம் தீர்மானித்து ஒப்பந்தம் போடாமலே ஒரு வருடம் ஓடிவிட்டது. பழைய சம்பளத்திலேயே பெரும்பாலோர் வேலை செய்தார்கள். இப்போது புது சம்பள விகிதம் போட்டால் கூட, சினிமா தொழிலாளருக்கு அரசு ஊழியர் மாதிரி பழைய அரியர்ஸ் கணிசமாகக் கிடைக்கும் நடைமுறையோ சாத்தியமோ கிடையாது.போன சம்பளம் போனதுதான். ஒரு சிலர் மட்டும் கடந்த ஓராண்டில் தங்கள் சங்கம் உயர்த்திக் கேட்ட சம்பளத்தை ஒப்பந்தம் இல்லாமலே பெற்றிருக்கிறார்கள்.

இவர்களில் பெரும்பாலோரின் சம்பளம் என்பது மாதச் சம்பளம் அல்ல.  இது தினக்கூலிதான். கேட்கப்பட்டிருக்கும் பேட்டா என்ற கூலி உயர்வு விவரங்கள் இதோ: லைட்மேன் – ரூ.350லிருந்து 530. ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் – 250லிருந்து 320. மகளிர் ஊழியர் யூனியன் – 290 லிருந்து 400. செட் அஸிஸ்டெண்ட் – 350 லிருந்து 625. டிரைவர்ஸ் யூனியன் – 270 லிருந்து 415. காஸ்ட்யூம் அஸிஸ்டெண்ட்ஸ் – 700 லிருந்து 850. புரொடெக்ஷன் அஸிஸ்டெண்ட்ஸ் – 350லிருந்து 550. மூன்று வருடத்துக்குப் பிறகு இவர்கள் கூடுதலாகக் கேட்டிருக்கும் தொகை 80,70,110, 275,145, 150,200 ரூபாய் என்ற அளவில்தான். இதைத் தர மறுப்பதில் எந்த நியாயமுமில்லை. ஆறு மாத காலம் ஒரு முழுப் படத்தில் சுமார் 60 நாள் வேலை செய்தாலும்   இதில் ஒருவர் புதிய சம்பள விகிதத்திலேயே அதிகபட்சமாகப் பெறப் போகும் சம்பளம் மொத்தமாக 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரையில்தான்.

இப்போது தொழிலாளர் நல அதிகாரி செய்யவேண்டியதெல்லாம்,  சென்ற வருடத்தில் சிலருக்கு மட்டும் உயர்த்தித் தந்த விகிதம்  எவ்வளவு, யூனியன் கேட்பது எவ்வளவு, தயாரிப்பாளர் தர விரும்புவது எவ்வளவு என்பதை விசாரித்து சமரசம் செய்வதுதான். மூன்றாண்டுகளில் பணவீக்கத்தினால் விலைவாசிகள் கடுமையாக உயர்ந்திருக்கிறது. ஒரு வருடம் சம்பள உயர்வு இல்லாமலே போய்விட்டது. இதையெல்லாம் கணக்கிட்டு புதிய விகிதம் நிர்ணயிக்கப்படவேண்டும். அவ்வளவுதான்.

மற்றபடி ஒரு படத்தில் எத்தனை தொழிலாளர் வேலை பார்க்க வேண்டும், பட பட்ஜெட்டுக்கு ஏற்ற மாதிரி ஒரே வேலைக்கு வெவ்வேறு சம்பளம் தரமுடியுமா, ஸ்டார் நடிகர் -ஸ்டார் டைரக்டர் சம்பளம் மட்டும் 200 சதவிகிதம் உயர்வது முறையா, வேலை வாங்கும் இயக்குநர், ஒளிப்பதிவாளரும்,அவர்கள் கீழ் வேலை செய்யும் உதவி இயக்குநர், உதவி ஒளிப்பதிவாளர்களுக்கெல்லாம் தனித்தனி யூனியன்கள் வேண்டாமா, பெப்சி யூனியன்களில் இல்லாதவர்கள் சினிமாவில் வேலை செய்ய அடிப்படை உரிமை இந்திய அரசியல் சட்டத்தின் கீழ் உண்டா இல்லையா, யூனியன் உறுப்பினராக கார்டு வாங்க ஏன் லட்சக்கணக்கில் கட்டணம்  விதிக்கவேண்டும் போன்ற நீண்ட காலமாக இருக்கும் அடிப்படை சிக்கல்கள் எதையும் இப்போது சேர்த்து தீர்த்துவிடமுடியாது. அதற்கு தனியே சினிமா துறை நிலை பற்றி ஆராய நீதிபதிகள், நிபுணர்கள் குழு அமைத்து சட்டத்திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும் என்று நீண்ட காலமாக நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

இந்த வாரக் கேள்வி :

கூடங்குளம் அணு உலை பற்றிய மக்கள் அச்சத்தைப் போக்கத் தயார் தயார்னு கூவிக் கொண்டிருக்கும் மத்திய அரசின் நிபுணர் குழு ஏன் போராட்டக்குழு அனுப்பும் நிபுணர் குழுவை சந்திக்க மட்டும் மறுத்துக் கொண்டே இருக்கிறது ? ஒரு விஞ்ஞானி இன்னொரு விஞ்ஞானியை சந்திக்க ஏன் இவ்வளவு தயங்கறாங்க ?

இந்த வார …………….. :

ஐ.ஏ.எஸ்.அதிகாரி உமாசங்கர் அறிக்கையிலிருந்து:

எனக்கும் என் குடும்பத்திற்கும் இயேசு கிறிஸ்து தனது தேவ தூதர்கள் பட்டாளத்தைப் பாதுகாப்புக்கு நியமித்துள்ளார். இது இந்திய பிரதமருக்கு வழங்கப்படும் இசட் ப்ளஸ் பாதுகாப்பைவிட 100 மடங்கு உறுதியானது. போலீஸ் தரும் இசட் ப்ளஸ் பாதுகாப்பு இருக்கும் போதுதான் திருமதி இந்திரா காந்தி, திரு ராஜீவ் காந்தி போன்றோர் கொலை செய்யப்பட்டனர். அதுபோன்ற தவறுகள் கிறிஸ்து இயேசுவின் தேவ தூதர்கள் தரும் பாதுகாப்பில் நிகழ்வதில்லை……2012ல் உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் சுனாமி, பூகம்பம், பெரிய தொற்று வியாதிகள், கடும் புயல் போன்ற பெரும் அழிவுகள் நிகழவிருப்பதாக வெளிப்பாடுகள் இருப்பதால் நான் கிறிஸ்தவர்களை எச்சரிக்க வேண்டியது என் கடமை. இதற்காக எல்லா இடங்களுக்கும் சென்று கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை வழங்குகிறேன். கிறிஸ்தவர்கள் இந்த கோபாக்கினையிலிருந்து தப்ப வேண்டும் என்பது என்னுடைய ஆவல்…..

கல்கி 4.2.2012

பரீக்‌ஷா நாடகம்: ரமாவும் உமாவும்
பரீக்‌ஷா நாடகக்குழு

வழங்கும்

ரமாவும் உமாவும்

நடிகர்கள் பாத்திமா பாபு, விநோதினி, ஞாநி பங்கேற்கும்

ஒரு நாடகவாசிப்பு.

எழுதியவர்: திலீப்குமார்

இயக்கம்: ஞாநி

பிப்ரவரி 5, 2012, ஞாயிறு மாலை 6 மணி.

ஸ்பேசஸ் அரங்கு, 1, எலியட் பீச் சாலை, பெசண்ட் நகர், சென்னை 90

இந்த நாடகப் பிரதி ஒரு சாதாரண எழுத்தாளன், இரண்டு சாதாரணப் பெண்கள் மூவரும் இலக்கியம், பாலியல் சார்ந்து சஞ்சரிக்கும் ஓர் அசாதாரணமான நிலைமை பற்றியது.

Pareeksha

presents

Ramaavum Umaavum

featuring actors Fathima Babu, Vinodhini and Gnani in

a play-reading of script by Tamil writer Dilip Kumar.

Direction: Gnani

February 5, 2012, Sunday at 6 pm at Spaces, 1, eliot beach road, besant nagar, chennai 90.

the play is about an ordinary writer and two ordinary women who together live under extraordinary circumstances of literature and sexuality.

சூரிய கதிர் பதில்கள் 1.2.2012
கவிதா, சென்னை.

உங்கள் மூக்குக் கண்ணாடி, நீங்கள் எப்போதும் முறைத்துக்கொண்டே இருப்பது போன்ற தோற்றத்தை தருவதை உணர்ந்திருக்கிறீர்களா?

கண்ணாடி இல்லாவிட்டாலும் அப்படித்தான் தோன்றும். ஏனேன்றால் நான் எப்போதும் முறைத்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

சீனிவாசன், சென்னை.

இந்தவருட புத்தகக்கண்காட்சி எப்படி இருந்தது? எட்டணா சைசில் இருந்த 4 மசால் வடை ஐம்பது ரூபாய் என கொள்ளை அடித்த கூத்து அரங்கேறியிருக்கிறதே?

ஒவ்வொரு வருடமும் சென்னைப் புத்தக்க்கண்காட்சியில் இரு அம்சங்கள் அதிருப்தியை ஏற்படுத்துவதாக்வே அமைவது வழக்கம். ஒன்று கழிப்பிட வசதி. இன்னொன்று கேண்டீன் வசதி. இம்முறை கழிப்பிட வசதிகள் ஓரளவு மேம்படுத்தப்பட்டிருந்தன. குறிப்பாக பெண்களுக்கான கழிப்பிடம், தூய்மையாகவே இருந்ததாக உபயோகித்தவர்கள் சொன்னார்கள். கேண்டீனில் இடவசதி நன்றக இருந்தது. ஆனால் விலைகள் மிகஅதிகம். சிறு தின்பண்டங்களுக்கான மலிவு விலைக் கடைகள் கூடவே இருந்ததால், பணவசதி அதிகம் உள்ளவர்கள் மட்டுமே கேண்டீனைப் பயன்படுத்தினார்கள். நாட்டில் நிலவும் கடுமையான பண வீக்கம் புத்தக விலைகளிலும் கேண்டீன் விலைகளிலும் பிரதிபலித்தது என்றே இதைப் பார்க்க வேண்டும்.

ரேவதிப்ரியன், ஈரோடு.

(சசிகலா) நடராஜனும், தயாநிதிமாறனும் இணைந்து செயல்பட வாய்ப்பிருக்கிறதா?

நடராஜனுடன் யாரும் இணைந்து செயல்பட முன்வரமாட்டார்கள். சிறிய அளவில் அவரைப் பயன்படுத்திக் கொண்டு உதறிவிடுவார்கள். ஏனென்றால் தமிழக முதலமைச்சராக தான் வரவேண்டுமென்ற அவர் கனவுக்காக மற்றவர்கள் ஏன் உழைக்க வேண்டும் ?

முருகன், திருநெல்வேலி.

பொறுப்பான முதலமைச்சர் பதவியில் இருந்த போது சினிமா பார்த்தும்.. கதை எழுதியும் பொழுதை ஓட்டிய கருணாநிதி.. இப்போது சும்மா இருக்கும் போது கதை எழுதுவதையும் சினிமா பார்ப்பதையும் தவிர்த்துவிட்டாரே?

தவிர்க்கவில்லை. குறைந்துவிட்டது. அவர் முதல்வர் பதவியில் இல்லையென்றால் அவரை யார் சினிமாவுக்கு கதை வ்சனம் எழுத அழைப்பார்கள் ?  இந்தியாவிலேயே மிக அதிகமான வசனகர்த்தா சம்பளம் 50 லட்ச ரூபாய் அவருக்குக் கிடைக்கக் காரணம் அவருடிஅய வ்சனம் அல்ல. அவர் அப்போது முத்லமைச்சர் பதவியில் இருந்ததுதான். பதவியில் இருக்கும்போது மரியாதைக்காக அவரை  படம் பார்க்க அழைத்த பல சினிமா தயாரிப்பாளர்கள் இப்போது எப்படி அழைப்பார்கள் ? ஆட்சி மாறினால் காட்சிகளும் மாறிவிடும்.

கோவிந்தன், தேனி.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைதான 14 பேரில் பத்துபேர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்களே?

மொத்த பேருமே ஜாமீனில் வந்தாலும் பிரச்சினையில்லை. விசாரணை முழுமையாக் நடந்து கடைசியில் தண்டிக்கபடுவார்களா என்பதுதான் முக்கியம். நீதிபதி கங்குலி பிப்ரவரியில் ஓய்வு பெற்றதும், விசாரணை நீர்த்துப் போய்விடலாம் என்ற அச்சம் நிலவுகிறது,.

ராஜாராம், சென்னை.

புத்தக கண்காட்சியில் ரெண்டு எழுத்தாளர்களுக்கிடையே கையை கடித்து சண்டை போட்டார்களாமே?

அது எழுத்தாளர்களிடையிலான சண்டை அல்ல. குடிகாரர்களிடையே நடந்த சண்டை. டாஸ்மாக் வாசலில் தினசரி பல சண்டைகள் நடக்கின்றன. ஐ.டி எஞ்சினீயரும், குழாய் ரிப்பேர்காரரும் சண்டை போட்டார்கள் என்றா சொல்லுகிறோம் ?

ஸ்டீபன், திருச்சி.

தி.மு.க. பொதுக்குழுவில் என்ன நடக்கப்போகிறதாம்?

ஒன்றும் நடக்காது. ஸ்டாலின், அழகிரி, கனிமொழி மூவரும் தத்தம் பலத்தைப் பெருக்கிக் கொள்ள முயற்சிப்பார்கள். யாருக்கும் எதுவும் செய்யாமல் இப்போதுள்ல நிலையே தொடரும் என்றுஅறிவித்து தப்பிக்க முடியுமா என்று கலைஞர் முயற்சிப்பார். இல்லாவிட்டால் மூவருக்கும் கூடுதல் பதவிகள் கொடுத்து திருப்தி என்று யோசிப்பார். மற்றபடி பொதுக் குழுவுக்கும் மக்களின் நிலைமைக்கும் எந்த தொடர்பும் வழக்கம் போல் இராது, சம்பிரதாயமாக எல்லா விஷயங்களுக்காகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். .

ஆர்.பி.ஈரோடு.

அண்மையில் எந்த அரசியல்வாதியின் பேச்சு உங்களுக்கு சிரிப்பை வரவழைத்தது?

அரசியல்வாதி அல்ல. மருத்துவர் வி.சாந்தாவின் பேச்சுதான் வேதனைச் சிரிப்பை வரவழைத்தது. புற்று நோய் நிபுணரான சாந்தா. கூட்னக்குலம் அணு உலைக்கு ஆதரவான அரசு உயர்நிலைக் குழுவில் உறுப்பினர். உலைக்கு சாதகமாக மக்கள் கருத்தை உருவாக்குவதற்கக அரசு வெளியிட்ட டி.வி.விளம்பரங்களில் சாந்தா, புற்று நோய்க்கும் கதிரியக்கத்துக்கும் சம்பந்தமில்லை என்று சொல்கிறார். ஓப்பன்ஹெமர், என்ரிகோ பெர்னி போன்ற அணு தொழில்நுட்ப விஞ்ஞானிகள் முதல் மேடம் கியூரி போன்ற ஆய்வாளர்கள் வரை நிரூபித்த விஷயம் கதிரியக்கத்தால் புற்று நோய் ஏற்படும் என்பது. அப்படி இல்லை என்று ‘கண்டு பிடித்திருப்பதற்காக’ சாந்தாவுக்கு நியாயப்படி நோபல் பரிசே வழங்கப்படவேண்டும் !

ஹரிபாபு, தூத்துக்குடி.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளாரே?

இந்தியா ஆதரவளிக்கிறது என்பதை யாரும் மறுக்கவில்லை. கோடிக்கணக்கான் ரூபாய்களை இலங்கை அரசிடம் கொடுத்துவருகிறதே. ஆனால் அவையெல்லாம் என்னவாகின்றன என்பதுதான் தெரியவில்லை.சமமான அரசியல் உரிமைகளைத் தமிழர்களுக்குப்பெற்றுத்தர இந்தியா என்ன செய்திருக்கிறது என்றும் தெரியவில்லையே.

பாலு, விழுப்புரம்.

இனி, நான் யாருக்கும் கட்டுப்பட மாட்டேன், நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது என்று சசிகலாவின் கணவர் நடராஜன் கூறியிருக்கிறாரே?

இந்த வருடத்தின் மிகப்பெரிய ஜோக் விருது நடராஜனுக்குக் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

சண்முகம், கரூர்.

.தமிழகத்தில் ஓடும் நதிகளை ஒன்றாக இணைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று  ஓ.பன்னீர் செல்வம் டெல்லியில் நடந்த மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறாரே?

தமிழகத்தில் ஓடும் நதிகளை இணைத்தால் என்ன பயன் ? எல்லா பெரிய நதிகளும் வேறு மாநிலங்களில் தொடங்கி இங்கே வருகின்றன.. அங்கேயே அடைத்துவிட்டால், இங்கே என்ன வரும் ?

வினு, திருவாரூர்.

முல்லைப்பெரியாறு பிரச்னை அமுங்கிவிட்டதா? அமுக்கிவிட்டார்களா?

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குக் காத்திருந்தாகவேண்டும் என்ற யதார்த்த நிலை கேரளாவுக்கும் புரிவதால், கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்கள்.பிப்ரவரியில் நிபுணர் குழு அறிக்கை வந்தபின் மறுபடியும் சர்ச்சைகள் ஆரம்பிக்கப்படும்.

சக்திவேல், விருதுநகர்.

ஸ்டாலின், பொன்முடி மோதலுக்கு என்ன காரணம்?

எரிகிற வீட்டில் யார் எதைப் பிடுங்கிக் கொள்வது என்ற போட்டிதான் காரணம். தீயை அணைத்து வீட்டை சீரமைக்கும் அக்கறை யாருக்கும் இல்லை.

வண்ணை கணேசன், சென்னை.

கூடங்குளம் அணுமின்நிலையத்தை விரைந்து செயல்பட நடவடிக்கை  எடுக்கும் படியும் மற்றும் கூடங்குளம் பகுதி மேம்பாட்டிற்காக ரூ.200 கோடியிலான வளர்ச்சி திட்டத்தை செயல் படுத்த வேண்டும் என்றும் பிரதமருக்கு அப்துல்கலாம் வற்புறுத்தி இருக்கிறாரே?

கூடங்குளம் மக்களை ஏமாற்றி லஞ்சம் கொடுத்து அணு உலைக்கு அனுமதி பெறுவதற்காக அவர் மூலம் அரசாங்கம் சொன்ன திட்டம் இது. அதை நடைமுறைப்படுத்துவதற்காக அவர் அரசுக்குக் கடிதம் எழுதுவது போல இது இன்னொரு நாடகம். அடுத்தபடியாக தமிழக அரசை ஏமாற்றுவதற்காக கூடங்குளம் மின்சாரத்தில் அதிக பங்கை உங்களுக்குத் தருகிறோம் என்று மத்திய அரசு சொல்லும் வேலையைத் தொடங்கியிருக்கிறது. இதுவும் இதுவும் நம் காதில் பூ சுற்றும் பிரசாரம்தான். முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். அணுசக்தி துறை ஆயிரம் மெகாவாட் தயாரிக்கும் திறனுடன் ஒரு உலையை நிறுவினால் அதில் பாதி அளவுகூட உற்பத்தியே செய்வதில்லை என்பதுதான் வரலாறு. கல்பாக்கம் உலைகளே கடந்த நான்கைந்து வருடங்களாகத்தான் மொத்த உற்பத்தி திறனில் 40 முதல் 50 சதவிகிதத்துக்கு மின்சாரம் தயாரிக்கும் நிலைக்கு வந்திருக்கின்றன.

ஆய்வாளர் மோகன் சர்மா கணக்கிட்டுள்ளபடி கூடங்குளத்தில் உள்ள இரண்டு உலைகளும் இயங்க ஆரம்பித்து மொத்த உற்பத்தித் திறனாகிய 2 ஆயிரம் மெகாவாட்டில் 60 சதவிகித மின்சாரம் தயாரித்தாலும், 1200 மெகாவாட்தான் வரும். இதில் பத்து சதவிகிதம் கூடங்குளம் வளாகத்துக்கே செலவாகிவிடும். (வழக்கமாக அணு உலைகள் தங்கள் உபயோகத்துக்கே 12.5 சதம் செலவழிக்கின்றன). மீதி 1080 மெகாவாட்தான். இதில் தமிழகத்தின் பங்கு 50 சதவிகிதம் எனப்படுகிறது. (இதுவும் வழக்கமாக 30 சதவிகிதம்தான்.) ஐம்பது என்றே வைத்தாலும் கிடைக்கப் போவது 540 மெகாவாட். இதில் 25 சதம் வழக்கமாக தமிழகத்தில் மின்கடத்துவதில் ஏற்படும் டிரான்ஸ்மிஷன் இழப்பு. எனவே நிகர மின்சாரம் கிடைக்கக் கூடியது 405 மெகாவாட்தான்.

இதற்கு இத்தனை கோடி செலவு செய்து படு ஆபத்தான வம்பை விலைக்கு வாங்கத் தேவையே இல்லை. முதல்வர் ஜெயலலிதா மழை நீர் சேகரிப்புக்கு ஒரே ஒரு ஆணை போட்டு நிலத்தடி நீரை மேம்படுத்தியது போல ஒரே ஒரு ஆணை பிறப்பித்து தமிழகம் முழுக்கவும் இருக்கும் குண்டு பல்புகளை மாறி குழல் பல்புகளாக்கினாலே 500 மெகாவாட்டுக்கும் மேலே மின்சாரம் மிச்சமாகிவிடும். இப்போது டிரான்ஸ்மிஷன் லாஸ் என்ப்படும் மின் கடத்துதலில் ஏற்படும் இழப்பால் இந்தியாவில் நாம் தயாரிக்கும் மின்சாரத்தில் 25 முதல் 40 சதவிகிதத்தை சுமார் 72 ஆயிரம் மெகாவாட்டை விநியோகிக்கும்போதே இழந்து கொண்டிருக்கிறோம். ஸ்வீடன் நாட்டில் இந்த இழப்பு வெறும் 7 சதவிகிதம்தான். அதுதான் உலக சராசரி. விநியோகத்தில் இழப்பை குறைக்க விஞ்ஞானிகள் வேலை செய்தாலே, சுமார் 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் நமக்குக் கிடைத்துவிடும். வெறும் பத்து சதவிகிதமாகக்  குறைத்தாலே தமிழகத்தில் 1575 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இந்த மாதிரி நடைமுறைக்கேற்ற மாற்றுவழிகள் இன்னும் நிறையவே இருக்கின்றன.

சூரிய கதிர் 1.2.2012

மூழ்கும் உண்மைகள்…..
இந்திய அரசின் வல்லரசுக் கனவில் இன்னொரு அத்தியாயம் நனவாகிறது. கோடிக்கணக்கான ரூபாய்கள் அணு உலைகளிலும் நீர்மூழ்கிகளிலும் மூழ்கும்போது கூடவே பல கசப்பான உண்மைகளையும் சேர்த்து மூழ்கடிக்க்ப் பார்க்கிறது அரசு.

அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலைத் தன் கடற்படையில் வைத்திருக்கும் உலக நாடுகள் இதுவரை ஐந்துதான். அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், சீனா.ஆறாவதாக இந்தியாவும் இந்த அணுகுண்டர்கள் க்ளப்பில் சேர்கிறது. இந்தப் ‘பெருமை’ இப்போதைக்கு வாடகைப் பெருமைதான். ஏனென்றால் இந்தியா இந்த நீர்மூழ்கிக் கப்பலைக் கட்டவில்லை. ரஷ்யா கட்டிய நெர்ப்பா என்ற கப்பலை வாடகைக்கு வாங்கி ஐ.என்.எஸ் சக்ரா-2 என்று பெயர் மாற்றிவிட்டது. வாடகை ரொம்ப அதிகமில்லை ஜெண்ட்டில்மன். ஐயாயிரம் கோடி ரூபாய்கள்தான். பத்து வருடத்துக்கான வாடகை.

இதற்கு முன்னாலும் இந்தியா வாடகைப் பெருமையை அடைந்ததுண்டு. இதே ரஷ்யாவிடமிருந்து ( அப்ப சோவியத் யூனியன் !) 1988ல் மூன்று வருடம் குத்தகையில் ஒரு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி அதற்கு ஐ.என்.எஸ். சக்ரா 1 என்று பெயர் வைத்திருந்தது. அதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதை மீறி சோவியத் யூனியன் அந்த நீர்மூழ்கியை இந்தியாவுக்குக் கொடுத்தபோது கூடவே போட்ட ஒப்பந்தம்தான் கூடங்குளம் அணு உலை ஒப்பந்தம். எங்ககிட்ட அணு உலை வாங்கினா, நீர்மூழ்கியும் வாடகைக்குத் தருவேன் என்று சொல்லிதான் அந்த பேரம் நடந்தது. நாமும் 1974ல பொக்ரான்ல அணுகுண்டு வெடிச்சதுலருந்தே சொந்தமா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்க கல்பாக்கத்துலயும் விசாகப்பட்டினத்துலயும் மண்டையை மோதிகிட்டு கோடி கோடியா கொட்டி முயற்சி பண்றோம். இன்னும் முடியலியே. ஒரு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் எப்பிடி இருக்கும்னு யாராவது ஒரு சேம்பிள் காண்பிச்சா நல்லாயிருக்குமேன்னு அப்போது வாடகைக்கு எடுத்துப் பார்த்தது இந்திய அரசு.

இப்போது பத்து வருட வாடகைக்கு எடுத்திருக்கும் நெர்ப்பர் என்கிற ஐ.என்.எஸ் சக்ரா -2  நீர்மூழ்கிப் போர்க் கப்பலில் எந்த அணு ஆயுத ஏவுகணைகளையும் இந்தியா எடுத்துச் செல்லமுடியாது. அதற்கு அமெரிக்காவின் எதிர்ப்பும் உலக நாடுகளின் தடை ஒப்பந்தமும் காரணம். அப்துல் கலாம் தயாரித்துக் கொடுத்திருக்கும் மீதி அக்கினிச் சிறகுகளையெல்லாம் இதில் எடுத்துச் செல்லலாம்.

நெர்ப்பாவுடைய சுவாரசியமான வரலாற்றைப் பார்க்கலாம்.

இந்த நீர்மூழ்கியை 1991ல் ரஷ்யாவின் அமுர் கப்பல்துறையில் கட்ட ஆரம்பித்தார்கள். 1995 வரையில் வேலை நடந்தது. அந்தக் கப்பல் துறை அதுவரை வருடத்துக்கு ஒரு நீர்மூழ்கிக் கப்பல் கட்டுவது என்கிற வேகத்தில் இயங்கிவந்தது. சோவியத் யூனியன் உடைந்து ரஷ்யா திவால் நிலையை அடைந்ததால், பணம் இல்லாமல் எல்லாம் முடங்கிவிட்டன. அடுத்த 10 வருடத்துக்கு இங்கே பெரிய வேலை எதுவும் நடக்கவில்லை. நெர்ப்பா அரைகுறையாகக் கட்டின நிலைமையில் கிடந்தது. அதற்கு திரும்ப மறுவாழ்வு கிடைத்தது 2004ல் இந்தியா ரஷ்யாவுடன் ஒப்பந்தம் போட்டபோதுதான். இந்தியாவிலிருந்து அட்வான்ஸ் பணம் வந்ததும் மறுபடி கப்பலைக் கட்ட ஆரம்பித்தார்கள். இதற்குள் கப்பல்துறையில் இருந்த பழைய அனுபவம் வாய்ந்த மூத்த தொழிலாளர்கள் பலரும் வேறு வேலை தேடிப் போய்விட்டார்கள். மீதி கப்பலைக் கட்டி முடித்தவர்கள் புது ஆட்கள்தான்.  இந்தத் துறையில் கடைசியாகக் கட்டிய நீர்மூழ்கிக் கப்பல் நெர்ப்பாதான்.

கப்பலை முதல் வெள்ளோட்டம் பார்க்கும்போதே ஒழுக ஆரம்பித்தது ! துருப் பிடிக்காமல் தடுக்கும் பெயிண்ட்டின் தரம் சரியில்லை என்று கருதப்பட்டது. பின்னர் அது சரி செய்யப்பட்டது. கட்டிப் பாதியில் நிறுத்தி வைத்திருந்ததால், உபயோகிக்காமல் பல பாகங்கள் பலவீனமாகிவிட்டன என்றும் சிலர் கருதினார்கள்.ஒருவழியாகக் கட்டி முடித்தபிறகு 2008ல் நெர்ப்பாவில் ஒரு பெரிய விபத்து ஏற்பட்டது.

நீர்மூழ்கிக் கப்பல் என்பதில் விபத்து ஏற்பட்டு கதவுகள் அடைபட்டால், ஜலசமாதிதான். ஜன்னல் வழியே தப்பித்துவரும் சமாசாரம் எதுவும் கிடையாது. எழுபதுகளில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபராக இருந்தபோது இந்திய கடற்படையின் ஒரு நீர்மூழ்கிக்கப்பலில் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. கடினமான அனுபவம்தான்.

