திண்ணை

சூரிய கதிர் பதில்கள் 16.5.2012
வண்ணை கணேசன், சென்னை.

பொறுமையை கையாள்வதில் எந்த அரசியல்வாதி திறமைசாலி?

அரசியல்வாதிகளிடம் இருக்கும் பொறுமையை விடமக்களுக்கு இருக்கும் பொறுமைதான் என்ன்னை பிரமிக்க வைக்கிறது. நம் நாட்டில் அரசியல்வாதிகளிடம் இருப்பது பொறுமை அல்ல. சுரணையின்மை. மக்களிடம் இருப்பது எப்படியும் கடவுள் காப்பாற்றுவார் என்கிற அசாத்திய நம்பிக்கை

எஸ். ஜெயகாந்தன், புன்செய்புளீயம்பட்டி.

புதிய ஆதீனமாக நித்தியானந்தாவை மதுரை ஆதீனம் நியமித்தது சரியா? தவறா?

இதற்கு சரியான விடை அறிய, இப்ப்போதைய மதுரை ஆதீனத்தை அதர்கு முந்தைய ஆதீனம் நியமித்தது சரியா தவறா என்ற ஆராய்ச்சியிலிருந்தே தொடங்கினால்தான் முடியும்.

பாலா, திருச்செந்தூர்.

மதுரை ஆதினத்தின் செயல்பாடு குறித்து கருத்து சொல்ல மறுத்துவிட்டாரே கருணாநிதி?

அவர் சங்கர மட விவகாரங்களுக்குத்தான் கருத்து சொல்வார். ஜயேந்திரரை கொலை வழக்கில் முன்பு முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் கைது செய்தபோது, நிருபர்கள் கருணாநிதியிடம் கேட்டார்கள். ‘நீங்கள் முதலமைச்சராக இருந்தால் இப்படி சங்கராச்சாரியை கைது செய்திருப்பீர்களா ?’ அதற்கு அவர் அளித்த விசித்திரமான பதில் என்ன தெரியுமா?   “நான் முதலமைச்சராக இருந்திருந்தால் இந்தக் கொலையே நடந்திருக்காதே” என்பதாகும். அதற்கு என்ன அர்த்தம் என்பது அவருக்கு மட்டும்தான் புரியும். சங்கர்ராமனைக் கொல்ல வேண்டாமென்று ஜயேந்திரருக்கு அறிவுரை சொல்லியிருப்பாரா? அல்லது தானே சங்கர்ராமனைக் கூப்பிட்டு பேசி ஜயேந்திரருக்கு தொல்லை தராதே என்று எச்சரித்து அனுப்பியிருப்பாரா? யாருக்குத் தெரியும் ? இப்போது கூட நித்தியைப் பற்றிப் பேச விரும்பாததற்குக் காரணம் குடும்பத்திலேயே யாராவது நித்தி பக்தராக இருந்துவிட்டால் என்ன செய்வது என்ற கவலையாகக் கூட இருக்கலாம். மாறன் சகோதரர்களின் எதிரி நித்தி, தனக்கு நணபனாகப் பயன்படலாம் என்ர கணக்கு இருக்கலாம்.நான் நித்தியை ஏற்றுக் கொள்கிறேனா என்பது முக்கியமல்ல. நித்தி என்னை ஏற்றுக் கொள்கிறாரா என்பதுதான் முக்கியம் என்று கூட ஒரு அறிக்கை பின்னாளில் வரலாம். எதுவும் நடக்கும்.

ஜெயராஜ், ஈரோடு.

ராஜ்யசபை எம்.பி.ஆகிவிட்டாரே சச்சின் டெண்டுல்கர்?

அரசியல் அல்லாத இதர துறை சாதனையாளர்கள், அறிஞர்கள் இடம் பெறச் செய்வதற்காகக்த்தான் ராஜ்யசபை இருக்கிறது. எனவே டெண்டுல்கர் உறுப்பினர் ஆனதில் தவறில்லை. ஆனபிறகு அங்கே போய் என்ன செய்யப்போகிறார் என்பதுதான் முக்கியம். கிரிக்கேட் தவிர இதர விளையாட்டுத் துறை தொடர்பான விவகாரங்களில் தீவிர அக்கறையுடன் பங்காற்றினாலே போதுமானது.

திருமேனி, சென்னை.

கருணாநிதி முன்னின்று செய்யும் எந்த காரியமும் விளங்காது என்கிறாரே விஜயகாந்த்?

இதெல்லாம் வெட்டிப் பேச்சு. மூட நம்பிக்கை. சரியான காரியமாக இருந்தால் மனிதர்களின் தவறுகளை மீறி அதன் வீச்சு வெளிப்படத்தான் செய்யும்.

கண்ணன், சென்னை.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டும்தான் தமிழ் ஈழம் குறித்துப் பேசுவார் கருணாநிதி. அவருக்குத் தைரியம் இருந்தால் தி.மு.க.விடம் தற்போது உள்ள 18 எம்.பிக்களுடன் டெல்லி போய் உண்ணாவிரதம் இருக்கட்டுமே பார்ப்போம் என்று கூறியுள்ளாரே டாக்டர் ராமதாஸ்?

கருணாநிதியே டெல்லிக்குப் போய் உண்ணாவிரதம் இருந்தால் கூட டெல்லி பொருட்படுத்தாது. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்பது மாதமாக தொடர் உண்னாவிரதம் இருந்தார்கள். அலட்சியப்படுத்திவிட்டது. இந்திய வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலேயே, முதன்முறையாக சுமார் 25 ஆயிரம் குடிமக்கள் தனக்களுக்கு இந்த அரசின் ஓட்டுரிமையே வேண்டாம் என்று வாக்காலர் அட்டைஅயை திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் டெல்லிக்கு சுரனையே இல்லை.( தவிர, ஈழப்பிரச்சினைக்காக ராமதாஸ் ஒருமுறை கூட அன்புமணியை டெல்லி அமைச்சர் பதவியிலிருந்து விலகச் சொன்னதாக நினைவில்லையே….)

முத்துக்குமார், மதுரை.

புழல் சிறையிலிருக்கும் கே.பி.பி.சாமியின் மீது தி.மு.க. பரிவு காட்டப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் வருகிறதே? கனிமொழி கூட சமீபத்தில் கே.பி.பி. சாமியை சந்தித்துவிட்டு வந்திருக்கிறாரே?

ஒவ்வொரு மாவட்டத்திலும் எப்படிப்பட்டவர்களை பொறுப்பில் வைத்துக் கொண்டு அராஜகம் செய்து ஆட்சி நடத்திய கட்சி தி.மு.க என்பது ஊரறிந்ததுதான். அப்பா ஸ்டைலில் நாளைக்கு தனக்கும் ஒவ்வொரு ஊரிலும் ஒரு தாதா உதவி தேவைப்படும் என்பது  கனிமொழியின் அரசியல் கணக்காக இருக்கலாம். ஒவ்வொரு இடத்தில் ஒரு முகமூடி. அறிவுஜீவிகளுக்கு சங்கமம், கவிதை, இலக்கியம்.  கட்சிக்காரர்களுக்கு நானும் ரவுடிதான் என்று வடிவேலு பாணியில் சிக்னல்.

சத்தீஷ், வள்ளியூர்.

கேரளாவில் அணு மின் நிலையம் அமைக்க அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி தயாராக இருக்கிறாரா என்று கூடங்குளம் போராட்டக்குழு தலைவர் உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளாரே?

நியாயமான கேள்வி. கேரள அரசு மறுத்ததினால்தான் அணு உலை திட்டம் கூடங்குளத்துக்கே வந்து சேர்ந்தது. இப்போது கூட உம்மன் சாண்டி கூடங்குளம் உலையை அவர் மாநிலத்துக்கு எடுத்துச் செல்லலாம். அப்படி அறிவித்தால் அவர் பதவியே அங்கே ஆட்டங்கண்டுவிடும். எல்லா கட்சிகளும் சேர்ந்து அங்கே அணு உலையை எதிர்ப்பார்கள்.

பாபு, திருப்பத்தூர்.

தனி ஈழம் பற்றி பேச கருணாநிதிக்கு எந்தத் தகுதியும் இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளாரே?

யாரும் எதைப் பற்றியும் பேச, கருத்து தெரிவிக்க ஜனநாயகத்தில் உரிமை உண்டு என்ற அடிப்படையில் நான் வைகோவுடன் முரண்படுகிறேன். தெரிவித்த கருத்துகளை நாம் விமர்சிக்கலாம்.

ஜோயல்ஹென்றி, சென்னை.

2.ஜி ஊழல் வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ள முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா ஜாமீன் கோரி முதன் முறையாக மனு தாக்கல் செய்துள்ளாரே?

வரவேற்கிறேன். மரண பயம் போய்விட்டது போலிருக்கிறது. அடுத்த ஆறு மாதத்துக்குள் வழக்கில் தீர்ப்பையே கொடுத்து ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துவிடலாம்.

விமல், திருப்பூர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போலி என்கவுண்டர்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் நடந்த போலி என்கவுண்டர்களை ஒரே முறையில், விசாரிக்க வேண்டும் என்று குஜராத் அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதே? இந்த மனுவை ஏற்று இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளதே?

என்கவுண்ட்டர் என்பது அரசும் போலீசும் நடத்தும் கொலை என்பது பொது அம்சமாக இருந்தாலும், மாநிலத்துக்கு மாநிலம் காரணங்களும் வழிமுறைகளும் வேறுபடுகின்றன. எனவே அவற்றை தனித்தனியே கேஸ் பை கேஸ்தான் விசாரிக்க வேண்டும். தான் தப்பிப்பதற்காக மோடி அரசு மீதி நரிகளுக்கும் வால் இல்லையே என்று வாதிட்டுக் கொண்டிருக்கிறது.

செந்தில்வேல், திருச்சி.

பிரணாப் முகர்ஜிதான் அடுத்த குடியரசுத் தலைவர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவரோ தயங்கிக் கொண்டிருக்கிறாரே?

அவர் நியாயப்படி பிரதமர் பதவிக்குத்தான் பரிசீலிக்கப்படவேண்டும். அவர் தயங்குவது சரிதான். குடியரசுத் தலைவராக அன்சாரி, கோபாலகிருஷ்ண காந்தி போன்றோரை தேர்வு செய்வதே சரியாக இருக்கும். தென்னிந்தியர் என்றால் கலாமை மறுபடியும் கொண்டு வந்துவிடும் ஆபத்து இருப்பதால், கோபாலகிருஷ்ண காந்தியையே பரிந்துரைப்பேன். ராஜாஜி- காந்தி பேரன் என்பதால், பாதி தென்னிந்தியர். பாதி வட இந்தியர் ! நல்ல சமன்பாடு இல்லையா?

விக்னேஷ், விழுப்புரம்.

இனி எந்த இடைத் தேர்தலிலும் போட்டியிட மாட்டோம் என்கிறாரே ராமதாஸ்? எல்லா தேர்தலிலும் தோற்றுவிடுவோம் என பயமா?

அஞ்சுவது அஞ்சாமை பேதமை. எதிர்க்கட்சிகள் எல்லாருமாக பொது வேட்பாளாரை இடைத்தேர்தல்களில் நிறுத்தலாம். அல்லது அதற்கு முன்பு அங்கே எந்தக் கட்சி ஜெயித்ததோ அதற்கே விட்டுக் கொடுக்கலாம். இதெல்லாம் சரிப்படாவிட்டால், தங்கள் கட்சியின் ஆதரவாளர்களை 49 ஓ போடச் சொல்லலாம்.

பீர்முகம்மது, சென்னை.

ராணுவத்திலும் ஊழல் அதிகரித்துவிட்டது. ஊழலை ஒழிக்க முதலில் தவறான வழியில் செல்லும் ஆயுத புரோக்கர்களை பிடிக்க வேண்டும் என்று ராணுவ தளபதி வி.கே. சிங் தெரிவித்துள்ளாரே?

மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. முதலில் ராணுவ பட்ஜெட்டை நாடாளுமன்றத்தின் சிறப்புக் குழு ஆய்வுக்கேனும் முழுமையாக உட்படுத்தவேண்டும், ரகசியம் என்ற பெயரில் நிறைய ஊழல்கள் நடக்கின்றன.

பாலாஜி, திண்டிவனம்.

இன்னும் 10 நாட்களுக்குள் நித்தியானந்தாவுக்குக் கொடுக்கப்பட்ட பதவியை மதுரை ஆதீனம் ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் சட்டப்படியான நடவடிக்கைகளை தொடங்குவோம் என்று 13 மடாதிபதிகள் மதுரை ஆதீனத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனரே?

ஒவ்வொரு மடாதிபதியும் முதலில் தன் மடம் எப்படி இருக்கிறது என்று வெள்ளை அறிக்கை கொடுக்கட்டும். வாரிசு சண்டையில் கொலை வரை போய் ஒரு ஆதீன வாரிசு சிறையிலேயே இருக்கிறார். அப்போது இந்த இதர மடாதிபதிகள் வாயையே திறக்கவில்லையே. அரசு எல்லா மடங்களையும் ஆதீனங்களையும் சுயேச்சையான சமய அறிஞர்கள் அமைப்பின் கீழ் கொண்டு வந்து நிர்வாகம் செய்யலாம்.

சூரிய கதிர் 16.5.2012

கேணி மே 13
கேணி சந்திப்பு: சதத் ஹசன் மாண்ட்டோவின் நூற்றாண்டை ஒட்டி அவர் படைப்புகள் பற்றி மொழிபெயர்ப்பாளர் ராமாநுஜம் பேசுகிறார். மே 13 ஞாயிறு மாலை 4 மணி. இடம்: கேணி வளாகம்,39, அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 78 அனைவரும் வருக அன்புடன் ஞாநி, பாஸ்கர் சக்தி.

தண்ணீர் தண்ணீர்…
மூன்றாவது உலக யுத்தம் வெடித்தால் அதற்குக் காரணமாக இருக்கப் போவது தண்ணீர்தான் என்று பல வருடங்களாக உலகெங்கும் அறிஞர்கள் எச்சரித்து வருகிறார்கள். மனித வரலாற்றில் பல நாகரீக சமூகங்கள் அடியோடு அழிந்ததற்குக் காரணம் தண்ணீர் இல்லாமல் வறட்சி ஏற்பட்டதால்தான்.

ஏற்கனவே தண்ணீருக்காக இந்தியாவில் பல  மாநிலங்களுக்கிடையே குட்டி யுத்தங்கள் நடந்து வருகின்றன. இதற்கெல்லாம் தீர்வு நதிகள் இணைப்பு என்ற தவறான பிரசாரம் ஒரு பக்கம் நடக்கிறது. நதிகளை இணைப்பதால் பாதிக்கப்படும் நிலங்கள், மக்கள் சந்திக்கக்கூடிய பிரச்சினைகள் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினையை விட பிரும்மாண்டமானவை. எனவே ஆறு, குளம், ஏரிகளை மாசுபடுத்தாமல் காப்பது, மணற் கொள்ளையை நிறுத்துவது, மழை நீர் சேகரிப்பு, கடலில் வீணாகக் கலக்கும் நீரை மிச்சப்படுத்துவது, இப்போது நீரைப் பயன்படுத்தும் முறைகளில் சிக்கனத்தை கொண்டு வருவது முதலியவைதான் அசல் தீர்வுகள்.

இந்த வாரம் வந்துள்ள செய்திகளின்படி சென்னை நகரின் பல பகுதிகளில் – மயிலாப்பூர், தண்டையார்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, பெசண்ட் நகர், திருவான்மியூர்,  கொளத்தூர், மகாகவி பாரதி ந்கர், புளியந்தோப்பு, அண்ணா நகர், தியாகராய நகர், விருகம்பாக்கம், கருணாநிதி நகர்,சைதாப்பேட்டை,வேளச்சேரி, கிண்டி, தரமணி – சென்ற ஏப்ரலில் இருந்த அளவை விட இந்த வருட ஏப்ரலில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்திருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் பாசனத்துக்கான நீர் அளவு சிக்கலாகிக் கொண்டே வருகிறது. பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீரை கூடங்குளம் அணு உலைக்கு அனுப்பியாகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், குமரி மாவட்டத்தில் விவசாயமும் குடிநீரும் கடுமையாக பாதிக்கப்படும்.

நிலத்தடி நீரைப் பொறுத்த மட்டில் தமிழ்நாட்டில் இருக்கும் மொத்தம் 386 வட்டங்களில் ( பிளாக்குகளில்), 139 வட்டங்களில் ஏற்கனவே அளவுக்கு மேல் உறிஞ்சியாகிவிட்டது. அடுத்து 33 வட்டங்கள் வற்றிப் போகும் ஆபத்தான நிலையில் உள்ளன.இன்னொரு 67 வட்டங்கள் முக்கால் ஆபத்தில் இருக்கின்றன. இன்னொரு 11 வட்டங்களில் தண்ணீர் எதற்கும் தரமற்றது. மொத்தத்தில் தமிழகத்தில் மூன்றில் இரண்டு பங்கு பகுதியில் நிலத்தடி நீர் சிக்கல்தான்.

பூமியும் சூழலும் சூடாகிக் கொண்டே போவதால் எற்படக்கூடிய மாற்றங்கள் நமக்குக் கிடைக்கும் மழை அளவை கடுமையாக பாதிக்கும். ஏற்கனவே கிடைக்கும் மழை நீரை நாம் சரியாக பயன்படுத்துவதில்லை.கிடைப்பதே குறைந்துவிட்டால் பெரும் நெருக்கடிக்கு உள்ளாவோம்.

இந்தச் சூழ்நிலையில்தான் மத்திய அரசின் தண்ணீர் கொள்கை வெளியிடப்பட்டிருக்கிறது. தண்ணீர் மாநில அதிகாரவரம்புக்கு உட்பட்ட விஷயம் எனினும் மத்திய அரசு அறிவிக்கும் கொள்கை அடிபப்டையில்தான் மாநிலங்கள் தங்கள் கொள்கை பிரகடனங்களையும் சட்டங்களையும் உருவாக்குகின்றன.

கடைசியாக மத்திய அரசு தண்ணீர் கொள்கையை வெளியிட்டு 25 வருடமாகிறது (1987) ! அதன் அடிப்படையில் தன் கொள்கையை அறிவிக்க தமிழக அரசுக்கு ஏழு வருடம் தேவைப்பட்டது (1994).

மத்திய அரசு இப்போது அறிவித்திருக்கும் தண்ணீர் கொள்கையின் பல அம்சங்களுக்கு பல விவசாயிகள் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. முக்கியமான காரணம் தண்ணீரை தனியார் எடுத்து விற்கக்கூடிய ஒரு பொருளாக மத்திய அரசு மாற்ற முயற்சிப்பதுதான்.