நெர்ப்பாவில் ஏற்படது தீவிபத்து. நீர்மூழ்கிக் கப்பல்களில் தீவிபத்துகள் ஏற்படுவது சகஜம். எனவே தீயணைப்புக்கான வழிமுறைகள் முக்கியமானவை. தீ ஏற்பட்டதும், அலார்ம் பெல் ஒலித்து ஆட்டொமேடிக்காக நீர்மூழ்கிக் கப்பலில் பல்வேறு அறைகளின் கனமான இரும்புக் கதவுகளும் தானே பூட்டிக் கொண்டுவிடும்.  ஆக்சிஜன் இல்லாமல் தீ எரியாது. பரவாது என்பதால், ஒவ்வொரு அறையிலும் இருக்கும் ஆக்சிஜனை உறிஞ்சி எடுத்துவிடும் சாதனம் இயங்க ஆரம்பித்துவிடும். ஆக்சிஜனை உறிஞ்சிவிட்டு, தீயை அணைப்பதற்கான ஃப்ரியான் வாயுவை செலுத்தும். இது விஷவாயு. அலார்ம் மணி ஒலித்ததுமே நீர்மூழ்கிக் கப்பலில் இருப்போர் எல்லாரும் அவரவருக்கென்று தரப்பட்டிருக்கும் ஆக்சிஜன் முகமூடிகளை முகத்தில் மாட்டிக் கொண்டுவிடவேண்டும்.  இல்லாவிட்டால், சுவாசிக்க ஆக்சிஜனும் இல்லாமல் விஷ வாயுவை சுவாசித்து மூச்சுத் திணறி சாவார்கள்.

நவம்பர் 2008ல் நெர்ப்பாவில் நடந்த விபத்தின்போது கப்பல் கடலில் சோதனை ஓட்டத்தில் இருந்தது. தீ விபத்து அலாரம் ஒலித்து சாதனங்கள் தானே இயங்கத்தொடங்கியதும் பலரும் ஆக்சிஜன் மாஸ்க் அணியமுடியவில்லை.கப்பலில் மொத்தம் 208 பேர் இருந்தார்கள். 20 பேர் இறந்தனர்.

கொடுமை என்னவென்றால் தீவிபத்தே நடக்கவில்லை. ஆனால் தீயணைப்பு அலாரம் ஒலித்து தானியங்கி சாதனம் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. இது சாதனக் கோளாறா, அல்லது யாரேனும் ஊழியர்களின் தவறுதலா என்று விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. கேப்டன் லாரெண்ட்டொவ். எஞ்சினீயர் குரோபோவ் இருவரின் அலட்சியத்தால் விபத்து  நடந்தது என்ற குற்றச்சாட்டை நீதிமன்ற ஜூரிகள் நிராகரித்துவிட்டார்கள்.  இதை அரசு எதிர்த்து முறையீடு செய்துள்ளது. பாதி கட்டிய நிலையில் பத்து வருடம் கப்பலை துருப்பிடிக்க விட்டது, அனுபவமற்ற ஊழியர்களைக் கொண்டு கப்பலைக் கட்டியது, ரஷ்யாவின் அணுசக்தி துறையான ரோசாட்டமில் இருக்கும் ஊழல்கள் எல்லாம்தான் விபத்துக்குக் காரணம். அதை மறைக்க இந்த இருவர் மீது வழக்கு போடப்பட்டிருக்கிறது என்று ரஷ்யாவின் அணு எதிர்ப்பு இயக்கங்கள் சொல்கின்றன. ( கூடங்குளம் உலையை கட்டியிருக்கும் ரோசாட்டத்தின் ஊழல்கள் பற்றி.கல்கி  இதழின் ஓ பக்கங்களில் முன்பே எழுதியிருக்கிறேன்)

இந்த விபத்துக்குள்ளான நெர்ப்பா கப்பலைத்தான் ஐயாயிரம் கோடி ரூபாய் வாடகையில் இப்போது இந்திய அரசு இங்கே கொண்டு வருகிறது. தரை, வானம், கடல் மூன்று வழிகளிலும் அணு ஆயுதங்களை வீசுவதற்கான திறமையை அடைவதுதான் இந்திய அரசின் நோக்கம். இப்போது தரை, வான் வழியே வீசுவதற்கான திறன் இருக்கிறது.  கடல் வழியே சென்று அணு ஆயுதத் தாககுதல் நடத்த நீர்மூழ்கிக் கப்பல் தேவைப்படுகிறது. ரஷ்யாவிடம் வாடகைக்கு எடுக்கும் கப்பல் அணுசக்தியில் இயங்கும் என்பதால் அடிக்கடி கரைக்கு வந்து சார்ஜ் செய்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இதில் அணு ஆயுதம் எடுத்துச் செல்லமுடியாது என்ற தடை இருக்கிறது.

அப்படியானால் அணு ஆயுதமும் எடுத்து செல்லக்கூடிய அணுசக்தியிலும் இயங்கக்கூடிய நம்முடைய சுதேசி நீர்மூழ்கிக் கப்பல் எப்போது வரும் ? முப்பதாயிரம் கோடி ரூபாய்களைக் கொட்டியிருக்கிறோம். முப்பது வருடமாக முயற்சித்திருக்கிறோம். ஒருவழியாக இந்த வருடம் கடலுக்கு அனுப்பி சோதனை வெள்ளோட்டம் செய்து பார்த்துவிடும் என்று சொல்லப்படுகிறது.

ஐ.என்.எஸ்.அரிஹாந்த் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த நீர்மூழ்கிக்கப்பலை பிரதமர் மன்மோகன்சிங்கின்  மனைவி 2009ல் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் முறைப்படி தொடங்கிவைத்தார். ( நீர்மூழ்கிக்கப்பலகளை பெண்கள்தான் தொடங்கிவைக்கவேண்டும் என்பது ஒரு விசித்திரமான மரபு)

இந்தக் கப்பலைப் பற்றிய ஒரு செய்தியைப் பார்க்கலாம். சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்பு மே 2011ல், விசாகப்பட்டினத்தில் கப்பல்துறைக்குள் இந்த நீர்மூழ்கிக்கப்பலை கொண்டு செல்ல முயற்சித்தபோது ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் பலியானார்கள். கப்பலை சூழ்ந்து நின்று அதை கரை சேர்க்க பயன்படுத்தப்படும் ஒரு பெரிய இரும்புக் கூண்டு போன்ற அமைப்புக்கு கய்சான் என்று பெயர். இதைக் கொண்டு அரிஹாந்த்தை கரை சேர்த்தபோது கய்சான் நொறுங்கிவிழுந்து கமாண்டர் அஸ்வினி குமார், கமாண்டர் ரன்பிர் ரஞ்சன், மாலுமிகள் மது பாபு, ராஜேஷ் ஆகியோர் படுகாயமடைந்து இறந்தனர்.

மிகப் பெரிய சாதனைகளை நோக்கிச் செல்லும்போது சின்ன விபத்துகளைக் கண்டு துவண்டுவிடக் கூடாது என்பதுதான் லேட்டஸ்ட் அப்துல் கலாம் பொன்மொழி. (கூடங்குளம் பாதுகாப்பானது என்ற அவர் அறிக்கையில் உதிர்த்த இன்னொரு பொன்மொழி: விபத்துகளிலிருது நாம் கற்றுக் கொள்கிறோம்.)

அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களில் அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் வல்லமையினால் நாம் சாதிக்கப் போகும் சாதனை என்ன ?

ஆயிரம் கிலோ அணு ஆயுதத்தை சுமந்துகொண்டு 700 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் சகரிகா ஏவுகணைகளை இந்த அரிஹந்த் நீர்மூழ்கியிலிருர்ந்து நீருக்கடியிலேயே வீசலாம். அடுத்து மூவாயிரம் கிலோமீட்டர் தூரம் செல்லக்கூடிய ஏவுகணையை நீருக்கடியிலிருந்தே வீசுவதற்கான சோதனைகள் நடந்துவருகின்றன. இந்தியப் பெருங்கடலிலும் அரபிக் கடலிலும் இந்த நீர்மூழ்கிகள் வலம் வந்தால் பாகிஸ்தானும் வங்க தேசமும் இந்தியாவிடம் பயப்பட்டுத்தான் ஆகவேண்டும்.

ஆனால் ஸ்ரீலங்கா ? நிச்சயம் பயப்படப் போவதில்லை.  அதனிடம்

ஒரு அணு உலையும் கிடையாது. ஒரு அணு ஆயுதமும் கிடையாது. இந்தியாவிலிருந்து வெறும் முப்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நாடு இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களைக் கொன்று குவித்திருக்கிறது. நெருப்புக் கோழி தலையை மண்ணில் புதைத்துக் கொள்வது போல இந்தியா தலையை தண்ணீருக்குள் புதைத்து வைத்துக் கொண்டிருக்கிறது என்பது அதற்கு நன்றாகவே தெரியும். நமக்கு பாகிஸ்தான்தானே எதிரி. ஸ்ரீலங்கா நண்பன். அப்படித்தானே பாடப் புத்தகங்களில் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் ?

இந்த வாரப் பூச்செண்டு

தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு விடைத்தாட்களை தேர்வெழுதியோர் பார்க்கவும் நேர்காணல் வீடியோ பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருப்பதற்காக புதிய தலைவர் நட்ராஜுக்கும் செயலர் உதயசந்திரனுக்கும். இ.வா.பூ.

இந்த வாரக் கண்டனம்

ஒரு இலக்கிய விழாவில் பேசவருவதற்குக் கூட எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு மறைமுக தடைகள் விதித்திருக்கும் இந்திய அரசுக்கு இ.வா.க.

இந்த வாரக் கேள்வி:

கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக் குழுவினர் பல மாதங்களாக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்டும் ஒதுக்காத நிலையில், அணு உலை ஆதரவுப் பிரசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் டாக்டர் சாந்தாவை மட்டும் முதலமைச்சர் சந்திக்க நேரம் ஒதுக்கியதன் மர்மம் என்ன ? மத்திய அரசின் வற்புறுத்தலா ?

கல்கி 28.1.2012

ஏன் இந்த உலைவெறி? அணு உலைகள்- வரமா, சாபமா ?- ஒரு கேள்வி பதில் தொகுப்பு
இது ஜனவரி 4,2012 அன்று என் பிறந்த நாளையொட்டி நான் எழுதி வெளியிட்டிருக்கும் சிறு நூல். அணு உலை வேண்டாம் என்று சொல்பவர்களிடம், ஏன் வேண்டுமென்று சொல்வோர் வைக்கும் வாதங்களுக்கெல்லாம் இதில் பதில்கள் உள்ளன.

ஏன் இந்த உலைவெறி?

அணு உலைகள்- வரமா, சாபமா ?-

ஒரு கேள்வி பதில் தொகுப்பு

ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்

உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்

அணுகுண்டு சோதனைகள், அணுமின் நிலைய விபத்துகள்,

கதிரியக்கங்கள் ஆகியவற்றால் உலகில் இதுவரை இறந்துவிட்ட லட்சக்கணக்கான மக்களுக்கும், இன்னமும் நோய்களால் நடைபிணங்களாக வாழ்ந்து கொண்டிருப்போருக்கும், இதிலிருந்து பிடிவாதமாக எதையும் கற்றுக் கொள்ள மறுக்கிற எல்லோருக்கும் இந்த நூல் காணிக்கை.

வணக்கம்

எந்தக் கட்சியும் எந்தத் தலைவரும் ஒரு போதும் அறிவிக்காத

ஒரு பிரும்மாண்டமான இலவசம் வாக்காளர்களான நமக்காகக்

காத்துக் கொண்டிருக்கிறது. அதுதான் இலவசக் கதிர்வீச்சு. அதற்கு

ஆணவம் மிகுந்த ஜெயலலிதாவா, தியாகதீபம் வைகோவா,

சூழ்ச்சிக்காரக் கருணாநிதியா, அப்பாவியான வாக்காளர்களா

என்றெல்லாம் பாரபட்சமே கிடையாது. எல்லாரையும் அழித்துவிடும்.

தமிழ்நாட்டை அழிக்க வடக்கே கல்பாக்கத்திலும் தெற்கே

கூடகுளத்திலும் அமைந்துள்ள அணு உலைகளே போதுமானவை.

பெரும் விபத்துக்குள்ளான அணு உலையிலிருந்து 140 கிலோ மீட்டர்

தொலைவில் உள்ள டோக்கியோவில் கதிரியக்க அளவு 20 மடங்கு

அதிகமாகிவிட்டது. சென்னைக்கும் கல்பாக்கத்துக்கும் இடையில்

வெறும் 80 கிலோமீட்டர்தான். சென்னையில் சுனாமி வந்தபோது

கல்பாக்கம் உலையும் பாதிக்கப்பட்டது. பெரிய பாதிப்பு இல்லாததால்

தப்பித்துக் கொண்டோம். ஜப்பான் உலைக்கு நேர்ந்தது போல இங்கே

நேர்ந்தால் இப்போது இதை எழுத நானும் படிக்க நீங்களும் இருக்க

மாட்டோம்.

அணு உலையில் பெரும் விபத்து ஏற்பட்டால் உடனடியாக சில

லட்சம் பேரும் மெல்ல மெல்ல புற்று நோயில் மேலும் பல லட்சம்

பேரும் அழிவது நிச்சயம். அது பல தலைமுறைகளுக்கு நிலம், நீர்,

காற்று, மனிதர்களை நாசமாக்குகிறது. அணுக் கழிவுகளிலிருந்து

கதிரியக்கம் ஏற்படாமலும் பரவாமலும் கட்டுப்படுத்தி வைக்க

போதுமான தொழில்நுட்பம் உலகில் எங்கேயும் இன்னமும் நூறு

சத விகித உத்தரவாதத்துடன் உருவாக்கப்படவே இல்லை. விபத்து

ஏற்படாது என்பதற்கு எந்த உறுதியும் கிடையாது. ஏற்பட்டால் தீர்வுகள்,

நிவாரணங்கள் சாத்தியமும் இல்லை.

விபத்துக்கு பயந்தால் முன்னேற முடியாது என்று அப்துல் கலாம்

சொல்கிறார். விபத்துக்கு பயப்படாமல், அவர் கன நீரில் முகம்

கழுவி, யுரேனியம் படுக்கையில் படுத்து ஆராய்ச்சி செய்து மேடம்

கியூரியைப் போல நோபல் வாங்கிக் கொள்வதில் நமக்கு ஒரு

ஆட்சேபமும் இல்லை.ஆனால் ஒரு மக்கள் சமூகத்தையே அவர்கள்

சம்மதம் இல்லாமல் ஆபத்துக்கு உட்படுத்த மன்மோகனுக்கோ

கலாமுக்கோ எந்த அரசுக்குமோ துளிக் கூட உரிமை கிடையாது.

ஆனால் கூடங்குளத்தில் அதைத்தான் செய்கிறார்கள்.

எல்லாம் மின்சாரத்துக்காக என்கிறார்கள். அணு உலையின் மூலம்

ஒருபோதும் நம் மின் தேவை நிறைவேறவே போவதில்லை. அணு

உலை ஆதரவு தரப்பில் சொல்லப்படும் முழுப் பொய்கள், அரை

உண்மைகள், திசை திருப்பும் பிரசாரங்கள் எல்லாவற்றுக்கும் இந்த

சிறு தொகுப்பில் பதில்கள் உள்ளன.

ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப வருடக்கணக்காக

சொல்லவேண்டிய அவசியம் இருப்பது ஒரு எழுத்தாளனுக்கு

கொடுமையான விஷயம். அணு உலைகளுக்கு எதிராக நான்

எழுதி வருவதற்கு இது வெள்ளி விழா ஆண்டு ! எனக்கும் இருபது

வருடங்கள் முன்னாலிருந்தே இந்தியாவில் எண்ணற்ற அறிஞர்கள்,

பத்திரிகையாளர்கள், அமைப்புகள் இதைச் செய்து வருகிறார்கள்.

என்னை வழிப்படுத்தியவர்கள் அவர்கள்தான். பிரஃபுல் பித்வாய்,

தீரேந்திர சர்மா, கிளாட் ஆல்வாரிஸ், எம்.வி.ரமணா, மோகன் சர்மா,

பி.கே.சுந்தரம், சுப்பாராவ், தமிழகத்தில் பூவுலகின் நண்பர்கள்,

புனே, டெல்லி, திருவனந்தபுரம் என்று பல ஊர்களில் இருக்கும்

அணு எதிர்ப்பு இயக்கங்கள், அவற்றுக்கு உதவி வரும் விஞ்

ஞானிகள் என்று நீளும் பட்டியலில் உள்ள பலரும் வருடக்கணக்கில்

திரட்டித் தந்திருக்கும் தகவல் களஞ்சியத்திலிருந்தும், சம கால

உலகளாவிய நடப்புகளிலிருந்தும் எடுத்த ஒரு கரண்டி சத்துணவே

இந்த தொகுப்பு.

இதை தமிழக மக்களுக்கு என் பிறந்த நாள் பரிசாக அளிப்பதில்

மகிழ்ச்சியடைகிறேன்.

அன்புடன்

ஞாநி

ஜனவரி 4, 2012

சென்னை 78

கூடங்குளம் அணு உலையை ஆரம்பத்திலேயே எதிர்க்காமல் இப்போது எதிர்ப்பது ஏன் ?

இப்போதுதான் எதிர்க்கிறோம் என்பது தவறு. நானே 25

வருடங்களாக அணு உலைகளுக்கு எதிராக எழுதிவருகிறேன்.

எண்பதுகளிலிருந்தே கல்பாக்கத்தில் மருத்துவர் புகழேந்தியும்

கோவையில் மருத்துவர் ரமேஷும் கள ஆய்வுகள் அடிப்படையில்

தொடர்ந்து பிரசாரம் செய்துவருகிறார்கள். பிரதமராக இருந்த இந்திரா காந்தி சோவியத் ரஷ்ய உதவியுடன் இந்த திட்டத்தை கேரளாவில் தொடங்குவதாக முதலில் சொன்னார். அங்கே கடும் எதிர்ப்பு வந்ததும் அது தமிழ்நாட்டின் மீது சுமத்தப்பட்டது. கேரளாவைப் போல நாமும் நம் மாநிலத்தில் அணு உலை வேண்டவே வேண்டாம் என்று சொல்லியிருக்க முடியும்.

1984ல் இந்திரா கொல்லப்பட்டார். அதுவே தெரியாத நிலையில்

எம்.ஜி.ஆர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். ஆட்சியை

அதிகாரிகள்தான் நடத்திவந்தார்கள். கூடங்குளத்தில் அணு உலை

அமைக்கும் திட்டத்தை எதிர்த்து அங்கேயும் சென்னையிலும்

வெவ்வேறு அமைப்புகள் குரலெழுப்பின. அணு எதிர்ப்பு இயக்கத்தில்

சென்னையில் நான், நாகார்ச்சுனன், ரவி ஸ்ரீனிவாஸ், வெங்கடேஷ்

சக்ரவர்த்தி, ஏ.எஸ்.பன்னீர்செல்வன் ஆகியோர் ஓர் அமைப்பாக கருத்து பரப்பும் எழுத்து, பேச்சு பணிகளில் செயல்பட்டோம். ‘உங்களால் கரப்பான் பூச்சியாக முடியுமா?’ என்ற தலைப்பில் ஒரு பிரசாரப் படத்தை தயாரித்து வெளியிட்டோம். ஜூனியர் விகடன் இதழில் அணு சக்தியின் ஆபத்து பற்றி தொடர் வெளியிட ஆசிரியர் பாலசுப்ரமணியனுடன் மூன்று மணி நேரம் பேசி சம்மதம் பெற்றேன். எனக்கு அப்போது கடும் வேலை பளு இருந்ததால் என்னால் எழுத முடியவில்லை. பன்னீர்செல்வன் எழுதினார். மருத்துவர் செ.ந.தெய்வநாயகம் வீட்டில் இடதுசாரிகள், தமிழ் தேசிய இயக்கங்கள் உள்ளிட்ட பல அமைப்புகள் கூடிப் பேசி வந்தோம். அவரவர் வழியில் பிரசாரத்தையும் களப் பணிகளையும் முன்னெடுத்துச் சென்றோம். தினமணி ஆசிரியராக அப்போது இருந்த ஐராவதம் மகாதேவன் அணு உலை வேண்டாம் என்று தலையங்கம் எழுதினார். சென்னை அண்ணா சாலை ஸ்பென்சர் சந்திப்பருகே பெரும் பலூன் கொத்துகளைப் பறக்கவிட்டும் பஸ் நிறுத்தங்களில் மனித சுவரொட்டிகளாக நின்றும் பிரசாரம் செய்தோம்.

தென் மாவட்டங்களில் தொண்டு நிறுவனம் நடத்திவந்த ஆண்டன்

கோமஸ், ஒய் டேவிட் ஆகியோர் மக்களைத் திரட்டி இயக்கம்

நடத்தினார்கள். செப்டம்பர் 22, 1987 அன்று இடிந்தகரையில் நடந்த

மாபெரும் பேரணியில் சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் மத்தியில் நானும் பேசினேன். இந்தியா முழுவதும் மீனவர்கள் மத்தியில் பணியாற்றி வந்த கேரளப் பாதிரியார் தாமஸ் கொச்சேரி ஏற்பாட்டில் கன்யாகுமரியில் பேரணி நடந்தது. போலீஸ் துப்பாக்கிச் சூடும் நடந்தது.

1987-88 சமயத்தில் நான் தேசிய முன்னணிக்கு ஆதரவு நிலை

எடுத்து முரசொலியில் ஞாயிறு மலரைத் தயாரிக்கும் வேலை

செய்துவந்தேன். அப்போது தினசரி சந்திக்கும் முரசொலி மாறனிடம்

அணு உலைகளின் ஆபத்து பற்றி நானும் நண்பர்களும் எடுத்துச்

சொன்னோம்.

அதையடுத்து அவர் கூடங்குளம் அணு உலை வேண்டாம் என்று

தி.மு.க செயற்குழுவில் தீர்மானம் போடவைத்தார். அடுத்த சில

மாதங்களில் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், மத்திய அரசின் உருட்டல்

மிரட்டலுக்கு அஞ்சி, போதிய பாதுகாப்புகளுடன் அணு உலையை

ஆரம்பிக்கும்படி மாற்றித் தீர்மானம் போட்டது. டெல்லி நிர்ப்பந்தம்

காரணம் என்று மாறன் என்னிடம் சொன்னார். 1990ல் சோவியத்

யூனியன் சிதறியது. திட்டம் கிடப்பில் போடப்பட்டது. பத்தாண்டுகள்

கழித்துதான் திட்டம் மறு உயிர் பெற்றது.

இப்போதும் மக்கள் இயக்கங்கள் தொடர்ந்து நடந்தன. 2011ல்

உலை கட்டுமானம் முடிந்து சோதனை ஓட்ட ஏற்பாடுகள் நடந்த

சமயத்தில்தான் புகோஷிமா விபத்து நிகழ்ந்தது. 1987ல் இல்லாத

அளவுக்கு இப்போது டி.வி பெட்டிகள் பெருமளவில் ஓட்டு அரசியலால் பெருகிய சூழலில், அணு உலை விபத்தின் முழு கோரத்தையும் தென் தமிழக மக்கள் அதில் பார்த்து உணர முடிந்தது. கூடங்குளம் நிர்வாகம், ஆபத்து ஏற்பட்டால் எப்படி சுற்றியுள்ள கிராமங்களை காலி செய்யவேண்டும் என்று ஒத்திகை நடத்த முறபட்டதும், இங்கேயும் புகோஷிமா போல நிகழக்கூடிய ஆபத்து உண்டு என்பது முழுமையாக மக்களுக்கு உறைத்தது. படித்து முனைவர் பட்டம் பெற்றவரான சுப.உதயகுமாரன் போன்ற பலரின் வழிகாட்டுதலில் தொடர்ந்து மக்கள் போராடிவருகிறார்கள்.

கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது. நில

நடுக்கத்தாலோ சுனாமியாலோ பாதிப்படையாது என்றும்

சரியான இடத்தை முறையான ஆய்வுக்குப் பின்னர்தான்

தேர்வு செய்ததாகவும் அப்துல் கலாம் முதல் அரசு

உயர்மட்டக் குழு வரை சொல்லுகிறார்களே ?

ஒரு பிரச்சினை வருவதற்கு முன்பு அது வராது என்று

சொல்வதும் வந்தபிறகு அதை முன்பே கவனித்துவிட்டோம் என்று

சொல்வதும்தான் அணுசக்தி துறையின் வழக்கம். “இந்தியாவில்

சுநாமிகள் வருவதில்லை.எனவே புயல்களை மட்டுமே ஆய்வுக்கு

எடுத்துக் கொண்டிருக்கிறோம்.” என்று நவம்பர் 1986ல் கன நீர்

அழுத்த அணு உலை பாதுகாப்பு பற்றிய அறிக்கையில் அணுசக்தி

நிர்வாகம் சொல்லிற்று. ஆனால் 2004ல் சுநாமி கல்பாக்கத்துக்கும்

கூடங்குளத்துக்கும் வந்தது. கல்பாக்கம் உலை சுநாமியைக் கணக்கிட்டு வடிவமைக்கப்பட்டதில்லை. தப்பியது அதிர்ஷ்டமே தவிர, அணு விஞ்ஞானிகளின் முன்யோசனையான பாதுகாப்பால் அல்ல. ஆனால் அதன்பிறகு கல்பாக்கம் சுனாமியிலிருந்தும் பாதுகாப்பாக இருப்பதாக அணுசக்தி துறை சொல்லிவிட்டது.

கூடங்குளத்தில் ஆய்வு செய்யப்பட்டு முதல் அறிக்கை

தரப்பட்டது 1998ல். அப்போது தெரியவராத பல உண்மைகள்

2002ல் வெளியாகியிருக்கின்றன. கூடங்குளம் பகுதியில் கீழ்ப்புறம்

பழைய எரிமலைக் குழம்புகள் இறுகிய பாறையாக இருப்பதாகவும்

இவை நிலையற்றவை என்றும் கேரளப் பல்கலைக்கழகத்க்தை

சேர்ந்த டாக்டர் பிஜு, டாக்டர் ரமா சர்மா. ஆகியோரின் ஆய்வுகள்

தெரிவிக்கின்றன. இது பற்றிய கட்டுரை 2004ல் கரண்ட் சயன்ஸ் ஏட்டில் வெளியாகியுள்ளது. இந்த நிலவரத்தை உலை அமைப்பாளர்கள் கணக்கில் எடுக்கவே இல்லை. கூடங்குளம் பகுதியில் சுனாமி வராது என்ற நிலையையே எடுக்கிறார்கள். ஆனால் அரசின் ஆய்வுக் குழு உறுப்பினராக இருந்த நில நடுக்க இயல் நிபுணர் அருண் பாபட் 1998லேயே இப்பகுதியில் எதிர்காலத்தில் சுனாமி வரக் கூடும் என்று தெரிவித்திருக்கிறார். அவர் கருத்தை அரசு அப்போது ஏற்கவில்லை. ஆனால் அவர் சொன்னபடி 2004ல் சுனாமி கூடங்குளத்தில் அணு உலை பகுதிக்கு வந்தது.

கல்பாக்கத்திலும் கூடங்குளத்திலும் புகோஷிமா மாதிரி விபத்துகள்

ஏற்பட்டால், முழு தமிழகமே பாதிக்கப்படும். கூடவே ஆந்திரமும்

கேரளமும் பாதிப்புக்குள்ளாகும். கல்பாக்கத்தில் முதல் இரண்டு

அணு உலைகளைக் கட்டி முடித்தது 1983ல். பின்னர் 1985ல் அதி

ஈனுலை. 1996ல் காமினி உலை. ரீபிராசசிங் எனப்படும் எரிபொருள்

மறுசுத்திகரிப்பு ஆலையும் உள்ளது. அணுக் கழிவுகள் கிடங்கும்

உள்ளது. கடல்நீரை நன்னீராகும் டிசாலினேஷன் ஆலை இருக்கிறது.

1997 வரையில் பயன்படுத்திய எரி பொருள் 125 டன் என்பது

கணக்கு. ஒரு டன்னில் 3 கிலோ புளுட்டோனியம் கிடைக்கும்.

இதுதான் அணுகுண்டுக்கான கச்சாப்பொருள். கல்பாக்கத்தில்தான்

அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை தயாரிப்பதற்கான

கடற்படையின் ஆராய்ச்சி தளமும் உள்ளது. (முப்பது வருடமாகியும்

இதை இன்னமும் உருவாக்கி முடியவில்லை.)

கல்பாக்கத்திலிருந்து 104 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கே

வங்கக் கடலின் அடியில் எரிமலை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இது பற்றி அணுசக்தி துறைவசம் எந்த ஆய்வும் இல்லை. ஜனவரி 20, 1757ல் இந்த எரிமலை பொங்கியதாக வரலாற்றுக் குறிப்பு உள்ளது என்று மருத்துவர் ரமேஷ் ஆய்வில் தெரியவந்தது.

சுனாமியால் கல்பாக்கம், கூடங்குளம் இரண்டுக்கும் எந்த

ஆபத்தும் இல்லை என்று அரசு சொல்லுகிறது.ஆனால் 2004 சுனாமி,

கூடங்குளத்தில் கடல் நீரை நன்னீராக்கும் டீசாலினேஷன் ப்ளாண்ட்டை நாசப்படுத்தியது. அப்போது அணு உலையின் இதர பகுதிகள் கட்டி முடியவில்லை. கல்பாக்கத்தில் சுனாமி அணு உலை ஊழியர் குடியிருப்பு, மருத்துவமனை, மத்திய காவல் படை அலுவலகம், புதிய அதிவேக உலை கட்டுமானம் ஆகியவற்றை சேதப்படுத்தியது. நான்கு விஞ்ஞானிகள் உட்பட 60 பேர் இறந்தனர். புதிய அணு உலைக்காக பூமிக்கடியில் 51 ஆடி ஆழத்துக்கு பெரிய வட்டமான குழி வெட்டி கட்டுமான வேலைகள் நடந்த இடத்தில் கடல் நீர் புகுந்தது. அங்கே பெரும்பாலும் வட இந்தியர்களான கட்டடத் தொழிலாளர்கள் வேலை பார்த்தனர். குழியிலிருந்து வெளியே உடனே ஓடி வர முறையான படிக்கட்டு எதுவும் கிடையாது. கயிற்றேணிகள்தான்.

சுனாமி வரப் போகிறது என்ற முன் எச்சரிக்கையும் தரப்படவில்லை.

ஏனென்றால் கல்பாக்கம் அணு உலை வளாகத்தில் சீஸ்மோகிராஃப்

எனப்படும் நில நடுக்க அளவிடும் கருவியே கிடையாது. சுமார் 150

தொழிலாளர்கள் சிக்கி இறந்திருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

நிர்வாகம் ஒரே ஒரு காந்தம்மாள்தான் இறந்ததாகக் கூறியது. இந்த

சம்பவம் பற்றி சுயேச்சையான விசாரணை எதுவும் நடக்கவில்லை.

கல்பாக்கம் அணு உலையை சுனாமி தாக்கி 25 நாட்களாகியும்

மேலதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை என்று தொழிற்சங்கப்

பிரதிநிதி சதாசிவம் என்பவர் அரசுக்கு எழுதிய கடிதத்தில்

சொல்லியிருக்கிறார்..

அடுத்து சுனாமி வந்தால் கூடங்குளம் பாதிக்கப்படாது

என்பதற்கு அரசு சொல்லும் காரணம் எல்லா கட்டுமானங்களும்

கடல்மட்டத்திலிருந்து 9.5 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டிருப்பதாகும்.

சென்ற சுனாமியில் கூடங்குளத்தில் சுனாமி அலை புகுந்த உயரம் 5

மீட்டருக்கு மேல். கல்பாக்கத்தில் பத்து மீட்டர். இதைக் கணக்கிட்டுதான் கூடங்குளம் பாதுகாப்பானது என்கிறார்கள். அடுத்த சுனாமி வந்தால் பழையபடி 5 மீட்டர் உயரம்தான் வரும், 10 மீட்டர் வராது என்பதற்கு விஞ்ஞானப்பூர்வமாக எந்த ஆய்வோ கணக்கிடுதலோ இல்லை. இது வெறும் ஆரூடம்தான்.

1960களில் இந்தியாவில் அணுசக்தி அறிமுகமான சமயத்தில் உலக

அளவில் ஆண்டு தோறும் நடக்கக்கூடிய இயற்கை பேரழிவுகள்- நில

நடுக்கம், சுனாமி, பெருவெள்ளம் போன்றவை வெறும் 40. ஆனால் 2010ல் இது வருடந்தோறும் 350 முதல் 400 என்றாகிவிட்டது. பூகமபங்களின் எண்ணிக்கை மட்டுமே பத்து மடங்கு அதிகமாகியிருக்கிறது. எனவே இயற்கைப் பேரழிவுகளில் அணு உலைகள் சிக்கினால், விளைவுகள் படுமோசமாக இருக்கும். பாதுகாப்பான அணு உலை என்று உலகில் எதுவும் கிடையாது. இன்னும் தப்பித்து வருகிற அணு உலை என்றுதான் ஒவ்வொன்றையும் சொல்ல முடியும்.

ஒரு வாதத்துக்காக நில நடுக்கம், சுனாமி எதுவுமே வராது என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் அணு உலைகள் பத்திரமானவைதானே ?

இல்லை.புகோஷிமாவில்தான் சுனாமி. ஆனால் அதற்கு முந்தைய

மிகப்பெரிய விபத்தான சோவியத் யூனியனின் செர்னோபில் அணு

உலை விபத்து முழுக்க முழுக்க மனிதத் தவறுகளால் நடந்ததுதான்.

எந்த தொழிற்சாலையிலும் மனிதத் தவறுகள் நடக்கும் வாய்ப்பு

உண்டு. ஆனால் அதனால் விபத்து நடந்தால் ஏற்படும் பாதகமான

விளைவுகள் என்ன என்று பார்க்கவேண்டும். உலகத்திலேயே மிக

அதிக பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை அணு உலை

விபத்துகள்தான். காரணம் அவற்றிலிருந்து வரக்கூடிய ஆபத்தான

கதிரியக்கம் பல தலைமுறைகளுக்கு மனிதர்களையும், நீர். நிலம்,

காற்று, விவசாயம் அனைத்தையும் பாதிக்கக்கூடியது.

செர்னோபில் விபத்தில் 2000 பேர் இறந்ததாக அப்போது சோவியத்

அதிபராக இருந்த கோர்பசேவே சொல்லியிருக்கிறார். ஆனால் அதில்

57 பேர் மட்டுமே இறந்ததாக ஹிந்து பத்திரிகையில் கூடங்குளத்தை

ஆதரித்து எழுதிய கட்டுரையில் கூசாமல் பொய் சொன்னார் அப்துல்

கலாம். 1986லிருந்து 2004 வரை செர்னோபில் விபத்துக் கதிர்வீச்சால்

நோயுற்று செத்தவர்கள் மொத்தம் ஒன்பது லட்சத்து 85 ஆயிரம் பேர்

! இன்னும் 20 ஆயிரம் வருடங்களுக்கு கதிர் வீச்சு நீடிக்கும் என்பதால்

தொடர்ந்து வருடந்தோறும் ஆயிரக்கணக்கில் மெல்ல மெல்ல புற்று

நோய் போன்றவற்றால் இறந்துகொண்டிருப்பார்கள்.

உலையை சுற்றி ஒரு லட்சம் சதுர மைல் பரப்புக்கு அதாவது

சுமாராக முழுத் தமிழ்நாடு அளவுக்கு கதிரியக்கம் கடுமையாக

பதித்திருக்கிறது. இன்னும் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு

இந்த பாதிப்பு இருக்கும். செர்னோபில்லின் கதிர்வீச்சுக்குள்ளானவை

ஐரோப்பாவில் 40 சதவிகித இடம், ஆசியாவில் எட்டு சதவிகிதப்

பரப்பு. இங்கெல்லாம் மொத்தமாக 40 கோடி மக்கள் கதிரியக்கத்துக்கு

உள்ளானார்கள். உலையை சுற்றி வெறும் 30 கிலோமீட்டர் பகுதியில்

இருந்த நான்கு லட்சம் பேரை உடனே வெளியேற்ற வேண்டியதாயிற்று. இன்னும் 5 கோடி பேர் ஒரு கோடி குழந்தைகள் உட்பட கதிரியக்க ஆபத்தான பகுதியில் இருக்கிறார்கள்.

1947லிருந்து 2008 வரை 76 அணு உலை விபத்துகள் உலகில்

நடந்திருக்கின்றன. (இதில் 56 விபத்துகள் செர்னோபில்லுக்குப் பிறகு

நடந்தவை.) அதாவது ஒவ்வோராண்டும் ஒரு பெரிய விபத்து. அதனால் ஏற்பட்ட உயிர், உடமை, வாழ்க்கை சேத நஷ்டங்களின் மதிப்பு மட்டும் வருடத்துக்கு சுமார் 332 மில்லியன் டாலர்கள். எம்.ஐ..டி என்ற உலகப் புகழ் பெற்ற நிறுவனம் 2005லிருந்து 2055க்குள் உலகில் நான்கு பெரும் அணு விபத்துகள் நடக்கும் என்று முன்கூட்டியே கணித்திருந்தது. அதில் ஒன்றுதான் 2011ல் நடந்த புகோஷிமா விபத்து.

இந்தியாவில் அணு உலைகளில் விபத்துகள் நடந்ததில்லை

என்று அப்துல் கலாம் சொல்லியிருக்கிறாரே ?

இன்னொரு பொய். 1984ல் இயங்கத்தொடங்கிய கல்பாக்கம்

அடுத்த சில வருடங்களுக்குள் 200 முறை பல்வேறு சிக்கல்களினால்

நிறுத்தப்பட்டிருக்கிறது. ஒரு விபத்து நடந்து அது பற்றி பத்திரிகைகளில் செய்தி கசிந்து சூழல் ஆர்வலர்கள் குரலெழுப்பியபின்னர் ஒப்புக் கொள்வதுதான் அணுசக்தித் துறையின் வாடிக்கை.

இப்படி கல்பாக்கத்தில் விபத்துகள் நடந்து ஆறு மாதம் கழித்து

அவர்கள் ஒப்புக் கொண்ட சில விபத்துகள் இதோ: 1986 மார்ச்:

கதிரியக்கம் உள்ள கனநீர் 15 டன் அளவுக்கு கசிந்து கொட்டியது.

இதில் இடுப்பளவு நீரில் நின்றுகொண்டு ரிப்பேர் செய்தார்கள்.

கொட்டியதில் ஏழு டன் நீரைத்தான் திரும்பத் திரட்ட முடிந்தது.

கசிந்ததே அவ்வளவுதான் என்று பொய் சொன்னார்கள். 1986

ஆகஸ்ட் 14: எரிபொருள் பண்டிலில் சிக்கல் ஏற்பட்டது. உலகில்

எப்போதும் எங்கேயும் இதுவரை இப்படி ஒரு சிக்கல் வந்ததே

இல்லை என்று அப்போதைய அணுசக்தித் தலைவர் ராஜா ராமண்னா

குறிப்பிட்டார். 1986ல் தங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியில்லை,

மிகவும் ஆபத்தாக இருக்கிறது என்று சொல்லி 200 தற்காலிக

தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். நவம்பர் 20ந்தேதி

கல்பாக்கம் டவுன்ஷிப் கூட்டுறவு மளிகைக்கடையில் இருந்து ஒரு

லட்சம் ரூபாய் மளிகைப் பொருட்களை எடுத்து எரித்தார்கள். காரணம் அவை கதிரியக்கக் கழிவுகள் ஏற்றும் லாரிகளில் தவறுதலாக ஏற்றிக் கொண்டுவரப்பட்டவை. எவ்வளவு அலட்சியம், பொறுப்பின்மை பாருங்கள் ! 1987- எரிபொருள் நிரப்பும்போது ரியாக்டரின் கோர் பகுதி சேதமடைந்தது. 1991- கன நீரின் கதிரியக்கத்தால் ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். 1999- 42 ஊழியர்களுக்கு கடும் கதிர்வீச்சு ஏற்பட்டது. 2002 – கதிரியக்கம் உள்ள 100 கிலோ சோடியம் காற்றுவெளிச்சூழலில் கலந்தது. 2003 – கடும் கதிர்வீச்சுக்கு 6 ஊழியர்கள் உள்ளானார்கள்.

இந்தியா முழுக்க இதே கதைதான். ராஜஸ்தான் உலையில்

ஜூலை 1991ல் ஒரு கூடம் கட்டினார்கள். அதற்கு பெயிண்ட் அடிக்க

வந்தவ மாதோலால் என்ற தொழிலாளி கலப்பதற்கு தண்ணீர்

தேடினார். குழாயில் தண்ணீர் வரவில்லை. பீப்பாய் பீப்பாயாக கன

நீர் வைத்திருந்தது. அந்தக் கதிரியக்கம் உள்ள கனநீரை தவறாக

எடுத்து பெயிண்ட் அடிக்கக் கலந்தார். உலகிலேயே காஸ்ட்லியான

பெயிண்ட்டிங் அதுதான். கன நீர் விலை பல லட்சம் ரூபாய்கள். வேலை முடிந்ததும் அந்த நீரிலேயே மோதிலால் முகம் கழுவினார். தகவல் தெரிந்ததும் அதிகாரிகள் வந்து பெயிண்ட் அடித்த சுவரில் கதிர்வீச்சு இருக்கும் என்பதால் அதை சுரண்டச் செய்தார்கள். மாதோலால் என்ன ஆனார் என்பது தெரியாது. கர்நாடக கைகா உலையில் 2009ல் கதிரியக்கம் உள்ள டிரிட்டியம் கலந்த நீரைக் குடித்த 55 ஊழியர்கள் பாதிக்கப்பட்டார்கள்.

காக்ரபுர், நரோரா, கல்பாக்கம் என்று பல இந்திய அணு

உலைகளிலும் டர்பைன் சிறகுகள் உடைவது, எண்ணெய்க் கசிவு, கன நீர் கசிவு, ஹைட்ரஜன் வாயு, சோடியம் கசிவு என்று பல விபத்துகள் நடத்துள்ளன. ஒவ்வொரு விபத்தும் மிகப் பெரிய அணு உலை விபத்தை ஏற்படுத்திவிடும் ஆபத்து உடையவை. அப்படி ஆகாமல் தப்பித்துக் கொண்டிருப்பது தற்செயல்தான். நரோராவில் 1993ல் நடந்த விபத்தில் அணு உலை கொதித்து உருகி பெரிய விபத்து ஏற்படும் விளிம்பிலிருந்து தப்பியிருக்கிறோம். டர்பைன் உடைந்ததில் தொடங்கிய விபத்து ஹைட்ரஜன் வாயு கசிவாக மாறி, அடுத்து எண்ணெய் கசிந்து தீப்பற்றி , பரவிய தீயில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, அணு உலை எந்தக் கொதி நிலையில் இருக்கிறது என்பதே தெரியாமல் தவித்து சிரமப்பட்டு பிழைத்த விபத்து அது. ஒவ்வொரு கட்டத்திலும் எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் சரியாக உள்ளன என்று அதிகாரிகள் சொன்ன ஒவ்வொன்றிலும் தவறு நடந்து விபத்து வளர்ந்தது.

அது மட்டுமல்ல, அணு உலைகளைக் கட்டும்போதே கூட

விபத்துகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

கட்டுவதில் என்ன பெரிய தொழில்நுட்பப் பிரச்சினை?

அதில் ஏன் விபத்துகள் நடக்கின்றன?

வழக்கமான அலட்சியம், தவிர ஊழல் ஒரு முக்கியக் காரணம்.

கூடங்குளத்தில் அணு உலையைக் கட்டியிருக்கும் ரஷ்ய

நிறுவனமான ரோசாட்டம் ரஷ்யாவில் கடும் ஊழல் பிரச்சினைகளில்

சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.அந்த விவரங்களைப் பார்ப்போம்.

ரோசாட்டம்தான் ரஷ்ய அரசின் தலைமை அணுசக்தி அமைப்பு.

அதன் கீழ் பல்வேறு கம்பெனிகள் இருக்கின்றன. இவையெல்லாம்

சேர்ந்துதான் ரஷ்யாவுக்குள்ளும் வெளிநாடுகளிலும் அணு உலை

திட்டங்களை நிறைவேற்றிவருகின்றன. இந்தியாவில் கூடங்குளத்தில் மட்டும் ஆறு உலைகளைக் கட்ட ரோசாட்டத்துடன் பூர்வாங்க ஒப்ப்ந்தம் இருக்கிறது.

இந்த ரோசாட்டம் பற்றியும் அது கட்டி வரும் உலைகள் பற்றியும்

ஒட்டுமொத்த நடவடிக்கைகள் பற்றியும் முழு தணிக்கைக்கும்

விசாரணைக்கும் உத்தரவிடவேண்டுமென்று ரஷ்யாவில் இருக்கும்

தேசிய ஊழல் எதிர்ப்புக் குழு பிரதமருக்கும் கனக்குத் தணிக்கை

அதிகாரிக்கும் கோரிக்கை விடுத்திருக்கிறது. 2010ல் மட்டும்

ரோசாட்டம் நிறுவனத்தின் கீழுள்ள 35 அதிகாரிகள் ஊழலுக்காக

நீக்கப்பட்டார்கள். 2011ல் ரோசாட்டத்தின் கீழ் இருக்கும் வெவ்வேறு

துறைகளின் தலைவர்கள் பன்னிரெண்டு பேர் ஊழல் புகாரில் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்கள்.

ரோசாட்டம் பல்வேறு அணு உலைகளைக் கட்டுவதற்காக டெண்டர்

விடும்போது வேண்டியவர்களுக்காக டெண்டர் விதிகளை வளைப்பது, தரக் குறைவான பொருட்களை வாங்கிக் கட்டுமானத்துக்குப் பயன்படுத்துவது போன்ற ஆபத்தான ஊழல்களை செய்திருப்பதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. ரோசாட்டத்தின் பல்வேறு டெண்டர் ஆவணங்களை ஆய்வு செய்த டிரான்ஸ்பரென்சி இண்டர்நேஷனல் அமைப்பும் மாஸ்கோவில் இருக்கும் ஈகோ-டிபென்ஸ் அமைப்பும், ரோசாட்டம் தான் நிர்ணயித்த பாதுகாப்பு அம்சங்களை தானே மீறியிருப்பது அதன் 87 ஆவணங்களில் வெளிப்பட்டிருப்பதாக கூறுகின்றன.

ஊழல் புகாரில் டிஸ்மிஸ் செய்யப்பட்டு கைதும் செய்யப்பட்ட

மிகப்பெரிய உயர் அதிகாரி ரொசாட்டமின் துணை இயக்குநர்

யெவ்கெனி யெஸ்தரோவ். இவர் ஒரு கோடி 80 லட்சம் அமெரிக்க

டாலர்களை சுருட்டிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்.

இவர்தான் ரோசாட்டம் கட்டும் அணு உலைகளின் பாதுகாப்புத்

தொழில்நுட்பத்துக்கு பொறுப்பானவர் ! பயன்படுத்தப்பட்ட யுரேனியம்

எரிபொருளை எப்படி பத்திரமாக நீக்குவது என்ற ஆய்வில் இவர்

ஈடுபட்டிருந்தாராம்.! இவர் கீழேதான் கதிர்வீச்சு ஆபத்தை தடுக்கும்

நிபுணர்கள் பணிபுரிகிறார்கள். இந்தக் கைதே கண்துடைப்புதான்

என்றும் ஒரு கருத்து இருக்கிறது. இதற்கு முன்பு 2005ல் ரஷ்யாவின்

அணு சக்தித்துறை அமைச்சராக இருந்த அடமோவ் என்பவரும் பெரும் பண மோசடி செய்ததாக ஸ்விட்சர்லாந்தில் இண்டர்போல் போலீசால் கைதானார். அவர் அமெரிக்காவை ஏமாற்றியதாக அமெரிக்காவும் ரஷ்யாவை ஏமாற்றியதாக ரஷ்யாவும் வழக்கு தொடுத்தன. அமெரிக்காவுக்கு அவரை அனுப்பியிருந்தால் 20 வருட சிறை கிடைத்திருக்கும். ஸ்விஸ் கோர்ட் அவரை ரஷ்யாவிடம் ஒப்படைத்தது. அங்கே அவருக்கு 4 வருட சிறை தண்டனை விதித்துவிட்டு முதிர்ந்த வயதினர் என்பதால் அதை ரத்தும் செய்துவிட்டார்கள்.எனவே இப்போது நடந்துள்ள கைதும் கண்துடைப்பு என்றே கருதப்படுகிறது. புகோஷிமா விபத்துக்குப் பிறகு ரஷ்ய அணுசக்தித்துறையின் இமேஜை சரி செய்வதற்காக இப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக சூழல் அமைப்புகள் சொல்கின்றன.

ரோசாட்டம் நிறுவனமே நடத்திய உள் ஆய்வில் ஜூன் மாதத்தில்

வெளியான அறிக்கையின்படி ரஷ்யாவில் இருக்கும் பெரும்பாலான

அணு உலைகள் பழையவை. மனிதத் தவறால் விபத்தோ, பூமி

அதிர்ச்சியால் சிதைவோ ஏற்பட்டால் அத்தனையும் பெரும் ஆபத்தில்

முடியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எனவே எல்லாவற்றையும் சரி செய்கிறோம் என்று காட்டுவதற்காக ஒப்புக்கு இந்த ஊழல் கைது

நடவடிககைகள் நடத்தப்படுவதாக சர்வதேச சூழல் இயக்கங்கள்

கருதுகின்றன.

இப்படி மாபெரும் ஊழல்களும் தரமற்ற நடவடிக்கைகளும்

நிரம்பிய சூழலில் விபத்துகள் எந்த நேரமும் நடக்கலாம் என்று

அவை தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. லெனின்கிராடில் உலை

கட்டும்போதே ஒரு விபத்து ஆறு மாதம் முன்னால் ஜூலை 14

அன்று நடந்தது ! இது கூடங்குளம் மாடல் அணு உலை. ஐந்தடி

கனமுள்ள கவசச் சுவர்களைக் கட்டும்போது கான்கிரீட் ஊற்றுகையில் இரும்புக் கம்பிச் சட்டங்கள் சிதைந்து நொறுங்கின. சுமார் 1200 டன் இரும்புக் கம்பிச் சட்டங்களையும் இப்போது அகற்றிவிட்டு புதிதாகக் கட்டவேண்டும்.

விபத்துக்குக் காரணம் என்ன? ஊழல்தான். தரமில்லாத

பொருட்களைக் கட்டுமானப்பணியில் பயன்படுத்துவதாக் ரோசாட்டம்

நிறுவனம் மீது கடும் குற்றச்சாட்டுகள் உள்ளன. சென்ற ஜனவரியில்

இதே உலைக் கட்டுமான இடத்தில் விதிகளைப் பின்பற்றவில்லை

என்று நீதிமன்றம் ரோசாட்டம் கம்பெனியைக் கடுமையாகக் கண்டித்து அபராதங்கள் விதித்தது. கட்டட ஊழியர்களுக்கு குடிநீர் இல்லை. கழிப்பிடம் இல்லை. தீயணைப்பு வசதி இல்லை. இவற்றையெல்லாம் செய்து தரும்வரை வேலையை நிறுத்தும்படி கோர்ட் உத்தரவிட்டது. அணு உலைகள் கட்டும் வேலையில் தரம் குறைவான பொருட்களைப் பயன்படுத்துவதாக ரோசாட்டத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கள சோதனையில் சுமார் ஆயிரம் யூனிட் தரக் குறைவான கான்கிரீட் கண்டுபிடிக்கப்பட்டது.

ஜூலை விபத்துக்குப் பின் ரஷ்யாவின் அண்டை நாடான

லித்துவேனியாவின் வெளிவிவகார அமைச்சர் எல்லையருகே இருக்கும் ரஷ்ய அணு உலைகள் தங்களுக்கு பெரும் கவலை தருவதாக அறிவித்திருக்கிறார். இந்த லேட்டஸ்ட் உலையின் டிசைனே சரியில்லை என்று தோன்றுவதாக அவர் கூறியிருக்கிறார். இப்படி ரஷ்யாவிலும் பக்கத்து தேசத்திலும் கடும் புகார்களுக்கு உள்ளாகியிருக்கும் இந்த ரோசாட்டம்தான் கூடங்குளம் உலையையும் நிர்மாணித்திருக்கிறது.

ரஷ்ய அணு சக்தி அமைப்பு ஊழலும் அலட்சியமும் நிறைந்தது என்றால் வேறு நாடுகளிடமிருந்து நாம் உலைகள் வாங்கிக் கொள்ளலாமா?

கூடங்குளம் எதிர்ப்பு என்பதே ரஷ்ய கம்பெனிக்கு எதிராக இதர

நாட்டு கம்பெனிகள் வணிகப் போட்டியில் தூண்டிவிட்டிருக்கும்

எதிர்ப்பு என்று ஒரு பொய்ப் பிரசாரம் நடக்கிறது. எந்த நாட்டு

அணு உலையுமே வேண்டாம் என்பதுதான் கூடங்குளம் போராட்டக்

காரர்களின் கோரிக்கை.ரஷ்ய உலையை எடுத்துவிட்டு அமெரிக்க

உலையையோ பிரெஞ்ச் உலையையோ வைக்கவேண்டுமென்று

அவர்கள் ஒருபோதும் கோரவில்லை. கோரப்போவதுமில்லை. உலகம் முழுவதும் அணு உலை வியாபாரத்தில் இருக்கும் அரசுகளும் சரி, தனியாரும் சரி தொடர்ந்து முழு உண்மைகளை சொல்லாமல் அரை உண்மைகளையும் முழுப்பொய்களையும்தான் சொல்லி வந்திருக்கிறார்கள் என்பதற்கு வரலாற்றில் நிறைய சம்பவங்கள் உள்ளன.

ராஜஸ்தான் ஜெய்தாபூரில் பிரெஞ்ச் உலைகள் என்பதுதான் இந்திய

அரசின் திட்டம். அங்கேயும் அணு உலைக்கு பெரும் மக்கள் எதிர்ப்பு

இயக்கம் நடந்துவருகிறது. மன்மோகன் அரசு அங்கே துப்பாக்கிச் சூடு

நடத்தி ஒருவரை கொன்றும்விட்டது. ஜெய்தாபூருக்கு மன்மோகன்சிங் வாங்கவிருக்கும் பிரெஞ்ச் அணு உலைகளை தயாரிக்கும் அரேவா கம்பெனி தொடர்பாக சில முக்கியமான, நமக்கு கவலை ஏற்படுத்தக்கூடிய தகவல்கள் அண்மையில் வெளியாகியிருக்கின்றன. அரேவாவுக்கு சொந்தமான சொகாட்ரி கம்பெனி தெற்கு பிரான்சில் டிரிகாஸ்டின் என்ற இடத்தில் அணு உலை நடத்திவந்தது. அங்கே 2008ல் இந்த உலையிலிருந்து பூமிக்கடியில் செலுத்திய யுரேனியம் திரவத்தினால் நிலத்தடி நீர் மாசுபட்ட வழக்கில் மூன்று லட்சம் யூரோக்கள் அபராதம் இப்போது விதிக்கப்பட்டுள்ளது. முதலில் வெறும் 40 ஆயிரம் யூரோ அபராதம்தான் விதிக்கப்படது, அப்பீலில் அபராதம்

அதிகமாக்கப்பட்டது. யுரேனியம் கசிவால், ஆற்று நீர் அனுமதிக்கப்பட்ட அளவை விட 27 மடங்கு அதிகமான கதிரியக்கத்துக்கு உள்ளாயிற்று. அந்த வட்டாரக் குடி நீர் பாதிக்கப்பட்டது. கசிவு ஏற்பட்ட தகவலையே கம்பெனி அதிகாரப்பூர்வமாக 24 மணி நேரம் கழித்துதான் பகிரங்கப்படுத்தியது.

இந்த கம்பெனியிடமிருந்துதான் இந்தியா 40 பில்லியன் யூரோக்கள்

விலையில் ஆறு உலைகளை வாங்க உள்ளது. இந்த உலைகள்

எதுவும் இதுவரை உலகில் எங்கேயும் செயல்பட்டவை அல்ல. புதிதாக தயாரிக்கப்படுபவை. இப்போதுதான் சீனாவில் இரண்டும் பின்லாந்தில் ஒன்றும் பிரான்சில் ஒன்றும் கட்டப்பட்டு வருகின்றன. இவை எதுவும் 2013க்கு முன்பு இயங்கவே ஆரம்பிக்காது. இதற்கு முன்கூட்டியே இந்தியா ஆர்டர் கொடுத்துவிட்டது! நான்கு உலைகளும் கட்ட ஆரம்பித்த போது சொன்ன விலையை விட இரண்டு மடங்கு அதிக செலவு இப்போது ஆகிறது ! இந்தியாவும் 40 பில்லியன் யூரோவில் தொடங்கிக் கடைசியில் 100 பில்லியனில் முடிக்கலாம்.

இந்த பிரெஞ்ச் தனியார் கம்பெனி அணு உலைக் கட்டுமான

பணிகளுக்கு போலந்து, பல்கேரியா, ஹங்கேரி, செக் குடியரசு

நாடுகளிலிருந்து அடிமாட்டு விலைக்கு கூலித் தொழிலாளர்களைக்

கொண்டு வருவதும் இப்போது அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

குறைவான கூலி, அதிலும் பிடித்துக் கொண்ட வருமானவரியை

கட்டாதது, மாதக்கணக்கில் கூலி தராமல் பாக்கி வைத்திருப்பது

என்றெல்லாம் இந்த கம்பெனியின் நடவடிக்கைகள் வெளிச்சத்துக்கு

வந்துள்ளன.

ஜப்பானில் புகோஷிமா அணு உலைகளில் பெரும் விபத்து

ஏற்பட்டதல்லவா? இந்த அணு உலைகளை நடத்தும் ஒரு தனியார்

கம்பெனியான டோக்கியோ எலெக்ட்ரிக் பவர் கம்பெனிக்கு அதற்கான

கருவிகள் அனைத்தையும் அமெரிக்க ஜெனரல் எலெக்ட்ரிக் கம்பெனி

விற்றது. அப்படி விற்றபோது அந்தக் கருவிகளின் தொழில்நுட்ப

சிக்கல்கள் பற்றி முழுமையான தகவல்களை ஜெனரல் எலெக்ட்ரிக்

தரவில்லை என்று அதில் வேலை பார்த்த சுகோகா என்ற ஜப்பானியர்

அம்பலப்படுத்தினார். அவருக்கு வேலை போயிற்று. ஆனால்

தொழில்நுட்ப சிக்கல்களை ஜெனரல் எலெக்ட்ரிக், டோக்கியோ கம்பெனி இருவருமாக அரசின் அணு உலைக் கண்காணிப்பாளர்களிடமிருந்து மறைத்தார்கள் என்று பின்னர் தெரியவந்தது.

இந்தியாவில் எல்லாமே அரசுவசம் இருப்பதால் இப்படியெல்லாம் தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ளலாம் அல்லவா?

ரொம்ப அப்பாவித்தனமான கேள்வி இது. விபத்தும் அலட்சியமும்

ஊழலும் இந்தியாவிலும் சகஜம் என்பது நமக்கு நன்றாகவே

தெரியும். இதுவரை அரசு வசம் மட்டுமாக இருந்த அணுசக்தித்

துறையில் மன்மோகன் அரசு உள்நாட்டு, வெளிநாட்டு தனியார்

தொழிலதிபர்களையும் இறக்கப் போகிறது. இயங்கி வரும் உலைகளில் எத்தனை விபத்துகள் என்று மேலே பார்த்தோம். உலை கட்டும்போதே நடந்த ஒரு முக்கிய விபத்தைப் பார்ப்போம்.