இதுவரையிலும் இந்தியாவில் தண்ணீர் என்பது அது இருக்கும் நிலத்தின் சொந்தக்காரரின் உரிமைப் பொருளாகும். இந்த உரிமையைக் கடைசியாக கேரளத்தில் பிளச்சிமாடா மக்களுக்கும் கொகோகோலா கம்பெனிக்கும் இடையே நடந்த வழக்கின் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது.

ஆனால் மத்திய அரசின் புதிய தண்ணீர் கொள்கையின்படி இனி எல்லா தண்ணீரும் பொதுச் சொத்தாகக் கருதப்படும். அடிப்படை மனிதத் தேவைகளுக்கும், ஆறுகள் வற்றாமல் தக்கவைக்கவும் போதுமான நீர் அளவு நிர்ணயிக்கப்பட்டு, மீதி தண்ணீரை விலைக்கு விற்று பொருள் ஈட்டக்கூடிய ஒரு சரக்காகக் கருத மத்திய அரசின் கொள்கை அறிவிப்பு வகை செய்கிறது.

மக்களுக்கு குடி நீர், பாசன நீர் விநியோகிக்கும் வேலைகளை அரசுப் பொறுப்பிலிருந்து எடுத்துவிட்டு அதை தனியார் அமைப்புகளிடம் ஒப்படைப்பது இன்னொரு கொள்கை அறிவிப்பாகும். மின்சார விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்து அவர்கள் அதற்கான சந்தை விலையை நிர்ணயிக்க விடுவதைப் போல தண்ணீரிலும் செய்வதே மத்திய அரசின் நோக்கம். இப்ப்டியெல்லாம செய்யவேண்டும் என்று நீண்ட காலமாக உலக வங்கி இந்திய அரசுக்கு சொல்லி வருகிறது. அதைத்தான் இப்போது அரசு தன் கொள்கை அறிவிப்பாக வெளியிட்டுள்ளது.

எல்லா தண்ணீரையும் பொதுச் சொத்து என்று அறிவித்து அதில் ஒரு பகுதியை மட்டும் மக்களின் அன்றாட உபயோகத்துக்கு ஒதுக்கிவிட்டு அதையும் மீதியையும் விற்கவும் விநியோகிக்கவும் தனியார் அமைப்பிடம் அளிப்பதற்கு என்ன அர்த்தம் ? நந்திகிராம், சிங்கூர் போன்ற இடங்களில் மக்களின் நிலங்களை அரசு குறைந்த விலையில் கையகப்படுத்தி அவற்றை பெருமுதலாளிகள் தொழிற்சாலை அமைக்க சலுகை விலையில் தருவது போலவே தண்ணீரிலும் அரசு செய்ய விரும்புகிறது. மின்சாரம், தண்ணீர் எல்லாம் பெருமுதலாளி நிறுவனங்களுக்கு சலுகை விலையிலும், பொது மக்களுக்கு அதிக விலையிலும்  அப்படி அதிக விலையில் மக்களுக்கு விற்று லாபம் சம்பாதிக்கும் வாய்ப்பையும் அந்த கம்பெனிகளுக்கே ஏற்படுத்தித் தருவதுதான் உலக வங்கியின் நோக்கம்.அதற்கு இசைவாகவே  மன்மோகன் அரசு கொள்கை பிரகடனங்களைச் செய்கிறது.

தண்ணீருக்கு விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பு யாருடையது- அரசுடையதா, விநியோகிக்கும் தனியாருடையதா என்பது நிச்சயம் சிக்கல்களை ஏற்படுத்தும். பெரும் தொழிற்சாலைகள் கிராமப்பகுதிகளில் பெரும் அளவில் நீரை பயன்படுத்தினால் அதனால் பாதிக்க்ப்படும் நிலத்தடி நீரின் அளவைக் கணக்கிட்டு விலை நிர்ணயிக்கப்படுமா? நிர்ணயிக்கும் பொறுப்பே தனியார் நிறுவனத்தின் கையில் சென்றால் அது குடி நீர் விலையை சாதாரண மக்களுக்கு கட்டுப்படியாகாத அளவுக்கு ஏற்றிவிடாதா?

விவசாயத்தையே எடுத்துக் கொண்டால் மிக அதிகமாக தண்ணீர் செலவாகக்கூடிய பயிர்கள்  நெல், கோதுமை.ஒரு கிலோ அரிசி உற்பத்திக்கு 4 ஆயிரம் லிட்டர் நீர் தேவைப்படுகிறது. இந்தியாவில் மொத்த உணவு விளைச்சல் நடக்கும் நிலத்தில் 57 சதவிகித நிலத்தில அரிசியும் கோதுமையும்தான் பயிர்கள். இவற்றுக்கான நீர் கட்டணம்  ஒன்றாகவும் கம்பு, ராகி போன்ற நீர் குறைவாக தேவைப்படும் பயிர்களுக்கான நீர்க் கட்டணம் வேறாகவும் நிர்ணயிக்கப்படுமா? விவசாயமே பெருமளவில் நசிந்துவரும் நிலையில் இந்தக் கட்டணங்கள் சாத்தியம்தானா?

நீர் விநியோகத்தையும் நிர்வாகத்தையும் அரசுகளிடமிருந்து எடுத்து தனியாரிடம் ஒப்ப்டைப்பதற்கு வசதியாக, ஒவ்வொரு வட்டாரத்திலும் நீர் பயன்படுத்துவோர் அமைப்புகளை ஏற்படுத்தி அவையும் தனியார் கம்பெனிகளும் சேர்ந்து விநியோகம் நிர்வாகத்தை கூட்டாக மேற்கொள்ளவேண்டும் என்று கொள்கை பிரகடனம் சொல்கிறது. இதில் பல சாதக பாதகங்கள் இருக்கிறன. விவசாயத்தில் பாசன நீர் பயன்படுத்துவோர் யார் என்பது ஆயக்கட்டின் அடிபடையில் தீர்மானிக்கப்படலாம். ஆனால் குடிநீர் என்று வரும்போது உபயோகிப்போர் அமைப்பு என்பதை எப்படி உருவாக்குவது ? குடிநீர் பெறும் மக்கள் வசிக்கும் கிராமத்தின் பஞ்சாயத்திடமா?  அல்லது பால் சொசைட்டிகள் மாதிரி ஊழலுக்கு வாகான இன்னொரு போட்டி அமைப்பாகவா?

தமிழ்நாட்டில் மாநில அரசு ஏற்கனவே பாசனத்துறையில் நீர் உபயோகிப்போர் அமைப்புகளை ஏற்படுத்திவிட்டது. இருபது மாவட்டங்களில்  1566 பயன்படுத்துவோர் சங்கங்களும், 161 விநியோக கமிட்டிகளும், 9 திட்டக் குழுக்களும் 2004ல் உருவாக்கப்பட்டுவிட்டன. ஐந்து வருடம் கழித்து 2009ல் இவற்றுக்கு அடுத்த தேர்தலும் நடத்தப்பட்டன. இவற்றின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு எதுவும் இன்னும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.

நிலத்தடி நீர் நிர்வாகம், கட்டுப்பாட்டிற்காக தமிழகத்தில் 2003லேயே ஒரு தனிச்சட்டம் போடப்பட்டது. ஆனால் அது நடைமுறைக்கு இன்னும் கொண்டுவரப்படவில்லை. இப்போது மத்திய அரசு தண்ணீர் கொள்கையை அறிவித்ததையடுத்து தானும் தன் கொள்கையை தயாரித்துவருவதாக தமிழக அரசு சொல்லியிருக்கிறது. ஆனால் 2012-13க்காக வெளியிடப்பட்ட பாலிசி நோட் என்பது 1994ன் கொள்கை அடிப்படையிலேயே உள்ளது.

மத்திய அரசின் புதிய தண்ணீர் கொள்கை நாடு முழுவதும் நகரங்கள், கிராமங்கள் எல்லா இடங்களிலும் விவாதிக்கப்பட வேண்டியதாகும்.அப்படி விவாதித்து கருத்துகளைத் தெரிவிக்க நிச்சயம் ஒரு மாதம் போதாது.

ஆனால் மத்திய அரசு இந்த வருடம் ஜனவரி மாதத்தில் தண்ணீர் கொள்கையை அறிவித்துவிட்டு அது தொடர்பான கருத்துகளை மக்களும் மாநில அரசுகளும் தெரிவிக்க, கடைசி நாள் பிப்ரவரி 29 என்று சொல்லிவிட்டது. எதற்கெடுத்தாலும் மன்மோகன்சிங்குக்கு கடிதம் எழுதும் ஜெயலலிதா இன்னும் இதற்கு எந்தக் கடிதமும் எழுதியதாகத் தெரியவில்லை.

ஒவ்வொரு பஞ்சாயத்திலும் ஒவ்வொரு பெரு நகரத்திலும் விவாதிக்கப்பட வேண்டிய இந்த  விஷயத்தை விவாதிக்க ஏற்பாடு செய்யவேண்டிய அரசியல் கட்சிகள் எல்லாம் இதைப் பற்றிக் கவலைப்படவே இல்லை. நுகர்வோர் அமைப்புகள், விஞ்ஞானிகள், பொறியாளர்கள் என்று பலரும் கூடிப் பேச வேண்டிய விஷயம் யாரும் கவனிப்பாரில்லாமல் அரசுகளால் மக்கள் மீது திணிக்கப்பட்டுவிடும் ஆபத்துதான் நடக்கிறது.

சட்டமன்றம் முதல் டி.வி சேனல்வரை உருப்படாத விஷயங்களே நேரத்தை ஆக்ரமிக்கின்றன.ஒவ்வொரு பிரச்சினையையும் அது யாரோ இன்னொருவருடையது என்று பார்க்கும் பார்வை நம் சமூகத்தில் அதிகமாகிவிட்டது. அணு உலை பிரச்சினையை தமிழகத்தின் பிரச்சினையாக பார்க்காமல் அது இடிந்தகரை மீனவர்கள் மட்டுமே கவலைப்படுகிற விஷயமாகத் தவறாகப்  பார்க்கப்பட்டது. தண்ணீரையும் அப்படி கருதினால் தவிச்ச வாய்க்கு தண்ணீர் கிடைக்காமல் செத்துப் போவோம்.

இந்த வாரக் கேள்விகள்:

1.கலைஞர் கருணாநிதிக்கு:

நீங்களே கொன்ற டெசோவுக்கு நீங்களே இப்போது உயிர் கொடுத்து எழுப்பி, தனி ஈழத்துக்கான மக்கள் வாக்கெடுப்பு கோரிக்கையை முன்வைத்திருக்கிறீர்களே? ஏன் இந்த கோரிக்கையை கடந்த 29 வருடங்களில் சுமார் 11 வருடங்கள் ஆட்சியில் இருந்தபோதும் ஒரு முறை கூட முன்வைக்கவில்லை? பிரபாகரனையும் இலங்கை அரசையும் போரை நிறுத்திவிட்டு பொதுவாக்கெடுப்பு நடத்தும் படி அப்போதே சொல்லியிருக்கலாமே? ஏன் சொல்லவில்லை ? இதே கோட்பாட்டின்படி இந்தியாவிலும் காஷ்மீர், நாகாலாந்து, மணிப்பூர் போன்ற பகுதிகளிலும் மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தி பிரிந்து போகும் உரிமையை வழங்கச் சொல்லுவீர்களா? மாட்டீர்களென்றால், காஷ்மீருக்கும் ஈழத்துக்கும் என்ன வித்யாசம் ?

2.அப்துல் கலாமுக்கும் நாராயணசாமிக்கும்:

சுனாமி வந்தாலும் கூடங்குளம் அணு உலைக்கு எந்த பாதிப்பும் வராது என்று சொன்னீர்களே, அப்படியானால் ஏன், இப்போது இந்தோனேஷிய பூமி அதிர்ச்சியால் சுனாமி எச்சரிக்கை வந்த உடனே கூடங்குளம் அணு உலையில் வேலை செய்துகொண்டிருந்த அதிகாரிகள், பொறியாளர்கள், ஊழியர்களை மட்டும் அவசர அவசரமாக பஸ்களில் ஏற்றி ‘பாதுகாப்பான’ இடத்துக்கு அனுப்பினார்கள்? பாதிக்கமுடியாத சுனாமிக்கு ஏன் பயம் ? ஏன் அங்கே சுற்றி வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தவில்லை ? நிஜமாகவே சுனாமி தாக்கினாலும் இதையேதான் செய்வார்கள் என்றுதானே மக்கள் நினைக்கமுடியும் ?

3.ஜெயலலிதாவுக்கு:

சித்திரைத் திருநாளன்று உங்கள் அரசு நடத்திய  உழவர் விழாக்களுக்கு வந்தவர்களுக்கு போட்ட விருந்தின் மெனுவை நீங்கள்தான் தயாரித்துக் கொடுத்தீர்கள் என்று பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே, இதில் என்ன பெருமை ? இது ஒரு முதலமைச்சரின் வேலையா? அரசின் கடை நிலை ஊழியர் செய்துவிட்டுப் போக வேண்டிய விஷயம். கிடக்கட்டும் இந்த மெனுவில் காட்டிய அக்கறையை என்றாவது பள்ளிக்கூட சத்துணவு மெனுவில் காட்டியிருக்கிறீர்களா? ஏராளமான ஊர்களில் சரிபாதி முட்டைகளை பொது மார்க்கெட்டுக்கு விற்றுவிட்டு குழந்தைகளை ஏமாற்றும் வேலையில் சில முட்டை காண்ட்ராகடர்களும் உங்கள் கட்சிக்காரர்களும் ஈடுபட்டிருப்பது உங்களுக்குத்  தெரியாதா ?

இந்த வார திட்டு:

தமிழக அரசுக்கும் மின்வாரியத்துக்கும். காற்றாலை மூலம் கூடுதல் மின்சாரம் கிடைத்ததும் ஏன் சென்னை நகரின் இரண்டு மணி நேர மின்வெட்டை உடனே கைவிடவேண்டும் ? அதற்கு பதில் வெளியூர்களில் பல மணி நேரங்கள் இருக்கும் மின்வெட்டை சென்னைக்கு சமமாக இரண்டு மணி நேரம் ஆக்கியிருக்கலாமே. முழுத் தேவைக்கான மின்சாரம் கிடைக்கும்வரை சென்னையிலும் மின்வெட்டைத் தொடராமல், மற்ற ஊர்களை மட்டுமே வதைப்பது எப்படி நியாயம் ?

கல்கி 5,5,2012

ஊழலின் வெள்ளி விழா…
சரியாக 25 வருடங்களுக்கு முன்னால் ஏப்ரல் 16 அன்று ஸ்வீடன் வானொலி போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழலை அமபலப்படுத்தியது.

இளம் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்று வர்ணிக்கப்பட்ட ராஜீவ் காந்தியின் ஆட்சியைத் தூக்கி எறிந்தது போஃபர்ஸ் ஊழல். இந்தியாவில் இந்த ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம் ஊழலின் வெள்ளி விழா ஆண்டில் தனக்கு ஊழல் தொடர்பான அத்தனை முக்கிய ஆவணங்களையும் கொடுத்த ரகசிய மனிதர் யார் என்பதை இப்போது வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஸ்வீடன் நாட்டு போலீஸ் துறைதலைவரான ஸ்டென்  லிண்ட்ஸ்ட்ராம்தான் சித்ராவுக்கு முக்கியமான 350 ஆவணங்களின் பிரதிகளையும் கொடுத்தவர். 25 வருட காலமாக இதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருந்தவர், இப்போது பகிரங்கமாகத் தானே முன்வந்து சித்ரா மூலமாக  ஒரு பேட்டியில் எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார். இந்தியாவில் பத்திரிகை,ஊடகத்துறைகள் பற்றி விமர்சனப்பூர்வமாக செய்திகளும் கட்டுரைகளும் வெளியிடும் மீடியா வாச் அமைப்பான   ஹூட். ஆர்க் இந்த பேட்டியை வெளியிட்டிருக்கிறது.

ஸ்டென் போன்ற அரசு, காவல் துறை சார்ந்த மனசாட்சியுள்ள அதிகாரிகள் ரகசியமாக தகவல் தருவதம் மூலம்தான் உலகில் பல ஊழல்கள், முறைகேடுகள் அமபலத்துக்கு வருகின்றன. தகவல் தந்தவர் யார் என்பதை வெளிப்படுத்தாமல் ரகசியமாக வைத்துக் கொள்வது பத்திரிகையாளரின் முக்கியமான அறம். நீதிமன்றமே உத்தரவிட்டாலும், தனக்கு ரகசிய தகவல் தந்தவர் பெயரை வெளியிட மறுத்து அதற்காக சிறை தண்டனை பெற்ற நிருபர்கள் பலர் உண்டு.

எழுபதுகளில் அமெரிக்க அதிபர் நிக்சன் ஆட்சி கவிழக் காரணமாக இருந்தது வாட்டர்கேட் ஊழல். நிக்சன் தன் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் தேர்தல் அலுவலகம் இருந்த வாட்டர்கேட் ஹோட்டல் அறைகளை ஒட்டுக் கேட்பதற்குக் கருவிகள் பொருத்த ஆட்களை அனுப்பியதுதான் வாட்டர்கேட் ஊழல். அவர்கள் அறையை உடைத்து நுழைந்தபோது சிக்கிக் கொண்டார்கள். இவர்கள் வெறும் திருடர்கள் அல்ல, நிக்சனின் உளவாளிகள் என்பதை வாஷிங்டன் போஸ்ட் நிருபர்கள் பாப் உட்வர்ட், கார்ல் பெர்ன்ஸ்டெய்ன் தொடர்ந்து பல கட்டுரைகளின் மூலம் அம்பலப்படுத்தினார்கள். கடைசியில் நிக்சன் பதவி விலகவேண்டியதாயிற்று. அவருடைய அதிகாரிகள் பலர் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள்.

நிருபர் உட்வர்ட் தன் கட்டுரைகளில் இந்த விவகாரம் பற்றிய முழு தகவல்களைத் தனக்குக் கொடுத்தவருக்கு ‘டீப் த்ரோட்’ என்று பெயர் சூட்டி எழுதி வந்தார்.  அடித் தொண்டையிலிருந்து தகவல்களை ரகசியமாக கிசுகிசுத்து வந்ததால் இந்தப் பெயர் என்று வைத்துக் கொள்ளலாம். உண்மையில் இந்தப் பெயரை சூட்டிய உட்வர்டின் செய்தி ஆசிரியர் அதைத்தேர்ந்தெடுக்கக் காரணம் அப்போது அமெரிக்காவில் பிரபலமாக ஓடிய ஒரு  செக்ஸ் படம்தான். அந்தப்  படத்தின் டைட்டில்தான் டீப் த்ரோட். (ஏன் அந்தப் படத்துக்கு அந்த டைட்டில் என்பதை நான் நிச்சயம் கல்கியில் எழுத முடியாது.)