கர்நாடகத்தில் உள்ள கைகா ரியாக்டர் கட்டப்பட்டபோது 1994ல்,

கதிரியக்கம் வெளியேறாமல் தடுக்கும் வட்ட வடிவ டோம் உடைந்து

நொறுங்கி 130 டன் கான்க்ரீட் கீழே விழுந்தது. நூற்றுக் கணக்கான

தொழிலாளர்கள் அங்கே இருந்தார்கள். ஆனால் 14 பேருக்குதான்

காயங்கள் ஏற்பட்டதாக நிர்வாகம் சொல்லிற்று. இந்த கலசம்தான்

கதிரியக்கம் வெளியே பரவாமல் தடுக்கவேண்டிய கவசச் சுவர். இந்த

விபத்து அணு உலை இயங்கத் தொடங்கிய பிறகு நடந்திருந்தால்,

குட்டி செர்னோபில்தான்.

விபத்துக்கு என்ன காரணம் ? அணுசக்தி துறையின்

பொறியாளர்களுக்கும் கட்டட காண்ட்ராக்டர்களுக்கும்

இருக்கும் “நெருக்கமான உறவினால்” டிசைன்களின் தரத்தைக்

கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதால் இது ஏற்பட்டது என்று (நிஜமான) அணு விஞ்ஞானியும் அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியத்தின் முன்னாள் தலைவருமான ஏ.கோபாலகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். அதாவது ஊழல் நடந்திருக்கிறது.

சின்னச் சின்ன விஷயங்களிலிருந்து பெரிய விஷயங்கள் வரை

முடிந்தவரை மூடி மறைப்பதுதான் அணுசக்தித் துறையின் வழக்கம்.

கூடங்குளம் உலை கட்டப்பட்டு வந்தபோது அப்போது குடியரசுத்

தலைவர் பதவியில் இருந்த அப்துல் கலாம் அங்கே சென்றார்.

அவரும் பத்திரிகையாளர்களும் உலையை சுற்றிவந்தபோது ஒரு

பெரிய இரும்பு கர்டர் கூரையிலிருந்து கீழே விழுந்தது. கலாமும்

நிருபர்களும் அந்த இடத்தை அப்போதுதான் கடந்து போய்விட்டதால்

அது தலையில் விழாமல் தப்பினார்கள். இதைப் புகைப்படம் எடுத்த

எல்லா புகைப்படக்காரர்களிடமிருந்தும் புகைப்படங்கள் அணுசக்தி

துறையினரால் கைப்பற்றப்பட்டன. படத்தை அழித்தபின்தான்

நிருபர்களை வெளியே விட்டார்கள்.

ஊழல்,மிரட்டல்,லஞ்சம் கொடுத்து மக்களை ஏமாற்றப் பார்த்தல்

என்று இந்திய அரசு நிர்வாகத்தில் ஊழலும் பொறுப்பின்மையும்

நிரம்பி வழியும் சூழலில் இந்திய அரசு அமைப்பை நம்பி , ஆபத்தை

உருவாக்கக்கூடிய அணுத்தொழில் நுட்பத்துக்கு ஒருபோதும் நாம்

சம்மதிக்க முடியாது. அதை விட முக்கியமாக வெளி நாடுகளில்

இல்லாத முக்கியமான ஒரு சிக்கல் இந்தியாவில் உள்ளது. அணுசக்தித் துறையின் செயல்பாட்டை யார் கண்காணிப்பது என்பதுதான் அந்த சிக்கல்.

வெளிநாட்டில் யார் கண்காணிப்பது ? இந்தியாவில் யார்? இதில் என்ன சிக்கல் ?

மேலை நாடுகளில் கண்காணிப்பதற்கு சுயேச்சையான

அதிகாரமுள்ள அமைப்புகள் உள்ளன. இந்தியாவில் அப்படி எதுவும்

இல்லை. இந்தியா இதுவரை தன் அணு உலைகளை சர்வதேச அணு

உலைக் கண்காணிப்பு அமைப்பின் ஆய்வுக்கு உட்படுத்த மறுத்தே

வந்திருக்கிறது. அதற்குக் காரணம், ரகசியமாக அணு ஆயுதங்களைத்

தயாரித்துக் கொண்டிருந்ததுதான். இரண்டாம் பொக்ரான் குண்டு

வெடிப்பில் பகிரங்கமாக நாங்களும் அணு குண்டர்கள்தான் என்று

அறிவித்தபிறகு, அணு ஆயுத தயாரிப்பை தனியாகவும் அணுமின்சாரத் தயாரிப்பைத் தனியாகவும் பிரிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது.

காரணம் அணு மின்சாரத் தயாரிப்பில் அமெரிக்கா, ரஷ்யா முதலிய

நாடுகளின் கம்பெனிகளிடமிருந்து உலைகளை வாங்கவும் இங்கே

அதில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கவும் மன்மோகன் அரசு

முடிவு செய்ததுதான்.

அப்படி முடிவு செய்ததும் அணுமின்சார உலைகளை சர்வதேச

கண்காணிப்புக்கு உட்படுத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

எனவே 2000மாவது ஆண்டில், இந்திய அரசு அதுவரை தன்னுடைய

அணு சக்தித்துறையைக் கண்காணிப்பதற்காக தானே ஏற்படுத்தி

வைத்திருந்த கட்டுப்பாட்டு வாரியத்தின் கண்காணிப்பிலிருந்து

அணு ஆயுத தயாரிப்பு ஆலைகளை நீக்கி உத்தரவிடுகிறது. இனி

அவற்றைக் கண்காணிக்க தனியே உள் அமைப்பு ஏற்படுத்தப்படும்

என்று அறிவிக்கிறது.

வாரியத்தின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் இது

தொடர்பாக அண்மையில் தெரிவித்திருக்கும் தகவல்கள் மிகவும்

அச்சமூட்டுபவையாக இருக்கின்றன. அணு ஆயுத ஆலைகளை

வாரியக் கண்காணிப்பிலிருந்து பிரித்தபின்னர், என்ன உள் கண்காணிப்பு முறை ஏற்படுத்தப்பட்டதென்று தெரியவில்லை என்கிறார். பதினோரு வருடங்களாக அணு ஆயுத ஆலைகளின் பாதுகாப்பு நிலை பற்றி தன் வாரியத்துக்கு எதுவும் தெரியாது என்கிறார்.

இந்தியாவில் அணு ஆயுத தயாரிப்பு ஆராய்ச்சி ஆலைகள் பல

இடத்தில் உள்ளன. பெரும் மக்கள் தொகை இருக்கும் மும்பைக்கும்

சென்னைக்கும் அருகே அணு ஆயுத தயாரிப்பு ஆலைகள் உள்ளன.

சென்னை அருகே உள்ள கல்பாக்கத்தில்தான் அணுகுண்டுக்கு

தேவையான புளுட்டோனியத்தைப் பிரித்து எடுக்கும் ஆலையும் அணு நீர்மூழ்கிக் கப்பல் ஆய்வு ஆலையும் உள்ளன.

இவற்றை நடத்துபவர்களே கண்காணிப்பவர்களாகவும்

இருப்பது எப்படி நியாயம் என்ற கேள்வியை கோபாலகிருஷ்ணன்

எழுப்பியிருக்கிறார். சுயேச்சையான மேற்பார்வை அமைப்பு

இல்லாதவரைக்கும் பாதுகாப்பு ஒழுங்காகத்தான் இருக்கிறதா என்பது

உறுதிப்படுத்தமுடியாததாகவே இருக்கும்.

அமெரிக்காவில் இது இப்படி இல்லை என்று கோபாலகிருஷ்ணன்

சுட்டிக் காட்டியிருக்கிறார். 1988ல் அங்கே இதற்கென்றே

உருவாக்கப்பட்ட கண்காணிப்பு வாரியத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி

செனட்டின் ஒப்புதலுடன் ஐந்து உறுப்பினர்களை, அரசு நிர்வாகத்துக்கு வெளியிலிருந்து பொது மக்களிலிருந்து நியமிக்க வேண்டும். ஐவரில் மூவருக்கு மேல் ஒரே அரசியல் சார்புடையவர்களாக இருக்கக்கூடாது. அவர்கள் அணுத் துறை அறிஞர்களாக இருக்க வேண்டும். அணுத்துறையின் ஏதேனும் ஒரு செயல்பாடு பொதுமக்களின் உடல் நலம், பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக இந்த வாரியம் கருதினாலும அது தொடர்பாகக் கோரும் தகவல்களை எல்லாம் அணுத்துறை செயலாளர் கொடுத்தே ஆகவேண்டும். அவை ரகசிய தகவல்களாக இருந்தாலும் கூட ! இவற்றை பரிசீலித்தபிறகு வாரியம் தெரிவிக்கும் பரிந்துரைகளைப் பொது மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். அதன் மீது அணுத் துறை செயலாளர் சொல்லும் கருத்துகளையும் பொதுமக்கள் முன்பு வைக்க வேண்டும். பொது மக்கள் கருத்து தெரிவிக்க 45 நாட்கள் அவகாசம் தரவேண்டும். அதன் பின்னர் வாரியம் மீண்டும் எல்லாவற்றையும் பரிசீலிக்கும்.

இந்தியாவில் இது போல ஒப்புக்கு கூட எதுவும் கிடையாது. அஃபிஷியல் சீக்ரெட்ஸ் ஆக்ட் எனப்படும் அதிகாரப்பூர்வமான ரகசியங்கள் சட்டமும் அட்டமிக் எனர்ஜி ஆக்ட் எனப்படும் அணு சக்தி சட்டமும் அணு உலைகள் பற்றி எந்தத் தகவலையும் ஒரு குடிமகனும் தெரிந்துகொள்ள முடியாமல் தடுக்கின்றன. தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல தகவல்களை தர மறுக்கிறார்கள். கூடங்குளம் போராட்டக் குழுவினர் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதில் தரமுடியாது என்றே அணுசக்தித் தலைவர் சொல்லிவிட்டார்.

எல்லாவற்றுக்கும் மேலாக இப்போது லோக்பாலின் கீழ்

அணுசக்தித்துறை வராது என்று விலக்கு தரப்பட்டுள்ளது.

விபத்து நடக்காது. நடந்தாலும் போதுமான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் இருப்பதாக அணுசக்தித் துறை திரும்பத் திரும்பச்சொல்கிறதே?

ஒரு பொய்யைப் பல முறை சொல்லி உண்மையாக்கப் பார்க்கும்

முயற்சிதான் அது. திட்டத்தை உருவாக்கும்போதே குறைபாடுகளுடன் உருவாக்குபவர்கள் அவர்கள். கூடங்குளம் திட்டத்தையே எடுத்துக் கொள்ளலாம். அதற்கு தேவைப்படும் தண்ணீரை எங்கிருந்து எடுக்கப் போகிறார்கள் என்பதே அவர்களுக்கு சரியாகத் தெரியாது. அல்லது தெரிந்திருந்தால் அதை ரகசியமாக வைத்திருக்கிறார்கள். உலையிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் எடுக்கப் போவதாகத்தான் கோர்பசேவுடன் ஒப்பந்தம் போட்டபோது அறிவிக்கப்பட்டது. இதற்கு பேச்சிப்பாறை மக்களும் விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் 2006ம் வருடம் வரை அணுசக்தித் துறையின் திட்டம் பேச்சிப்பாறையிலிருந்து தண்ணீர் எடுப்பதுதான். அப்போது ஏன் இதை மாற்றவேண்டி வந்தது தெரியுமா? பேச்சிப்பாறை அணையில் போதுமான தண்ணீரே கிடையாது என்பது அப்போதுதான் அணுசக்தித் துறைக்குத் தெரியவந்தது. அதுவும் சுற்றுச் சூழல் அமைப்புகள் பல முறை சுட்டிக் காட்டியபிறகுதான் தெரியவந்தது. 1996ல் உலக வங்கி உதவியுடன் நடத்திய ஓர் ஆய்வில் பேச்சிப்பாறை அணையில் வண்டல்மண் தேங்கி அணையில் கொள்ளளவே பாதியாகக் குறைதுபோய்விட்டது தெரியவந்தது. இந்தத் தகவலே

அணுசக்தித்துறைக்கு 1996லிருந்து 2006 வரை தெரியாது. ரிகார்டுகளில் அணையின் அசல் கொள்ள்ளவு என்று போட்டிருப்பதன்படி தண்ணீர் இருக்கும் என்று அவர்கள் கணக்கிட்டு வந்திருக்கிறார்கள் ! 2006ல் தெரியவந்தபின்னர்தான் கடல் நீரை சுத்திகரிக்கும் டீசாலினேஷன் ஆலைகளை நிறுவி தண்ணீர் எடுக்க மாற்று திட்டம் போட்டார்கள். அதிலும் சிக்கல் இருக்கிறது. அணுசக்தி கண்காணிப்பு வாரிய விதிகளின்படி அணு உலைக்கான தண்ணீர் ஒரே இடத்தை நம்பி இருக்கக்கூடாது. மாற்று வழியும் இருக்க வேண்டும். ஏனென்றால் தண்ணீர் கிடைக்காமல் எட்டு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டால், அணு உலை கொதித்துப் போய் உருகி பெரும் விபத்து ஏற்படும் வாய்ப்பு உண்டு. எனவே டீசாலினேஷன் ஆலை பழுதானால் என்ன செய்வது ? கூடங்குளத்தில் நிறுவப்பட்டிருக்கும் டீசாலினேஷன் முறை இதுவரை அணு உலைகளில் பயன்படுத்தப்படாத புதிய

தொழில்நுட்பம். பழுதானால், வெளிநாட்டிலிருந்து பொறியாளர்

வந்துதான் ரிப்பேர் செய்ய வேண்டும். தண்ணீருக்கு மாற்று வழி

என்ன என்று கேட்டால், அணுசக்தித் துறையிடம் பதில் இல்லை.

இதுதான் அவர்களுடைய திட்டமிடுதலின் லட்சணம்.

ஒரிஜினல் திட்டத்திலேயே இதுதான் நிலைமை என்றால், விபத்தில் முன்னெச்சரிக்கை திட்டத்தின் லட்சணத்தை எப்படி நம்பமுடியும் ?

கல்பாக்கத்தில் விபத்து ஏற்பட்டால் அருகே உள்ள பகுதி மக்களை

பாதுகாப்பாக வேறு இடத்துக்கு அழைத்துச் செல்வது பற்றிய

ஒத்திகை சில வருடங்கள் முன்பு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில்

நடத்தப்பட்டது. எந்த லட்சணத்தில் தெரியுமா? அழைத்து செல்ல

வேண்டிய பஸ்கள் பிரேக் டவுன் ஆகிவிட்டன. காவல் அதிகாரிகளின்

வயர்லெஸ் கருவிகள் வேலை செய்யவில்லை. விபத்து ஒத்திகை

நடக்கிறது என்ற தகவலே பாதி அதிகாரிகளுக்குத் தெரியவில்லை.

அன்று அசல் விபத்து நடந்திருந்தால், நம் கதி என்ன?

நில நடுக்கம், சுனாமி போன்றவற்றிலிருந்து தங்களை

பாதுகாத்துக் கொள்ள உலகிலேயே மிகச் சிறப்பான ஏற்பாடுகளை

செய்துவைத்திருக்கும் நாடு ஜப்பான். அங்கே நேர்மையும்

ஒழுக்கமும் நம்மை விடப் பல மடங்கு அதிகம். அதனால்தான் நம்

சுனாமியைப் போல பல மடங்கு பெரிய அழிவு அங்கே ஏற்பட்டும்கூட

ஒப்பீட்டளவில் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் நமது விகிதங்களில் அங்கே இல்லை. அழிவு ஏற்பட்ட எந்த ஊரிலும் ஒரு சிறு கடை கூட சூறையாடப்படவில்லை. கடும் பஞ்சத்துக்கு நடுவிலும் பாதிக்கப்பட்ட மக்கள் ஒழுங்காக கியூவில் நின்று கிடைத்ததை வாங்கிக் கொள்கிறார்கள்.

பள்ளிக்கூடத்திலேயே நில நடுக்கத் தற்காப்பு பயிற்சிகள்,

ஒத்திகைகள் மாதந்தோறும் குழந்தைகளுக்குத் தரப்படுகின்றன. அணு உலை விபத்து ஏற்பட்டதும் அருகிலிருக்கும் லட்சக்கணக்கானவர்களை இன்னொரு பகுதிக்கு ஒரே நாளில் குடி பெயரச் செய்யும் ஆற்றல் அவர்களுக்கு இருக்கிறது. அதுவே போதாதது என்று அங்கே விமர்சிக்கப்படுகிறது. நம்மால் கூவம் கரை குடிசைவாசிகளுக்கு மாற்று இடம் தருவதைக் கூட ஒழுங்காகச் செய்ய முடிவதில்லை. இலவச வேட்டி சேலை கொடுக்கும் இடத்தில் நெரிசல் தள்ளுமுள்ளுவில் சாகத் தயாராக இருக்கும் சமூகம் நம்முடையது. தலைவர் செத்தால், கடைகளை சூறையாடுவது நம் மரபு. தீர்வுள்ள சாயப்பட்டறைக் கழிவையே தீர்க்காமல் ஊரையும் ஆற்றையும் விவசாயத்தையும் நாசமாக்கியிருக்கிறோம்.

இந்திய அணு உலைகளில் முழு நேரத் தொழிலாளர்களும்

அன்றாடக் கூலிகளும் கடுமையான கதிரிவீச்சுக்கு ஆளாகின்றனர்.

எந்த அளவுக்கு கதிர் வீச்சு என்பதை முறையாக ஊழியர்களுக்குத்

தெரியப்படுத்துவதில்லை. கல்பாக்கத்தில் உள்ளே நடந்த பல கதிர்

வீச்சு விபத்துகள் பற்றி அங்குள்ள தொழிற்சங்கம் பட்டியலிட்டு

நிர்வாகத்திடம் பல வருடங்கள் முன்பே கொடுத்திருக்கிறது. ஆனால்

எதற்கும் முறையான பதில்கள் இல்லை.

விபத்துகளில் தினக் கூலிகள் செத்திருக்கிறார்கள். தற்காலிக

தினக்கூலிகளை பக்கத்து கிராமங்களிலிருந்து அழைத்து

வருகிறார்கள். அவர்களுக்கு எந்த அளவு கதிர் வீச்சு பாய்ந்தது என்பது சொல்லப்படுவதும் இல்லை. அவர்கள் யார் எவர் என்ற பட்டியலும் கிடையாது.

ரவத்பட்டா அணு உலையை சுற்றியுள்ள கிராமங்களில்

ஏராளமான உடல்நலப் பிரச்சினைகள் மக்களுக்கு வருவதாகப்

புகார் எழுந்ததையொட்டி அணுசக்தி கண்காணிப்பு ஒழுங்குபடுத்தல்

வாரியத்தலைவர் கோபாலகிருஷ்ணன், அந்தப் பகுதி மக்களில்

யாரெல்லாம் தினக்கூலிகளாக பயன்படுத்தப்பட்டார்கள் என்ற

பட்டியலைக் கேட்டார். அணு உலைக்குள் கதிரியக்கம் பாதிக்கக்கூடிய

பகுதிகளில் தினசரி வேலை செய்வோர் யார் யார், அவர்கள் பெற்ற

கதிர்வீச்சு அளவு என்ன என்ற விவரங்களே அணுசக்தித் துறையிடம்

இல்லை என்றும் தன் கேள்விகளுக்கு பதிலே தரப்படவில்லை என்றும் கோபாலகிருஷ்ணன் தன் அறிக்கையில் சொல்லியிருக்கிறார்.

துறையைக் கண்காணிக்கும் வாரியத்துக்கே பதில்

தராதவர்கள் மக்களுக்கு எப்படி தருவார்கள் ?

அணு உலைகளில் வரும் கழிவுகள் பல லட்சம் வருடங்களுக்கு

கதிரியக்கம் இருக்கக்கூடியவை, அவற்றை பாதுகாப்பாக வைத்திருப்பது பல தலைமுறைகளுக்கு தலைவலி. இந்தக் கழிவுகளை எங்கே எப்படி வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டால், அணுசக்தி துறை ஒழுங்கான பதில் சொல்வதே இல்லை. கூடங்குளம் போராளிகள் கழிவுகளை என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்டதற்கு பதிலே இல்லை.

அணுக் கழிவுகளை பத்திரமாக வைக்க முடியாதா என்ன?

அதில் என்ன சிக்கல் ?

அணு உலைகளிலிருந்து வரும் கழிவுகளை எப்படி பாதுகாப்பாக

வைப்பது என்பதற்கு முழுமையான தொழில்நுட்பம் இன்னும்

உலகத்தில் கண்டுபிடிக்கப்படவே இல்லை. இதுவரை செய்யப்பட்டவை எல்லாம் முழு பாதுகாப்பைத் தரக்கூடியவையாக இல்லை. எனவே பல நாடுகளில் கதிரியக்கம் கழிவுகளிலிருந்து ஆற்றில், கடலில்,நிலத்தடி நீரில் கலந்து ஆபத்தை ஏற்படுத்தி வரும் சமபவங்கள் நடந்தபடி இருக்கின்றன.

க் கழிவுகளால் ஏற்படும் சிக்கல்கள், ஆபத்துகள் பற்றித் தனியே

ஒரு பெரிய புத்தகமே எழுதலாம். அவ்வளவு விவரங்கள் உள்ளன.

1940களிலிருந்து 1970 வரை பொறுப்பில்லாமல் பீப்பாய்களில் கழிவுகளை அடைத்து கடலில் வீசிக் கொண்டிருந்தார்கள். அதன்பிறகுதான் ஈயப்பெட்டிகளில் அடைத்து உப்புப்பாத்திகளில் புதைப்பது போன்ற வழிமுறைகள் வந்தன. எவ்வளவு அடைத்து எவ்வளவு புதைத்து அதன்பின்னர் மேலே கான்கிரீட் ஊற்றினாலும் கதிரியக்கம் சாகாது. லடக்கணக்கான் வருடம் வைத்துக் காப்பாற்றியாக வேண்டும்.

சோவியத் யூனியனில் 1957ல் மாயக் வளாகத்தில் சுமார் 100 டன்

கதிரியக்கக் கழிவுகள் வெடித்துச் சிதறியதில் மிகப்பெரிய வட்டாரமே

பாதிப்புக்குள்ளாயிற்று. அடுத்த 45 வருடங்களில் மொத்தம்

4 லட்சம் பேர் கதிரியக்க பாதிப்பினால் புற்று நோய் போன்ற

நோய்களுக்குள்ளாகியிருக்கிறார்கள். இந்த விபத்தை சோவியத்

யூனியன் அரசாங்கம் சுமார் 30 வருடங்கள் வெளியே தெரியாமல்

மறைத்து வந்தது.

இந்தியாவில் மன்மோகன் அரசுக்கு அணு உலை விற்க ஒப்ப்ந்தம்

போட்டிருக்கும் பிரெஞ்ச் கம்பெனி அரேவா, டிரிகாஸ்டின் என்ற

இடத்தில் வைத்திருக்கும் அணுக்கழிவுகள் 2008ல் கசிந்தன. மொத்தம் 18 ஆயிரம் லிட்டர் யுரேனியம் சொல்யூஷன் பரவி நிலத்தடி நீரை மாசாக்கியதில், கஃபேரெ, லௌழான் பகுதிகளில் யாரும் எந்த தண்ணீரையும் குடிக்கவோ, விவசாயத்துக்கோ பயன்படுத்தக் கூடாது என்று அரசு தடை விதிக்க வேண்டியதாயிற்று. அந்தப் பகுதித் தண்ணீரில் குளிக்கக்கூட வேண்டாம் என்று தடுக்கப்பட்டிருக்கிறது. அதில் இருக்கும் மீன்களை உண்ணமுடியாது.

ஜெர்மனியின் அணுக்கழிவுகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில்

ஒன்று அசே சுரங்கம். இது பழைய உப்பு சுரங்கம். இங்கே 2000

அடிக்குக் கீழே ஒரு லட்சத்து 26 ஆயிரம் பீப்பாய்களில் கழிவுகள்

கிடக்கின்றன. எல்லாம் கசிந்து பெரும் விபத்து ஏற்படும் நிலை இப்போது வந்துவிட்டது. உடனே இவற்றை தோண்டி எடுத்து பத்திரமான இடத்துக்கு மாற்றாவிட்டால் பெரும் ஆபத்து. இதற்கு ஆகப்போகும் செலவு 500 கோடி டாலர்கள் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள்.

அமெரிக்காவைப் பொறுத்தமட்டில் அணுக் கழிவுகள் டன்

கணக்கில் குவிந்து கிடக்கின்றன. எல்லாவற்றையும் எடுத்துப் போய்

யுக்கா மலைகளில் ஆழமாகப் புதைத்துவிட்லாம் என்று திட்டம்

தீட்டப்பட்டது. இதற்கு மொத்தம் 5400 கோடி ரூபாய் செலவாகும்

இது 150 வருடங்களுக்கு அந்த இடத்தை பராமரிப்பதற்கான செலவு.

அப்புறம் லட்சக்கணக்கான வருடங்கள் பராமரிக்க வேண்டும்.இந்த

திட்டத்துக்காக இதுவரை 1500 கோடி ரூபாய் செலவு செய்தபிறகு இது வேலைக்கு ஆவாது என்று ஒபாமா திட்டத்தை ரத்து செய்திருக்கிறார். மாற்று திட்டம் யோசியுங்கள் என்று சொல்லிவிட்டார். காரணம் நாடு முழுவதும் இருந்து டன் கணக்கில் அணுக்கழிவுகளை யுக்கா மலைக்கு கொண்டு போவது பெரிய ஆபத்து. அதனால் எல்லா கழிவும் இப்போது அணுகுண்டு தயாரிப்பு நிலையம் உள்ள இடத்திலேயே இருக்கட்டும் என்று வைத்திருக்கிறார்கள். அமெரிக்காவின் மின் நிலையங்களிலிருந்து மட்டும் 64 ஆயிரம் டன் கழிவு குவிந்திருக்கிறது, வருடத்துக்கு 2 ஆயிரம் டன் சேர்கிறது.

ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் அணு உலையில்

வருடத்துக்கு 2 டன் அணுக் கழிவு உற்பத்தியாகும். ஒரு அணு

மின்நிலையத்தின் ஆயுள் 30 முதல் 40 வருடம்தான். அதன்பின்னர்

அதில் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியாது. ஆனால் அந்த 40

வருடத்தில் சேர்ந்த அணுக் கழிவுகளை அதன்பின்னர் லட்சக்கணக்கான வருடத்துக்கு பாதுகாப்பாக வைக்காவிட்டால் நம் கொள்ளுப் பேரன்,எள்ளுப் பேத்திகளெல்லாம் புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களை சந்திக்க நேரிடும். எவ்வளவு முட்டாள்தனம் !

மகா முட்டாள்தனம்தான் ? சரி. மூடிய அணு உலையை என்ன செய்வார்கள் ? மோட்டார் தயாரிக்கும் எஞ்சினியரிங் கம்பெனி போன்றவற்றைப் பிரித்துப் போட்டு விற்பது மாதிரி விற்கமுடியுமா?

நிச்சயம் அப்படி பிரித்து விற்கமுடியாது. அது இன்னொரு

தலைவலி. அணு உலையை 30 வருடத்தில் மூடுவது என்பது

வெறுமே மூடிவிட்டுப் போவது அல்ல. அந்த மூடிய உலையையும்

லட்சக்கணக்கான வருடங்களுக்கு பாதுகாக்கவேண்டும். மூடிய

ஆலைக்கு பிரும்மாண்டமான சமாதி கட்ட வேண்டும். செர்னோபில்லில் நான்கு லட்சம் கன மீட்டர் அளவு கான்கிரீட்டும் 7300 டன் இரும்பும் செலவிட்டு சமாதி கட்டினார்கள். ஆனால் 25 வருடம் கழித்து அதை மீறி கதிரியக்கம் வெளியே கசிகிறது. எனவே இப்போது 20 ஆயிரம் டன் எடையில் 100 மீட்டர் உயரம், 250 மீட்டர் அகலம், 160 மீட்டர் நீளத்தில் இன்னொரு அடுக்கு சமாதி கட்டப் போகிறார்கள். இது 100 வருடம் வரை கசிவு வராமல் தடுக்கும் என்பது கணக்கு. அப்புறம்? கொள்ளுப் பேரன்களும் கொள்ளுப் பேத்திகளும் வந்து அடுத்த சமாதி கட்ட வேண்டியதுதான்.

புகோஷிமாவில் சமாதி கட்ட ஆரம்பிக்கவே இன்னும்

ஒரு வருடமாகும். கிட்ட நெருங்கமுடியாத வெப்பம். மூன்று

உலைகளில் மேலிருந்து கான்கிரீட் கலவையை ஊற்றி அப்படியே

சமாதி செய்வது திட்டம். நான்காவது உலையில் மேலிருந்து

ஊற்றமுடியாது. அங்கேதான் யுரேனியம் எரிபொருள் கதிர்வீச்சுடன்

கனன்றுகொண்டிருக்கிறது. அதை வெளியே எடுக்கவும் முடியாது. 150 டன் எடையுள்ள பொருளைத் தூக்கும் கிரேன்கள் வைத்து அதை

எடுக்க வேண்டும். அப்படி எடுப்பதையும் திறந்த வெளியில் காற்றில்

செய்யமுடியாது. கதிரியக்கம் காற்றில் பரவும்.

தண்ணீருக்குள் வைத்து செய்ய வேண்டும். எப்படி அதைச்

செய்வது ? மொத்த உலையையும் சுற்றி ஒரு பிரும்மாண்டமான

கட்டடம் கட்டி அதை தண்ணீர் தொட்டி போல ஆக்கி அதில் தண்ணீர்

நிரப்பி உலையை மூழ்கடித்தபின் கிரேனில் கதிரியக்க பொருட்களைத்

தூக்கலாம். நம் கோவில் தேரை மூடுவது போல ஷெட் கட்டுகிறார்கள் அல்லவா, அந்த மாதிரி. ஆனால் இந்த உலையின் சைஸை நினைத்துப் பாருங்கள். எவ்வளவு பெரிய தண்ணீர் தொட்டி கட்டவேண்டும் ! இதையெல்லாம் செய்ய இன்னும் பல வருடம் தேவைப்படும்.

இத்தனைக்கும் பிறகும் புகோஷிமா உலையிலிருந்து கதிரியக்கம்

பரவும் வாய்ப்பு உண்டு. கீழ்பக்கம் பூமி வழியே கதிரியக்கம் பரவும் !

அப்புறமும் பத்து வருடத்துக்கு ஒரு முறை வீதம் லட்சக்கணக்கான

வருடங்களுக்கு இந்த ச்மாதிகளைப் புதுப்பித்து பாதுகாத்து

வரவேண்டும்.

கல்பாக்கத்திலோ கூடங்குளத்திலோ பெரிய விபத்து நடந்தால்

நாமும் இந்த மாதிரி கொலைவெறி விளையாட்டெல்லாம் விளையாடிப் பார்க்கலாம். கூடங்குளம் இன்னும் இயங்க ஆரம்பிக்காததால், கல்பாக்கத்துக்கு வாய்ப்பு அதிகம். தவிர அங்கேதான் இந்தியாவின் அணு ஆயுத வேலைகளும் நடக்கின்றன. அது தவிர, இந்தியாவின் மொத்த அணுக் கழிவுகளையும் கல்பாக்கத்திற்குக் கொண்டு வந்து அங்கே பூமிக்குக் கீழே புதைப்பதுதான் திட்டம். இப்போது தொட்டிகளில் வைத்திருக்கிறார்கள். உண்மையில் கூடங்குளத்தை

ஆரம்பிக்காதே என்ற கூக்குரலுக்கும் முன்பாகவே கல்பாக்கத்தை

மூடு என்பதைத் தொடங்கியிருக்கவேண்டும்.

ஏனென்றால் சின்னச் சின்ன விஷயங்களில் கூட அணுசக்தித்

துறையின் பாதுகாப்புத் திறன நம்பிக்கைக்குரியதாக இல்லை.

மருத்துவ நோக்கங்களுக்காக, கல்விக்கூட ஆய்வுகளுக்காக

பயனபடுத்தப்படும் கதிரியக்கப் பொருட்கள் உடபட் அணு சக்தித்

துறையின் கண்காணிப்பின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இருக்கவேண்டும் என்பது இந்தியாவில் சட்டம்.

ஆனால் இரண்டு நிகழ்ச்சிகள் அதிரவைக்கின்றன. ஒன்று

ஹைதராபாதில் இருக்கும் அணுசக்தி எரிபொருள் சுத்திகரிப்பு

வளாகத்துக்கு வெளியே இருக்கும் குப்பைமேட்டில் 1982ல் குப்பை

பொறுக்கும் ஒரு சிறுமியும் அவள் சகோதரனும் குப்பைகளைக்

கிளறிக் கொண்டிருந்தபோது அதிலிருந்த ஒரு பொருள் அவர்களை

சுட்டெரித்ததில் இருவரும் தீக்காயங்களால் இறந்தார்கள். அண்மையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் என்னுடன் பங்கேற்ற ஓய்வு பெற்ற அணுவிஞ்ஞானியும் மத்திய அரசு கூடங்குளம் மக்களின் ”பயத்தைப் போக்க” அமைத்த உயர்நிலைக்குழு உறுப்பினருமான் திரு பாலுவிடம் இந்த சம்பவத்தை சொல்லி குப்பை மேட்டில் அலட்சியமாக் ஆபத்தான பொருட்களைத் தூக்கி எறியும் அவர் துறையினரை எப்படி நம்புவது என்று கேட்டேன். “ அந்தப் பொருள் ஆபத்தானதுதான். ஆனால் கதிரியக்கம் உடையது அல்ல. அது அங்கே வந்திருகக்கூடாதுதான். ஆனால் அணு விஞ்ஞானிகள் எப்போதோ ஒரு தடவை வழுக்கி விழுந்தால், அதற்காக அவர்களுக்கு நடக்கவே தெரியாது என்று சொல்லுவீர்களா?” என்று கேட்டார். ”நீங்கள் வழுக்கி விழுந்தால் நாங்கள் அல்லவா சாகிறோம்” என்று பதில் சொன்னேன்.

இன்னொரு நிகழ்ச்சி 2010 ஏப்ரலில் டெல்லி மாயாபுரி மார்க்கெட்டில்

நடந்தது. அங்கே இருக்கும் காயலான் கடை வியாபாரி ஒருவரும்

அவர் கடைத் தொழிலாளர்களும் மோசமான கதிர் வீச்சு சிக்கலுடன்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். கடைக்காரர் இறந்தார்.

மார்க்கெட்டில் ஆய்வு செய்தபோது பல கடைகள் கதிர்வீச்சில்

அங்கே பாதிக்கப்பட்டிருந்தன. கதிர் வீச்சு எதிலிருந்து வருகிறது என்று பார்த்தால் கோபால்ட் 60 இருந்த காமா செல் கருவிதான்.

டெல்லி பல்கலைக்கழக வேதியியல் துறையில் ஆய்வுக்கு

வைத்திருந்த அந்தக் கருவியில் கதிர்வீச்சு செத்துவிட்டது என்ற

தவறான அடிப்படையில் இனி பயனற்றது என்று ஏலத்தில் விடப்பட்டு பழைய இரும்புக் கடைக்கு வந்திருக்கிறது. கதிரியக்கப் பொருட்களை யார் பயன்படுத்தினாலும் அணுசக்தித் துறை அனுமதி பெற்றுதான் வாங்கவோ விற்கவோ ஏலம் விடவோ முடியும் என்ற சட்டமுள்ள நிலையில் இப்படி நடந்திருக்கிறது.

ஆறு மாதங்களுக்கு முன்னால் கூட 2011 மே 30 அன்று, சூரத்

அருகே இருக்கும் காக்ரபார் அணுமின் நிலையத்தில் நான்கு தற்காலிக தொழிலாளர்கள் ஜெயசிங், பாச்சு, தினேஷ், திலேஷ் ஆகியோர் தவறுதலாக கதிர்வீச்சுக்கு உட்படுத்தப்பட்டார்கள். பயன்படுத்திய எரிபொருளை அனுப்பும் குழாயை சுத்தப்படுத்தி பெயிண்ட் அடிக்கும் வேலையில் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள். அந்தக் குழாய் 15 அடி நீளமும் 9 அடி அகலமும் உடையது. அதற்குள் அவர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோதே, கண்ட்ரோல் அறையில் இருந்தவர்களின் தவறால், அந்த குழாய் வழியே யுரேனியம் எரிபொருள் அனுப்பப்பட்டுவிட்டது. அதனால் தொழிலாளர்களுக்கு கதிர் வீச்சு ஏற்பட்டது.

உடல்நலம் பாதிக்கப்பட்ட நான்கு தொழிலாளர்கள் தங்களுக்கு

நிரந்தர வேலை தரப்படவேண்டுமென்று மாவட்ட கலெக்டரிடம்

முறையிட்டபிறகு அவர் விசாரித்ததால்தான் இந்த விஷயம் மூன்று

மாதம் கழித்து ஆகஸ்ட்டில் வெளியே தெரிய வந்தது. வேறு வழியின்றி அணுசக்தி துறை நடந்ததை ஒப்புக் கொண்டது. இல்லாவிட்டால் கமுக்கமாக இருப்பதுதான் அதன் வழக்கம். மனிதத் தவறால் இது நடந்துவிட்டதாக சொல்லியிருக்கிறது. தவறு செய்த கண்ட்ரோல் ரூம் அலுவலர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா? ஒரு அலவன்ஸ் கட். அவர்கள் திரும்பவும் பயிற்சிக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்களாம்.

இப்படி இந்தியாவில் யுரேனியத்தைத் தோண்டி எடுக்கும் சுரங்கம்

முதல் கடைசியில் மின்சாரமும் அணுகுண்டும் தயாரிக்கும்

தொழிற்சாலை வரை சின்னச் சின்னதாகவும் பெரிது பெரிதாகவும்

தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. இங்கே செர்னோபில்லோ புகோஷிமாவோ இன்னும் வரவில்லையென்பது ஆறுதலே தவிர வராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

யுரேனிய சுரங்கமா ? அவை எங்கே இருக்கின்றன ?

அங்கே என்ன நடக்கிறது ?

ஜார்கண்ட் மாநிலத்தில் இருக்கும் ஜாதுகுடா பகுதியில் நெய்வேலி

போன்ற திறந்தவெளி சுரங்கங்களில் 1967 முதல் இந்திய அரசு

யுரேனியத்தை அகழ்ந்தெடுக்கிறது. இந்த சுரங்கங்களுக்கு வேலி

கிடையாது. ஆபத்தான பகுதி என்ற அறிவிப்பு கூட கிடையாது.

சுரங்கத்திலிருந்து மஞ்சள் கேக் எனப்படும் யுரேனியத்தை ஏற்றிச்

செல்லும் லாரிகளுக்கு சரியான மூடு கவசம் எதுவும் கிடையாது.

லோடிங் செய்யும் கூலிகளுக்கும் எந்த பாதுகாப்பு உடையும்

இல்லை.சுற்றிலும் 30 ஆயிரம் ஏழை கிராமவாசிகள் (ஆதிவாசிகள்)

வசிக்கின்றனர்.

யுரேனியத்தை மண்ணிலிருந்து பிரித்து கட்டிகளாக்கி அனுப்பியபிறகு இருக்கும் கழிவுகளை சுரங்கப் பகுதியில் மூன்று பெரிய யுரேனியக் கழிவுக் குட்டைகளில் தேக்குகின்றனர். டிசம்பர் 2006ல், இங்கே யுரேனியக் கழிவு நீரை எடுத்து வரும் குழாய் உடைந்து அந்த விஷ நீர் கிராமவாசிகளின் வீடுகளிலும், ஓடை வழியே போய் ஸ்வர்ணரேகா ஆற்றிலும் கலந்தது. ஒவ்வொரு வருடமும் குழாய் உடைந்து விஷக் கழிவு மக்களை பாதிப்பது இங்கே சகஜமாகிவிட்டது. ஜூன் 2008ல் பெய்த பெருமழையில் ஜம்ஷெட்பூர் அருகே இருக்கும் துராம்தி பகுதியில் இருந்த யுரேனியம் கழிவு நீர் குட்டையும் மழை நீரும் கலந்து சுற்றிலும் இருக்கும் கிராமங்கள், குளங்கள், வயல்களில் எல்லாம் பரவிவிட்டது. யுரேனியக் கழிவுக் குட்டையை பாதுகாப்பாக வைக்க இதுவரை அரசு எதுவும் செய்யவில்லை.

கழிவுநீர் கிராமத்துக்கு வரும் ஓடையில் தொடர்ந்து கலந்து வருகிறது. அந்த நீரைப் பயனப்டுத்தும் மக்களுக்கு பல உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன. பிறவி ஊனம், மலட்டுத் தன்மை, மரபணு சிதைவு என விதவிதமான பிரச்சினைகள் உள்ளன. இந்தப் பகுதியில் வாழும் பெண்களில் 47 சதவிகிதம் பேருக்கு மாத விலக்கு சுழற்சி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. நோபல் பரிசு பெற்ற அமைப்பான அணுப் போருக்கு எதிரான மருத்துவர் கழகத்தின் இந்தியக் கிளை இங்கே 2007ல் நடத்திய ஆய்வில் இங்கே பத்து சதவிகிதம் குழந்தைகள் பிறந்த உடனே இறப்பதும், பல கிராமங்களில் புற்று நோய் ஏற்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. முப்பது வருடமாக இந்த யுரேனிய சுரங்கங்களின் ஆபத்தான நிலை பற்றி சூழல் இயக்கங்கள் பல முறை சொல்லியும் அணுசக்தி துறை கண்டுகொள்வதே இல்லை.

சுரங்கத்துக்காக மக்களின் நிலத்தை தொடர்ந்து அரசு எடுப்பதை

எதிர்த்து பல போராட்டங்கள் நடந்துவருகின்றன. சரியான இழப்பீடு

தராத பிரச்சினை தொடர்ந்து இருக்கிறது. அடுத்து ஆந்திர மாநிலத்தில் மிகப்பெரிய யுரேனிய சுரங்கம் வெட்ட அரசு முடிவெடுத்திருக்கிறது.

ஜார்கண்டிலிருந்து யுரேனியம் கேக்கை ஹைதராபாதில் இருக்கும்

எரிபொருள் சுத்திகரிப்புஆலைக்கு லாரிகளில் அனுப்புகிறார்கள். இந்த

லாரிகள் விபத்துக்குள்ளாவதும் அடிக்கடி நடக்கிறது. ஜூலை 2007ல்

ஸ்ரீகாகுளம் நரசிங்கபேட்டையில் 62 பீப்பாய் நிறைய யுரேனியம் ஏற்றி வந்த கண்டெய்னர் உருண்டு பக்கத்து வயலில் போய் விழுந்தது. ஆனால் எந்தக் கசிவும் ஏற்படவில்லை என்பது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு. அக்டோபர் 2011ல் மறுபடியும் இதே இடத்தில் இன்னொரு யுரேனியம் பெராக்சைட் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி விபத்துக்குள்ளாயிற்று. இந்த முறையும் எந்தக் கசிவும் ஏற்படவில்லை என்றது அணுசக்தித் துறை. பல விபத்துகள் வெளியிடப்படுவதே இல்லை. லாரியில் என்ன இருக்கிறது என்பதே மறைக்கப்பட்டுவிடும்.

ஹைதராபாதில் இருக்கும் எரிபொருள் சுத்திகரிப்பு வளாகத்தின்

குப்பைமேடு சாதனையை முன்பே பார்த்தோம். இந்த வளாகத்தில்

தினசரி சுமார் 50 ஆயிரம் டன் கதிரியக்க ஆபத்துள்ள கழிவு நீர்

வெளியேற்றப்படுகிறது. இதைக் குட்டை கட்டி தேக்கிவருகிறார்கள்.

இதிலிருந்து கழிவு நீர் பூமிக்கடியில் கசிந்து சுற்று வட்டார நிலத்தடி

நீரை முற்றிலும் கெடுத்துவிட்டது. வளாகத்துக்கு அடுத்திருக்கும்

அசோக் நகர் குடியிருப்பினர் கிணற்று நீரைப் பயன்படுத்தக் கூடாது

என்று அணுசக்தி துறை அதிகாரப்பூர்வமாகவே உத்தரவிடவேண்டிய

நிலை வந்துவிட்டது.

எனவே அணு மின் நிலையங்களினால் தொடக்கம் முதல்

இறுதி வரை ஆபத்துதான். விபத்து நடந்தால் பேராபத்து. பெரிய

விபத்து இல்லாவிட்டாலும், சுரங்கம் முதல் அணு நிலையம் வரை

சுற்றுச்சூழல் கதிரியக்கத்தால் பாதிக்கப்படுகிறது. நீர், காற்று, நிலம்

பாழாகிறது. மக்களுக்கு நோய்கள் வருகின்றன. உலகம் முழுவதும்

அணு மின் நிலையங்களை சுற்றி மக்கள் வாழும் பகுதிகளில் இந்த

பாதிப்புகள் ஏற்படுவது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின்

அணு உலைகள் இயங்கும் 65 இடங்களில் சுற்றுவட்டாரங்களில்

ரத்த, மூளை புற்று நோய்கள் அதிகரித்திருப்பதை அவர்களுடைய

ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இங்கே சுயேச்சையான மருத்துவ ஆய்வுகள் செய்ய இந்திய அரசு

சம்மதிப்பதில்லை. கல்பாக்கத்தில் பணி புரியும் ஊழியர்களில் பலர்

புற்று நோயால் இறந்திருக்கிறார்கள். ஒரே பிரிவில் வேலை செய்த

மூவர் அடுத்தடுத்து புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்கள்.

சென்னை அரசு மருத்துவமனைகளுக்கு புற்று நோய், நெஞ்சு

நோய் அறிகுறிகளுடன் வருபவர்களிடம் கல்பாக்கத்தில் இருந்து

வருகிறீர்களா என்று மருத்துவர்கள் விசாரிப்பதும் வேறு இடத்துக்கு

குடி பெயருங்கள் என்று அறிவுரை சொல்வதும் காலம் காலமாக

நடக்கிறது. கல்பாக்கத்தை சுற்றியும் உள்ள கிராமங்களில் புற்று

நோய் அறிகுறிகள், மலட்டுத்தன்மை, பிறவியிலேயே உடல் ஊனம்

போன்ற சிக்கல்கள் உள்ளன. கதிரியக்கம் செல்களை பாதிப்பதால்

ஆறு விரல்களுடன் குழந்தைகள் பிறப்பது அதிகம் காணப்படுகிறது.

இது பற்றி மருத்துவர் புகழேந்தி தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு

வாரிய அதிகாரிகளுக்கும் அணு உலை அதிகாரிகளுக்கும் பல

வருடம் முன்பே தெரிவித்தார். ஆனால் அவர்கள் எந்த ஆய்வையும்

மேற்கொள்ளவில்லை.

அணுசக்தி துறையின் கண்காணிப்பு வாரியம் என்பதே ஒரு

கண்துடைப்பாக ஆக்கப்பட்டுவிட்டது. அதன் தலைவராக 1993லிருந்து 1996 வரை இருந்த கோபாலகிருஷ்ணன் ஓய்வு பெற்றபோது தெளிவாகச் சொல்லிவிட்டார்: “அணுசக்தித் துறை எல்லாம் ஒழுங்காக இருப்பதாகத் தான் சொல்வதை அரசும் மக்களும் அப்படியே நம்பவேண்டும் என்று விரும்புகிறது. ஆனால் அப்படி இல்லை என்பதை நிரூபிக்க என்னிடம் ஆவணங்கள் உள்ளன.”

ஆனால் மின்சாரத்துக்கு வேறு வழியே இல்லை. அணு

மின்சாரத்தைத்தான் நம்பியாகவேண்டும் என்கிறார்களே ?

அது இன்னொரு கடைந்தெடுத்த பொய். அணு மின்சாரம் பற்றி

சொல்லப்படும் நான்கு பிரதானப் பொய்களில் இதுவும் ஒன்று. 1. அணு மின்சாரம் தூய்மையானது. 2. பாதுகாப்பானது. 3.விலை மலிவானது. 4. இதை விட்டால் இனி வேறு வழியில்லை. முதல் இரண்டும் எப்படிப்பட்ட மோசடிகள் என்பதை மேலே பார்த்துவிட்டோம். இனி அடுத்த இரண்டைப் பார்ப்போம்.

விலை மலிவானது என்பது அணுசக்தி துறையின் அடுக்கடுக்கான

பொய்களில் இன்னொன்று. அவ்வளவுதான். எந்த அடிப்படையில்

விலையைக் கணக்கிடுகிறார்கள் என்பதை அவர்கள் வெளிப்படுத்த

வேண்டும். ஒரு அணு உலையைக் கட்ட 10 முதல் 15 வருடமாகிறது.ஒவ்வொரு அணு உலையும் கட்ட ஆரம்பிக்கும்போது சொல்லும் மதிப்பீடு வேறு. பத்து வருடம் கழித்துக் கட்டி முடிக்கும்போது செலவு பல மடங்கு அதிகம். அப்படித்தான் கூடங்குளம் உலைக்கும் ஆரம்பத்தில் 6000 கோடி என்றார்கள். கடைசியில் இது 13 ஆயிரம் கோடியாகிவிட்டது. அது அதிகபட்சம் 30 வருடம் இயங்கலாம்.பின்னர் மூடுவிழா, சமாதி கட்ட இன்னொரு பத்து வருடம் ஆகும்.

இந்த ஐம்பது வருடங்களில் ஆகும் செலவின் அடிப்படையில்

முப்பது வருடங்களில் தயாரித்த மின்சாரத்துக்கு விலை நிர்ணயித்தால் அந்த விலை எவ்வளவு என்று சொல்லவேண்டும். பிறகு அணு உலையையும் கழிவுகளையும் லட்சக்கணக்கான வருடங்களுக்கு பாதுகாக்கும் செலவுக்கு எங்கிருந்து பணம் வரும்?

வெறுமே உலை இயங்கும்போது ஆகும் செலவை மட்டும்

அடிப்படையாகக் கொண்டு மின்சாரத் தயாரிப்பு செலவைக்

கணக்கிட்டால் கூட இதில் எல்லா செலவுகளையும் கணக்கிட்டு

சொல்வதில்லை. எடுத்துக்காட்டாக, ஒரு அணு உலைக்கு தினசரி

பத்து லட்சம் லிட்டர் நல்ல தண்ணீர் தேவைப்படுகிறது. லிட்டருக்கு

எவ்வளவு காசு அடிப்படையில் இந்த செலவு கணக்கிடப்படும் ?

அணு உலைகளில் பயன்படுத்தும் கன நீர் விலை எவ்வளவு

? ஆனால் அரசு கொடுக்கும் மான்யம் எவ்வளவு ? கைகா

அணு உலைகளில் பயன்படுத்தும் கன நீர் செலவுக் கணக்கை

மதிப்பிட்டபோது ஒரு உலைக்கு கன நீருக்காக மட்டும் அரசு தரும்

மான்யம் 1450 கோடி ரூபாய் என்பது தெரியவந்தது. இது உலையை

நிறுவிய முதலீட்டுச் செலவில் 17 சதவிகிதம் !

இது தவிர அணு உலைகளில் நடக்கும் விபத்துகளினால் ஆகும்

இழப்பு, செலவு இவற்றையெல்லாம் கணக்கிடவேண்டும். புகோஷிமா

விபத்துக்குப் பிறகு ஜப்பான் அணுமின்சார தயாரிப்புச் செலவில்

விபத்துகளினால் சமூகத்துக்கு ஏற்படும் பாதிப்பை சந்திக்க ஆகும்

செலவுகளையும் சேர்த்துக் கணக்கிட வேண்டும் என்று முடிவு

செய்திருக்கிறது. அப்படிச் செய்தால் விலை அதிகமானது என்று

சொல்லப்படும் சூரிய சக்தி மின்சாரத்தை விட அணுமின்சாரத்தின்

விலை அதிகமாகிவிடும்.

கல்பாக்கம் அணு உலைகள் 1987ல் இரண்டு வருடங்கள்

சிக்கல்களினால் மூடிக் கிடந்த சமயத்தில் ஏற்பட்ட இழப்பு 30 கோடி

டாலர்கள். இங்கே 2002ல் சோடியம் கசிவு ஏற்பட்ட விபத்தில் இழப்பு

மூன்று கோடி டாலர்கள். . தாரப்பூர் அணு மின் நிலையங்கள்தான்

உலகிலேயே மிக அதிகமான கதிர் வீச்சு சிக்கல்களுக்குள்ளானவை.

இங்கே 1989ல் ஐயோடின் கசிவு எற்பட்ட விபத்தில் இழப்பு சுமார் 8

கோடி டாலர். ராஜஸ்தான் கோட்டா அணு உலையில் 1995ல் ஹீலியம் கசிவு ஏற்பட்டு 2 வருடம் பாதிப்பினால் ஏற்பட்ட இழப்பு 28 கோடி டாலர்.

விபத்தில் நஷ்ட ஈட்டுக்கு யார் பொறுப்பு ? உலையை நடத்துபவர்கள்தானே ?

அது இன்னொரு பிரச்சினை. இந்தியாவில் இதுவரை எல்லா

அணு உலைகளுமே மத்திய அரசின் அணுசக்தித் துறையால்

கட்டப்பட்டு நடத்தப்படுபவை. அதில் விபத்து, நஷ்ட ஈடு என்றால்

அரசுதான தரவேண்டும். ஆனால் மன்மோகன் அரசு இனி சர்வதேச

தொழிலதிபர்கள், வெளிநாட்டு அரசு கம்பெனிகள், அவர்களுடன்

கூட்டு சேரும் இந்திய தனியார் முதலாளிகளிடம் அணு உலைகளை

கட்டி இயக்கும் பொறுப்பை தர முடிவுசெய்து ஒப்பந்தங்கள் போட

ஆரம்பித்துவிட்டது. அதற்கு வழி செய்யும் 123 ஒப்பந்தத்தைத்தான்

மன்மோகன்சிங் இடது சாரிகள், பி.ஜே.பி ஆகியோரின் எதிர்ப்பை மீறி

அமெரிக்காவுடன் செய்தார். அப்போது ஆட்சி கவிழாமல் இருப்பதற்கு

எம்.பிகள் விலை கொடுத்து வாங்கப்பட்டார்கள் என்பது இப்போது

விக்கிலீக்ஸ் அமபலப்படுத்தியிருக்கும் அமெரிக்க தூதர்களின் ரகசியச் செய்திகளால் நிரூபணமாகியிருக்கிறது.

அதையடுத்து மன்மோகன் அரசு அவசர அவசரமாக கொண்டு

வந்த இன்னொரு சட்டம் நியூக்ளியர் லயபிலிட்டீஸ் பில் எனப்படும்

அணு உலை விபத்து இழப்பிடுக்கான சட்டம். இந்த சட்டப்படி

தனியார் நிறுவனங்கள் நிர்மாணிக்கும் அணு உலையில் விபத்து

ஏற்பட்டால், நஷ்ட ஈட்டை ஓரளவுக்கு மேல் தரமுடியாது என்றும்

இந்திய அரசேதான் தரவேண்டுமென்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

இதன்படி தனியார் முதலாளியின் அதிகபட்ச பொறுப்பு 30 கோடி

டாலர்தான். அதாவது சுமார் 1500 கோடி ரூபாய். இதற்கு மேல்

ஆகும் விபத்து இழப்பீடு செலவில் 500 கோடி ரூபாயை இந்தியாவில்

உலையை நடத்தும் ஆப்பரேட்டர் – இந்திய அரசின் நியூக்ளியர் பவர்

கார்ப்பரேஷன் (அதாவது அதுவும் அரசுதான்) கொடுக்க வேண்டும்.

மேற்கொண்டு ஆகும் இழப்பீட்டு செலவு எல்லாம் அரசுடையதுதான்.

அதாவது மக்கள் பணம். நம் பணம்.

மன்மோகன் போட்டிருக்கும் அற்பமான இழப்பிட்டு தொகையைக்

கூட அமெரிக்க, ரஷ்ய அரசுகள் ரத்து செய்ய நிர்ப்பந்தித்து வருகின்றன. கூடங்குளம் உலைகளில் விபத்து ஏற்பட்டால் தனக்கு ஒரு பைசா கூட லயபிலிட்டி கிடையாது என்றே ரஷ்யா மன்மோகனுடன் போட்ட ஒப்பந்தத்தில் சொல்லியிருக்கிறது. இன்னொரு பக்கம் அமெரிக்கா மன்மோகன் போட்ட துக்கிளியூண்டு இழப்பீடுச் சட்டத்தையும் காலி பண்ண தந்திரமாக வேலை செய்கிறது. சர்வதேச அணுசக்தி முகமையின் தீர்மானங்களின்படி அணு உலை சப்ளையர் ஒரு பைசா கூட நஷ்ட ஈடு தர வேண்டியதில்லை. இந்தத் தீர்மானத்துக்கு இந்தியா அங்கீகாரம் அளிக்குமென்று ஹிலாரி க்ளிண்ட்டனிடம் மன்மோகன்

ஒப்புக் கொண்டிருக்கிறார்.அதன்படி இந்திய அரசு ஒப்புதல் அளித்தால், சர்வதேச சட்டத்துக்கு விரோதமாக லயபிலிட்டி சட்டம் இருக்க முடியாதென்று காரணம் சொல்லி பாராளுமன்றத்தில் இழப்பீடு சட்டத்தை ரத்து செய்யலாம். இதற்கு அமெரிக்கா முயற்சித்து வருகிறது.

மன்மோகன் போட்டிருக்கும் சொத்தையான சட்டப்படி அணு

உலை விபத்து ஏற்பட்டு நாம் பாதிக்கப்பட்டால் நாம் இழப்பீடு

கேட்டு கோர்ட்டுக்கும் போக முடியாது. அரசு நியமிக்கும் இழப்பீட்டு

கமிஷனரிடம் தான் விண்னப்பிக்கவேண்டும். அவர் தருவதை வாங்கிக் கொள்ளவேண்டும். அவர் உத்தரவுக்கு மேல் முறையீடாக கோர்ட்டுக்கு செல்ல முடியாது என்கிறது சட்டம். ஆனால் அமெரிக்காவில் பாதிக்கப்பட்ட மக்கள் கோர்ட்டுக்குப் போக அந்தக் குடிமக்களுக்கு உரிமை இருக்கிறது !

போபால் விபத்தில் நஷ்ட ஈடு பிரச்சினையே இன்னும்

தீரவில்லை. சாதாரண ரசாயன ஆலை விபத்து அது. அதுவே பல

தலைமுறைகளுக்கு ஆயிரக்கணக்கான மக்களை பாதித்துவிட்டது.

அணு உலை விபத்து பல மடங்கு அதிகமாக பாதிக்கக்கூடியது

என்பதற்கு ரஷ்யாவும் ஜப்பானும் சாட்சிகள்.