அதிலிருந்து நிருபர்களுக்கு ஊழல்கள், குற்றங்கள் பற்றி ரகசிய தகவல் கொடுப்போர் எல்லாரையுமே டீப் த்ரோட் என்று அழைப்பது இதழியலில் வழக்கமாகிவிட்டது. நிருபர் உட்வர்டுக்கு தகவல் சொன்ன டீப் த்ரோட் யார் என்பதை அவர்  வெளியிடவே இல்லை. ஊழல் அம்பலமாகி 30 வருடங்கள் கழித்து, இறப்பதற்கு சில வருடம் முன்பாக டீப் த்ரோட்டே தன்  91ம் வயதில் நான்தான் அந்த டீப் த்ரோட் என்று அறிவித்தார். அப்போதுதான் உட்வர்ட் அதை உறுதிப்படுத்தினார். அதுவரை சுமார் 60 பேரை அவர்தான் டீப் த்ரோட் என்று ஊகத்தில்  பத்திரிகைகளும் ஊடகங்களும் சொல்லிக் கொண்டிருந்தன.

உட்வர்டின் டீப் த்ரோட் அமெரிக்க விசாரணை அமைப்பான எஃப்.பி.ஐயின் இணை இயக்குநராக இருந்த வில்லியம் மார்க் ஃபெல்ட்.  அவரைப் போலவே ஸ்வீடிஷ் காவல் துறையின் உயர் அதிகாரிதான்    சித்ரா சுப்பிரமணியத்தின் டீப் த்ரோட் ஸ்டென்.

ஏன் ஸ்டென் இந்த ஊழலை அம்பலப்படுத்தினார் ?  “ஸ்வீடன் நாட்டில் பொது வாழ்க்கையில் – அரசியலில், வர்த்தகத்தில்- பல உயர்ந்த தரமான அளவுகோல்களை நாங்கள் ஏற்படுத்தி பல வருடங்களாகின்றன.  ஊழல் என்றால் எங்கோ தொலைவில் ஆப்ரிக்கா, ஆசியாவில்தான் நடக்கும் என்ற நினைப்பில் இருந்த எங்களுக்கு ஸ்வீடன் அரசின், அரசியலின் உயர் நிலையிலேயே இப்படி ஊழல் நடப்பது தெரியவந்ததும் அதிர்சியடைந்தேன். இதை மூடி மறைக்க  எங்கள் நாட்டுத் தலைமை முயற்சித்ததும், எனக்கு இதை எப்படியாவது அமபலப்படுத்துவதை தவிர வேறு நியாயமான வழி எதுவும் இல்லை” என்கிறார் ஸ்டென்.

இந்தியாவிலும் ஊழலை மூடி மறைக்க பெரும் முயற்சி நடந்தததை ஸ்டென் குறிப்பிடுகிறார். ராஜீவ் காந்தி, அருண் நேரு, இத்தாலிய தரகர் கொட்ரோச்சி மூவரின் பெயரும் வெளிவராமல் பார்க்க என்னென்னவோ செய்தார்கள் என்கிறார் ஸ்டென். குறிப்பாக அருண் நேரு பெயர் அமபலமானாலும் பரவாயில்லை, கொட்ரோச்சி பெயர் வெளியாகக் கூடாது என்று கடுமையாக வேலை செய்தார்கள் என்று சொல்லும் ஸ்டென், ராஜீவ் காந்தி லஞ்சம் வாங்கியதற்கு எந்த சாட்சியமும் இல்லை,  ஆனால், கொட்ரோச்சி குற்றவாளி என்பதற்கு பலமான சாட்சியம் உள்ளது என்கிறார். கொட்ரோச்சியைக் காப்பாற்ற ராஜீவ் ஆட்சி கடைசி வரை முயற்சி செய்ததையும் கடைசியில் கொட்ரோச்சி மீது ஒரு குற்றமும் இல்லை என்று இந்திய நீதிமன்றங்களிலேயே சொல்லப்பட்டதையும் ஸ்டென்  சுட்டிக் காட்டுகிறார்.

கடைசி வரை குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. நிரபராதிகள்தான் தண்டிக்கப்பட்டார்கள். பொய்யாக அமிதாப்பச்சன் மீது குற்றம் சுமத்தி இந்தியாவின் சி.பி.ஐ வழக்கை திசை திருப்பப் பார்த்தது என்கிறார் ஸ்டென்.

போஃபர்ஸ் பீரங்கி பேரத்தில் ஊழல் நடந்தது எவ்வளவு நிஜமோ அவ்வளவு பொய் அந்த பீரங்கி தரமில்லாதது என்பது என்று ஸ்டென் சொல்கிறார். நல்ல சரக்கு. நல்ல கம்பெனி. வியாபார ஆசையில் ஊழலில் இறங்கிவிட்டதுதான் குற்றம் என்பது ஸ்டென் கருத்து. போஃபர்ஸ் பீரங்கிகள் தரமானவை என்பதை நானும் நேரில் கார்கில் யுத்தகளத்தில் பார்த்தேன். அந்தப் போரில் இந்தியா வெல்ல, அவை முக்கிய பங்காற்றின.

போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் தொகை அன்று பெரியது.  கொட்ரோச்சி சுருட்டியது சுமார் 21 கோடி என்கிறார்கள். மொத்த ஊழல் தொகை 64 கோடி இருக்கலாம். இன்றைய மதிப்பில் அது அதிகபட்சம் 640 கோடி என்றே மிகைப்படுத்தினாலும் கூட, ஸ்பெக்ட்ரம் ஊழலுடன் ஒப்பிட்டால் ரொம்பச் சின்னது.

ஆனால்  ஸ்பெக்ட்ரம் ஊழலை விடக் கூடுதலாக போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல், இந்திய அரசியலையும் பலருடைய வாழ்க்கையையும் புரட்டிப் போட்டிருக்கிறது.

இந்தியாவின் முதல் இளம் பிரதமர்  ராஜீவ் காந்தி 1984ல் பதவி ஏற்றது முதல் அடுத்த மூன்று வருடங்கள், பரவலாக அவருக்கு பெரும் வரவேற்பு இருந்தது. அவரது தாயார் இந்திரா காந்தியைக் கடைசி வரை கடுமையாக எதிர்த்து வந்த  இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை அதிபர் ராம்நாத் கோயங்கா ராஜீவை நம்பிக்கை நட்சத்திரம் என்று புகழ்ந்தார்.  ஆனால் அடுத்தடுத்து அம்பலமான ராணுவ பேர ஊழல்கள் ராஜீவ் ஆட்சியைக் கவிழ்த்தது மட்டுமல்ல, இந்திய அரசியலின் தன்மையையே மாற்றின.

ஒற்றைப் பெரும்கட்சி ஆட்சி நடத்துவது என்ற நிலையில் இருந்த டெல்லி அரசியல் இனி கூட்டணி அரசியல்தான், மாநிலக் கட்சிகளுக்கு டெல்லியில் பங்கு கொடுத்தால்தான் ஆட்சி நடத்த முடியும் என்ற நிலையைத் தொடங்கி வைத்தது போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் விவகாரம். அதை எதிர்த்து காங்கிரசிலிருந்து வெளியேறிய வி.பி.சிங் ஜன் மோர்ச்சாவை உருவாக்கி பின்னர் அதை ஜனதா தளமாக்கினார். தி.மு.க, அசாம் கண பரீஷத் உள்ளிட்ட மாநிலக் கட்சிகளுடன் சேர்ந்து தேசிய முன்னணியைத் தொடங்கினார். அதன் பின்னர் இன்று வரை டெல்லி அரசியல், மாநிலக்கட்சிகள் ஆதரவுடனான கூட்டணி அரசியல்  பாதையை விட்டு பழைய பாதைக்குப் போகவேமுடியாத நிலையை அடைந்துவிட்டது.

இன்று போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் பற்றி இடதுசாரிகள் தவிர வேறு எந்தக் கட்சியும் பேச விரும்புவதில்லை. பாரதிய ஜனதா, சோனியா காந்தியை எரிச்சலூட்டுவதற்காக அவ்வப்போது கொட்ரோச்சி பற்றி பேசும். ஆனால் கொட்ரோச்சி, ராஜீவுக்கு நிகராக போஃபர்ஸ் கம்பெனி தலைவர் அர்ட்போவின் டயரியில் குறிப்பிடப்பட்ட அருண் நேருவைப் பற்றி வாயைத் திறக்காது. காரணம் அருண் நேரு வி.பிசிங்கிடமிருந்தும் விலகி பாரதிய ஜனதாவில் ஐக்கியமானவர். அயோத்தி பாபர் மசூதியில் 1948லிருந்து பூட்டி வைக்கப்பட்டிருந்த பகுதியை ஹிந்துக்கள் வழிபாட்டுக்கு திறந்துவிடும்படி ராஜீவ் ஆட்சியில் உத்தரவிட்டு, பாபர் மசூதி இடிப்புக்கு  வழி வகுத்துக் கொடுத்தவர் அருண் நேருதான்.

தி.மு.கவின் நிலை இன்னும் மோசம். அதன் நீண்ட நெடிய வரலாற்றில் முக்கியமான மைல் கல்கள் நெருக்கடி நிலையும் போஃபர்ஸ் ஊழலெதிர்ப்பும் காங்கிரசுடன் சம்பந்தப்பட்டவை. 1975ல் இந்திராவின் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி  தமிழக ஆட்சியை இழந்த தி.மு.க அதன்பின் 1989 வரை ஆட்சிக்கு வரமுடியவே இல்லை. 1989ல்  ஆட்சிக்கு வர உதவியது போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் எதிர்ப்புதான். தெருமுனைகளிலெல்லாம் பீரங்கி பொம்மை வைத்து பிரசாரம்செய்த தி.மு.க.வுக்காக ராஜீவ் ஊழல் எதிர்ப்பு நாயகன் வி.பி.சிங் தமிழ்காம் முழுவதும் பிரசாரம் செய்தார்.

இன்று  ஸ்பெக்ட்ரம் ஊழலையடுத்து காங்கிரஸ் அணியை விட்டு விட்டு வெளியேறவேமுடியாமல் அதை  ஆரக் கட்டித் தழுவிக் கொண்டிருக்கும் தி.மு.கவால் நெருக்கடி காலம், போஃபர்ஸ் இரண்டைப் பற்றியும் பேசவே   முடிவதில்லை.

போஃபர்ஸ் ஊழல் பத்திரிகைத்துறைக்கு பெரும் ஊக்கத்தை கொடுத்தது. ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் இரண்டு பத்திரிகைகளும் போட்டி போட்டுக் கொண்டு ஊழலை அம்பலப்படுத்தின. உண்மையில் இதற்கான முழு பெருமை பத்திரிகைகளை விட நிருபர் சித்ரா சுப்ரமணியத்துக்கே உரியது. அவர் ஹிந்துவில் இருந்தபோது அது போஃபர்ஸ் பற்றி வெளியிட்டது. கருத்து வேறுபாட்டால் அவர் எக்ஸ்பிரஸுக்கு சென்றதும் அங்கேயும் அவர் தன் புலனாய்வைத் தொடர்ந்தார். அவரை இரு ஏடுகளும் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டன.

ஸ்வீடனில் இருந்த சித்ரா போஃபர்ஸ் ஊழலை துப்பறிந்தபோது கருவுற்றிருந்தார். சில மாதங்களில் குழந்தை பிறந்தது. உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் சித்ரா தொடர்ந்து தீவிரமாகப் பணியாற்றினார். அவரையும் குழந்தைகளையும் கடத்தப் போவதாக மிரட்டல்கள் வந்தன.  அவருக்கு அந்நிய நிதி உதவி வருவதாகக் காட்ட, அவரது வங்கிக் கணக்கில அநாமதேயமாக பணம் போடும் முயற்சிகள் நடந்தன. அவர் அதையெல்லாம் முறியடித்தார்.

சித்ராவுக்கும் ஹிந்துவுக்கும் இருந்த உறவு முறியக் காரணம் என்ன என்பதை இப்போது ஸ்டென் தெரிவிக்கும் தகவல் சொல்கிறது. முக்கியமான  ஆவணங்கள் சிலவற்றை ஸ்டென் கொடுத்தும் கூட அவற்றை ஹிந்து பல மாதங்கள் வெளியிடாமல் தாமதம் செயதது. ஸ்டென்தான்  லீக் செய்கிறார் என்ற சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் பரவியது. இது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியது. சித்ரா ஹிந்துவை விட்டு எக்ஸ்பிரசுக்கு மாறினார். ஸ்டென் இப்போது சித்ராவுக்கு அளித்திருக்கும் பேட்டியில், சித்ரா மீது இருந்த நம்பிக்கையால்தான் ஆவணங்களைக் கொடுத்ததாகவும் பத்திரிகை பெயருக்காக அல்ல என்றும் சித்ரா எந்த பத்திரிகையில் இருந்தாலும் கொடுத்திருப்பேன் என்றும் சொல்கிறார்.

போஃபர்ஸ் ஊழல் அம்பலம் பற்றிய ஹிந்துவின் கட்டுரையை உலகின் சிறந்த 50 கட்டுரைகளில் ஒன்றாக ஹிந்து ராம் படித்த கொலம்பியா பல்கலைக்கழகம் தேர்வு செய்திருக்கிறது. அந்தக் கட்டுரை சித்ராவும் ராமும் சேர்ந்து எழுதியதாகும்.

போஃபர்ஸ் ஊழல் அம்பலத்துக்காக பல விருதுகளைப் பெற்ற சித்ரா பின்னர் இதழியல் தவிர அறம் சார்ந்த வணிக நடைமுறைகளுக்கான ஆலோசனை, ஐ.நா உலக சுகாதார நிறுவனத்தின் புகை பிடித்தலுக்கேதிரான இயக்கம் என்று வேறு துறைகளில் செயல்பட்டு வருகிறார்.

என் வாழ்க்கை திசையை மாற்றியதிலும் போஃபர்ஸ் ஊழலுக்கு ஒரு முக்கியமான பங்கு உள்ளது. கல்லூரி நாட்களுக்குப் பின் 16 வருடங்களாக நேரடி அரசியலில் பங்கேற்காத நான் , வி.பி.சிங் ஜன் மோர்ச்சா, தேசிய முன்னணிகளைத் தொடங்கியதும் காங்கிரசுக்கு மாற்று அணி உருவாவதில் அக்கறையுடன் அவரை ஆதரித்து தமிழகத்தில் அவருடைய மேடைப்பேச்சு மொழிபெயர்ப்பாளனாக செயல்பட்டேன். 1988ல் மறைமலை நகரில் ராஜீவ் தலைமையில் காங்கிரஸ் மாநாடு நடந்தபோது, நானும் நணபர் எழுத்தாளர் நாகார்ஜுனனும் அதை கிண்டல் செய்து அகில இந்திய போபர்ஸ் பீரங்கி ஊழல் ரசிகர் மன்ற மாநாட்டு சிறப்பு மலர் என்று ஒன்றை வெளியிட்டோம். அது முரசொலியின் இணைப்பாக வெளிவந்து பின்னர் அதுவே முரசொலியின் ‘புதையல்’ ஞாயிறு மலராயிற்று. ஓராண்டு காலம் அதில் காங்கிரஸ் எதிர்ப்புப் பிரசாரம் செய்தேன். தமிழகத்தில் தி.மு.கவும் டெல்லியில் வி.பி.சிங் தலைமையில் தேசிய முன்னணியும் ஆட்சிக்கு வந்ததும் நான் நேரடி அரசியலிலிருந்து விலகிக் கொண்டேன்.

என்னைப் பொறுத்தமட்டில் போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் தொடர்புடையவர்கள் யாரும் தண்டிக்கப்படாமல் போய்விட்டது வருத்தமாக இருந்தாலும்,  இரு காரணங்களுக்காக அந்த நிகழ்வை முக்கியமானதாக என்றும் கருதுவேன். இந்தியாவில் டெல்லி அரசியலில் பெடரலிசம் கொஞ்சமேனும் ஏற்பட அதுவே தூண்டுதலாக இருந்தது முதல் அம்சம். இன்று போல அன்று டெலிவிஷன் சேனல்கள் இல்லை. ஆனால் அச்சு ஊடகங்களான பத்திரிகைகளின் சக்தி எத்தகையது என்பதை சுதந்திர இந்தியாவில்  காட்டிய முதல் நிகழ்வு அதுதான். எமர்ஜென்சியில் களங்கத்துக்குள்ளான பத்திரிகைத் துறை அதைத் துடைத்தெறிந்து தன் அசல் வலிமையை கடமையை போபர்சில் செய்தது.

இதிலிருந்தெல்லாம் நாம் கற்ற பாடங்கள் என்ன என்பதன் அடையாளங்கள் ஏதேனும் 25 வருடம் கழித்து நிலவும் இன்றைய அரசியல் சூழலில் தெரிகிறதா என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

கல்கி 27.4.2012

ஒரு வீடு, பல சுவர்கள் (நகர்வலம்-4,5)
அண்மையில் சத்தியம் தியேட்டருக்கு ஒரு படம் பார்க்கச் சென்றபோது அப்படியே அதன் பக்கத்தில் இருக்கும் என் வீட்டையும் போய் பார்த்துவிட்டு வந்தேன். என் வீடு என்று உரிமையோடு சொல்கிறேன். அந்த இடத்தில் அந்த 450 சதுர அடி வீடு மட்டும் என்னுடையதாக இருந்தால் நான் நிச்சயம் ஒரு கோடீஸ்வரனாகி விடுவேன். அது அரசாங்கத்துடைய வீடு. எனக்கு வாடகைக்குக் கொடுத்திருந்தார்கள். பின்னாளில் நான் சொந்த வீடு கட்டினேன். விற்றேன். இன்னொரு அடுக்கு மாடிக் குடியிருப்பு வீட்டை வாங்கினேன். என்றாலும் சத்தியம் தியேட்டர் அருகே உள்ள பீட்டர்ஸ் காலனியில் நான் 20 வருடங்கள் வசித்த வீடுதான், எனக்கு சென்னையில் என் சொந்த வீடாக மனதில் எப்போதும் நிலைத்திருக்கிறது.