அணு உலை தொடர்பான இன்சூரன்ஸ் நிலையை ஆராய்ந்த

பொறியாளரும் தொழிற்துறை ஆலோசகருமான சி.ஈ. கருணாகரன்

தரும் விவரங்களைப் பார்ப்போம். அமெரிக்கா உள்ளிட்ட மேலை

நாடுகளில் தனியார் நடத்தும் அணு உலைகளுக்கு முழு இன்சூரன்ஸ்

செய்ய இன்சூரன்ஸ் கம்பெனிகள் முன்வருவதே இல்லை. விபத்து

ஏற்பட்டால் இழப்புச் செலவை அரசும் பாதிக்கப்பட்டவரும்தான்

ஏற்கவேண்டும். தனியார் கம்பெனியும் இன்சூரன்சும் சின்ன அளவிலேயே ஏற்பார்கள். செர்னோபில் விபத்தில் இழப்பீடு அறுபதாயிரம் கோடி டாலர்கள். புகோஷிமா மதிப்பீடு 25 ஆயிரம் கோடி டாலர்கள். அமெரிக்க சட்டப்படி புகோஷிமா அணு உலை ஆபரேட்டர் 30 கோடி டாலர்தான் தரவேண்டும். மீதி அரசு செலவு. இந்தியாவில் மன்மோகன் சட்டப்படி,சுமார் 12 லட்சம் கோடி இழப்பீட்டுக்கு உலை விற்றவர் வெறும் 1500 கோடிதான் தரவேண்டும்.

உலகத்தில் எங்கேயும் அணு உலை விபத்துக்குத் தனி நபர்

இன்சூரன்ஸ் கிடையாது. நம்முடைய ஆயுள் இன்சூரன்ஸ் பாலிசியில், விபத்து இன்சூரன்ஸ் பாலிசியில் மெடிகல் இன்சூரன்ஸ் பாலிசியில் எல்லாம் நியூக்ளியர் விபத்துக்கு விதிவிலக்கு பொடி எழுத்தில் தரப்பட்டிருக்கும்.

அணு தொழில்நுட்பம் பாதுகாப்பானது என்று ஓயாமல் சொல்லும்

அப்துல் கலாம் போன்றவர்கள், ஏன் இன்சூரன்ஸ் கம்பெனிகளை

தைரியமாக அதற்கு இன்சூரன்ஸ் தரும்படி சொல்லக்கூடாது ?

விபத்து நடக்காது, கதிரியக்கத்தால் நோயே வராது என்று திரும்பத்

திரும்பச் சொல்லும் அணு உலைமுதலாளிகள் ஏன் சட்டத்தில்

தாங்கள் தரவேண்டிய இழப்பீட்டு தொகையை மிகக் குறைவாகவே

வைக்க இவ்வளவு நிர்ப்பந்திக்கிறார்கள் ?

எனவே அணுமின்சாரம் என்பதில் தயாரிப்புச் செலவும் அதிகம்.

விபத்து ஏற்பட்டால் சேத அளவும் அதிகம். இழப்பீடு குறைவு. எந்த

விதத்திலும் அணு மின்சாரம் மலிவானதே அல்ல.

ஆனால் இனி இதை விட்டால் வேறு வழி கிடையாது என்கிறார்களே ?

அணுசக்தி துறையின் பூச்சாண்டி அது. அதை நம்பி வேறு

வழிகளை நாம் மேற்கொள்ளாமல், அணுமின்சாரத்தை நம்பினால்,

நாம்தான் முட்டாள்களாகிவிடுவோம். அணுமின்சாரம் இதுவரை

எவ்வளவுகிடைத்திருக்கிறது என்ற கணக்கை இத்தனை மெகாவாட்,

இத்தனை யூனிட்டுகள் என்று சொல்லி பிரும்மாண்டமாகக்

காட்டி ஏமாற்றுகிறார்கள். அத்தனையும் இந்தியாவின் மொத்த

மின்சாரத் தயாரிப்பில் வெறும் 2.3 சதவிகிதம்தான். இதற்குத்தான்

கோடிக்கணக்கான ரூபாய்களை ஐம்பது வருடங்களாக வீணடித்துக்

கொண்டிருக்கிறோம். அடுத்த 20 வருடங்கள் இன்னும் பல்லாயிரம்

கோடிகளைக் கொட்டினாலும் அணு மின்சாரத்திலிருந்து பத்து

சதவிகிதத்தைக் கூட நாம் அடையும் வாய்ப்பு இல்லை.

2050க்குள் 30 ஆயிரம் மெகாவாட் அணுசக்தியிலிருந்து தருவோம் என்கிறார்களே ?

கடன் வாங்கித் திருப்பித் தராமல் ஏமாற்றுவதை வழக்கமாக செய்யும் ஆசாமிகள் படுகவர்ச்சியாகப் பொய்கள் சொல்வார்களில்லையா, அது போலத்தான் இது. 1962ல் என்ன சொன்னார்கள் தெரியுமா? 1982ல் மொத்தம் 20 கீகாவாட் தருவோம் என்றார்கள்.ஆனால் வந்தது வெறும் 1.06 கீகாவாட்தான். திரும்பவும் 1970-களில் சொன்னார்கள். இனி ஒவ்வொரு ஆண்டும் ஒரு 500 மெகாவாட் அணு மின் உலை கட்டப்படும் என்றார்கள். ஒரு 500 மெகாவாட் உலை கட்டவே மொத்தமாக 35 வருடம் ஆயிற்று. அடுத்த ரீல்: 2000மாவது வருடத்துக்குள் 43.5 கீகாவாட் உற்பத்தி தருவோம் என்றார்கள். கொடுத்தது வெறும் இரண்டே கீகாவாட்தான்.

கதிர்வீச்சுக்கு நிகரான வாய்வீச்சு ஓயவே இல்லை. 1980ல்

சொன்னார்கள்: பத்தாயிரம் மெகாவாட் வந்துவிடும். வந்தது அதில்

பத்து சதவிகிதம்தான். தொடர்ந்து இந்த அளப்பையெல்லாம்

பார்த்துக் கொண்டிருப்பவர் கணக்கு தணிக்கை அதிகாரி. அவர்

1999ல் சொன்னார் – ஒரு திட்டத்துக்கு 5400 கோடி செலவிட்டும் பயன் பூஜ்யமாக இருக்கிறது.

கூடங்குளம் உலையிலிருந்து தமிழகத்துக்கு மட்டும் ஆயிரம் மெகாவாட் தருவோம் என்கிறார்களே?

இதுவும் நம் காதில் பூ சுற்றும் பிரசாரம்தான். முதலில் ஒன்றைப்

புரிந்துகொள்ளவேண்டும். அணுசக்தி துறை ஆயிரம் மெகாவாட்

தயாரிக்கும் திறனுடன் ஒரு உலையை நிறுவினால் அதில் பாதி

அளவுகூட உற்பத்தியே செய்வதில்லை என்பதுதான் வரலாறு.

கல்பாக்கம் உலைகளே கடந்த நான்கைந்து வருடங்களாகத்தான்

மொத்த உற்பத்தி திறனில் 40 முதல் 50 சதவிகிதத்துக்கு மின்சாரம்

தயாரிக்கும் நிலைக்கு வந்திருக்கின்றன.

ஆய்வாளர் மோகன் சர்மா கணக்கிட்டுள்ளபடி கூடங்குளத்தில்

உள்ள இரண்டு உலைகளும் இயங்க ஆரம்பித்து மொத்த உற்பத்தித்

திறனாகிய 2 ஆயிரம் மெகாவாட்டில் 60 சதவிகித மின்சாரம்

தயாரித்தாலும், 1200 மெகாவாட்தான் வரும். இதில் பத்து சதவிகிதம்

கூடங்குளம் வளாகத்துக்கே செலவாகிவிடும். (வழக்கமாக அணு

உலைகள் தங்கள் உபயோகத்துக்கே 12.5 சதம் செலவழிக்கின்றன).

மீதி 1080 மெகாவாட்தான். இதில் தமிழகத்தின் பங்கு 50 சதவிகிதம்

எனப்படுகிறது. (இதுவும் வழக்கமாக 30 சதவிகிதம்தான்.)

ஐம்பது என்றே வைத்தாலும் கிடைக்கப் போவது 540 மெகாவாட்.

இதில் 25 சதம் வழக்கமாக தமிழகத்தில் மின்கடத்துவதில் ஏற்படும்

டிரான்ஸ்மிஷன் இழப்பு. எனவே நிகர மின்சாரம் கிடைக்கக் கூடியது

405 மெகாவாட்தான்.

இதற்கு இத்தனை கோடி செலவு செய்து படு ஆபத்தான வம்பை

விலைக்கு வாங்கத் தேவையே இல்லை. தமிழகம் முழுக்கவும்

இருக்கும் குண்டு பல்புகளை மாறி குழல் பல்புகளாக்கினாலே 500

மெகாவாட்டுக்கும் மேலே மின்சாரம் மிச்சமாகிவிடும். இப்போது

டிரான்ஸ்மிஷன் லாஸ் என்ப்படும் மின் கடத்துதலில் ஏற்படும்

இழப்பால் இந்தியாவில் நாம் தயாரிக்கும் மின்சாரத்தில் 25 முதல் 40

சதவிகிதத்தை சுமார் 72 ஆயிரம் மெகாவாட்டை விநியோகிக்கும்போதே இழந்து கொண்டிருக்கிறோம். ஸ்வீடன் நாட்டில் இந்த இழப்பு வெறும் 7 சதவிகிதம்தான். அதுதான் உலக சராசரி. விநியோகத்தில் இழப்பை குறைக்க விஞ்ஞானிகள் வேலை செய்தாலே, சுமார் 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் நமக்குக் கிடைத்துவிடும். வெறும் பத்து சதவிகிதமாகக் குறைத்தாலே தமிழகத்தில் 1575 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.

இந்த மாதிரி நடைமுறைக்கேற்ற மாற்றுவழிகள் இன்னும் உண்டா?

நிறையவே இருக்கின்றன. தமிழ்நாட்டில் மொத்தம் 5500 மெகாவாட்

மின்சாரத்தை காற்றாலைகளிலிருந்து தயாரிக்கலாம். ஆனால் இதில்

4700 மெகாவாட்தான் இப்போது தயாரிக்கிறோம். அதிலேயே இன்னும் 700 மெகாவாட் மீதம் இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் மொத்த வீடுகளில் வெறும் 25 சதவிகித வீடுகளின் கூரைகளில் மட்டும் இரண்டு கிலோவாட் மின்சாரம் தயாரிக்கும் சக்தியுடைய சூரிய ஒளி பேனல்கள் அமைத்தால் அதிலிருந்தே மொத்தம் ஏழாயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இதையே பள்ளிகள்,கல்லூரிகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், என்று பெரிய பெரிய கட்டடங்களின் மேற்கூரைகளில் அமைத்தால் தமிழகத்தில் மின்சாரம் உபரியாகிவிடும்.

தூய்மையான மாற்று வழிகளான காற்று, சூரியசக்தி இவற்றால் போதுமான மின்சாரம் தயாரிக்க முடியாது என்று அணு விஞ்ஞானிகள் சொல்கிறார்களே ?

அவர்கள் வேறு எப்படி சொல்வார்கள் ? அரசாங்கமும் அவர்களும்

கூட்டாக அணுசக்தியை தூக்கிப் பிடிப்பதற்காக இதர வழிகளைப் பற்றி தவறான கருத்துகளைப் பரப்பி வருகிறார்கள். மே 2011ல் மும்பையில் அணு விஞ்ஞானிகள் பங்கேற்ற ஒரு கருத்தரங்கு நடந்தது. இதில் ஜப்பான் புகோஷிமா விபத்து, அணுஉலைகள் பாதுகாப்பானவை என்பதை நிரூபித்துவிட்டதாக அணுவிஞ்ஞானிகள் பேசியிருக்கிறார்கள். சுனாமியே தாக்கி அணு உலையே உருகியும் கூட சுற்றுச் சூழலுக்கும் ஊழியர்களுக்கும் மிகக் குறைவான பாதிப்புதான் ஏற்பட்டிருகிறதாம்! அதாவது சேதாரத்தை ரிப்பேர் செய்ய 40 வருடம் தேவைப்படக் கூடிய விபத்து அவர்களுக்கு மிகக் குறைவான பாதிப்பு ! இந்தக் கருத்தரங்கில் தலைமை தாங்கிப் பேசிய அணுசக்தி கமிஷனின் முன்னாள் தலைவர் அனில் ககோட்கர் சூரிய சக்தி மின்சாரம் வணிகரீதியாகக் கட்டுப்படியாகாது என்று பேசினார். அவரை அடுத்த மூன்றே மாதங்களில் ஆகஸ்ட் 2011ல் இந்திய அரசு இந்தியாவின் சூரிய சக்திக்கான உச்சமான அமைப்பான தேசிய சோலார் எனர்ஜி கம்பெனியின் தலைவராக நியமித்துவிட்டது ! ஆட்டுக்குட்டிக்கு காவலாக ஓநாயை நியமிக்கமுடியுமா?

கொடுமைதான் ! அப்படியானால் மாற்று மின்சார தயாரிப்பு

வழிகள் பற்றிய உண்மைகள்தான் என்ன ?

உலக அளவிலேயே அணுமின்சாரத்துக்குக் கொட்டிக் கொடுத்தது

போல வேறு எந்த வழிமுறைக்கும் கொடுத்தது கிடையாது.

சோவியத் யூனியன் அதிபராக இருந்து அது பிரிவதற்கு காரணமாக

இருந்த அதிபர் மிக்கேல் கோர்பசேவ், அணு விஞ்ஞானிகளின்

பத்திரிகையின் மார்ச்/ஏப்ரல் 2011 இதழில் எழுதியதைப் பாருங்கள்:

“மின்சாரத் தேவைக்கோ, சூழல் பாதிப்பைத் தடுப்பதற்கோ சிலர்

சொல்வது போல அணுமின்சாரம் ஒன்றும அருமருந்தல்ல. அது

மலிவு என்பது மிகைப்படுத்தப்பட்ட பேச்சு. அதன் விலையில் பல

செலவுகள் காட்டப்படாமல் மறைக்கப்பட்டிருக்கின்றன. மான்யம்

அள்ளித் தரப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் 1947 முதல் 1999

வரை நேரடியாக் கொடுத்த மான்யம் 115 பில்லியன் டாலர்கள் (சுமார்

ஐந்து லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய்கள்). மறைமுக மான்யங்கள் ஏழு லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய்கள். இதே காலகட்டத்தில் காற்று சூரியசக்திக்கெல்லாமாக சேர்த்து கொடுத்த மொத்த மான்யம் வெறும் 5.5.பில்லியன் டாலர் (வெறும் 27 ஆயிரத்து 500 கோடி ரூபாய்கள்)”. செர்னோபில் விபத்துதான் சோவியத் யூனியன் அரசு இனி பகிரங்கமாக எல்லா உண்மைகளையும் மக்களிடம் சொல்லியே ஆகவேண்டும் என்ற கருத்து-தகவல் சுதந்திரத்தைக் கொண்டு வந்தது; செர்னோபில்தான் என் கண்களைத் திறந்தது என்கிறார் கோர்பசேவ் கலாமுக்கும் மன்மோகனுக்கும் கண் திறக்க இங்கே ஒரு செர்னோபில் கூடப் போதாது.

இந்தியாவில் மின்சார தயாரிப்புக்கான மாற்று வழிகளின் நிலைமை என்ன ? அதற்குப் போதுமான பணம் ஒதுக்கப்படுகிறதா?

மிக முக்கியமான உண்மை – ஏற்கனவே அணு மின்சாரத்தை விட

அதிகமான மின்சாரம் நமக்கு மாற்று வழிகளான் காற்று, சூரியசக்தி

ஆகியவற்றிலிருந்துதான் கிடைக்கிறது. அணுமின்சாரம் வெறும்

2.5 சதவிகிதம். காற்றும் சூரியசக்தியும் ஏற்கனவே 7 சதவிகிதத்தை

எட்டிவிட்டன. ஆனால் அணு மின்சாரத்தோடு ஒப்பிடும்போது

அவற்றுக்கு அரசு ஒதுக்கும் தொகைகள் மிக மிகக் குறைவு.

இந்த வருடம்தான் இந்திய அரசு மிக அதிக தொகை

ஒதுக்கியிருக்கிறது. 1000 கோடி ரூபாய் ! கூடங்குளத்தில்

கொட்டியிருப்பது மட்டுமே 13 ஆயிரம் கோடி ரூபாய் !!

காற்றாலைகளிலிருந்து மட்டும் மொத்தம் ஒரு லட்சம் மெகாவாட்

மின்சாரம் தயாரிக்கும் வாய்ப்பு இந்தியாவில் உள்ளது. புனல் மின்சாரம் எனப்படும் நீர் சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதற்கான அரசின் தேசிய புனல்மின் கழகம் இந்தியாவில் மொத்தமாக ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 700 மெகாவாட் தயாரிக்கமுடியும் என்றும் இப்போது அதில் வெறும் 19 சதவிகிதம் மட்டுமே தயாரிக்கிறோம் என்றும் தெரிவித்திருக்கிறது.

சூரியசக்தி பல மடங்கு பிரும்மாண்டமானது. மொத்தம் நான்கு

லட்சம் மெகாவாட் தயாரிக்க முடியும்.இந்தியாவின் மொத்தத்

தேவையை விட இது பல மடங்கு அதிகம். வருடத்தில் நான்கே

மாதம் மட்டும் வெயில் அடிக்கக்கூடிய ஜெர்மனி, நார்வே போன்ற

நாடுகளில் ஏற்கனவே மொத்த மின்சாரத்தில் 20 சதவிகிதத்தை

சூரியசக்தியிலிருந்து தயாரிக்கிறார்கள். இந்தியாவில் வருடத்தில்

300 நாட்களுக்கு மொத்தம் 2500 மணி நேரம் தெளிவான வெயில்

இருக்கிறது. சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் போட்டோ

வொல்டேய்க் செல் பேனல்கள் தங்கள் மொத்த திறனில் வெறும்

பத்து சதவிகிதம் மட்டுமே இயங்கினால் கூட, கிடைக்கும் மின்சாரம்

2015ல் இந்தியாவில் வீட்டுத் தேவைக்கான மின்சாரத்தை விட ஆயிரம் மடங்கு அதிகம் !

சூரியசக்தி மின்சாரம் தயாரிக்கச் செலவு அதிகம் என்று

அணு விஞ்ஞானிகளும் அவர்களின் ஆதரவாளர்களும்

பிரசாரம் செய்கிறார்களே ?

எதை விட இது செலவு அதிகம் ? அணுமின்சாரத்தின் அசல்

விலையை அவர்கள் மூடி மறைத்துவிட்டு மற்றவற்றை விலை

அதிகம் என்று பொய் பிரசாரம்தான் செய்கிறார்கள். ஜெய்தாபூரில்

பிரெஞ்ச் கம்பெனியிடமிருந்து அணு உலை வாங்கி நிறுவுவதற்கு

அவர்கள் போட்டிருக்கும் மதிப்பீடு ஒரு மெகாவாட்டுக்கு 21 கோடி

ரூபாய். ஆனால் ஏழு இடங்களில் சூரிய சக்தி மின் நிலையங்கள்

அமைக்க தனியாருக்கு இந்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறது.

அங்கே நிறுவும் செலவு ஒரு மெகாவாட்டுக்கு 12 கோடி ரூபாய்தான்.

நிறுவியபின்னர் பராமரிப்பு செலவும் அணு உலையை விடக் குறைவு. ஆபத்து துளியும் இல்லை. அணு உலையை லட்சக்கணக்கான வருடத்துக்குப் பாதுகாத்தே திவாலாகிவிடுவோம்.

இப்போது சூரியசக்தியில் மின்சாரம் தயாரிக்கத் தேவைப்படும்

பொருட்களின் விலை படு வேகமாக சரிந்து வருகிறது. சோலார்

போட்டோவோல்டேய்க் செல் தயாரிக்கத் தேவைப்படும் பாலி-சிலிக்கான் விலை கடந்த மூன்று வருடங்களில் 93 சதவிகிதம் குறைந்துவிட்டது. அதனால் இந்த மின்சாரம் தயாரிக்க முன்வரும் தனியார் கம்பெனிகள் அரசுக்கு மின்சாரத்தை முன்பை விடக் குறைந்த விலையில் தர முன்வந்துவிட்டன. டிசம்பர் 2011ல் நடந்த ஏலத்தில் இந்திய அரசு ஒரு மெகாவாட்/மணி அளவு மின்சாரத்தை 15,390 ரூபாய்க்கு வாங்கத் தயார் என்று அறிவித்திருந்தது. ஆனால் பிரான்சின் இரண்டாவது பெரிய சூரிய மின்சக்தி உற்பத்தி நிறுவனமான சோலேர் டைரக்ட் 7490 ரூபாய்க்கே விற்பதாக ஏலம் எடுத்திருக்கிறது. இது ஒரு வருடம் முன்பு இருந்த விலையை விட 34 சதவிகிதம் குறைவு. எனவே 2015க்குள் சூரிய மின்சாரத்தின் விலையும் இப்போது நிலக்கரியால் தயாரிக்கும் அனல் மின்சாரத்தின் விலையும் சமமாகிவிடும் என்று கருதுகிறார்கள்.

காற்று சூரியசக்தி மின்சாரத்தையெல்லாம் தேசிய கிரிட்டில் இணைப்பது கடினம் என்றும் அவற்றைக் கொண்டு 500, 1000, 2000 மெகாவாட் நிலையங்களை நடத்த முடியாது என்றும் சொல்கிறார்களே ?

முதலில் ஏன் எல்லா மின்நிலையங்களையும் ஆயிரக்கணக்கான

மெகாவாட் உற்பத்தி நிலையமாக வைக்கவேண்டும் என்பதையே

நாம் கேள்வி கேட்கவேண்டும். போக்குவரத்துக்குப் பயன்படும்

வாகங்களை எடுத்துக் கொள்ளுவோம். சைக்கிள், டூ வீலர், கார்,

ஆட்டோ, பஸ், ரயில், விமானம், கப்பல் என்று வகைவகையாக

இருக்கின்றன. அடுத்த தெருவுக்குச் செல்வதற்கு விமான சர்வீஸ்

நடத்தச் சொல்வோமா ?

இதே போல மின் உபயோகமும் பலதரப்பட்டது. வீட்டு உபயோகம்,

விவசாய உபயோகம், தொழிற்சாலை உபயோகம், பொது உபயோகம், கிராமத் தேவை, நகரத் தேவை என்று மாறுபட்டவை. எல்லாவற்றையும் கிரிட் மூலம்தான் செய்யவேண்டும் என்ற அணுகுமுறையே தவறானது. இதனால்தான் மின்சாரத்தை அனுப்புவதில் டிரான்ஸ்மிஷன் லாஸ் என்பதே பெருமளவு ஏற்படுகிறது.

இப்போதுள்ள அனல், புனல் மின் நிலையங்களைக் கொண்டு

தொழிற்சாலை தேவைகளை பூர்த்தி செய்யலாம். வீட்டுத்

தேவைகள், விவசாயத் தேவைகளில் பெரும்பகுதி எல்லாம் சிறு மின் நிலையங்களாலேயே பூர்த்தி செய்யக்கூடியவை. கிரிட் மின்சாரம் இல்லாதபோது மின்வெட்டை சமாளிக்க ஒவ்வொரு வீட்டிலும் இன்வர்ட்டர் வைத்துக் கொள்வதை விட சூரியசக்தியில் மின்சாரம் தயாரிக்கும் கருவிகளைப் பொருத்திக் கொள்ளலாம்.

மின்சார விநியோக கண்ட்ரோல் அதிகாரத்தை ஒரே இடத்தில்

குவித்துவைத்துக் கொள்ளத்தான் கிரிட் முறை பயன்படுகிறது.

சென்னையில் ஒரு மணி நேரம்தான் பவர்கட். அத்திப்பட்டில்

ஆறு மணி நேரம் பவர்கட் என்பது கிரிட் அதிகாரத்தால் நடப்பது.

அத்திப்பட்டில் சூரியசக்தி, காற்றாலை மின்சாரம் இருந்தால் அங்கே

ஒரு மணி நேரம் கூட பவர் கட் இருக்காது.

சூரிய சக்தி, காற்று மட்டுமல்ல, கிராமங்களில் வீணாகக் கிடக்கும்

முள்மரங்களை, தேங்காய் சிரட்டைகளை ஆவியாக்கிக் கூட மின்சாரம் தயாரிக்கலாம். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயன்ஸ் உருவாக்கிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் ஏற்கனவே பல்லடம் அருகே சுல்தான்பேட்டையில் ஒரு தனியார் நிறுவனம் ஓர் ஒற்றை மெகாவாட் மின் நிலையத்தை ஆறாண்டுகளாக நடத்தி வருகிறது. இந்த மின்சாரத்தை தன் கிரிட்டுக்கு தமிழக மின் வாரியம் வாங்கிக் கொள்கிறது.

ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனிலும் இது போன்ற சிறு மின்

நிலையங்களை நிறுவி கிரிட்டுக்கே மின்சாரத்தை அனுப்பாமல்,

அந்த யூனியனின் இருக்கும் கிராமங்களுக்கு மட்டும் அனுப்பி

லோகல் மின்தேவையை அதிலேயே சந்தித்துவிடலாம். மின்வெட்டே

இல்லாமல் விவசாயம் சீராக நடக்கும். ஆந்திர மாநிலம் முழுக்க

இவ்வாறு சிறு மின் நிலையங்கள் நிறுவும் திட்டத்தை தீவிரமாக

பரிசீலித்து வருகிறது.

சூரியசக்தி மின்சாரத்தை பல விதமாக தயாரிக்கலாம்.

போட்டொவோல்டேய்க் செல் பேனல் முறை ஒன்று. இன்னொன்று

குவிசக்தி முறை. கண்ணாடிகள், லென்சுகளைப் பயன்படுத்தி

தீவிரமான ஒளிக்கற்றை மூலம் உருக்கிய உப்பை சூடாக்கி அந்த

வெப்பத்திலிருந்து தயாரிப்பதாகும். இந்தியாவில் எல்லா முறைகளையும் பயன்படுத்த வசதி இருக்கிறது. ராஜஸ்தான் தார் பாலைவனத்தில் 50 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பு இருக்கிறது. அங்கே மட்டும் பிரும்மாண்டமான சூரியசக்தி மின் நிலையங்களை ஏற்படுத்தினால் 15 ஆயிரம் மெகாவாட் வரை தயாரித்து கிரிட்டுக்கே அனுப்பலாம்.

வெளிநாடுகளில் சூரியசக்தி மின்சாரம் நிலை எப்படி ?

இந்தியாவைப் போல வருடம் முழுவது வெயில் இல்லாத நாடுகள்

கூட முன்பே இதில் இறங்கிவிட்டன. ஸ்பெயினில் இப்போதே 12 சதவிகித மின்சாரம் சூரிய மின்சாரம்தான். இஸ்ரேலில் 90 சதவிகித வீடுகளில் சூரிய சக்தி ஹீட்டர் வந்துவிட்டது. சீனா போட்டோவொல்டெய்க் செல் தயாரிப்பில் உலகத்தில் முதலிடத்தில் இருக்கிறது. உலக அளவில் 3800 மெகாவாட்டுக்கான் சோலார் பேனல்களில் சரி பாதியை தயாரித்து ஏற்றுமதி செய்திருப்பது சீனாதான். சில மாதங்களே வெயில் அடிக்கும் ஜெர்மனியில் மொத்த மின்சாரத்தில் 25 சதவிகிதத்தை சூரியசக்தியில் தயாரிப்பதை 2050க்குள் சாதிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இப்போது உலகம் முழுவதும் உற்பத்தியாகும் சூரியசக்தி

மின்சாரத்தில் சரிபாதி அமெரிக்காவில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. கலிபோர்னியா மாநிலத்தில் மட்டும் 2020க்குள் அதன் மொத்த மின் தேவையில் 33 சதவிகிதம் சூரியசக்தியிலிருந்து பெறுவது என்ற இலக்குடன் திட்டங்கள் நடக்கின்றன. கிரிட்டுக்கே மின்சாரம் அனுப்பும் திட்டங்களையும் அமெரிக்கா மேற்கொண்டிருக்கிறது. மூன்றாண்டுகளுக்கு முன்பாகவே சுமார் 500 மெகாவாட் சூரிய மின்சாரத்தை கிரிட்டுடன் இணைத்துவிட்டது.

இன்னொரு பக்கம் தனியார் வீடுகளிலும் அவரவர்

அலுவலகங்களிலும் சுயதேவைக்காக போட்டொ வோல்டெய்க் செல்

பேனல் அமைத்து மின்சாரம் தயாரித்துக் கொள்வதை ஊக்குவிக்கிறது. தங்கள் தேவைக்குப் போக உபரி சூரிய மின்சாரத்தை கம்பெனிக்கு விற்கும் வீடுகள் பெருகிவருகின்றன. மின் கட்டணமாக 2400 டாலர் வரை செலுத்திய ஒரு வீட்டில் 25 ஆயிரம் டாலர் செலவில் சூரிய மின்சார தயாரிப்பு பேனல் பொருத்தியதும் அந்த முழு மின்கட்டணம் மிச்சமாகிவிடுகிறது.

அமெரிக்காவில் கடந்த 30 வருடங்களாக ஒரு புதிய அணு உலை

கூடத் தொடங்கவில்லை என்பதை இத்துடன் சேர்த்து கவனிக்க

வேண்டும்.

ஆனால் இன்னமும் உலகம் முழுவதும் புது அணு உலைகள் தொடங்கப்படுவதாக அணு உலை ஆதரவாளர்கள் சொல்கிறார்களே?

அதுவும் பொய்தான். ஒவ்வொரு தகவலாகப் பார்க்கலாம். 1.