அரசு ஊழியர்களுக்காக தமிழக அரசு கட்டிய வாடகை வீடுக் குடியிருப்புகளில் பத்து சதவிகித வீடுகளை பத்திரிகையாளர்களுக்கு ஒதுக்கும் திட்டம் எழுபதுகளிலிருந்து நடைமுறையில் இருக்கிறது. விண்ணப்பங்களை காலவரிசைப்படி பரிசீலித்து ஒதுக்கீடு செய்ய அரசு ஒரு ஹவுசிங் கமிட்டியையும் அப்போது அமைத்திருந்தது. அதில் பத்திரிகையாளர் பிரதிநிதிகளும் இருப்பார்கள். விண்ணப்பித்தவர் அசல் பத்திரிகையாளரா என்று உறுதி செய்ய இந்த ஏற்பாடு. வாடகை வீடு ஒதுக்கப்படுபவருக்கு சென்னையில் சொந்த வீடு இருக்கக் கூடாது என்பது ஒரு விதி. சொந்த வீடு வாங்கினால், இதை காலி செய்துவிட வேண்டும். அப்படித்தான் நான் காலி செய்தேன். இந்த விதிகளைப் பின்பற்றாமல் மீறுவது, தன் பெயரில் வைத்துக் கொண்டு இன்னொருவரைக் குடியமர்த்துவது, ஹவுசிங் கமிட்டி இல்லாமல் ஒதுக்கீடு செய்வது போன்ற சீரழிவுகளெல்லாம் நானறிந்து தொண்னூறுகளில் தொடங்கிவிட்டன. இப்போதைய நிலை என்ன என்று எனக்குத் தெரியவில்லை.

நான் சென்னைக்கு 1975ல் வந்ததும் விண்ணப்பித்தேன்.காத்திருப்புப் பட்டியல் வரிசைப்படி எனக்கு இரு வருடங்கள் கழித்து 1977ல் பீட்டர்ஸ் காலனியில் வீடு ஒதுக்கப்பட்டது. எனக்கு முன்னர் அந்த வீட்டில் இருமுறை வேறு பத்திரிகையாளரும் அரசு ஊழியரும் குடியிருந்துள்ளனர். பீட்டர்ஸ் காலனியும் சத்தியம் தியேட்டரும் இருக்கும் இடங்கள் 1940களில் காடுகளாகவும் குளங்களாகவும் இருந்தவை. பாரி முனையிலிருந்து இந்தக் காட்டையும் அடவியையும் கடந்து ராயப்பேட்டைக்கு நடந்து வந்ததாக தி.ரு.வி.க எழுதியிருக்கிறார்.

பீட்டர்ஸ் சாலையை ஒட்டி தரை தளத்தில் இருந்த 17/2 பீட்டர்ஸ் காலனிக்கு 1977ல் நான் குடியேறியபோது எனக்கு வயது 23. அடுத்த 20 வருடங்கள் நான் அங்கிருந்தேன். எந்த மனிதரின் வாழ்க்கையிலும் 23 முதல் 43 என்பவை மிக முக்கியமான ஆண்டுகள். பத்திரிகை, நாடகம், தொலைக்காட்சி, சினிமா என்று என் எல்லா துறை முயற்சிகளுக்கும் அந்த வீடுதான் நாற்றங்கால்.

மணமாகாத இளைஞனாக என் அம்மா, பெரியம்மா இருவருடன் அந்த வீட்டில் குடியேறிய நான் 20 வருடம் கழித்து வெளியேறிய போது அவர்கள் இருவரும் இல்லை. இறந்துவிட்டார்கள். வேறு இருவர் இருந்தார்கள் – என் மனைவியும் என் மகனும். இடைப்பட்ட 20 வருடங்களில் எண்ணற்ற நண்பர்கள் என்னுடன் தங்கியிருந்தார்கள் – சில பிரபலங்கள் உட்பட. எழுத்தாளர்கள், திலீப் குமார், பிரபஞ்சன்,நடிகர் பாலாசிங்… இப்படி. எண்பதிலிருந்து 90 வரை கடும் வறுமையில் நான் இருந்த ஆண்டுகள் அவை. ஆனால் மிகச் செழுமையான நினைவுகள் பல அந்த வீட்டுடன் தொடர்புடையவை.

அந்த வீட்டில் பத்தடிக்குப் பத்தடி இருக்கும் ஒற்றை அறையில் பரீக்‌ஷா குழுவினர் இருபது பேர் உட்கார்ந்து நாடகப் பயிற்சி செய்திருக்கிறோம். ஒரு பெரும் புயல் சமயத்தில் நாட்கணக்கில் வீட்டை விட்டு நகரமுடியாமல் அந்த ஒற்றை அறையில் சுமார் எட்டு பேர் தங்கி, உணவுப் பஞ்சத்தை தோழி பத்மா சமைத்த உப்புமாவின் உதவியுடனே சமாளித்திருக்கிறோம். என் மகன் பீட்டர்ஸ் காலனி சூழலில் சுமார் 13 வயது வரை வளர்ந்தது அவனுடைய வளர்ச்சியில் மிக முக்கியமான பங்களிப்பு என்று நம்புகிறேன். சாதி,மத,அந்தஸ்து வேறுபாடுகள் எதுவும் இன்றிக் குழந்தைகள் வளரக்கூடிய சூழல் அப்போது அங்கே இருந்தது. அந்தக் காலனியைச் சார்ந்து பணியாற்றிய வீட்டுப் பணியாட்கள், காய்கறிக்காரர்கள், என்று பலரும் அங்கிருந்த குடும்பங்களுடன் நெருக்கமாக உறவாடினார்கள்.என் அம்மா உடல்நலம் குன்றிப் படுத்துக் கிடந்த கடைசி நாட்களில் நான் ஊரில் இல்லாத வேளையில் வந்து உதவிகள் செயதவர்கள் பீட்டர்ஸ் சாலை நடைபாதை வாசிகளும் ஆட்டோ டிரைவர்களும்தான். காலனியை விட்டு வந்து 15 வருடங்களுக்குப் பிறகும் அங்கே செல்லும்போதெல்லாம் அவர்களில் பலரை இன்னும் சந்திக்கவும் அளவளாவவும் முடிகிறது.

இப்போது அந்தக் காலனிக்கு எதிரே தேவையற்ற ஒரு மேம்பாலம் வந்துவிட்டது. காலனியின் சுற்றுச் சுவர் நான் வெளியேறுவதற்கு சில வருடங்கள் முன்பு ஒரு கோட்டைச்சுவர் போல என் எதிர்ப்பையெல்லாம் பொருட்படுத்தாமல் கட்டப்பட்டுவிட்டது. அதுவரை அங்கே நம் இடுப்பளவு கூட வராத ஒரு சுற்றுச் சுவர்தான் இருந்தது. பரீக்‌ஷா நண்பர்களும் இன்று நாடறிந்த எழுத்தாளர்களான அறந்தை நாராயணன்,  இன்குலாப், அக்கினிபுத்திரன், ம.ராஜேந்திரன், சுரேஷ் குமார் இந்திரஜித், விக்ரமாதித்தன், நாகார்ஜுனன், விமலாதித்த மாமல்லன், சாரு நிவேதிதா போன்ற பலரும் என் வீட்டுக்கெதிரே அந்த சுவரில் அமர்ந்து உரையாடி மகிழ்ந்திருக்கிறோம். அறந்தை, அக்கினி, ம.ரா, சுரேஷ்குமார் இந்திரஜித் ஆகியோரும் காலனிவாசிகளாகவே அந்த சமயத்தில் இருந்தது எனக்குக் கிடைத்த ஒரு நல்வாய்ப்பு. பீட்டர்ஸ் காலனியில் நான் 1977ல் குடியேறியபோது சில நாட்களிலேயே, என் வீட்டுக்கு வந்து தங்களை எனக்கு அறிமுகப்படுத்திக் கொண்டு என் நண்பர்களாக ஆனவர்கள் அறந்தையும், அக்கினியும் ம.ராவும் என்பது என்னால் மறக்கமுடியாதது. நான் அங்கிருந்த சமயத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் அந்தக் காலனியில் குடியிருந்தனர். நிருபர்களாக எந்த நேர வரையறையும் இல்லாமல் பணி புரிவோருக்கு பீட்டர்ஸ் காலனி வீடு சிறந்த இடம். நகரின் மையத்தில் இருப்பதால், எந்த நேரத்திலும் எங்கிருந்தும் வந்து போக முடியும். .

எங்கள் காலனிக்கெதிர்ப்புறம் அமைந்திருக்கும் புதுக் கல்லூரி மாணவர்களுக்கு  காலனியின் மறுபுறம் இருக்கும் சத்தியம் தியேட்டருக்குச் செல்ல எங்கள் காலனி சாலைதான் குறுக்கு வழி. புதுக் கல்லூரி மாணவர்களுக்கும் சத்தியம் தியேட்டர் ஊழியர்களுக்கும், கல்லூரியின் எதிர்ப்பக்கம் இருக்கும் ஆல் தோட்ட வாசிகளுக்கும் அடிக்கடி உரசல்கள் மோதல்கள் ஏற்பட்டாலும், பீட்டர்ஸ் காலனிக்கும் புதுக் கல்லூரி மாணவர்களுக்கும் இடையில் நானறிந்த வரையில் நல்லுறவே இருந்தது. புதுக்கல்லூரி வணிக வளாகத்தில் இருந்த யாத்கார் ஓட்டல் அப்போது எங்கள் எல்லாருக்கும் முக்கியமான சந்திப்பு இடம். இப்போது அது இல்லை.

இப்போது இன்னும் நிறைய விஷயங்கள் அங்கே இல்லை. பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்துகொண்டிருக்கிறது காலனி. ஆனாலும் பல வீடுகளில் ஏ.சி பொருத்தப்பட்டிருக்கிறது. பழைய கூட்டுணர்வு இப்போது இல்லை என்று எஞ்சியிருக்கும் பழையவர்கள் சொல்கிறார்கள். சில ஆறுதல்களும் உண்டு. எங்கள் காலத்தில் வைத்த மரங்கள் செழித்து வளர்ந்திருக்கின்றன. ‘என்’ வீட்டுக்கு எப்போது போனாலும், ‘உங்கள் வீட்டை’ பத்திரமாக வைத்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லி வரவேற்கும் பத்திரிகை நண்பர் குடும்பம் இருக்கிறது. அந்த வீட்டுக்குள் சென்று சுற்றிப் பார்க்கும்போதெல்லாம், அங்கிருக்கும் ஒரு மின்விசிறி பற்றி நான் விசாரிக்கத் தவறுவதில்லை. எழுபதுகளில் அந்தக் குடியிருப்பை வீட்டு வசதி வாரியம் கட்டியபோது பொருத்திய மின்விசிறி அது.  சுமார் 40 வருடங்களாக இன்று வரை பழுதில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது ! இந்த 40 வருடத்தில் நான் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறையாவது புதிய மின்விசிறிகள் வாங்குவதும் பழையவற்றை பழுது பார்ப்பதும் செய்ய வேண்டியிருந்திருக்கிறது. ‘என்’வீட்டில் மின் விசிறி இல்லாவிட்டால் காற்று சரியாக வரமுடியாது. காரணம் எதிரே கட்டிய பெருஞ்சுவர்தான்.

இப்போதைய பீட்டர்ஸ் காலனியின் பெரும்  மதில் சுவர் நெடுக சினிமா சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. நான் அங்கிருந்த காலத்தில் பீட்டர்ஸ் காலனியில் ஒரே ஒரு சுவரில் மட்டும்தான் ஒரிரு போஸ்டர்களை ஒட்ட முடியும். ஆனால் முதல் போஸ்டரை காலனி சுவரில் ஒட்டிவிட்டு பின்னர் சென்னையின் பல சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டச் செல்வது அப்போது எங்கள் வழக்கம்.

பரீக்‌ஷா நாடகக்குழுவை நான் நண்பர்களுடன் தொடங்கிய 1978ல் நாடகத்துக்கு விளம்பரம் செய்ய இருந்த ஒரே மலிவான் வழி சுவரொட்டிதான்.மியூசியம் அரங்க வாடகை 175 ரூபாய். பத்திரிகைகளில் நாடக விளம்பரம் கொடுத்தால் அதற்கு இன்னொரு இருநூறு ரூபாய் கேட்பார்கள். எனவே 75 ரூபாய்க்கு 100 சுவரொட்டிகள் அச்சிடுவோம். மைதா மாவு வாங்கினதும் அம்மாவும் அம்மா மறைந்தபின்னர் தோழி பத்மாவும் அதைப் பசையாகக் காய்ச்சிக் கொடுப்பார்கள். வாளிகளில் அதை நிரப்பிக் கொண்டு சைக்கிளில் இருவர் இருவராக இரவு பத்து மணிக்கு மேல் புறப்படுவோம். பெரும்பாலும் நான்கு குழுக்கள். ஆளுக்கு 25 சுவரொட்டிகள் ஒட்ட வேண்டும். ஆனால் தொலை தூரம் சென்று ஒட்ட வேண்டுமென்பதால் வேலை முடித்து திரும்ப காலை 4 மணியாகிவிடும்.

இந்த நான்கு குழுக்களும் எங்கெங்கே போய் எந்தெந்த இடத்தில் சுவரொட்டி ஒட்ட வேண்டும் என்பதை நான் துல்லியமாக திட்டமிட்டு வைத்திருந்தேன்.ராயப்பேட்டை, மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, மந்தவெளி பக்கம் ஒரு குழு. இன்னொரு குழு ஜெமினி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தியாக்ராய நகர், மாம்பலம். இன்னொரு குழு சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், புரசவாக்கம், செண்ட்ரல். இன்னொரு குழு திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மெரீனா. பகல் வேளைகளில் இந்தப் பகுதிகளில் எல்லாம் சென்று அதிகமாக மக்கள் கூடும் இடங்கள் எவை, அதிலும் மக்கள் நின்று கவனிக்கக்கூடிய சுவர்கள் எவை,என்பதையெல்லாம் மதிப்பிட்டு ஒரு ரூட் மேப், சார்ட் தயாரித்து வைத்திருந்தேன்.

ஒவ்வொரு இடத்திலும் ஒரு போஸ்டர் ஒட்டினால் போதுமா, இரண்டு ஒட்ட வேண்டுமா என்பதைக் கூட கணக்கிட்டிருந்தேன். நாம் ஒட்டிவிட்டு வந்தபின்னர் வேறு சுவரொட்டியை அதன் மீது யாரும் அடுத்த இரு தினங்களுக்குள் ஒட்டிவிடும் வாய்ப்பு உண்டா என்பதையெல்லாம் கணக்கிடுவேன். நாடகத்துக்கு மூன்று தினங்கள் முன்னால் நாங்கள் ஒட்டச் செல்வோம். என்ன சிக்கலென்றால், வெள்ளிக்கிழமை ரிலீசாகும் புது சினிமாவுக்கான் பெரிய பெரிய சுவரொட்டிகள் வியாழன் இரவுகளில் சுவர்களுக்கு வந்துவிடும். எனவே சினிமா சுவரொட்டியோடு மோதாமல் எங்களுக்கான யூனிக் இடங்களைத் தேர்வு செய்வேன். அதில் சிறப்பானது மின்வாரியத்தில் எலெக்ட்ரிக் பெட்டிகள்தான். 30/20 சுவரொட்டிகள் ஒட்டுவதற்கென்றே அந்தப் பெட்டிகளை அளவெடுத்து கட்டிய மாதிரி இருக்கும். அந்தப் பெட்டிகளில் அவசர உதவிக்கு என்று போன் எண் எழுதியிருந்தால், அதை மறைக்காமல் ஒட்டுவது எங்கள் போஸ்டர் தர்மம் !

எந்த வேலையிலும் அதன் நுணுக்கங்களைப் புரிந்துகொண்டு நம் வசப்படுத்தி செயல்படுவது மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும். சுவரொட்டிகளில் பசை தடவி ஒட்டுவது என்பது ஒரு கலை. உலோகங்களின் மீது ஒரு மாதிரி ஒட்டும். சுவரின் பூச்சைப் பொறுத்து ஒட்டுத் தன்மை மாறும். பல முறை சுவரொட்டி ஒட்டிய இடத்தில் ஒட்டும்போது பழைய சுவரொட்டிகளே சுவரின் பூச்சு போல இருக்கும். பசையை வாளியிலிருந்து கையில் முகந்து சுவரொட்டியின் பின்புறம் பூசுவது நுட்பமான வேலை. பசை வீணாகக்கூடாது. அதே சமயம் தாளின் முழு பரப்பிலும் பசை சீராக தேய்க்கப்படவேண்டும். இல்லாவிட்டால் சுருக்கம் வரும். சுவரொட்டியை எளிதில் கிழித்துவிடலாம். செய்யச் செய்ய வேலையில் நேர்த்தி அதிகமாகும். செய்யும் சுவாரஸ்யமும் அதிகமாகும். துளியும் சுருக்கம் இல்லமல் ஒரு சுவரொட்டியை ஒட்டி முடித்துவிட்டுப் பார்க்கும்போது நிறைவாக இருக்கும். வேலை முடியும்போது பசையும் மீதமின்றிச் சுவரொட்டியும் மீதமின்றி அமைவது மகிழ்ச்சியாக இருக்கும். வேலை முடித்துவிட்டு காலை அப்போதுதான் திறந்த டீக்கடையில் டீ சாப்பிடச் சென்றதும் டீ கிளாசை வலது கையில் வாங்க முடியாது.  விரல்கள் முதல் மணிக்கட்டு வரை பசை ஒழுகி இறுகிப் பிடித்திருக்கும்.

நள்ளிரவுகளில் போஸ்டர் ஒட்டச் சென்றபோது ஏற்பட்ட  அனுபவங்கள் ஏராளம். தொழில் முறை போஸ்டர் ஒட்டுபவர்களைப் பல முறை சந்திக்க நேரிடும். நாம் நட்பாக இருந்தால் அவர்களும் நட்பாக இருப்பார்கள். நாம் வெறும் 100 சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு அலைகிறோம் என்பது அவர்களுக்கு வேடிக்கையாக இருக்கும். அவர்களிடம் நம் சுவரொட்டியைக் கொடுத்தால் மொத்தத்தையும் ஒரே ஏரியாவிலேயே தீர்த்துவிடுவார்கள். அவர்களுக்கு ஒரு போஸ்டர் ஒட்டக் கிடைக்கும் காசு என்பது மிகக் குறைவு. பெரும்பாலானவ்ர்கள் ஏதாவது ஒரு சினிமா கொட்டகையில் வேறு வேலையிலும் இருப்பார்கள். சிலர் போஸ்டர் ஒட்டுவதையே காண்ட்ராக்டாக எடுத்து ஆள் வைத்து செய்வார்கள்.

போலீசுடனும் குடிகாரர்களுடனும் ஏற்படும் அனுபவங்கள் தனி. ஒரு முறை பனகல் பார்க் அருகில் நான் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தேன். ஒருவர் நல்ல போதையில் வந்து போஸ்டரை எழுத்து கூட்டி படித்தார். கடைசியில் அதில் டைரக்‌ஷன் ஞாநி என்று என் பெயர் இருந்ததைப் படித்தார். அவருக்கு ஏனோ அந்தப் பெயர் பெரும் உற்சாகத்தைக் கிளப்பிவிட்டுவிட்டது. ‘ஷோக்கா இருக்குய்யா பேரு.. நாடக டைட்டிலை விட இதான்யா ஷோக்கா இருக்குது’ என்று பேசிக் கொண்டே இருந்தார். உடனிருந்த என் நண்பன் நீதான்னு சொல்லிடட்டுமா என்று கண் ஜாடையில் என்னைக் கேட்டுக் கொண்டே இருந்தான். அதைச் சொன்னால், உற்சாகம் இன்னும் எந்த பாய்ச்சல் பாயுமோ என்று கலக்கமாக இருந்தது. நழுவிவிட்டோம். ரோந்து வரும் லோகல் போலீசுக்கு தொழில் முறை போஸ்டர் ஒட்டிகளைப் பெரும்பாலும் தெரிந்திருக்கும். எங்களைப் பார்த்தால் நிறைய விசாரிப்பார்கள். எந்த அமைப்பு, என்ன அரசியல் கட்சி, என்ற ரீதியில்தான் கேள்விகள் இருக்கும்.

ஒரு நள்ளிரவில் சாந்தோம் சர்ச் எதிரே கச்சேரி சாலை பஸ் நிறுத்தத்துக்குப் பின்னால் இருந்த சுவரில் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தோம். அந்த பஸ் ஸ்டாப் வேலி மீது நான்கு பேர் உட்கார்ந்திருந்தார்கள். நான்கு பேர் கைகளும் பின்பக்கமாக இருந்தன. பின்னால் பார்த்தால் ஒவ்வொரு கையிலும் உருட்டுக் கட்டை, வீச்சரிவாள் என்று ஆயுதங்கள். நாங்கள் போஸ்டர் ஒட்டுவதைப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். என் நண்பன் ‘என்ன பஸ்சுக்கு வெயிட் பண்றீங்களா?” என்று பொருத்தமில்லாத ஒரு கேள்வியை அவர்களிடம் கேட்டான். ‘ஆமா 12பிக்கு’என்றான் ஓர் உருட்டுக்கட்டை. ‘லாஸ்ட் பஸ் போயிருக்கும்’ என்று நான் சொல்லிவிட்டு அவர்கள் பதிலை எதிர்பார்க்காமல், கிளம்பிவிட்டோம். ஆல் இந்தியா ரேடியோ அருகே நாங்கள் வந்தபோது எதிரே இரண்டு பீட் போலீசார் சைக்கிளில்  வந்தார்கள். அவர்களிடம் கச்சேரி ரோட்டில் சிலர் ஆயுதங்களுடன் காத்திருப்பதைச் சொன்னோம்.  இருவரும் என்ன செய்தார்கள் தெரியுமா ? சைக்கிளிலிருந்து இறங்கி அப்படியே எதிர் திசையில் சைக்கிளைத் திருப்பி வைத்துக் கொண்டு போயே போய்விட்டார்கள் !

செண்ட்ரல் ஸ்டேஷனுக்கருகே பெரியமேட்டில் போஸ்டர் ஒட்டித் திரும்பும்போது ஏற்பட்ட மகிழ்ச்சியான சந்திப்பு கவிஞர் ஆத்மாநாமுடன் ! அவர் அப்போது அந்தப் பகுதியில் ஒரு ஆயத்த ஆடை தயரிப்பு கம்பெனியில் வேலை செய்துவந்தார். எங்களைப் போஸ்டர்களுடன் பார்த்ததும் அவருக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. எல்லாருமாக புஹாரியில் போய் டீ சாப்பிட்டோம். அந்த இரவு நேரத்திலும் அவர் முகம் அப்போது மலர்ந்த பூவைப்போலவும் குழதைத்தனமான உற்சாகத்துடனும் இருந்தது எனக்கு இன்னும் மனசில் படமாகப் பதிந்திருக்கிறது.

நடந்தும் சைக்கிளில் சென்றும் போஸ்டர்கள் ஒட்டிய எங்கள் குழு சில வருடங்களுக்குப் பின்னர் ஸ்கூட்டர்,மோட்டார் சைக்கிள்களில் போய் ஒட்டியது. தொண்ணூறுகளில் போஸ்டர் ஒட்டுவதைக் கைவிட்டோம். எங்கள் நூறு போஸ்டர்கள் இருநூறாக்கியும் வளர்ந்துவிட்ட சென்னை நகருக்குப் போதவில்லை. பரீக்‌ஷா 2003ல் வெள்ளி விழா கொண்டாடியபோது, பழைய ஞாபகத்தில் மறுபடியும் கறுப்பு வெள்ளை போஸ்டர் அச்சிட்டு அவற்றை ஒட்டியதுதான் கடைசி.

பரீக்‌ஷாவுக்கு மட்டுமல்லாமல், நான் நடத்திய தீம்தரிகிட, ஏழு நாட்கள், அலைகள் என்று எல்லா பத்திரிகைகளுக்கும் நான் சுவரொட்டிகள் எழுதி அச்சிட்டேன். ஜனநாயக மாதர் சங்கம் போன்ற பல தோழமை அமைப்புகளுக்கும் சுவரொட்டிகள் எழுதிக் கொடுத்தேன். 1987ல் கூடன்கூளம் அணு உலை திட்டத்தைத் தொடங்காதே என்று அணு உலையை திறக்காதே என்று  நாங்கள் நடத்திய அணு ஆபத்தற்ற உலகம் மக்கள் அமைப்பு சார்பில் ஒட்டிய சுவரொட்டிப் பிரதி இன்னும் என்னிடம் இருக்கிறது.  எண்பதுகளில் பஸ் கட்டண உயர்வை எதிர்த்து நானும் நண்பர்களும் நடத்திய குரல்கள் அமைப்பிற்காக கையாலேயே 50 சுவரொட்டிகள் எழுதி ஒட்டியிருக்கிறோம்.

பெரும்பாலும் கறுப்பு வெள்ளையிலேயே என் சுவரொட்டிகள் இருக்கும். பலவண்ணச் சுவரொட்டிகளை மீறிக் கண்ணில் படும் வல்லமை அவற்றுக்கு உண்டு. எல்லாம் லித்தோ முறையில் அச்சிடப்பட்டவை. பரீக்‌ஷாவுக்கும் லித்தோகிராபிக்கும் உள்ள ஒரு விசித்திரமான பொருத்தம் என்ன தெரியுமா? லித்தோகிராபி அச்சு முறை 1796ல் நாடகப் புத்தகங்களை அச்சிடுவதற்கென்றே ஜெர்மன் நடிகரும் நாடகாசிரியருமான செனெஃபெல்டரால்  உருவாக்கப்படது. இப்போது லித்தோகிராபி ஏறத்தாழ ஆஃப்செட்டாக மாறிவிட்டது.

இந்த அச்சிடும் முறைகளுக்கெல்லாம் அடிப்படை விஞ்ஞான விதி, எண்ணெயும் தண்ணீரும் சேராது என்பதுதான். அச்சு இயந்திரத்தில் பொருத்தும் படத் தகட்டில், எழுத்து உள்ள இடங்களில் மட்டும் மை ஒட்ட வேண்டும். மீதி இடங்களில் ஒட்டக் கூடாது என்பதுதான் விதி. லித்தோ முறையில் முதலில் கல் பலகைகள் மீது மெழுகில் எழுதி மையை ஒற்றி தாளை அதன் மீது தேய்த்து அச்சிட்டார்கள். பின்னர் தகடுகள் பயனுக்கு வந்தன.  தகடுகள் மீது உருக்கிய மெழுகில் எழுத்துகளை எழுதவேண்டும். மெழுகு உள்ள இடம், இல்லாத இடம் என்ற வேறுபாடுதான் மை ஒட்டுவதற்கான சூட்சுமம். இந்த எழுத்துகளை நேராக எழுதக் கூடாது கண்ணாடியில் தெரியும் பிம்பம் போல எழுதவேண்டும். அப்போதுதான் அச்சிடும்போது எழுத்து நேராக அச்சாகும்.

திருவல்லிக்கேணியில் ஒரு அச்சகத்தில் இருந்த ஓவியர் ரத்தினம் என்பவர் எனக்கு மெழுகில் பிம்ப எழுத்துகளை எழுதுவது எப்படி என்று கற்றுத் தந்தார். சில பரீக்‌ஷா சுவரொட்டிகளை நானே நேரடியாக தகடுகளில் மெழுகில் எழுதினேன்.இது அந்த அச்சக நிர்வாகத்துக்குத் தெரியவந்ததும் ஏற்கனவே இருந்த பிரச்சினைகளும் சேர்ந்துகொள்ள, ரத்தினம் வேலை இழந்தார்.கடும் உழைப்பாளியான அவர் தளராமல் அடுத்த சில வருடங்களிலேயே சொந்தமாக அச்சகங்கள் வைக்கும் நிலைக்குச் சென்றார். அப்போதெல்லாம் லித்தோ அச்சகங்கள் சிந்தாதிரிப்பேட்டை, ராயப்பேட்டை, திருவல்லிக்க்கேணி ஆகிய இடங்களில் இருந்தன. சிந்தாதிரிப் பேட்டையில் காசினோ தியேட்டர் பக்கத்தில் இருக்கும் மீரான் சாகிப் தெருவில்தான் நிறைய சினிமா விநியோகஸ்தர்கள் இருந்தனர். இவர்கள் ஒரு படத்தின் இரண்டாவது மூன்றாவது சுற்று வெளியீட்டு உரிமையுடையவர்கள். இவர்களை நம்பியே பல லித்தோ ஆஃப்செட் அச்சகங்கள் இருந்தன.

எண்பதுகளில் சென்னை மாநகராட்சி சுவரொட்டிகளுக்கு வரி விதித்தது. அரசியல் கட்சி சுவரொட்டிகளுக்கு மட்டும் வரி கிடையாதாம்.! வரி செலுத்தாத சுவரொட்டிகளை மாந்கராட்சி ஊழியர்களை வைத்து கிழிப்பது, மை பூசி மறைப்பது போன்ற விசித்திரமான வேலைகளில் எல்லாம் மாநகராட்சி அதிகாரப்பூர்வமாகவே ஈடுபட்டது. வரி செலுத்திய சுவரொட்டியை எப்படிக் கண்டுபிடிப்பது ?  அதற்கு ஏறத்தாழ ஒரு 40 பக்க நோட்புக் சைசில் இருக்கும் ரப்பர் ஸ்டாம்ப்பை மாநகராட்சி உருவாக்கிப் பயன்படுத்தியது. ஒவ்வொரு சுவரொட்டியிலும் இந்த சீல் போடப்படும் !  அழகாக கலை நயத்துடன் டிசைன் செய்து அச்சிட்ட பல சினிமா சுவரொட்டிகளில் கண்ட இடத்திலும் இந்த சீலைக் குத்தி அந்த சுவரொட்டியின் அழகையே கெடுத்திருப்பார்கள்.

மாநகராட்சி அலுவலகத்துக்கு சுவரொட்டிக் கட்டுகளை எடுத்துப் போய் ஒவ்வொரு சுவரொட்டியாக சீல் வாங்குவது சினிமா கம்பெனிகளுக்குத் தனிப் பெரும் வேலையாகிவிட்டது. சுவரொட்டி ஒட்டும் காண்ட்ராக்ட் எடுத்தவர்கள் இதை கையாண்டார்கள். ஊழலும் நடந்தது. ஆயிரம் சுவரொட்டிகள் அச்சிட்டு 500 என்று கணக்கு காட்டி அதற்கு மட்டும் வரி செலுத்தி சீல் போட்டு, ஆயிரத்தையும் ஒட்டுவார்கள்.

இந்த வரி விதிப்பை எதிர்த்து நான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். கலை, இலக்கிய அமைப்புகள், வணிக நோக்கம் இல்லாத விஷயங்கள் அடங்கிய சுவரொட்டிகள் இவற்றுக்கும் வரி விதிப்பது தவறு என்று என் தரப்பில் வாதிடப்பட்டது. எல்லாருக்கும் வரி விதிக்கும் உரிமை மாநகராட்சிக்கு உண்டு என்று சொல்லி நீதிமன்றம் என் வழக்கை  நிராகரித்துவிட்டது. இப்போது இந்த வரி விதிப்பு சட்டம் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. எந்த சுவரொட்டியிலும் மாநகராட்சியின் சீலைக் காணோம்.

இப்போது சிங்காரச் சென்னை என்ற பெயரில் .சுவரொட்டி ஒட்டுவதையே அரசு தடை செய்திருக்கிறது. இது மிகப் பெரிய அநீதி. கருத்துச் சுதந்திரத்தில் தலையிடுவதாகும். சுவரொட்டி ஒட்டுவதற்கான இடங்களை ஒழுங்குபடுத்தலாமே தவிர அடியோடு தடுப்பது அநியாயம். ப்ளெக்ஸ் பலகை வைப்பதும், பத்திரிகை, டி.வி விளம்பரம் செய்வதும் பெரும் பணமிருந்தால்தான் சாத்தியம். இன்றும் கூட சுவரொட்டிதான் இருப்பதிலேயே மலிவான சாதனம். சாதாரண மக்கள்  தங்கள் பகுதியில் தங்கள் அன்புக்குரியவர் இறந்துவிட்டால், கண்ணீர்த்துளிகளுக்கு நடுவே இறந்தவர் படம் போட்டு அஞ்சலி சுவரொட்டிகளை ஒட்டுகிறார்கள்.

சென்னையில் நான் சுவரொட்டிகளை ஒட்டிய ஒவ்வொரு சுவரும் என்னால் மறக்கமுடியாதவை. சில அபூர்வமான இடங்களில் நான் ஒட்டி ஒரு சில வருடங்கள் கழித்தும் அந்த கறுப்பு வெள்ளை சுவரொட்டி அப்படியே இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன். இன்று சென்னையில் வெரைட்டியான சுவரொட்டிகள் இல்லாமல் போய்விட்டன. சினிமா, அரசியல் தவிர வேறு சுவரொட்டிகளைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. சமீபத்தில் சுவர்களில் பார்த்த ‘கர்ணன்’ பட சுவரொட்டி திடீரென்று சென்னை நகரச் சுவர்களை அறுபதுகளுக்கு அழைத்துப் போய்விட்டது !

எனக்குச் சொந்தமில்லாத வீடு என்னுடையதாகவே மனதில் இருப்பது போல என் சுவரொட்டிகளைத்  தாங்கிய சுவர்களெல்லாம் எனக்கானவை என்ற வாஞ்சையை என்னுள் ஏற்படுத்துகின்றன. அடுத்த சுவரொட்டியை எழுதவும் ஒட்டவும் அடுத்த வாய்ப்பை இப்போதும் நான் எதிர்நோக்கிக்  கொண்டே தான் இருக்கிறேன்.

-நம்ம சென்னை ஏப்ரல் 15, மே1,2012

சூரிய கதிர் பதில்கள் ஏப்ரல் 16, 2012
எஸ். ஜெயகாந்தன், புன்செய்புளியம்பட்டி.

காஷ்மீரில் ஆயுதப் படை சட்டத்தை ரத்து செய்யுமாறு இந்திய அரசுக்கு ஐ.நா. அமைப்பு வேண்டுகோள் விடுத்திருக்கிறதே?

காஷ்மீரில் மட்டுமல்ல, வட கிழக்கு மாநிலங்களிலிருந்தும் ஆயுதப் படைச் சட்டங்களை ரத்து செய்யவேண்டும். இதை ஐ.நா சொல்லித் தெரிந்துகொள்ளவேண்டிய நிலையில் இந்தியா இருப்பது வருத்தமானது. ராணுவ கெடுபிடிகளை விலக்கிக் கொள்ளாமல் காஷ்மீரிலோ மணிப்பூரிலோ ஜனநாயகத்தை வலுப்படுத்தவே முடியாது.. தனி காலிஸ்தான் கேட்ட பஞ்சாபில் இன்று ஜனநாயகம் திரும்ப வலுப்பட்டதற்குக் காரணம், ராணுவ நடவடிக்கையை விலக்கிக் கொண்டதினாலும்தான்.

வினோத், பெங்களூரு.

மன்மோகன் சிங் சர்க்கஸ் சிங்கம் போல் உள்ளார் என்கிறாரே சுப்ரமணியன் சுவாமி?

ஆனால் ரிங் மாஸ்டர் சுப்பிரமணியன் சுவாமி சொல்வது போல  சோனியா காந்தி அல்ல. அது அமெரிக்கா.

பவித்ரன், சென்னை.

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள 6வது ரகசிய அறையை திறந்தால், நாட்டின் பாதுகாப்பிற்கே பெரும் ஆபத்து ஏற்படும். மேலும் கோவில் பொக்கிஷங்களும் கொள்ளை போகும் அபாயம் உள்ளது என, கோயிலில் தேவபிரஸ்னம் பார்த்த ஜோதிடர்கள் எச்சரித்துள்ளனரே?

கடவுள் பக்தி உடையவர்களிலேயே கூட பலர் இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளை ஏற்பதில்லை. பதுக்கி வைக்கப்பட்டிருக்கும்  சொத்துகளை வெளிக் கொணர்ந்து கணக்கெடுத்து  அவற்றை செம்மையாக எப்படி பயன்படுத்துவது என்று நடுநிலையான் அறிஞர் குழுவின் உதவியுடன் முடிவு செய்வதே முறையானது.

முத்துமாணிக்கம், விக்கிரமசிங்கபுரம்.

இலங்கைக்கு செல்லும் எம்.பி.க்கள் குழுவில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும் என பா.ஜ.க.பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாரே?

இலங்கையில் யுத்தம் முடிந்ததும் சுற்றுலாவை அதிகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்படிப்பட்ட சுற்றுலா குழுவில் ஒரு குழுவாகத்தான் இந்தக் குழுவும் இருக்கிறது. நிஜமாகவே இலங்கை அரசை ஏதேனும்  வற்புறுத்தி செய்யவைக்க டெல்லி விரும்பினால், குறைந்தப்ட்சம், ஜெயலலிதா, ஸ்டாலின், அத்வானி, முலாயம், மம்தா, சோனியா போன்றோர் அடங்கிய குழுவை இலங்கையில் இருக்கும் தமிழர்களை சந்திக்க அனுப்புவதுதான் சரியான முயற்சியாக் இருக்கும்.

விஸ்வம், சென்னை.