நான்கு வருடங்களாக் உலக அளவில் அணு மின்சாரத் தயாரிப்பு

அளவு தேக்கமடைந்தது மட்டுமல்ல, குறைந்தும் வருகிறது. 2006ல்

15.2 சதவிகிதமாக இருந்தது 2010ல் 13.5 ஆகிவிட்டது. 2. அதே

போல உலக அளவில் இருக்கும் அணுமின்சாரத் தயாரிப்புக்கான

நிறுவப்பட்ட திறன் அளவும் குறைந்துவிட்டது. 2006ல் இது 8.7 சதவிகிதம். 2010ல் 7.4தான். 3.வருகிற 2030க்குள் மொத்தம் 143 உலைகள் வயதாகிவிட்டதால் மூடியாக வேண்டிய நிலையில் நிரந்தர சமாதி வைக்கப்படவேண்டியவை. எனவே 2030ல் உலக நிலையைப் பார்த்தால் இப்போதுள்ளதை விட 30 சதவிகிதம் அணு உலைகள் குறைவாகவே இருக்கும். ஜெர்மனி 2020க்குள் தன் அணு உலைகள் அனிஅத்தையும் மூடப் போகிறது. ஆஸ்திரியா, ஸ்பெயின், ஸ்வீடன், நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளும் தங்கள் அணு உலைகளைக் குறைக்கப்போவதாக அறிவித்திருக்கின்றன. 4. இப்போது மொத்தமாக 64 உலைகள் கட்டப்பட்டு வருவதாக உலக அணுசக்தி முகமை தெரிவித்தது. இதில் 12 உலைகள் 20 வருடங்களாகக் கட்டப்பட்டு வருபவை. மொத்தம் 64ல் 43 உலைகள் சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய மூன்றே நாடுகளில் கட்டப்படுபவை. மேலை நாடுகளில் இல்லை என்பதை கவனிக்க வேண்டும்.

ஆனால் நமக்கு அணு உலை விற்பதில் அவர்கள்

ஆர்வமாக இருக்கிறார்களே ?

ஆபத்தான தொழில்நுட்பத்துக்கு தங்கள் நாடுகளில் எதிர்ப்பு

பலமாக இருக்கும்போது அதை நம் போன்ற முட்டாள் நாடுகளின்

தலையில் கட்டுவதுதான் அவற்றின் வாடிக்கை.

அமெரிக்காவில் 1982ல் பத்து லட்சம் பேர் அணு உலைகளுக்கு

எதிராகப் பேரணி நடத்தியபிறகு அமெரிக்காவில் புது உலையே

கட்டவில்லை. சுமார் 80 இயக்கங்கள் அங்கே உள்ளன. அமெரிக்க

துணை ஜனதிபதியாக இருந்த அல் கோரே, நுகர்வோர் உரிமைப்

போராளி ரால்ப் நாடர் போன்றோரும் நூற்றுக்கணக்கான விஞ்

ஞானிகளும் அங்கே அணு உலைக்கு எதிராக பகிரங்கமாக குரல்

கொடுத்து வந்துள்ளனர்.

தோல் பதனிடுதல், துணிகளுக்கு சாயம் ஏற்றுதல் இரண்டும்

சுற்றுச் சூழலைக் கடுமையாக பாதிக்கின்றன என்று மேலை

நாடுகளில் எதிர்ப்பு வந்ததும், அந்த வேலையை நம் தலையில் அவை கட்டிவிட்டன. டாலருக்கும் யூரோவுக்கும் ஆசைப்பட்டுகொண்டு நம் தொழிலதிபர்கள் நம் ஆறுகளையும் விளைநிலங்களையும் தொடர்ந்து நாசமாக்கிவருகிறார்கள். நம் ஊரை நாசப்படுத்தி பொருட்களை தயாரித்து அவர்கள் உபயோகத்துக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறோம். நொய்யல் ஆற்றை மாசுபடுத்தி அழித்த சாயப்பட்டறைகளுக்கோ பாலாறை நாசமாக்கிய தோல் பதனிடும் கூடங்களுக்கோ யாருக்கும்  எந்த கோர்ட்டிலும் தண்டனை எதுவும் தரப்பட்டதில்லை. அவர்களிட்ம அபராதாம் வசூலித்ததில்லை. விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு கொடுத்ததில்லை. மாறாக அரசாங்கப் பணத்தைக் கோடிக்கணக்கில் சாயப்பட்டறை முதலாளிகளுக்கு போலி சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதகாக மான்யமாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

போபால் விஷ வாயு விபத்தில் தவறு செய்த அமெரிக்கக் கம்பெனி

முதலாளியை விமானத்தில் தப்பிச்செல்லவிட்டுவிட்டு அவரை கோர்ட்டில் ஒப்படைக்கும்படி கோரிக்கை கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

அடுத்தபடி அங்கேயுள்ள அணு உலை தயாரிப்பாளர்களுக்கு

அடுத்த மார்க்கெட்டாக இந்தியா போன்ற ஏமாளி நாடுகள்

அடையாளம் காணப்பட்டுள்ளன. அதற்கான சிறந்த வர்த்தக தரகராக

மன்மோகன்சிங் அவர்களுக்கு அமைந்திருக்கிறார்.

உலகத்திலேயே தன்வசம் அதிக அளவு யூரேனியத்தை (25 சதவிகிதம்) வைத்திருக்கும் ஆஸ்திரேலியாவிடம் யூரேனியம் கேட்டு இந்தியா மன்றாடுகிறது. அந்த ஆஸ்திரேலியாவில் ஒரு அணு உலை கூட கட்டப்படவில்லையே, ஏன் என்று யோசிக்க வேண்டாமா? பிரும்மாண்டமான பாலைவனம், ஆளற்ற பகுதிகள் இருந்தும் அணு உலை கட்டவே இல்லையே, ஏன் ? அது ஆபத்தானது என்பதால் அங்கே மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

ஆனால் கூடங்குள அணு உலை எதிர்ப்புக்குப் பின்னால்

அந்நிய சக்திகள் இருப்பதாக மன்மோகனும் கலாமும் பூச்சாண்டி

காட்டுகிறார்கள். உலகப் பொருளாதார ஏகாதிபத்ய சக்திகள் இந்தியா

முன்னேறவிடாமல் தடுக்க இப்படி செய்வதாகக் கலாம் சொல்கிறார்.

யார் அந்த சக்தி ? அமெரிக்காதானே ? அது மன்மோகன் அரசுடன்

போட்ட 123 ஒப்ப்ந்தத்தின் நோக்கம் இந்தியாவை முன்னேற்றுவதா?

அமெரிக்கா உள்ளிட்ட வெளி நாடுகளிடம் அணு உலைகளை வாங்க

இந்தியாவை சம்மதிக்கவைத்த திட்டம்தானே அது ? அதில் எப்படி

இந்தியா முன்னேறும் ?

விபத்து ஏற்பட்டால் நஷ்ட ஈட்டை அணு உலை விற்ற கம்பெனி

முழுக்க தரமுடியாது. இந்திய அரசே ஏற்கவேண்டும் என்று சொல்லும் ஒப்பந்தம்தானே அது ? அதை கலாம் எதிர்க்கவில்லை ? அந்த ஒப்பந்தம் போடத் தடையாக இருந்த இந்திய இடதுசாரிகள் மன்மோகன் சிங் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தபோது, அதை முறியடிக்க முலாயம் சிங் யாதவின் உதவியை கலாம்தான் பெற்றுத் தந்தார். உண்மையில் அந்நிய நாடுகளுக்கும் வெளிநாட்டு சக்திகளுக்காகவும் இங்கே வேலை பார்ப்பது மன்மோகன்சிங்கும், அவரது ஆட்சியும் அணு உலை ஆதரவாளர்களும்தான். இதை எதிர்ப்பவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து தூண்டுதல், பண உதவி என்று இந்த போலி தேசபக்தர்கள்தான் பழி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

எல்லாம் நியாயமாகத்தான் இருக்கிறது. மீண்டும்

தொடக்கத்துக்கே வருவோம். கூடங்குளம் அணு உலை

திட்டத்தை இப்போது எதிர்க்கிற தீவிரத்துடன் 1987லேயே

எதிர்த்திருந்தால் கட்டாமலே நிறுத்தியிருக்கலாமே?

அப்போது மட்டுமல்ல, ஐம்பது வருடங்களாக இந்தியாவின்

பல்வேறு பகுதிகளில் அனு உலைகளுக்கு எதிராக பல விஞ்ஞானிகளும் அறிஞர்களும், சாதாரண மக்களின் இயக்கங்களும் குரலெழுப்பிக் கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் அவற்றை அரசும் மீடியாவும் பொருட்படுத்தவில்லை.

கேரள மாநிலத்தின் எதிர்ப்பு மட்டும்தான் இதுவரை வெற்றி

பெற்றிருக்கிறது. அமைதிப் பள்ளத்தாக்கைக் காப்பாற்றுவதிலும்

இப்போது கூடங்குளத்தின் தலையில் கட்டப்பட்ட அணு உலையை

தங்கள் மாநிலத்துக்கு வர விடாமல் தடுத்ததிலும் அவர்கள் மட்டுமே

ஜெயித்தார்கள். அடுத்து மேற்கு வங்கத்தில் மம்தா அரசு சற்று

உறுதியாக எதிர்க்கிறது.

இங்கே 1987ல் போராடிய பலரை மிரட்டி, வழக்கு போட்டு ஊரை

விட்டே ஓடச் செய்து அரசு அந்த போராட்டத்தை முறியடித்தது.

காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை அரசு பல இடங்களில் பின்பற்றும்

அதே முறைதான். இப்போதும் அப்படிப்பட்ட நடவடிக்கைகளை

எடுக்க ஆயத்தம் செய்துகொண்டுதான் இருக்கிறது. ஜெயலலிதா

அரசு இன்னமும் முழுமையாக ஒத்துழைக்காததால் தள்ளிப்

போகிறது. படித்தவர்கள், அறிவுஜீவிகள்,பாமர மக்களுடன் இணைந்து குரலெழுப்பி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசை கேரள அரசு போல உறுதியாக இருக்கும்படி வற்புறுத்த வேண்டும்.

ஒரு சிலர் பெரும் தொகையான 13 ஆயிரம் கோடி ரூபாய்

இதில் இப்போது முடங்கியிருப்பதால் இந்த உலைகளை

மட்டும் அனுமதித்துவிடலாமா என்று கேட்கிறார்களே ?

மன்மோகன்சிங் கூட ரஷ்யாவில் நிருபர்களிட்ம பேசும்போது, சுமார்

13 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டு அமைத்த உலையை அப்படி

எளிதில் மூடிவிட்டுப் போய்விடமுடியாது என்று பேசியிருக்கிறார்.

அதாவது அவருக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய்தான் முக்கியம்.

மக்களின் நலனோ, அச்சமோ அதை விட சின்ன விஷயம்தான்.

இடிந்தகரை கிராமத்திலிருந்து வந்த சாதாரணப் பெண்ணிடம்

சென்னை நிருபர் சந்திப்பில் ஒரு நிருபர் கேட்டார். இத்தனை கோடி

ரூபாய் செலவு செய்து கட்டிய பிறகு மூடச் சொல்வது நியாயமா?

பணம் வீணாகிறதே ? அந்தப் பெண் சொன்ன பதில்: உங்க மகளுக்கு

திருமணம் நிச்சயம் செய்து எல்லா செலவும் பண்ணி விடிந்தால்

கல்யாணம் நடத்தபோறீங்க. பையனுக்கு எய்ட்ஸ் இருக்குன்னு

முந்தின ராத்திரி தெரிய வந்தா, அடுத்த நாள் காலையில கல்யாணம்

செய்வீங்களா? இத்தனை செலவு பண்ணிட்டோம், கல்யாணம்

நடக்கட்டும்னு விடுவீங்களா?

பாமரப் பெண்ணுக்கு புரிகிற விஷயம் மெத்தப் படித்த மேதாவி

மன்மோகனுக்குப் புரிவதில்லை. அவருக்குப் புரிவதெல்லாம்

அவருடைய லட்சிய பூமியான அமெரிக்காவில் சொல்வதும்

செய்வதும்தான் என்பதால், அவருக்காக அமெரிக்க அணு உலைகள்

வரலாற்றிலிருந்து ஒரு தகவலைப் பார்ப்போம்.

1979ல் த்ரீ மைல் ஐலண்ட் அணு உலையில் விபத்து ஏற்படுவதற்கு

முன்பு 1973ல் நியூயார்க் பகுதியில் இருக்கும் லாங் ஐலண்ட் என்ற

இடத்தில் கட்ட ஆரம்பித்த ஷோர்ஹேம் ப்ளாண்ட்டை 1984ல் கட்டி

முடித்தார்கள்.இது. 1983ல் அமெரிக்க மத்திய அரசு இந்த உலையில்

விபத்து ஏற்பட்டால் எப்படி மக்களை வெளியேற்றவேண்டும்

என்பதற்கான அவசர கால திட்டத்தை உருவாக்கி வெளியிட்டது.

இதற்கு உள்ளூர் பஞ்சாயத்தான சஃபோக் பகுதி கவுண்ட்டியின் ஒப்புதல் வேண்டும். ஆனால் அதை ஏற்கமுடியாது என்று உலை இருக்கும் பகுதியான சஃபோக் கவுண்ட்டி (பஞ்சாயத்து) தெரிவித்தது.

ஆறு பில்லியன் டாலர் (சுமார் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணு

உலை வேண்டாம் என்று அங்கே மக்கள் வாக்களித்தார்கள். அதை

அரசு ஏற்றுக் கொண்டது. உலை சொந்தக்காரரான லில்கோ

கம்பெனிக்கு அந்தப் பணத்தை அரசு செலுத்தியது. உலை மூடும்

செலவான இன்னொரு 186 மில்லியன் டாலரையும் அரசு ஏற்றது.

இத்தனையும் கட்டி முடித்து இயங்கவே ஆரம்பிக்காத அணு

உலைக்கு! இப்படி உலையை மூடும் செலவுக்காக பொது மக்கள்

அடுத்த 30 வருடத்துக்கு மின் கட்டணத்தில் மூன்று சதவிகிதம்

சர்சார்ஜ் செலுத்தும்படி அரசு கோரியதை சஃபோக் கவுண்ட்டி ஏற்றுக்

கொண்டது. அங்கே யாரும் ‘அய்யோ மின்சாரம் தேவை’ என்று

கூப்பாடு போடவில்லை. இத்தனைக்கும் வருடந்தோறும் அப்போது

அங்கே மின் தேவை 1 சதவிகிதம் அதிகரித்துக் கொண்டிருந்தது.

மூடப்பட்ட அணு உலை சிறு மாற்றங்களுடன் 2002ல் இயற்கை

எரிவாயுவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலையாக மாற்றப்பட்டது. ஷோர்ஹேம் உலை மூடப்பட்டபிறகு அமெரிக்காவில் புதிய அணு உலை எதுவும் ஆரம்பிக்கப்படவே இல்லை.

அமெரிக்க தாசரான மன்மோகன் இந்த வரலாற்று நிகழ்விலிருந்து

சில பாடங்களைக் கற்க வேண்டும். பல கோடி ரூபாய் செலவழித்து

விட்டதற்காக ஆபத்தான உலையை ஆரம்பித்துவிடக் கூடாது.

உண்மையான ஜனநாயகம் என்பது மத்திய அரசு தன் விருப்பத்தை

பஞ்சாயத்துகளின் மீது திணிப்பது அல்ல. உலை இருக்கும் பகுதியின்

பஞ்சாயத்து எடுக்கும் முடிவுக்குதான் மத்திய அரசு கட்டுப்பட

வேண்டும். மத்திய அரசின் முடிவுக்குத் தலையாட்டுவது பஞ்சாயத்தில் வேலையல்ல.

கூடங்குளம் பகுதியில் சென்ற வருடம் ஆகஸ்ட் மாதமே எல்லா பஞ்

சாயத்துகளும் கூடி அணு உலை இங்கே வேண்டாம் என்று தீர்மானம்

நிறைவேற்றியிருக்கின்றன. கட்டிய உலையை வேறு எரிபொருள்

கொண்டு இயக்கமுடியுமா என்று ஆராய்வதுதான் விஞ்ஞானிகளின்

வேலை. அது முடியும். ஷோர்ஹேம் போல கூடங்குளத்தையும்

இயற்கை எரிவாயு அல்லது அனல் மின் நிலையமாக மாற்றமுடியும்.

அப்படிச் செய்துவிட்டால் பிரச்சினை முடிந்துவிடுமா?

இல்லை. அது ஒரு கட்டம். அடுத்த கட்டமாக இந்தியாவில்

இனி புது அணு உலைகள் தொடங்குவதில்லை என்ற முடிவை

எடுக்கவேண்டும். ஏற்கனவே இயங்கிவரும் உலைகளை ஒவ்வொன்றாக மூட வேண்டும். குறிப்பாக தமிழத்தில் தலைநகர் சென்னைக்கு அருகில் கடந்த இருபதாண்டுகளாக இயங்கும் கல்பாக்கம் உலைகள் பற்றி முழுமையான சுதந்திரமான ஆய்வு செய்யப்படவேண்டும். கல்பாக்கம் அணு உலைகளில் என்னென்ன விபத்துகள் நிகழ்ந்தன, ஏன் நிகழ்ந்தன என்பதையும், கல்பாக்கத்தை சுற்றிலும் இருக்கும் பகுதிகளில் கதிர் வீச்சு பாதிப்பு பற்றிய மருத்துவ ஆய்வையும் அணு சக்தித் துறைக்கு தொடர்பில்லாத விஞ்ஞானிகளைக் கொண்டு அடுத்த மூன்று மாதங்களில் விசாரணை நடத்தி அறிக்கை தரச் சொல்லவேண்டும்

இந்தியாவில் ஏற்கனவே இயங்கிவரும் அணு உலைகளின் நிலை

என்ன? ஒவ்வொரு அணு உலை, யுரேனிய சுரங்கம், சுத்திகரிப்பு

வளாகங்கள் ஆகியவை இருக்கும் இடங்களில் அந்த சுற்று வட்டார

மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்ன ? மீனவர் வாழ்க்கையும்

மீன்வளமும் அந்தப் பகுதியில் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளன?

பணி புரிவோரில் கதிரியக்கத்துக்கு உட்படுத்தப்படுவோர் யார் யார்?

அதில் தினக்கூலிகள் எத்தனை பேர்? இதுவரை நடந்த விபத்துகள்

என்ன? அவற்றின் விளைவுகள் என்ன? இதைப் பற்றியெல்லாம்

அரசுக்கு தொடர்பில்லாத சுயேச்சையான மருத்துவர்கள், அறிஞர்கள், நீதிபதிகள், சூழல் ஆர்வலர்கள் கொண்ட குழுவை ஏற்படுத்தி விசாரிக்கவேண்டும். கல்பாக்கம் உடபட அனைத்து அணுசக்தி நிலையங்களிலும் பணியாற்றுவோர், பணியாற்றினோர் ரகசியமாக குழுவின் முன்பு தகவல் தெரிவிக்க அனுமதிக்க வேண்டும்.

ஊழலும் லஞ்சமும் ஒழுக்கக் கேடும் மலிந்து கிடக்கும் இந்தியச்

சூழலில், எந்த அமைச்சருக்கு எந்த இலாகா, எந்த இலாகாவுக்கு

யார் அமைச்சர் என்பதை தொழிலதிபர்களின் தரகர்கள் தீர்மானிக்கும்

கேடு கெட்ட அரசியலில், மனித குலத்தாலேயே இதுவரை தீர்வு

காணப்படாத ஆபத்தான அணு தொழில் நுட்பத்தை அமலாக்குவது

மிக மிக ஆபத்தானது. இரண்டு சதவிகித மின்சாரத் தயாரிப்பில்

இருக்கும் போதே முடிவெடுப்பது அவசியம். அணு உலைக்கு

இறைக்கும் கோடிக் கணக்கான பணத்தை மாற்று முயற்சிகளுக்கு

ஒதுக்க வேண்டும்.

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை விட, இந்திய அணு

உலைகளை ஆய்வுக்குட்படுத்த சுயேச்சையான ஒரு லோக்பாலை

உருவாக்குவதுதான் என்னைப் பொறுத்த வரையில் இன்னும்

அவசரமான பிரச்சினை. ஏனென்றால் உயிரோடு இருந்தால்தான்

லஞ்சம் கொடுப்பது வாங்குவது அதை விசாரிப்பது பற்றியெல்லாம்

பேசமுடியும்.

வீட்டுக்கு வீடு இலவச டி.வி.பெட்டி, கிரைண்டர், மிக்சி, பிரிட்ஜ்,

வாஷிங் மெஷின், குறைந்த வட்டிக் கடனில் ஏ.சி, கார், மெட்ரோ

ரயில், கேட்டட் கம்யூனிட்டியில் ஒரு சொகுசான வீடு கிடைத்தால்

போதும் என்று ஏங்கிக் கிடக்கும் முட்டாள்களாகிய நாம், சொல்லாமல் கொள்ளாமல் வரவிருக்கும் இலவசமான கதிர் வீச்சு பற்றி இப்போதே விழித்துக் கொள்ளாவிட்டால் பேரழிவுக்கு வழி வகுப்பது உறுதி.

இல்லாவிட்டால் பேரழிவு வரும்போது உங்களால் கரப்பான் பூச்சியாக மாறிவிடமுடியுமா என்று யோசிக்கவேண்டும்.

கரப்பான் பூச்சியாக மாறுவதா? ஏன்? எதற்கு?

சென்னையில் அணு எதிர்ப்பு இயக்கத்தை 1986ல் நடத்திய

நானும் நண்பர்களும் அப்போது உங்களால் கரப்பான் பூச்சி ஆகமுடியுமா என்ற தலைப்பில் ஒரு பிரசாரப்படம் எடுத்தோம். காரணம் கரப்பான் பூச்சிதான் கதிரியக்கத்தில் அழியாதது என்று அப்போது நாங்கள் அறிந்து வைத்திருந்தோம். காஃப்காவின் உலகப் புகழ் பெற்ற மெடமார்ஃபசிஸ் கதையின் கதாநாயகன் பூச்சியாக மாறிவிடுகிறான். அது போல் நாம் எல்லாரும் கரப்பான் பூச்சிகளாக மாறமுடிந்தாலொழிய அணுக் கதிர் வீச்சிலிருந்து தப்பமுடியாது என்று அப்போது சொன்னோம்.

உண்மையில் கரப்பான் பூச்சிக்கு மனிதனை விட கதிரியக்கத்தை

தாங்கும் சக்தி பதினைந்து மடங்கு அதிகமாக இருக்கிறது. அதை

விட அதிக தாங்கும் சக்தி உள்ளது ப்ரூட் ஃப்ளை எனப்படும் ஈ !

கரப்பான் பூச்சி, ஈக்களை விட கதிரியக்கத்தை தாங்கும் சக்தி

உள்ளது ஏதாவது உண்டா?

ஒரு பாக்டீரியா இருக்கிறது அதன் பெயர் டைனோகாக்கஸ்

ரேடியோடியூரான் ! இது கதிரியக்கம் அதிகமாக இருக்கும் இடத்தில்

கூட தழைக்கக்கூடியது. கதிர்வீச்சைத் தாங்கும் சக்திக்காக இது

கின்னஸ் ரிகார்டில் இடம் பெற்றிருக்கிறது.

டைனோகாகஸை 1956ல் தற்செயலாகக் கண்டுபிடித்தவர்

விஞ்ஞானி ஆண்டர்சன் இறைச்சியை கதிரியக்கத்தின் மூலம்

பதப்படுத்திவைக்கும் சோதனையின்போது பல நாள் கதிர் வீச்சுக்குப்

பிறகும் அந்த இறைச்சியிலேயே உருவாகியிருந்த பாக்டீரியாதான்

டைனோகாகஸ் ரேடியோடியுரான். இதையடுத்து இந்த பாக்டீரியாவைப் பயன்படுத்தி கதிர்வீச்சுள்ள பொருட்களின் கதிரியக்கத்தை அழிக்கவோ குறைக்கவோ முடியுமா என்று ஆராய்ந்தார்கள். அணு ஆயுதத் தயாரிப்பில் வரும் கழிவுகளில் இருக்கும் மெர்க்குரியை கரைக்க மட்டும் இது பயன்பட்டது.

இந்த பாக்டீரியாவின் முழு மரபணுக் கூறுகளும் கண்டுபிடிக்கப்பட்ட

பின்னர் 2003ல் ஒரு வித்யாசமான சோதனை செய்தார்கள்.

கதிரியக்கத்தால் உயிர்கள் எல்லாம் அழிந்தால் அதன்பின்னரும் இந்த

பாக்டீரியா இருக்குமானால், இதன் வழியே எந்த தகவலையாவது

அடுத்து பரிணாமத்தில் உருவாகக்கூடிய உயிரினத்துக்கு கிடைக்க

வசதியாக வைத்துவிட்டுப் போகமுடியுமா என்பதே இந்த சோதனை.

இந்த சோதனைக்காக ஒரு பாடலைத் தேர்ந்தெடுத்தார்கள். அது

“இட் ஈஸ் எ ஸ்மால் வேர்ல்ட்” என்ற பாடல். 1964ல் யூனிசெஃப்

கண்காட்சியில் குழந்தைகள் அரங்குக்காக வால்ட் டிஸ்னி கம்பெனியின் தயாரிப்பில் ஷெர்மன் பிரதர்ஸ் எழுதி உருவாக்கிய அந்தப் பாடலை. மரபணுக் கூறுகளாக மாற்றி பாக்டீரியாவின் டி.என்.ஏ.வில் செலுத்திவைத்து அந்த பாக்டிரீயாவின் நூறு தலைமுறைகளுக்குப் பின்னரும் அதிலிருந்து அந்தப் பாடலைப் பிரித்தெடுக்க முடியுமா என்று முயற்சித்தார்கள். பிரித்தெடுக்க முடிந்தது! என்றாலும் இவ்வாறு அணுக் கதிர் வீச்சால் உலக உயிர்கள் அழிந்தபிறகும் எதிர்காலத்துக்கு எல்லா தகவல்களும் கிடைப்பது போல பாக்டீரியாவைப் பயன்படுத்துவதில் பெரும் சிக்கல்கள் உள்ளன.

இன்றே அணு உலைகளை அகற்ற நாம் உழைக்காவிட்டால் நாளை

நம் எதிர்கால தலைமுறைகள் மனிதர்களாகப் பிறப்பதற்கு பதில்

டைனோகாக்கஸ் ரேடியோடியுரான் பாக்டீரியாவாகப் பிறக்காமல்

போனோமே என்று வருந்தும் நிலைதான் வரும்.

“இட் ஈஸ் எ ஸ்மால் வேர்ல்ட்” ஓர் அற்புதமான பாடல். வரிகள்

இதோ :

அது சிரிப்புகளின் உலகம்..

அது கண்ணீர்த் துளிகளின் உலகம்

அது நம்பிக்கைகளின் உலகம்

அது அச்சங்களின் உலகம்

நாம் பகிர்ந்துகொள்ள இங்கே ஏராளம்

எனவே இது உணர்ந்துகொள்ளும் தருணம்

இது ரொம்ப சின்ன உலகம்.. அட

இது ரொம்ப சின்ன உலகம்.

இருப்பது ஒரே ஒரு நிலா

ஒரே ஒரு பொன்னிற சூரியன்

எல்லாரும் நணபரே என்று சொல்ல

எப்போதும் தேவை ஒரு புன்னகைதான்

மலைகள் பிரித்தாலும்

கடல்கள் விரிந்தாலும்

இது ரொம்ப சின்ன உலகம் – அட

இது ரொம்ப சின்ன உலகம்

இந்த சிறு நூலை வாசித்து முடித்ததும் மனதில் பல கேள்விகள் எழுவது இயற்கை. எனவே மறுபடியும் ஒரு முறை படியுங்கள். நம் கேள்விகளுக்கான பதில்கள் பல நம்மிடமே இருப்பது தெரியும். மேலும் பதில்களை தேடிச் சென்று கண்டடைய முயற்சித்தால் வெற்றியடைவோம்.

நன்றி

ஞாநி

சச்சின் முதல் வைகோ வரை – ஒரு மக்கள் கணிப்பு.
சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்குத் தொடக்கம் முதல் 35 வருடங்களாக இடைவிடாமல் சென்று வருகிறேன். சுமார் ஒன்பது ஆண்டுகளாக நானே அங்கே ஒரு கடையையும் நான் பதிப்பித்திருக்கும் என் புத்தகங்களை விற்பதற்காக நடத்தி வருகிறேன்.

என் அரங்கில் தினசரி தேர்தல் நடத்துவது வழக்கம். அரசியல், கலாசார, இலக்கியம், நடப்பியல் சார்ந்த ஒரு விஷயத்தில் கேள்வி கேட்டு அதற்கு இரண்டு மூன்று பதில்களை சொல்லி எந்த பதிலை நீங்கள் ஆதரிக்கிறீர்களோ அதற்கு ஓட்டு போடும்படி வாசகர்களைக் கேட்கிறோம். மறு நாள் அதே இடத்தில் அறிவிப்புப் பலகையில் வாசகர் தீர்ப்பு விவரங்களையும் அறிவிக்கிறோம்.  ஒவ்வோராண்டும் வாசகர்கள் உற்சாகமாகப் பங்கேற்கிறார்கள். சென்ற புத்தகக் காட்சியில் ஜனவரியிலேயே அடுத்த ஆட்சி அ.தி.மு.கதான் என்று 66 சதவிகிதம் பேர் வாக்களித்து கருத்து தெரிவித்தது மே மாதத்தில் நிஜமாயிற்று. படித்தவர்கள் ஓட்டு தி.மு.கவுக்கு எதிராகச் சென்றதால்தான் அது தோற்றது. படித்தவர்களின் மனநிலையை ஒவ்வொரு வருடமும் என் அரங்கின் தேர்தல்களில் உணரமுடிகிறது.

இந்த வருடம் நடந்த தேர்தல்களில் வந்த சில முடிவுகளைப் பார்க்கலாம்.

பாரத் ரத்னா இந்திய அரசின் மிக உயரிய விருது. அதை சச்சின் டெண்டுல்கருக்குத் தரவேண்டும் என்று ஓர் ஆதரவுப் பிரசாரம் பலமாக நடந்துவருகிறது. இது பற்றி ஓட்டெடுப்பு நடத்தினோம்.  சச்சினுக்கு தரலாம் என்றவர்கள் 23%. செஸ் மேதை விஸ்வநாதன் ஆனந்துக்குத் தரலாம் என்றவர்கள் இன்னொரு 23 %. பாரத் ரத்னா விருதை விளையாட்டு வீரர்களுக்கெலாம் தரக் கூடாது என்றவர்கள்தான் அதிகம் – 54% !