2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை முன் தேதியிட்டு ஒதுக்குவதால் சட்டரீதியான விளைவுகள் ஏற்படும் என்று அப்போதைய மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ. ராசாவை எச்சரித்தேன் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறையின் முன்னாள் செயலாளர் டி.எஸ். மாத்தூர் சிபிஐ நீதிமன்றத்தில் சாட்சியளித்துள்ளாரே?

ராசாவை மன்மோகன், சிதம்பரம், மாத்தூர் என்று எத்தனையோ பேர் எச்சரித்ததாக சொல்கிறார்கள். எந்த எச்சரிக்கையையும் பொருபடுத்தாமல் அலட்சியப்படுத்தும் துணிச்சல் ராசாவுக்கு எங்கிருந்து வந்தது என்பதையே நாம் ஆராயவேண்டும். அதைக் கொடுத்தது சி.ஐ.டி காலனி அதிகாரமையம்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பாக சீறியவர் இப்போது திஹார் ஓலைப்பெட்டிக்குள் சுருட்டி வைக்கப்பட்டிருக்கிறார்.

கணபதி, திருநெல்வேலி.

கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம் கிடைக்காவிட்டால் தெருவில் அமர்ந்து மக்கள் பணியாற்றப்போவதாக சொல்லியிருக்கிறாரே மு.க. ஸ்டாலின்?

நல்ல முடிவு. தெருவில் இருந்தே சிறப்பாக அவர் எம்.எல்.ஏவின் மக்கள் பணிகளை செய்து காட்ட முடிந்துவிட்டால், அடுத்து மீதி எம்.எல்.ஏக்களின் தொகுதி அலுவலகளையும் மூடி விடலாம். நிறைய பணம் அரசுக்கு மிச்சமாகும்.

சேவற்கொடியோன், திண்டுக்கல்.

திமுக ஆட்சியில் ரூ.124 கோடி வீட்டுவசதி வாரிய சொத்து கொள்ளை என்கிறார்களே?

ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி கொள்ளைக்குப் பிறகு மீது எதுவும் நமக்கு பெரிதாக உறைப்பதே இல்லை. அதை விடப் பெரியதாக ஏதாவது வந்தால்தான் நமக்கு சுரணை வரும் போலிருக்கிறது. பெரிதினும் பெரிது கேள் என்று பாரதி சொன்னதை ஊழல் அரசியல்வாதிகள் வேறு விதமாக அர்த்தப்படுத்திக் கொண்டு விட்டார்கள்!

கோபால், திருவள்ளூர்.

ஜனவரி மாதம் ராணுவம் நகர்த்தப்பட்டது என்பது வழக்கமான ஒன்றுதான் என பாதுகாப்புத்துறை செயலர் விளக்கம் அளித்துள்ளதை கவனித்தீரா?

வண்ணை கணேசன், சென்னை.

டெல்லிக்கு ராணுவம் ரகசியமாக சென்றதாக வெளியான செய்திகள் முட்டாள்தனமானது என்கிறாரே ராணுவ தளபதி?

ராணுவ நடவடிக்கை வழக்கமானது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்திய ராணுவ தளபதிகள் அரசியல் கட்சிகளின் ஆட்சியைக் கவிழ்த்து தாங்கள் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கமும், துணிச்சலும், ஆற்றலும் உடையவர்களே அல்ல. இந்திய ஜனநாயகச் சூழலில் அது சாத்தியமும் இல்லை.தற்போதைய ராணுவ தளபதி சில ஊழல் இடைத்தரகர்களிடம் கறாராக நடந்துகொண்டதால், அவர் பெயரை களங்கப்படுத்தி அடுத்து வரக்கூடியவரை தங்கள் விருப்பத்துக்கு ஆடக்கூடியவராக ஆக்கவேண்டுமென்ற நோக்கத்தில் சில ஆயுத தளவாட கம்பெனிகளும் தரகர்களும் திட்டமிட்டு இந்த பரபரப்பு செய்திகளைப் பரப்பிவருகிறார்கள் என்றே தோன்றுகிறது.

அழகேசன், சென்னை.

மத்திய உணவுத் துறை அமைச்சர் சரத் பவாருக்கு கிரிக்கெட் பார்க்கவே நேரம் போதவில்லை என்கிறாரே தா. பாண்டியன்?

பரவாயில்லை. கிரிக்கெட் பார்க்கும் நேரத்தில் உணவுத்துறை வேலையைப் பார்த்து அதை இன்னும் நாசமாக்காமல் தப்பிகிறது என்று ஆறுதல் அடையலாம். தா.பாண்டியனும் இதைப் போல ஏதாவது ஒரு பொழுதுபோக்கில் பெரும்பாலான நேரத்தை செலவிட்டல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அவர் அவதூறு செய்யும் மக்கள் இயக்கங்களுக்கும் கொஞ்சம் பயன் ஏற்படும்.

சீனிவாசன், பொள்ளாச்சி.

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும்  ஃபெப்சி அமைப்பினருக்குமிடையே அப்படி என்ன தான் பிரச்னை?

பெருமாள், மதுரை.

ஃபெப்சிக்கு போட்டியாக தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் நலச் சங்கம் என்று ஆரம்பித்திருக்கிறார்களே?

முதலாளிகள் தொழிலாளர்களுக்கான நியாயமான சம்பளத்தை தர மறுக்கிறார்கள் என்பதுதான் பிரச்சினை. மூன்றாண்டுக்குஒரு முறைதான் சமபள உயர்வு. அந்த ஒப்ப்நதம் முடிந்தே ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. பழைய சம்பளத்திலேயே ஒரு வருடத்துக்கு மேல் வேலை செய்கிறார்கள் தொழிலாளர்கள். அரசு ஊழியர், வங்கி ஊழியர், ஆலை ஊழியர்.பள்ளி கல்லூரி ஆசிரியர்கள், பேராசிரியர்கள், டாக்டர்கள், ஐ.டி ஊழியர் யாராவது இப்படி வேலை செய்வார்களா? அவர்களுக்கெல்லாம் புது ஒப்ப்நதம் போட்டால், காலாவதியான ஓராண்டில் விட்டுப் போன சம்பள உயர்வு பாக்கியும் சேர்த்துத் தரப்படும். சினிமாவில் அது சாத்தியமே இல்லையே. சென்ற வருடம் சினிமா தொழிலாளர்கள் இழந்த ஊதியம் இழந்ததுதான்.  கடந்த நான்காண்டுகளில் ஏற்பட்டிருக்கும் விலை உயர்வுகள், பொருலாதார பன வீக்கம் எல்லாவற்றையும் கணக்கிட்டுதான் இப்போது உயர்வு அளித்தாக வேண்டும். அதற்கு முதலாளிகள் மறுப்பதால்தான் பிரச்சினை தொடர்கிறது. தொழிலாளர்கள் பக்கம் சின்னச் சின்ன ஒழுங்கீனங்கள் , குறைகள் உண்டு. ஆனால் தங்கள் அடிப்படைப் பொறுப்பைத் தட்டிக் கழிக்க , இவற்றை இப்போது ஊதிப் பெரிதாக்கி முதலாளிகள் வாதாடுகிறார்கள். அதே சமயம் கடந்த நான்காண்டுகளில் நட்சத்திரங்களின் சமபளங்களும், திட்டமிடுதல் இல்லாமல் படமெடுக்கும் இயக்குநர்களின்  வீண் செலவுகளும் மட்டும் ஏறிக் கொண்டே போயிருக்கின்றன, அதைப் பற்றி இந்த முதலாளிகள் முணுமுணுத்தது கூட கிடையாது. தொழிலாளர் நல ஆணையரின் சமரசத்தை ஏற்று தீர்வு காண்பதே சரியாக இருக்க முடியும். .

பீர்முகம்மது, சென்னை.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக் கோரியும், இந்த வழக்கை விரைவாக நடத்தி முடிக்க முயற்சி மேற்கொள்ளக் கோரியும் தி.மு.க. எம்பிக்கள் டி.ஆர்.பாலு தலைமையில்  சோனியா காந்தியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்திருக்கிறார்களே?

சேது சமுத்திர திட்டம் எந்த விதத்திலும் பயனுள்ள திட்டம் அல்ல. அதனால் உண்மையில் பெரும் சிக்கனமும் லாபமும் ஏற்படாது. அதை விட பெரிய ஆபத்து சுற்றுச் சூழல் கடுமையாக பாதிக்கப்படும். பவளப்பாறைகளியும் கடல் உயிரினங்களையும் மறு உருவாக்கம் செய்ய மில்லியன் வருடங்கள் ஆனாலும் நம்மால் முடியாது. அது அரசியல்வாதிகள் கொள்லையடிக்க மட்டுமே பயன்ப்டக்கூடிய திட்டம். அதைக் கைவிட்டது மிக சரியான முடிவு. கைவிட்ட காரனம்தான் அபத்தமானது. கற்பனையான ராமர் பாலத்தைக் காட்டிக் கைவிட்டிருக்கத்தேவையில்லை. சூழலுக்கு எதிரானது என்று ஒப்புக் கொண்டே கைவிட்டிருக்கலாம். சேது சமுத்திர திட்ட்டத்தால் நேரடியாகவும் மறைமுகமாகவும் லாபமடைந்தவர் டி.ஆர்.பாலு என்ற பேச்சு அரசியல் வட்டாரங்ககளில் இருக்கிறது. எனவே அவர் தலைமையில் தி.மு.க எம்.பிகள் குழு கூக்குரல் எழுப்புவது இயல்பானதுதான்.

பாலுசாமி, திருவண்ணாமலை.

முன்னாள் அமைச்சரான சுப.தங்கவேலன் மற்றும் அவரது பேரனான நடிகர் ரித்தீஷ் குமார் ஆகியோரின் ஆதரவாளர்கள், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்பு கட்டிப் புரண்டும், சட்டையைக் கிழித்துக் கொண்டும் கடும் சண்டையில் இறங்கியிருக்கிறார்களே ?

காங்கிரஸ் கட்சியுடன் .பிரிக்கமுடியாத கூட்டணி வைத்து வந்ததால், இந்தப் பழக்கம் சத்யமூர்த்தி பவனிலிருந்து அறிவாலயத்துக்கு தொற்றிக் கொண்டிருக்கலாம்.

வேம்பு, சென்னை.

கூடங்குளம் அணு மின் நிலையத்தால் தங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக இலங்கை அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதே?

உண்மைதான். வேறு அரசியல் உள்நோக்கங்களினால், இலங்கை அரசு இப்போது இந்தப் பிரச்சினையை எழுப்பியிருந்தாலும் கூட, இந்தப் பிரச்சினை அசலான பிரச்சினை என்பதை நாம் கவனிக்க வேண்டும். தமிழகம், கேரளம், இலங்கையின் தமிழர் பகுதிகல் எல்லாம் அனு உலை விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்படும் அருகாமையிலேயே உள்ளன.அதிலும் இந்தோனேஷிய நில நடுக்கத்தால் இந்தியாவின் கிழக்குக் கடற்கரை நெடுக எச்சரிக்கை விடவேண்டிய சிக்கல் உள்ல நிலையில், அணு உலைகள் பற்றி மறு ஆய்வு செய்தே தீரவேண்டும். என்னைப் பொறுத்த மட்டில் கூடங்குளத்தை விட கல்பககம் இன்னும் ஆபத்தானது. கூடங்குளத்தை இன்னும் இயக்க ஆரம்பிக்கவில்லை. இயங்கிக் கொண்டிருக்கும் கல்பாக்கம் கடல் எரிமலையாலோ, சுனாமியாலோ, நில நடுக்கத்தாலோ பாதிக்கப்ப்ட்டால், சென்னை நகரமே கடும் அழிவுக்கு உள்ளாகும். இந்தோனேஷியாவில் இப்போது சுமார் 8.9 ரிக்டர் அளவுக்கு  பூகம்பம் ஏற்படுவதற்கு முன்னர்,  அங்கே இருந்த விஞ்ஞானிகள் யாரும் இந்த அளவுக்கு அது ஏற்படும் என்று முன்கூட்டி கணிக்கவோ எச்சரிக்கவோ முடியவில்லை. இத்தனைக்கும் அவர்கள் தொடர்ந்து பூகம்பங்களை வருடம் முழுவதும் சந்தித்தும் ஆராய்ந்தும் வருபவர்கள்.  ஆனால் நம் கூடங்குளம் அதிமேதாவி விஞ்ஞானிகள் சுனாமி வந்தாலும் 9 மீட்டருக்கு மேல் வராது என்று ஜோசியம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பேஎரழிவை நேரில் அனுபவித்தால் ஒழிய இவர்களுக்கு புத்தி வ்ராது என்ரே தோன்றுகிறது. அதே சமய்ம் ஒரு பேரழிவை போபாலில் சந்தித்தபின்னரும் இந்திய அரசுக்கு புத்தி வரவில்லையே என்கிறபோது இவர்களையெல்லாம் திருத்தவே முடியாதோ என்ற கவலைதான் ஏற்படுகிறது.

குருசாமி, நாகர்கோவில்.

தமிழர்களை வாட விட்ட அச்சுதானந்தனை வரவேற்றிருக்கிறாரே கூடங்குளம் புகழ் உதயகுமார்?

முல்லைப்பெரியாறு பிரச்சினையில் அச்சுதானந்தன் கருத்தை ஆதரித்து ஒன்றும்  அவரை உதயகுமாரும் அணு உலை எதிர்ப்பாளர்களும் வரவேற்கவில்லை. அணு உலை விஷயத்தின் தங்கள் கருத்தை அவர் ஆதரிப்பதால், வரவேற்கிறோம். அவ்வளவுதான். இரண்டையும் போட்டுக் குழப்பத் தேவையே இல்லை. இதில் ஆதரிப்பதால், அதில் விட்டுக் கொடுப்போம் என்று அர்த்தம் கிடையாது. அணு உலையை ஆதரிக்கும் காங்கிரஸ், பி.ஜே.பி, இடதுசாரிகள், திராவிட இயக்கங்கள் எல்லாரும் மீதி எல்லா விஷயங்களிலும் ஒத்துப் போகிறார்களா என்ன ?

ரேவதிப்ப்ரியன், ஈரோடு.

அடுத்து வரும் மாதங்களில் நிதி நிலையை சரி செய்ய கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்கிறாரே பிரணாப்முகர்ஜி?

அது அவர் கடமை. அதைச் சரியாகச் செய்யாவிட்டால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க நாம் 2014 வரை காத்திருக்கவேண்டும் என்பதுதான் நமக்கு இருக்கும் கொடுமை.

சூரிய கதிர் ஏப்ரல் 16, 2012

எம்.ஆர்.ராதாவுக்கு என் அஞ்சலி
நான் பிறந்த 1954ம் வருடத்தில் பிறப்பிக்கப்பட்ட ஒரு சட்டத்தை நீக்கக் கோரி இந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நான் ஒரு வழக்கு தொடுத்திருக்கிறேன். நாடகங்களை அரசு முன்தணிக்கை செய்த பின்னர்தான் நடத்த முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கும் சட்டம் இது.

சுமார் 32 வருடங்களாகவே  பல முறை இந்த சட்டத்தை விமர்சித்து எழுதியும் பேசியும் வந்திருக்கிறேன். நாடகத் துறையில் இருக்கும் பல நண்பர்களுடன்  இதை எதிர்த்து வழக்கு தொடுப்பது பற்றிப் பேசியதுண்டு. இப்போதுதான் முடிந்திருக்கிறது.

சென்னையில் நாடகம் போடுவதற்கு ஏற்ற பல அரங்கங்கள் உள்ளன. மியூசியம் தியேட்டர், மியூசிக் அகாதமி, நாரத கானசபா, கிருஷ்ண கான சபா, ஆர்.ஆர்.சபா, மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ், வாணி மஹால், தட்சிணாமூர்த்தி ஹால், ஆர். கே.சுவாமி அரங்கு, ராணி சீதை அரங்கு, சிவகாமி பெத்தாச்சி அரங்கு என்று வகைவகையாக உள்ளன. ஆனால் இவை எதில் நாடகம் நடத்த அரங்கை வாடகைக்கு எடுப்பதாயிருந்தாலும், அரங்கின் நிர்வாகி முதலில் கேட்கும் கேள்வி போலீஸ் அனுமதி வாங்கிவிட்டீர்களா, லைசன்ஸ் நம்பர் என்ன என்பதுதான்.

டிராமாடிக் பர்ஃபார்மன்சஸ் ஆக்ட் 1954ன் படி இந்த லைசன்ஸ் தரப்படுவதாகக் கருதப்படுகிறது. லைசன்சுக்கு விண்ணப்பிக்க, நாடகம் நடத்தப் போகும் நாளுக்கு 21 நாட்கள் முன்பாக முழு நாடகத்தின் இரண்டு பிரதிகளை சென்னை நகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அதற்குரிய கட்டணத்துடன் தரவேண்டும்.  நாடகத்தை காவல் துறையின் ஓர் ஆய்வாளரோ, துணை ஆய்வாளரோ படித்துப் பார்த்து அதில் ஆட்சேபகரமான எதுவும் இல்லை என்று ஒவ்வொரு பக்கத்திலும் சீல் அடித்துக் கையெழுத்திட்டுக் கொடுத்தால்தான் நாடகத்தை அரங்கில் நடத்த முடியும்.

சென்னைக்கு வெளியே மாவட்டங்களில் இந்த அதிகாரம் கலெக்டருடையது. சென்னையில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரும் இதர ஊர்களில் கலெக்டர் அலுவலக குமாஸ்தாவும்தான் நாடகத்தைப் படித்துப் பார்த்து மதிப்பிடும் கலையறிவுக்கு சொந்தக்காரர்கள்.

இதில் விசித்திரம் என்னவென்றால் சட்டத்தின் எந்த இடத்திலும் முன்கூட்டியே நாடகப்பிரதியைக் கேட்டு வாங்கி தணிக்கை செய்யவேண்டுமென்று சொல்லப்படவே இல்லை. ஒரு நாடகம் ஆட்சேபத்துக்குரியது என்று போலீஸ் கமிஷனுருக்கோ கலெக்டருக்கோ தெரியவந்தால், அப்போது அதன் பிரதியைக் கேட்டுப் பெற்று ஆய்வு செய்யலாமென்றுதான் தான் சட்டத்தில் இருக்கிறது. முன்தணிக்கை  செய்யும்படி  சொல்லவில்லை. ஆனால் நடைமுறையில் எல்லா நாடகங்களுக்கும் முன்தணிக்கை செய்து முன் அனுமதி லைசன்ஸ் எண் பெறவில்லையென்றால் அரங்க நிர்வாகிகள் அனுமதிக்கமாட்டார்கள்.

போலீஸ் சொல்லும் வெட்டுகளை ஏற்றுக் கொண்டால்தான் லைசன்ஸ் கிடைக்கும்.

மறைந்த நாடகாசிரியரும் என் நண்பருமான கோமல் சுவாமிநாதனின் புகழ் பெற்ற நாடகமான தண்ணீர் தண்ணீர் நாடகத்தில் பல இடங்கள் வெட்டப்பட்டன. அப்போது நான் எங்கள் பரீக்‌ஷா குழுவை நடத்த ஆரம்பித்து சுமார்  மூன்று வருடங்கள் ஆகியிருந்தன. தணிக்கைச் சட்டத்தை எதிர்த்து வழக்கு போடும்படி கோமலை நான் கேட்டுக் கொண்டேன். நில நடைமுறை சிக்கல்களினால் அவரால் அதைச் செய்யமுடியாமல் போயிற்று. தண்னீர் தண்ணீர் நாடகத்துக்கு சுமார் 30 சபாக்களில் தேதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. லைசன்ஸ் பிரச்சினையில் வழக்கு போட்டால், அந்த தேதிகள் எல்லாம் ரத்தாகி மாற்றப்பட வேண்டி வரும்.

எனவே கோமல் போலீசார் தெரிவித்த வெட்டுகளை அவர்களுடன் விவாதித்து சில வெட்டுகளை ஏற்றுக் கொண்டு லைசன்ஸ் பெற்றார். அப்போது திருப்பத்தூர் வாணியம்பாடி பகுதிகளில் போலீசார் நக்சல்பாரி வேட்டைகளில் ஈடுபட்டிருந்தனர். நாடகத்தில் திருப்பத்தூர் பெயர், அதனருகே ஒரு  கிராமம் என்றிருந்ததை மாற்ற சொன்னார்கள். அப்படித்தான் அது தென்மாவட்ட கிராமமாக நாடகத்தில் மாறியது.

அதே சமயம் எங்கள் பரீக்‌ஷா குழு என் பலூன் நாடகத்தை நடத்த இருந்தது. அதற்கும் பல வெட்டுகள் விழலாம் என்று எதிர்பார்த்து நாடக தினத்தன்றே புத்தகத்தை வெளியிட ஏற்பாடு  செய்திருந்தோம். ( இன்னும் இந்தியாவில் புத்தகங்களுக்கு முன்தணிக்கை வரவில்லை).

பலூன் நாடகத்துக்கு தணிக்கைப் பிரச்சினைகள் வரவில்லை. ஆனால் நாடகம் முடிந்ததும் நாடகத்துக்கு வந்திருந்த காவல் துறை உளவுப்பிரிவின் அறிக்கை அடிப்படையில் நாடக அரங்கின் நிர்வாகி காவல் ஆணையர் அலுவலகத்துக்கு  அழைத்து விசாரிக்கப்பட்டார்.

அதையடுத்து எங்கள் அடுத்த நாடகம் கமலாவுக்கு சிக்கல் தரப்பட்டது. மராத்தி நாடகாசிரியர் விஜய் டெண்டுல்கர் எழுதியதன் தமிழ் வடிவம் கமலா. ராணி சீதை அரங்கினை நாடகத்துக்கு வாடகைக்கு எடுத்திருந்தோம். லைசன்ஸ் வராமல் நாடகம் நடத்த அனுமதிக்கமாட்டேன் என்று அரங்க நிர்வாகி சொல்லியிருந்தார். 21 நாட்கள் முன்பு விண்னப்பித்திருந்தும் லைசன்ஸ் வரவில்லை. முன்தினம் கேட்டபோது நாடக தினத்தன்று காலை வரச்சொன்னார்கள். காலையில் சென்றபோது மதியம் வரச் சொன்னார்கள். மாலை 6.45க்கு நாடகம் தொடங்கவேண்டும்.

நான் கமிஷனர் அலுவலகத்துக்குச் சென்று டீ.சியை சந்தித்து கேட்டேன். எங்கள் நாடகப்பிரதியை எடுத்து வைத்துக் கொண்டு நீங்கள்தானே முட்டை நாடகம் போட்டது… நீங்கள்தானே பலூன் நாடகம் போட்டது… இதில் நிறைய வெட்டவேண்டியிருக்கிறது என்று ஆரம்பித்தார். அதிலெல்லாம் வெட்டவில்லையே என்றேன். படிக்காமலே லைசன்ஸ் குடுத்துட்டாங்க என்று சிரித்தார். இதை 21 நாள் முன்பே கொடுத்துவிட்டோமே, ஏன் முன்பே படித்து எங்களிடம் சொல்லவில்லை என்று கேட்டேன்.  வேற வேலை இருக்கு இல்ல.மெதுவாத்தான் படிப்போம் என்றார். இப்போது கமலாவில் பத்துப் பதினைந்து வெட்டுகளைச் சொன்னார். எல்லாம் சாதாரண வரிகள். வாதிட்டு அவற்றை மூன்றாகக் குறைத்தேன்.  அப்போது மாலை மணி 6.45.பின் நாளை காலை வந்து ரப்பர் ஸ்டாம்ப் சீல் போட்டு லைசன்ஸ் வாங்கிக் கொண்டு போங்கள். குமாஸ்தா வீட்டுக்குப் போய்விட்டார் என்றார் அந்த காவல் அதிகாரி. இன்று நாடகம் நடத்த வேண்டுமே என்றேன். அதைப் பற்றி தனக்குக் கவலையில்லை என்றார். எனக்குப் பெரும் கோபம் வந்தது. ஸ்க்ரிப்ட்டை அவர் மேசை மீதே வீசிவிட்டு, இப்போதே சீல் போட்டுத் தருவது உங்கள் பொறுப்பு. இல்லாவிட்டாலும் நாடகம் நடக்கும் என்று கடுமையாக சொன்னேன். அவரே வந்து சீல் எடுத்துப் போட்டுக் கொடுத்தார், நாங்கள் நாடகம் தொடங்கும்போது அன்று இரவு எட்டு மணி. பார்வையாளர்கள் 400 பேரும் காத்திருந்தார்கள்.தாமதம் ஏன் என்று அவர்களுக்கு விளக்கிச் சொல்லிவிட்டு நாடகம் நடத்தினோம். இது போன்ற அனுபவங்கள் என் நண்பர்கள் சிலருக்கும் உண்டு.

இவையெல்லாம் நாடக நடிகனாக இருந்து சினிமாவுக்குப் போய் முதலமைச்சரான எம்.ஜி.ஆர் ஆட்சியில் நடந்தவை.

நம் நாடகத்தை முன் தணிக்கைக்கு உட்படுத்துவது என்பதே எங்களுக்குப் பிடிக்காத நிலையில் சென்னையில் எந்த முக்கிய நாடக அரங்கிலும் எங்களால் நாடகம் நடத்த முடியவில்லை.  மாக்ஸ் முல்லர் பவன், பிரிட்டிஷ் கவுன்சில், அலையன்ஸ் பிரான்சேஸ் முதலிய ஜெர்மன், பிரிட்டிஷ், பிரெஞ்ச் நாட்டு கலாசார நிலையங்களின் அரங்கில்தான் லைசன்ஸ் பெறாமல் நாடகம் நடத்த முடியும். ஏனென்றால் அவை அந்நிய அரசுகளின் இடங்கள் என்பதால், நம் நாட்டு சட்டங்களிலிருந்து அவற்றுக்கு விலக்கு (டிப்ளமேட்டிக் இம்யூனிட்டி) உண்டு. எனவே கடந்த சில வருடங்களாகவே அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கில் நாடகம் நடத்தி வந்திருக்கிறோம்.

சபாக்களில் எங்களை நாடகம் நடத்த அழைத்தாலும் இந்த முன்தணிக்கை லைசன்ஸ் முறைக்கு நாங்கள் உடன்பட விரும்பாததால் எந்த முக்கிய அரங்கிலும் நாடகம் போட முடிவதில்லை.

இந்த நாடகத்துக்கான முன் தணிக்கை சட்டம் 1954ல் (காமராஜரின்) காங்கிரஸ் ஆட்சியால் கொண்டு வரப்பட்டதன்  அசல் நோக்கம்  அப்போது அந்த ஆட்சிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய எம்.ஆர்.ராதாவை ஒடுக்குவதுதான். ராதாவின் நாடகங்கள் மூட நம்பிக்கைகளை மட்டுமன்றி சம கால அரசியலை நையாண்டி செய்யும் விதத்திலும் இருந்தன.முன் தணிக்கையும் லைசன்ஸ் வாங்கும் முறையும் வந்ததும் ராதா அதைப் பல விதங்களில் சமாளித்தார். லைசன்ஸ் வாங்கிவைத்திருக்கும் நாடகத்தின் பெயரிலேயே வேறு நாடகத்தை நடத்தினார். உளவு பார்க்க வரும் போலீஸ் சி.ஐ.டிகள் குறிப்பெடுக்க வசதியாக உட்கார விரும்பிய முன்வரிசை டிக்கட்விலையைப் பல மடங்கு உயர்த்தி அரசிடம் அபராதம் வசூலித்தார். இப்போதைய என் வழக்கு எம்.ஆர். ராதாவின் நூற்றாண்டில் அவருக்கு என் அஞ்சலி.

காங்கிரஸ் ஆட்சி சோவின் சம்பவாமி யுகே யுகேவுக்கு அனுமதி மறுத்தது. அவர் அதை எதிர்த்து வழக்கு தொடுக்க முற்பட்டபோது, அட்வகேட் ஜெனரலின் ஆலோசனைப்படி தடையை நீக்கியது.

திராவிட இயக்கமான தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் நியாயப்படி நாடக நிகழ்ச்சிகள் சட்டத்தை ரத்து செய்திருக்க வேண்டும். செய்யவில்லை. சோவின் துக்ளக் நாடகத்துக்கும் இன்னும் பல நாடகங்களுக்கும் எதிராக தொல்லை கொடுத்தது.

இந்த சட்டம் சுதந்திர இந்தியாவின் கண்டுபிடிப்பு அல்ல. இது பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கருத்து சுதந்திரத்தை ஒடுக்க எடுத்த பல நடவடிக்கைகளில் ஒன்று. பத்திரிகைகளை ஒடுக்குவதற்கான சட்டமும் நாடகத் தணிக்கை சட்டமும் அடுத்தடுத்து போடப்பட்டவை. கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து இந்திய ஆட்சி ராணி கைக்கு மாறுவதற்கு சற்று முன்பே பிரிட்டனில் போடபப்ட்டது நாடகத்தணிக்கை சட்டம். விடுதலைப் போராட்ட காலத்தில் எண்ணற்ற நாடகக்காரர்கள் இந்த சட்டத்தின் கீழ் துன்புறுத்தப் பட்டிருக்கின்றனர்.

இந்த சட்டத்தால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியே இதைத் தமிழ்நாட்டில் புதுப்பித்தது. இதனால் பாதிக்கப்பட்ட திராவிட இயக்கமே இதை நீக்காமல் இன்னும் தொடர்கிறது. காரணம் அதிகாரத்துக்கு வந்ததும் தங்களுக்கு எதிராக எந்தக் கருத்தும் உருவாகிவிடக் கூடாது என்ற பயம்தான்.  இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் இந்த சட்டம் இப்போது இல்லை.

மக்கள் முன்னால் நேரடியாக நிகழ்த்தக்கூடிய கலைகள் பல. தெருக்கூத்து, பரதநாட்டியம், கர்நாடக இசைக் கச்சேரி முதல் மெல்லிசைக் கச்சேரிகள் வரை. இவற்றில் நாடகமும் ஒன்று. ஆனால் முன் தணிக்கை பாரபட்சமாக நாடகத்துக்கு மட்டுமே விதிக்கப்பட்டிருக்கிறது. ஆட்சேபத்துக்குரியது என்று ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரும் ஒரு கலெக்டர் ஆபீஸ் குமாஸ்தாவும் கருதக் கூடியவை நாடகத்தில் மட்டும்தான் இருக்கமுடியுமா என்ன? கச்சேரிக்கு நடுவே அரசுக்குப் பிடிக்காத ஒரு சாகித்யத்தைப் பாட முடியாதா என்ன? ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ பாட்டையே ஒரு லைட் மியூசிக் குழுவில் லேசாக மாற்றி அரசியல் பாட்டாக்க முடியாதா என்ன ?  நடன அபிநயத்தில் ஆபாசமாக என்னவெல்லாம் சாத்தியம் உண்டு என்பது சினிமா பார்க்கும் எல்லாருக்கும் தெரியுமே ? மேடையில் இவற்றுக்கெல்லாம் முன் தணிக்கை லைசன்ஸ் விதிகள் இல்லாதபோது ஏன் நாடகம் மட்டும் நசுக்கப்படுகிறது ?

உலகெங்கும் வீதி நாடகம் என்பது முன்கூட்டி எழுதிய அல்லது எழுதாத நாடகப் பிரதியை கொண்டு நடத்தப்படுவதாகும். பெரும்பாலும் அவை எழுதப்பட்டதில்லை. நடிகர்கள் கூடிப் பேசி அப்படியே மனோதர்மப்படி நடத்தும் படைப்பாற்றல் உடையவை வீதி நாடகங்கள். அவ்வாறு நாங்கள் வீதி என்ற இயக்கத்தை உருவாக்கி  பல தெரு நாடகங்களை 1978 79களில்  சென்னை மெரீனா கடற்கரையில் நடத்தியிருக்கிறோம். இன்று அவ்வாறு எந்த கடற்கரையிலும் பூங்காவிலும் தெரு நாடகம் நடத்த இயலாது. போலீஸ் அனுமதிப்பதில்லை. முன்கூட்டி பிரதியைத் தந்து தணிக்கை செய்து அனுமதிபெற வேண்டும். கருணாநிதி ஆட்சியில் எல்லா பூங்காக்களும் சங்கமத்துக்காக திறந்துவிடப்பட்டன. ஆனால் தெரு நாடகம் நடத்துவோருக்கு அனுமதியில்லை.

அண்மையில் 2000மாவது ஆண்டில்  நாதுராம் கோட்சே நாடக வாசிப்புக்கு விதித்த தடையை எதிர்த்து போடப்பட்ட வழக்கில் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் அளித்த தீர்ப்பில் “அரசியல் சட்டத்தின் 21வது பிரிவு உயிர் வாழ்வதற்கான உரிமையை மட்டும் அளிக்கவில்லை. அப்படி வாழ்வது என்பது உடலளவில் ஜீவித்திருப்பது மட்டுமாகாது. அர்த்தமுள்ள பூரண மகிழ்ச்சியுடனான வாழ்க்கைக்கே சட்டம் உறுதியளிக்கிறது. அதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் இந்தப் பிரிவு காப்பாற்றவேண்டும்.  கலை, இலக்கிய செயல்பாடுகள் எல்லாம் அதற்கு உட்பட்டவை. தகவலறியும் உரிமையும் கருத்துச் சுதந்திரமும், மாறுபட்ட கருத்துகளை சொல்லவும் கேட்கவும் இருக்கும் உரிமையும் எல்லாமே இதே பிரிவினால் உறுதி செய்யப்பட்டுள்ளன. இவற்றைத் தடுத்தால் ஒரு படைப்பாளியின் படைப்பு சாரமிழந்து சக்கையாகிவிடும்.” என்று கூறி தடையை ரத்து செய்தார்.

கருத்து சுதந்திரத்துக்கும் சிவில் அரசியல் உரிமைகளுக்கும் அரசியல் சட்டம் கொடுத்திருக்கும் உரிமைகளான பிரிவுகள் 14, 19 முதலியவற்றுக்கெல்லாம் விரோதமான நாடக நிகழ்ச்சிகள் சட்டத்தை ரத்து செய்யவேண்டுமென்று கோரி இப்போது வழக்கு தொடுத்திருக்கிறேன். முப்பதாண்டு கால கனவு இந்த முறை நனவாகும் என்று நம்புகிறேன்.

கல்கி 21.4.2012

ஏன் இந்தத் தற்கொலை வெறி ?
“காதல் வந்தால் சொல்லியனுப்பு…. உயிரோடிருந்தால் வருகிறேன்”, என்று ஒரு பிரபலமான சினிமாப் பாடலின் வரிகள் சொல்கின்றன. காதலுக்கும் உயிருக்கும் இருக்கும் தொடர்புதான் இந்த வாரம் என் கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது.

சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்திலும் அடுத்து ஐ.ஐ.டியிலும் இரு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணங்களில் காதல் பிரச்சினையும் ஒன்று என்று செய்திகள் சொல்கின்றன. காதல்  ஏன் எப்படி பிரச்சினையாகிறது என்று நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

என் காதல் அனுபவங்களைப் பற்றிப் பதினெட்டு வருடங்களுக்கு முன்னர் நான் எழுதிய ஒரு கட்டுரையில் ஒருபகுதி இப்படிப்போகிறது – ” சிறந்த காதலர்களால்தான்  சிறந்த நட்பைப் புரிந்து கொள்ளமுடியும். காதலைக் கண்டு பயப்படுகிறவர்கள்தான் ஆண்- பெண் நட்பைக் கண்டும் அஞ்சி அஞ்சிச் சாவார்கள். எல்லா நட்பும் காதலாக மலரவேண்டியது இல்லை  என்பது அவர்களுக்குப் புரியாது. எல்லா ஆண்- பெண் நட்பும் காமத்திலேயே சென்று முடியும் என்பது அவர்களின் நிரந்தர பயம். உறவுகளைத் தவறாகப் புரிந்துகொள்ளுதல் என்பது நம் சமூகத்தில் புரையோடியிருக்கிற நோய். செக்ஸ்,காதல் பற்றியெல்லாம் ஆரோக்கியமான சூழல் இல்லாமல் வக்கரிப்பான சினிமாக்களே இதற்கு ஆசானாக விளங்குவது இந்த நோயின் இன்னொரு அறிகுறி”

படிப்பறிவு இல்லாத அரைகுறை எழுத்தறிவு உள்ள இளைஞர்களும்  காதல்  ‘தோல்வி’யில் தற்கொலை செய்கிறார்கள், உயர் படிப்பு படிக்கும் அறிவார்ந்த இளைஞர்களும் அதையே செய்கிறார்கள். எனவே காதல் என்றால் என்ன என்பது பற்றிய புரிதல் இரு சாராருக்கும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

காதலில் ‘தோல்வி’ என்பது என்ன ?

ஒருதலைக் காதலை தோல்வி என்கிறார்கள். எனக்குப் பிடித்த பெண்ணுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றால் அது காதல் தோல்வியாம். உடனே தற்கொலை செய்கிறார்கள். இந்த ‘தோல்வி’ லாஜிக்படி பார்த்தால் காதலிக்காமல், ஏற்பாடு செய்யும் திருமணமுயற்சிகளில் பெண் பார்க்கப் போகிறவனுக்குப் பெண்ணைப் பிடித்திருக்கிறது; பெண்ணுக்கு பிடிக்கவில்லை என்றால் அவன்  தற்கொலை செய்துகொள்ளவேண்டுமா?  அல்லது எப்படியாவது அவளுக்குத் தன்னைப் பிடிக்கச் செய்யவேண்டும் என்று டார்ச்சர் செய்யமுடியுமா?