முல்லைப் பெரியாறு சிக்கலுக்கு என்ன தீர்வு ? பழைய அணையை பலப்படுத்தினாலே போதும் என்பதற்குத்தான் அதிக ஆதரவு 54 % ஓட்டு. புது அணை கட்டவேண்டும் என்பதை ஆதரித்தவர்கள் வெறும் ஒரு சதவிகிதம் பேர். எந்த அணையாக இருந்தாலும் அதை மத்திய அரசு வசம் தரவேண்டும் என்று சொன்னவர்கள் 26 %. அணை பலம் பற்றிய பயத்தைப் போக்க, பழைய அணையில் நீர் அளவைக் குறைத்துவிட்டு, அதற்கு சமமான நீரை தமிழ்நாட்டுக்குள்ளேயே தேக்கிவைத்துக் கொள்ள பல தேக்கங்கள் கட்டலாம் என்ற தீர்வை ஆதரித்தவர்கள் 19 சதவிகிதம் பேர்.

சசிகலாவை ஜெயலலிதா வீட்டை விட்டு அனுப்பியது சென்ற ஆண்டின் மிகப் பெரிய அரசியல் நிகழ்வு. தன்னுடன் 30 ஆண்டுகளாக இருந்த சசிகலாவையும் அவர் உறவினர்களையும் அ.இ.அ.தி.மு.கவிலிருந்து ஜெயலலிதா நீக்கியது பற்றி ஏன் என்று காரணங்களை வெளியிடவேண்டும் என்று கருதியவர்கள்  43% . காரணம் சொல்லத் தேவையில்லை என்றவர்கள் வெறும் 12 %. காரணம் தெரிவித்தாலும் தெரிவிக்கா விட்டாலும், இது மக்களை பாதிக்கும் விஷயமே அல்ல என்று கருத்து சொன்னவர்கள்தான் அதிகம். 45% ! இந்த முடிவு எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.  ஜெயலலிதா – சசிகலா நட்பு மக்களை பாதிக்கவில்லை என்று அப்படியானால் அர்த்தமா ?

ஒய் திஸ் கொலைவெறிடீ பாடல் உலகப் புகழ் பெற்றிருப்பது  தமிழ் மொழி, திரைத் துறைக்கெல்லாம் பெருமை என்று நினைப்பவர்கள் 11% ! இந்தப்பாடலினால் தமிழ் மொழி, திரைத் துறைக்கெல்லாம் அவமானம் என்று குமுறியவர்கள் 28%. இது வியாபாரம். இதில் மான-அவமானம் எதுவும் கிடையாது என்று கருதுபவர்கள்  61 சதவிகிதம் பேர். ஒரு விஷயத்தில் பொதுப் புத்தி எப்படி செயல்படுகிறது என்பதை அவ்வளவு லேசில் கணிக்க முடியாது என்பதற்கு இது சிறந்த உதாரணம்.காசு, பண வியாபாரத்துக்காக தமிழகத்தில் செய்யப்படும் பலவற்றில் நாம் மான அவமானம் பார்க்க வழியில்லை என்பதுதான் இங்கே யதார்த்த நிலை என்று மக்களே நினைக்கிறார்கள்.

வழக்கமாக மன்மோகன்சிங் எந்த விஷயத்திலும் கடுமையாகக் கருத்து தெரிவிக்கமாட்டார். அவரே ஒரு விஷயத்தில் இது ஒரு தேசிய அவமானம் என்று சொன்னது ஆச்சரியமாக இருந்தது. 42 சதவிகித குழந்தைகள் ஊட்டச் சத்துக் குறைவோடு இருப்பது தேசிய அவமானம் என்கிறார் பிரதமர் மன்மோகன்சிங். உண்மைதான். எல்லாரும் அவமானப்படவேண்டிய விஷயம்தான் இது. ஆனால் இந்த அவமானத்துக்கு யார் பொறுப்பு ? இதை வாசகர்களிடம் கேட்டோம். தனிப்பட்ட குடும்பங்களின் விழிப்புணர்வு இன்மையினால்தான் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து குறைவு ஏற்படுகிறது என்று நினைப்பவர்கள் வெறும் 29 சதவிகிதத்தினர்தான். இந்த தேசிய அவமானம் ஏற்படக் காரணமாக இருந்தது அரசாங்கங்களின் பொருளாதாரக் கொள்கைகள்தான் என்று சொன்னவர்கள் மிக் அதிகம் – 71 %

இந்தப் புத்தகக் கண்காட்சியில் மனதை நெகிழவைத்த நிகழ்ச்சிகள் இரண்டை சந்தித்தேன். தமிழறிஞரும் எழுத்தாளருமான மா.சு.சம்பந்தம் சில மாதங்கள் முன்னால் காணாமல் போய்விட்டர். எண்பது வயதைத் தாண்டிய அவர் சென்னையில் தினமும் ஏதேனும் ஒரு இலக்கியக் கூட்டத்துக்கோ, பொது நிகழ்ச்சிக்கோ பஸ் பிடித்து தானே தனியாகச் செல்லும் வழக்கம் உடையவர். அப்படி ஒரு நிகழ்ச்சிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.அச்சுக கலை, சென்னை நகர வரலாறு போன்ற பல அருமையான் புத்தகங்களை எழுதியிருக்கும் அவர் ஒருவேளை புத்தகக் கண்காட்சிக்கு வந்தால் உடனே தகவல் சொல்லுங்கள் என்று அவர் ப்டத்துடனான கோரிக்கைச் சீட்டுகளை அவருடைய மகன் கடைகள் தோறும்  விநியோகித்துக் கொண்டிருந்தார்.

தந்தையைத் தேடும் மகனை சந்தித்த மறு நாளே மகனைக் காப்பாற்றப் போராடும் தாயையும் கண்காட்சியில் சந்தித்தேன்.  ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு இருபதாண்டுகளாகச் சிறையில் இருந்து வரும் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள், மரன தண்டனைக்கெதிராக் குரல் கொடுத்து தன் மகன் உயிரைக் காப்பாற்ற உதவும்படி பலரையும் கண்காட்சியில் சந்தித்து வேண்டிக் கொண்டிருந்தார். ஒரு சில இளைஞர்கள் அவருக்கு உதவியாக இருந்தபடி, பேரறிவாளன் எழுதிய நூலையும் பிரசுரங்களையும் விநியோகித்தனர். பத்தொன்பது வயதில் சிறை சென்ற பேரறிவாளன் சிறையில் இருந்தபடி படித்து கணினித் துறையில் பட்டதாரியாகியுள்ளார். தமிழக சட்டமன்றமே ராஜீவ் கொலையில் பேரறிவாளன் உள்ளிட்ட நால்வரின் மரண தண்டனையை குறைக்கத் தீர்மானம் நிறைவேற்றியும்,  முடிவு காலதாமதமாகிக் கொண்டே இருக்கிறது.

அடுத்த வருடப் புத்தகக் காட்சியில் மா.சு.சமபந்தனும் பேரறிவாளனும் ஒவ்வொரு கடையாகச் சென்று தமக்கு விருப்பமான நூல்களைத் தேடும் காட்சியைக் காண முடிந்தால் நிச்சயம் மகிழ்வேன்.  என் அரங்கில் நடத்திய தேர்தலில் மரன தண்டனை குறித்து மக்கள் கருத்தைக் கேட்டேன். எல்லா கொலைகளுக்கும் மரண தண்டனைதான் சரி என்றவர்கள் 23%தான். மரண தண்டனை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்றவர்களோ 36%. சுயநலம் சாராத, அரசியல், கொள்கை சார்ந்த கொலைகளுக்கு மட்டும் மரண தண்டனையை ஒழிக்கலாம் என்றவர்கள் 41%.

மிகுந்த பாதுகாப்புடன்தான் நடத்துவோம். உச்ச நீதி மன்றம் தெரிவிக்கும் அத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகளையும் உறுதி செய்வோம். ஜல்லிக்கட்டை அனுமதியுங்கள் என்று நீதிமன்றங்களில் தமிழக அரசும் ஜல்லிக் கட்டு அமைப்பாளர்களும் மன்றாடிக் கேட்டு அதை நடத்தி வருகிறார்கள். என்ன பாதுகாப்பு ஏற்பாடு செய்தாலும், மறு நாள் காலை பத்திரிகைச் செய்தியில் 60 பேர் படுகாயம். இருவர் மரணம். நால்வர் கவலைக்கிடம் என்றுதான் வருகிறது. இந்நிலையில் மக்கள் என்ன நினைக்கிறார்கள் ? ஜல்லிக் கட்டு தமிழர்களின் வீர விளையாட்டு. பண்பாட்டின் அடையாளம். எனவே தடை செய்யக் கூடாது என்று கருதுவோர் 41 %. மனிதனையும் விலங்கையும் கொடூரமாக மோதவைக்கும்  குரூரமான ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்போர் 59%.

சென்ற வருடத்தை விட இந்த ஆண்டு கணினி, இணைய உபயோகம் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக பேஸ்புக் போன்ற சமூக உறவாடல் தளங்களில் வலம் வரும் படித்தோர் எண்ணிக்கை கூடியிருக்கிறது. கூடவே இவற்றில் ஆபாசம், அவதூறு எல்லாம் கல்ந்தே வருகின்றன. ஆபாசம், அவதூறு  முதலியவற்றை தடுக்க பேஸ்புக், கூகிள், இணையதளங்கள் அனைத்துக்கும் முன் தணிக்கை தேவை என்கிறது இந்திய அரசு. ஆமாம், இது நியாயமான பிரச்சினை. எனவே முன்தணிக்கை தேவைதான் என்று வாக்களித்தவர்கள் 20%. இல்லை. இது தவறு. அரசியல் உள்நோக்கம் உடையது. எனவே கூடாது என்றவர்கள் 17%. முன் தணிக்கையெல்லாம் இந்த தொழில்நுட்பத்தில் நடைமுறை சாத்தியமில்லை.  சுயகட்டுப்பாடுதான் தீர்வு என்று வாக்களித்தவர்கள்தான் அதிகம் – 63%

அரசு நடவடிக்கை பல சமயங்களில் தேவை என்றாலும், அதில் கலந்து வரும் அசட்டுத்தனமும், அதிகார வெறியும் நடவடிக்கை இல்லமல் இருந்தாலே பரவாயில்லை என்று கூட தோன்றவைத்துவிடும். சுமார் ஒரு கோடி ரூபாய் செலவழித்து தேர்தல் ஆணையம் உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி கட்சி சின்னமான யானைச் சிலைகளையெல்லாம் துணி போட்டு மறைத்தது அந்த மாதிரி ஒரு நடவடிக்கைதான் என்று எனக்குத் தோன்றியது. மக்கள் என்ன நினைக்கிறார்கள் ? மாயாவதி, கன்ஷிராம், கட்சி சின்னமான யானை சிலைகளை துணி போட்டு மூடும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது முற்றிலும் நியாயமானது என்று ஏற்றவர்கள் 31%. அது அர்த்தமற்ற அசட்டு உத்தரவு என்று ( என்னைப் போலவே) நினைப்பவர்கள் 26%. எல்லா கட்சிகளின் தலைவர்கள், சின்னங்களின் சிலைகளையும் தேர்தல் ஆணையம் மூடச் சொல்ல வேண்டும் என்றோர் 42%.

புத்தகக் கண்காட்சி நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் காலை ஒரு டி.வி நிகழ்ச்சிக்கு சென்றேன். என்னுடன் அதில் கலந்துகொண்டவர் ஒரு மூத்த அரசியல் பிரமுகர். சும்மா அரட்டை அடித்துக் கொண்டிருந்தபோது, இந்திய அரசியலையே குழப்பி சிக்கலாக்கிக் கொண்டிருப்பவர்கள் மூன்று பெண்கள் என்றார். மூவரும் திருமணம் செய்யாமல் குடும்பப் பொறுப்பு தெரியாமல் இருப்பவர்கள். எனவே பக்குவமும் இல்லை என்றார். பெண் விரோதக் கருத்துகளான அவற்றுடன் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் இந்த மன நிலை பலரிடமும் இருப்பதை கவனிக்கிறேன்.  அடுத்த நாள் பத்திரிகைகளில் இதே போன்ற பெண் விரோதக் கருத்துகளுக்குப் புகழ் பெற்ற ஒரு பத்திரிகையாளர் பிரதமராகும் தகுதி உடையவர் ஜெயலலிதா என்று சொல்லியிருந்தார் !. சரி. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று என் அரங்கில் இதை தேர்தலாக்கினேன்.

மூன்று மாநில பெண் முதல்வர்களில் உங்கள் பார்வையில் பிரதமர் பதவிக்கு ஏற்றவர் யார் ? என்று கேட்டதற்கு ஜெயலலிதா என்றவர்கள் 46%. மாயாவதி என்றவர்கள் 15%. . மம்தா பேனர்ஜிக்கு ஆதரவு தெரிவித்தோர் 39%. இதில் என்னைக் கவர்ந்த அம்சம் மம்தாவுக்கு விழுந்த ஓட்டுதான். வெளி மாநிலத்தில் அவருக்கு இவ்வளவு ஆதரவு கிடைக்கிறது. ஜெயலலிதாவுக்கு மேற்கு வங்கத்தில் இந்த அளவு ஆதரவு கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

ஒவ்வொரு புத்தகக் காட்சியிலும்  நான் ஓட்டெடுப்பில் வைக்கும் ஒரு கேள்வி : தமிழகத்தில் தி.மு.க, அ.இ.அ.தி.மு.க இரு கட்சிகளுக்கும் மாற்றாக எது வரவேண்டும் என்று விரும்புகிறீர்கள் ? இந்த முறை வந்த பதில்கள் இதோ : ம.தி.மு.க – 65%. பா.ம.க. – 6%. தே.மு.தி.க. – 18%. காங்கிரஸ் – 11%. இதில் ஆச்சரியமானது பா.ம.கவின் குறைவான செல்வாக்கும் ம.தி.மு.கவின் எதிர்பாராத பெரும் செல்வாக்கும்தான். என் அரங்குக்கு வந்த ஒரு தே.மு.தி.க எம்.எல்.ஏ இந்த முடிவுகளைப் படித்துவிட்டு, மீடியா ஆதரவு அண்மைக்காலமாக வைகோவுக்கு அதிகம் இருப்பதால் இப்படி ஓட்டு விழுந்திருக்கிறது என்று ஒரு கருத்து சொன்னார். எனக்கென்னவோ, உள்ளாட்சித் தேர்தல் பங்கேற்பு,  முல்லைப் பெரியாறு, கூடங்குளம் பிரச்சினைகளில் களத்தில் எடுத்த நடவடிக்கைகள் இவைதான் ம.தி.மு.கவுக்கு மறுபடி ஒரு கவனம் பெற்றுத் தந்திருப்பதாகத் தோன்றுகிறது.

கடைசி நாள் வைத்த வாக்கெடுப்புக் கேள்வி : அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள் ? காங்கிரஸ்  8% வாங்கியதில் எனக்கு பெரிய ஆச்சரியமில்லை. பா.ஜ. க.- 42% எடுத்ததுதான் ஆச்சரியம். அண்ணா ஹசாரே படித்தவர்கள் மத்தியில் காங்கிரசுக்கு எதிராக ஏற்படுத்திய தாக்கம் பா.ஜ.கவுக்குப் பயன்படுகிறது என்று தோன்றுகிறது. ஆனால் எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தகவல்  மூன்றாவது அணிக்கு 50% வாக்குகள் விழுந்ததுதான். மூன்றாவது அணி எதையும் டெல்லியில் இப்போதைக்குக் காணோம். ஆனாலும் அப்படி ஒன்று இருந்தால் அதை ஆதரிக்க மக்கள் விரும்புகிறார்கள் என்பது காங்கிரசுக்கும் பா.ஜ.கவுக்கும் முக்கியமான எச்சரிக்கைச் செய்தி.

கல்கி 21.1.2012

சூரிய கதிர் பதில்கள் 16.1.2012
கவிதா, சென்னை.

அழகிரியின் ஆட்டம் அடங்கிவிட்டது. கனிமொழியின் ஆட்டம் துவங்கிவிட்டது என தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் புலம்ப ஆரம்பித்திருக்கின்றனரே?

கட்சிக்குள் என்ன ஆட்டம் யார் ஆடினாலும் அது குண்டு சட்டிக்குள் ஓட்டும் குதிரை எங்கேயும் போய் சேராது என்பது போலத்தான். ஆட்சியை இழந்ததில் தி.மு.கவின் ஆட்டமே மொத்தமாக அடங்கியிருக்கும் நிலையில், இதற்கெல்லாம அர்த்தம் இல்லை.

அன்புசெல்வன், கடலூர்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் பச்சமுத்து கூட ரூ. 20 கோடி நிதியுதவியை அளித்துள்ளார். ஆனால் இத்தனை காலமாக இந்த மாவட்ட மக்களின் வாக்குகளில் முத்துக் குளித்து வந்த பாமக இதுவரை ஒரு துரும்பைக் கூட எடுக்க முன்வரவில்லை என்று வன்னிய சமுதாயத்தினர் வேதனையுடன் குமுறியிருக்கின்றனரே?

நியாயமான குமுறல்தான். அதே சமயம் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் மக்களுக்கு அவர்களுடைய பகுதியினர், அவர்கள் ஜாதியினர், அவர்கள் மதத்தினர் மட்டும்தான் போய் உதவவேண்டும் என்று பார்க்கக்கூடாது. இதற்கெல்லம அப்பாற்பட்டு எங்கிருந்து வேண்டுமானாலும் உதவவேண்டும். முடியும்.

அன்பரசன், கடலூர்.

தானே புயல் கடலூர், புதுவையை இப்படி புரட்டிபோட்டுவிட்டதே?

புயல் கடந்த சில தினங்கள் கழித்து அந்த சாலை வழியே சிதம்பரம் வரை சென்றேன். நேரில் பார்த்த சேதங்கள் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தின.ஒரு தென்னை மரம் கூட தப்பிக்கவில்லை. இந்த வட்டாரத்துக்கே இப்போதுதான் முதன்முதலாக மின் இணைப்பு தருவது போல பிரும்மாண்ட்மான வேலையை மின்வாரியம் செய்தாக வேண்டிய அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கிறது.  உயிரிழப்பு மிக குறைவு என்ற ஆறுதலைத் தவிர, பாதிப்பு சுனாமி பாதிப்ப விட பல மடங்கு அதிகமாக் இருக்கும் என்றே தோன்றுகிறது. அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் களத்தில் நிவாரணப் பணிகளில் அரசியலுக்கு அப்பாற்பட்டு இறங்கவேண்டிய தருணம் இது.

சண்முகம், ஈரோடு.

அன்னா ஹஸாரே மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டங்கள் அரசியல் பலாத்காரமாகும். அண்ணா குழுவைச் சேர்ந்த யாராலும் நாட்டுக்கோ, மக்களுக்கோ ஒரு பிரயோஜனமும் இல்லை என்று காட்டமாக கூறியுள்ளார் சிவசேனா தலைவர் பால் தாக்கரே?

சொன்னது சரிதான். சொன்னவருக்குத்தான் அதைச் சொல்லும் தகுதி இல்லை. சிவ சேனையின் வன்முறை சரித்திரத்தில் ஏதாவது சாதனை இருக்கிறதா என்ன ?

ராஜேந்திரன், விழுப்புரம்.

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிதம்பரத்துக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை சிபிஐ நீதிமன்றத்தில் சுப்ரமணியன் சுவாமி தாக்கல் செய்திருக்கிறாரே?

அவை ஆதாரம்தானா என்று நீதிமன்றம்தான் சொல்லவேண்டும். ஊழல் செய்ததற்கு ஆதாரம் இருந்தால் கைது செய்யட்டுமே. ந்மக்கு மகிழ்ச்சிதான். எத்தனை ஊழல் பேர்வழிகள் உள்ளே போனாலும் நல்லதுதான். ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் தயாநிதி மாறனை திஹாருக்கு அனுப்புவேன். செப்டம்பரில் சிதமபரம் என்று சென்ற வருடம் முழங்கிய சுவாமியால் ஏன் இன்னும் த்யாநிதி மாறனைக் கைது செய்யவைக்கக் கூட முடியவில்லை ? ஏன் அது பற்றி சுவாமி இப்பொதெல்லாம பேசுவதில்லை என்று ஆராயவேண்டும். பி.ஜே.பியின் பிரதன இலக்குகளில் சிதம்பரம் இருக்கிறார். தயாநிதி இல்லை. அதனால்தான் அண்ணா ஹசாரே முதல் சுவாமி வரை சிதமபரத்தைக் குறி வைத்திருக்கிறார்கள்.

ஸ்டெல்லா, மதுரை.

தனது சிலைகளை துணி போட்டு மூட தேர்தல் ஆணையம் சொல்லியிருப்பதற்கு,  நேரு குடும்பத்தினரின் சிலைகளையும் மூடச்சொல்லுமா. அதேபோல சமாஜ்வாடிக் கட்சியின் சின்னம் என்பதால் நாட்டில் யாருமே சைக்கிள் ஓட்டக் கூடாது என்று சொல்லுமா என்று பகுஜன் சமாஜ் கட்சி கேட்டுள்ளதே?

நியாயமான கேள்வி. தேர்தல் ஆணையம் அரசு திட்டங்களை கட்சி விளம்பரத்துக்கு பயன்படுத்துவது, அதிகாரிகளை முறைகேடாகப் பயன்படுத்துவது வரம்புக்கு மீறி தேர்தல் செலவு செய்வது, வாக்காளருக்கு பணம் கொடுப்பது போன்றவற்றைத்தான் தேர்தல் நேரத்தில் கட்டுப்படுத்தவேண்டும். காந்தி பெயரைச் சொல்லி காங்கிரஸ் ஓட்டு கேட்கும் என்பதற்காக எல்லா காந்தி சிலைகளையும் மூடச் சொல்வார்களா? அபத்தமான உத்தரவு இது.அது மட்டுமல்ல. இது மாயாவதிக்கு சாதகமானதும் கூட. மூடிக் கிடக்கும் ஒவ்வொரு இடத்தைப் பார்க்கும்போதும் மக்களுக்கு மாயாவதி நினைவுதான் வரும். தேர்தல் நேரத்தில் இது எவ்வளவு பெரிய வசதி !

எம்.சுதாமேரி, கல்லிடைக்குறிச்சி.

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் இந்த வருடம் என்ன ஸ்பெஷல்?

முப்பத்தைந்து வருடங்களில் முதல்முறையாக தினசரி ஒரு எழுத்தாளருடன் வாசகர் சந்திப்பு என்ற நேருக்கு நேர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எழுத்தாளர்கள் சா.கந்தசாமி,பெருமாள் முருகன்,கவிஞர் சுகுமாரன், எஸ்.ராமகிருஷ்ணன், கண்மணி குணசேகரன் , பாஸ்கர் சக்தி,இரா நடராஜன்,அழகிய பெரியவன்,மனுஷ்யபுத்திரன், பிரபஞ்சன்,பாமா,அசோகமித்திரன்,ஆதவன் தீட்சண்யா, சாரு நிவேதிதா, இந்திரா பார்த்தசாரதி, தமிழ்ச்செல்வன் என்று பல முக்கிய எழுத்தாளர்கள் வருகின்றனர்.

எனக்குத் தனிப்பட்ட ஸ்பெஷல், என் ஓ பக்கங்கள் மேலும் இரண்டு தொகுதிகளும் ஏன் இந்த உலை வெறி என்று அணுமின் நிலைய ஆபத்து பற்றிய நூலும் வெளிவந்திருக்கின்றன என்பதுதான்.

பர்வீனா, செங்கல்பட்டு.

மூத்த தி.மு.க. நிர்வாகிகளுக்கு விரைவில் கல்தா என்கிறாரே ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிக்கொண்ட கனிமொழி?

அதுதான் எல்லாருக்குமே மக்கள் ஆட்சியிலிருந்து கல்தா கொடுத்துவிட்டார்களே. இப்போது நடப்பது எல்லாம் குடும்பத்துக்குள் பாகப்பிரிவினை, பங்காளி சண்டைதான்.

சிவசங்கரி, சென்னை.

மத்திய உள்துறை அமைச்சக அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டரின் ஹார்டு டிஸ்கை யாரோ திருடிவிட்டனராமே? அதே கம்ப்யூட்டரின் மானிட்டர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டதாகவும் சொல்கிறார்களே?

தவணை முறைத் திருடனை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இப்படிப்பட்ட திருட்டுகள் பெரும்பாலும் உள்ளிருந்தே நடக்கக்கூடியவையாகத்தான் இருக்கும். அந்நிய உளவாளிகளின் கைக்கூலிகள் யாரும் அமைச்சகத்தில் இருக்கிறார்களா என்று துருவிப் பார்ப்பது அவசியம்.

தேவி, திருப்பூர்.

பழ.கருப்பையாவை அ.தி.மு.க.வின் இணை செயலாளர் பதவியிலிருந்து ஏன் நீக்கிவிட்டார்களாம்?

அது பழ. கருப்பையாவுக்கே தெரியாது என்கிரபோது நமக்கு எப்படித்தெரியும் ? ஓரங்கட்டலா, அல்லது அமைச்சர் பதவிக்கு ஆயத்தப்படுத்தலா என்பது ஜெயலலிதாவுக்கு மட்டுமே தெரியும்.

சுப்ரமணியன், திருச்சி.

40 வயதுக்கு மேற்பட்டோருக்கு தி.மு.க. இளைஞர் அணியில் இடமில்லை என 60 வயதுக்காரரான ஸ்டாலின் கூறியிருப்பதை கவனிக்்தீர்களா?

அவர் தெரிந்து தெளிவாகத்தான் சொல்கிறார். எத்தனை நாட்களுக்குத்தான் அவர் இளைஞர் அணிப் பொறுப்பையே கவனிக்க முடியும் ? கட்சி த்தலைவர் பதவி அவருக்குத் தரப்பட வேண்டும் என்று அப்பாவுக்கு இன்னொரு தடவை செய்தி சொல்லியிருக்கிறார். ரையாயமான கோரிக்கை. ஆனால் கருணாநிதி இந்த முறையும் கவனிக்கமாட்டார்.

கணபதி, சென்னை.

தி.மு.க.வில் மாநில நிர்வாகிகள் மட்டத்தில் பெரிய அளவிலான மாற்றத்தை தி.மு.க. சந்திக்கப்போவதாக சொல்கிறார்களே?

இப்போது நடப்பதெல்லாம் பெரிய மாற்றம் அல்ல. கருணாநிதி காலத்துக்குப் பின்னரே அது நிகழும்.

வண்ணைகணேசன், சென்னை.

ஜனநாயக நாட்டில் கறுப்பு கொடி காட்டினால் என்ன? தங்களுடைய எதிர்ப்பைத்தானே காட்டுகிறார்கள். இது தவறா?

தவறே அல்ல. யாருக்கு எதிராக கறுப்புக் கொடி காட்ட்ப்படுகிறதோ அவர் கண்ணில் படுகிற மாதிரி ஒரு இடத்தையே ஒதுக்கித் தருவதுதான் நியாயம். கறுப்புக் கொடி காட்டுவோர் அத்துமீறாமல் பாதுகாப்பு செய்தால் போதும். ஒவ்வொரு வி.ஐ.பிக்கும் தனக்கு எதிர்ப்பு உள்ளது என்பது தெரியவேண்டும். அப்பத்தான் அடங்குவாங்க.

ரேவதிப்ரியன், ஈரோடு.

லோக்பால் மசோதாவை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என அடம்பிடிக்கிறாரே அண்ணா ஹசாரே?

அவர் ஆட்டம் முடிந்துவிட்டது. வீட்டில் என்ன தந்தாலும் ஓயாமல் அழுகிற குழதையை ஒரு கட்டத்துக்கு மேல் கவனிக்காமல் போனால், தானே அழுகையை நிறுத்திவிடும்.

சிவா, திருப்பத்தூர்.

லேட்டஸ்ட்டாக உங்களை கவர்ந்த கிசுகிசு எது? ஏன்?

என்னை எப்போதும் கிசுகிசுக்கள் கவர்வதே இல்லை. உண்மைகள்தான் கவர்கின்றன.

எஸ்.ஜெயகாந்தன், புன்செய்புளியம்பட்டி.

தேசிய உணவு பாதுகாப்பு மசோதாவிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளது பற்றி?

எந்த சட்டத்திலிருந்தும்  முழு விலக்கு அளிக்க இயலாது. என்னென்ன அம்சங்களில் விலக்கு வேண்டும் என்று சொன்னால் பரிசீலிக்கலாம்.. என்ன இது, நான் ஏதோ பிரதமர் மாதிரி பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன் !

விஷ்வா, சென்னை.

நடைபாதையில் நாற்காலி மேஜை போட்டு மக்களுக்கு கடமை ஆற்றுவேன் என்கிறாரே ஸ்டாலின், நடைபாதையை கூட ஆக்கிரமிப்பு செய்வதைத்தான் விரும்புகிறாரோ?

மரத்தடியில் பள்ளி வகுப்புகள் நடக்கும் நாட்டில் நியாயமாக எல்லா எம்.எல்.ஏக்களுமே நடைபாதையில் மேசை போட்டுத்தான் மக்கள் குறைகளைக் கேட்கவேண்டும். கோவில்களும், கடைக்காரர்களும் நடைபாதைகளை ஆக்ரமித்திருக்கிறபோது எம்.எல்.ஏ பொது ந்லனுக்காக செய்யக் கூடாதா ?

சூரிய கதிர் 16.1.2012