காதல் ஹார்மோன்களின் தூண்டுதலினால், உடலின் தேவைகளுடன் மனதின் தேவைகளும் சேர்ந்துகொண்டு உசுப்பிவிடும் ஓர் உணர்வு. இதைப் பக்குவமாக வசப்படுத்தத் தவறினால் பழத்தை வெட்டுவதற்கு பதில் கையை வெட்டும் கத்தியாகிவிடும்.

காதலில் இறுதி வெற்றி என்பது என்ன ?

அப்போது சொன்னதைத்தான் இப்போதும் சொல்லத் தோன்றுகிறது. “காதலின் இயல்பான முற்றுப் புள்ளி காமம்தான் என்றே பொதுவாக நம்பப்படுகிறது. கல்யாணத்தில் முடிவதுதான் நிஜக் காதல் என்றும் சொல்லப்படுகிறது. என்னைப் பொறுத்தவரையில்  காதலின் இறுதி வெற்றி என்பது அதில் வயப்பட்டிருந்த இருவருக்குமே அந்த அனுபவம்  எந்த காலத்தில் நினைத்துப் பார்த்தாலும், துளியும் வலிகளற்ற இனிமையாக்வே இருக்கமுடியுமானால் அதுதான் வெற்றி பெற்ற காதல்.இந்த இனிமையைத்தொடர்ந்து நீடிப்பதற்கான கருவியாக திருமணமும் அமைந்தால் அது போனஸ் வெற்றி.  திருமணத்துக்குப் பிறகு காதலைத் தொலைத்துவிட்டவர்கள்  வாய்ப்பை நழுவவிட்ட முட்டாள்கள்; சபிக்கப்பட்டவர்கள்.”

ஆனால் நம் சமூகத்தில் இன்று காதல் என்பது ஆணும் பெண்ணும் சாமர்த்தியமாகத் தனக்கான , தன் இச்சைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தோதான அடிமையை வடிவமைத்து வசப்படுத்தும் சூழ்ச்சியாக மாற்றப்பட்டிருக்கிறது. காதல் என்றால் என்ன என்று புரியாத மனநிலையே இதற்குக் காரணம். காதல் ஒருவர் தன்னையும் அழித்துக் கொள்ளாமல், எதிர் நபரையும் அழிக்காமல் இருவரையும் வளப்படுத்தும் பகிர்தல். ஆனால் இன்னொரு நபரைத் தன் விருப்பப்படி மாற்றியமைத்து தன் உடமையாக்கிக் கொள்ளும் மனநிலையாகவே காதல் பயன்படுத்தப் படுகிறது. அப்படி உடமையாக்கிக் கொள்ளமுடியாவிட்டால், இருவரில் ஒருவர் மற்றவரை அழிப்பதாகவோ தன்னையே அழித்துக் கொள்வதாகவோ முடிகிறது.

தன்னைக் காதலிக்க மறுத்த பெண்ணின் முகத்தில் ஆசிட் ஊற்றும் ஒருவனை எப்படி காதலன் என்று சொல்ல முடியும் ? அதில் எங்கே இருக்கிறது காதல் ? தன் அன்பை ஒருவர் ஏற்காவிட்டால், அந்த அன்பை இனி யாருக்குமே காட்டமுடியாது என்று சொல்லி தன்னையே அழித்துக் கொள்ளும் மனதில் ஏது காதல் ? என்னைக் காதலிக்க மறுத்தால் நான் கையைக் கிழித்துக் கொள்வேன், சாவேன் என்று மிரட்டி எதிராளை அன்பு செலுத்தக் கட்டாயப்படுத்துவது எப்படி காதலாகும் ? அது வெறும் பிளாக்மெயில்தானே ?

ஆனால் காதல் என்பது என்னவென்றே தெரியாமலே தாங்கள் காதலிலிருப்பதாக நம்பும் பலரை சினிமாவும் ஊடகங்களும் உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன. உடல்முதிர்ச்சியை மட்டும் பயன்படுத்துவது காமம். அத்துடன் மனமுதிர்ச்சியும் இணைந்தால்தான் காதல்.

இன்றைய வாழ்க்கை முறையின் விளைவாக உடல் முதிர்ச்சி பத்து பதினோரு வயதிலேயே ஏற்படத் தொடங்கிவிடுகிறது. பெண்கள் பருவமெய்தும் வயது 14லிருந்து இன்று பத்தைத் தொட்டுவிட்டது.

ஆனால் மன முதிர்ச்சிக்குக் குறைந்தபட்ச வயது தேவை. கல்லூரிப் படிப்பை முடித்து வேலை தேடி அலைந்து ஒரு வேலை கிடைத்து அதில்  பல மனிதர்களுடன் உறவாடும் வேளையில்தான் மனப் பக்குவம் தொடங்குவது சாத்தியமாகிறது. இது பொதுவிதி. விதிவிலக்குகள் மிகக் குறைவாக எப்போதும் இருப்பார்கள். சுமார் 22, 23 வயதுக்குப் பிறகு தோன்றும் காதலில்தான் உடல் தேவையும் மனத் தேவையும் இணைந்த  தேடல் இருப்பதற்கு வாய்ப்பு அதிகம். அதற்கு முன்பு நம் மனதின் தேவைகள் என்ன என்று யோசித்து தேர்ந்தெடுத்து தொகுத்து  வாழ்க்கையின் குறிக் கோள்களை வகுத்துவிடும் வாய்ப்பு குறைவு. உடலின் தேவைகள் மட்டுமே உறைக்கக்கூடிய வயதாகவும் மனம் எப்போதும் குழம்பிக் குழம்பித் தெளிவைத் தேடும் முயற்சியிலுமாக இருக்கும்.

ஆனால் நம் சினிமாகாரர்கள் எந்த சமூகப் பொறுப்பும் இல்லாதவர்கள்.  அறியாத வயசு, புரியாத மனசு., ரெண்டும் சேர்ந்து காதல் செய்யும் நேரம் என்று நட்பையும் காதலையும் குழப்பியடித்து தங்கள் கல்லாவை நிரப்புவதிலேயே குறியாக இருப்பார்கள். சுமார் இருபது வருடம் முன்னர், பள்ளி இறுதி வகுப்பிலேயே கமர்ஷியலாக நுழைத்த காதலை இப்போது எட்டாங்கிளாசுக்குக் கொண்டு போய்விட்டார்கள்.

பொறுக்கியாக இருந்தால்தான் பெண்கள் விரும்புவார்கள் என்று ஒரு சூத்திரத்தை சினிமா விடாப்பிடியாகக் கையாண்டு வருகிறது. இதன் நீட்சியாக, என்ன பொறுக்கித்தனம் செய்தாவது ஒரு பெண்ணை தன்னைக் காதலிக்க வைப்பது காதல் தர்மம் என்று  கதை பின்னப்படுகிறது.

அசல் வாழ்க்கையில் காதல் இப்படியெல்லாம் இல்லை. இவனை நியாயமாக வெறுப்பதற்கு பதிலாக, ஏன் எனக்குப் பிடித்திருக்கிறது என்று சொல்லத் தெரியாமலே மயங்கும் பெண்களும் ஏன் இவளுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளவே கஷ்டப்படும் பையன்களும்  பெருகிக் கொண்டே இருக்கிறார்கள்.

ஒரு பள்ளி மாணவன் ‘காதல் தோல்வியால்’ தற்கொலை செய்துகொண்டபோது அவன் ஒரு தலையாக காதலித்த  மாணவியிடம் விசாரித்தார்கள்.  “நிறைய பசங்க எனக்கு லவ் லெட்டர் கொடுத்திருக்காங்க. நான் எல்லார் கிட்டயும் நோதான் சொல்லியிருக்கேன். மத்தவங்கள்லாம் ஒண்ணும் செத்துப் போகலே. இவன் செத்துப் போனா அதுக்கு நான் என்ன செய்யமுடியும் ?” என்று அந்த மாணவி கேட்ட நியாயத்தை யாரும் பரிசீலிப்பதில்லை.

காதலை விடலைப்பருவத்திலிருந்து மழலைப் பருவத்துக்கு எடுத்துப் போய் கமர்ஷியலாக்கும் சினிமாவைப் பின்பற்றி விளம்பரக்காரர்களும் குழந்தைகளை பெரியவர்கள் போல நடக்கச் செய்யும் உத்திகளை கமர்ஷியல் விளம்பரங்களில் புகுத்த ஆரம்பித்து விட்டார்கள். குழந்தைகள் சைட்டடிப்பது, பெற்றோருக்குத் தெரியாமல் ரகசியமாக நெருக்கமாக உட்கார்ந்து கிசுகிசுப்பது என்று விடலைச் செயல்களை செய்வதை கமர்ஷியல் விளம்பரங்கள் பாலியல் தொனியுடன் காட்ட ஆரம்பித்துவிட்டன.  சினிமாவை முன்தணிக்கை செய்யும் அரசு டி.வி விளம்பரங்களுக்கு முன்தணிக்கை பற்றி யோசிப்பது கூட இல்லை.  வணிக செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவேண்டிய அரசின் பிரதமர், கொலை வெறிப் பாட்டின் கமர்ஷியல் வெற்றியையடுத்து அதன் நடிகரை சர்வதேச பிரமுகருடன் விருந்து சாப்பிட அழைப்பதென்பது அரசு வணிகத் துறையின் தரகராக மாறிவிட்ட சூழலின் அடையாளம்தான்.  இந்தச் சூழலில் சராசரி இளைஞர்கள் எப்படி தங்களுக்கான பக்குவத்தை அடைவார்கள் ?

தேர்வுக்கான பாடங்கள், அவற்றை வசப்படுத்துவதற்கான உத்திகள் இவற்றையெல்லாம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நேர்த்தியாகவும் திறமையாகவும் சொல்லித் தர ஏற்பாடுகள் செய்திருக்கிறோம். ஆனால் விடலைப் பருவத்து பெண்ணுக்கோ ஆணுக்கோ தன் உடலையும் தன் மனதையும் தன் வசப்படுத்தி வைத்திருப்பதற்கான கல்வி இல்லை.

அதற்கான வழிகாட்டுதல் இன்று குடும்பத்திடம் கிடைப்பது இல்லை. மிடில் க்ளாஸ் குடும்பமும் அரசைப் போலவே பன்னாட்டு கம்பெனிகள் சார்ந்த கனவுலகில் திளைத்துக்கொண்டிருக்கிறது.

படிப்போடு சேர்த்து வாழ்க்கைக்கான திறன்களையும் வளரிளம் பருவத்திலேயே நம் சிறுவர்களுக்கு தரத் தவறினால்  அதிகம் படித்தவன், கொஞ்சம் படித்தவன் என்று எல்லா தரப்பு இளைஞர்களிடையிலும் காதல் தோல்வி தற்கொலைகள், பரீட்சை தோல்வி தற்கொலைகள் பெருகுவது உறுதி.

பள்ளிப்படிப்போடு முடித்துவிட்டு மேலே படிக்க வசதியில்லாமல், குடும்பச் சூழலினால் வேலைகளுக்குச் செல்லும் இளைஞர்  கூட்டம் இன்று மிகப் பெரிது. டீன் ஏஜில் இருக்கும் அந்தப் பிரிவினர் வாழ்க்கை என்பது கையில் கொஞ்சம் காசு புரள்வதாகவும், அன்றாட அலுவல் நிமித்தம் ஆண் பெண்  சேர்ந்து உறவாடும் சூழலுடையதாகவும் இருக்கிறது. ஆனால் மனப்பக்குவம் இன்னும் வரப்பெறாத நிலையில் அந்த உறவுகளில் கடும் சிக்கல்கள் உருவாகின்றன. காத்திருக்கின்றன.

இனி தாமதிக்காமல் பள்ளிப்பருவத்திலேயே வாழ்க்கைத் திறன்களுக்கான கல்வியை தினசரி பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆக்காவிட்டால், நாம் பல அருமையான உயிர்களை அபத்தமான காரணங்களுக்காக பலி கொடுக்கும் சமூகமாகிவிடுவோம்.  கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் உளவியல் ஆலோசகர்களை நியமிப்பது என்பது தும்பை விட்டு வாலைப்பிடித்த கதையாகவே மாறும். ஒவ்வொரு சிறுவனும் சிறுமியும் தன் உடலையும் மனதையும் புரிந்துகொண்டு தன்வசத்தில் வைத்திருக்கும் சமூகமே நம் கனவாக இருக்கவேண்டும். அது நனவாக பள்ளிக் கூடத்திலேயே பணிகளைத் தொடங்க வேண்டும்.  ஆரோக்கியமான இளம் மனங்களை சிதைத்து நச்சாக்கிக் கொண்டிருக்கும் ஊடகங்கள், விளம்பரங்கள், சினிமாக்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகள் வேண்டும். சில கோடி ரூபாய் லாபங்களுக்காக பல கோடி மனிதர்களை பலி கொடுக்க முடியாது.

இந்த வாரக் கேள்வி:

தோழர் நல்லகண்ணுவுக்கு.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் கடந்த 200 நாட்களாக உறுதியுடன் நடந்தபோது அதை இழிவுபடுத்தியும் கண்டித்தும் உலையைத் திறந்தே  தீரவேண்டும் என்றும் உங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழங்கிவந்தது. இப்போது திடீர் ஞானம் வந்து இடிந்த கரைக்குப் போய் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறீர்கள். இப்போதாவது செய்தீர்களே என்று மகிழ்ச்சியடையமுடியவில்லையே.. இதை உங்கள் கட்சி மார்ச் 18க்கு முன்னரே செய்திருந்தால் போராட்டம் வலிமையடைந்திருக்கும்.  பெரும்படைகளைக் கொண்டு அரசுகள் மக்களை மிரட்டி ஒடுக்கியபோது மௌனமாக இருந்தது துரோகம் இல்லையா? இப்போது ஆதரவு காட்டுவதன் மர்மம் என்ன?  நிஜமான மனமாற்றமா? அல்லது அடுத்த தேர்தலுக்காக மக்களுடன் சமரசமா? உண்மையான சுயவிமர்சனம் என்றால், போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய தோழர் தா.பாண்டியன் மீது  கட்சி நடவடிக்கை எடுக்குமா?

அடுத்த குடியரசுத் தலைவர் ?

வாசகர்கள் ஆலோசனைகள் வந்தவண்னம் உள்ளன. நான் பரிந்துரைத்த கோபாலகிருஷ்ண காந்தி மம்தா ஆதரவாளர் , இடதுசாரி எதிர்ப்பாளர் என்று ஒரு இடதுசாரி நண்பர் ஆட்சேபித்திருக்கிறார். இப்போதைய துணை ஜனாதிபதி அன்சாரியே நல்ல சாய்ஸ் என்பது அவர் கருத்து.  இன்னொரு வாசகர் தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த நரேஷ் குப்தாவைப் பரிந்துரைத்துள்ளார். சில வருடங்கள் முன்னர் நான் பரிந்துரைத்த ஆர்.நல்லகண்ணு, இரா. செழியன் ஆகியோரை ஏன் இப்போது விட்டுவிட்டேன் என்று ஒருவர் கேட்கிறார். பிரதமரின் வயது 60க்குக் கீழும் கனவு ஜனாதிபதியின் வயது 70க்குக் கீழுமிருக்கவேண்டும் என்பது என் கனவு. அதனால் 80க்கு மேற்பட்டவர்களை இந்த முறை ஆட்டத்தில் சேர்க்கவில்லை.

கல்கி 14.4.2012

பரீக்‌ஷா நாடகம் ஏப்ரல் 14,15ல்
பரீக்‌ஷா நாடகம் வட்டம். நிகழ்ச்சி நாட்கள்: ஏப்ரல் 14 சனி மாலை 6 மணிக்கு ஸ்பேசஸ் அரங்கு, 1, எலியட் பீச் சாலை பெசண்ட் நகர். ஏப்ரல் 15 ஞாயிறு காலை 10 மணிக்கு தியாகராய நகர் கிரிபித் சாலை கிருஷ்ண கான சபா அரங்கில்.

சென்னையின் முதல் மாற்று நாடக இயக்கமான பரீக்‌ஷா 1978லிருந்து இதுவரை இந்திரா பார்த்தசாரதி, அம்பை, பிரபஞ்சன், அறந்தை நாராயனன், சுஜாதா, ஞாநி, முதலானோர் நாடகங்களையும் பாதல் சர்க்கார், விஜய் டெண்டுல்கர்,ஹெரால்ட் பிண்ட்டர், பிரீஸ்ட்லீ,பெர்டோல்ட் பிரெக்ட் ஆகியோரின் படைப்புகளின் தமிழ் வடிவங்களையும் நிகழ்த்தி வந்திருக்கிறது.

ஜெர்மன் நாடகாசிரியர் பிரெக்ட்டின் காகேசியன் சாக் சர்க்கிள் நாடகத்தை தமிழுக்கேற்ற விதத்தில் மாற்றியமைத்து ஞாநி எழுதி இயக்கும் நாடகமே வட்டம். துரைகள் காலம் முதல் புரட்சி காலம் வரையிலான கதையை 20க்கும் மேற்பட்ட நடிகர்களுடன் சொல்கிறது இந்த நாடகம். ஒரு குழந்தை யாருக்கு சொந்தம் – பெற்ற அன்னை துரையம்மாவுக்கா, வளர்த்த அன்னை கன்னியம்மாவுக்கா என்பதை திருடியாக இருந்து நீதிபதியாக மாறிய முனியம்மா எப்படி தீர்மானிக்கிறாள் என்பதே கதை. பெண்களுக்கான் சம உரிமை, நிலத்தின் மீதான உழவரின் உரிமை, ராணுவம் முதலிய ஆட்சி இயந்திரங்களின் பங்கு எல்லாவற்றையும் பற்றி சமூக அரசியல் தொனியில் எள்ளலுடன் சொல்கிறது வட்டம்.

pareeksha’s play vattam will be performed on 14th april 2012 at 6 pm at spaces, 1 eliots beach road, besant nagar chennai and at 10 am on 15th april 2012 sunday at krishna gana sabha, griffith road t.nagar near panagal park.

Pareeskha the first alternate theatre group of Chennai , has performed the tamil plays of Indira Parthasarathy, Ambai, Praabanjan,Aranthai Naryanan, Sujatha, Gnani and also adaptations of plays by Badal sircar, Vijay tendulkar, Harold Pinter, J.B.Priestley and bertolt Brecht.

‘Vattam’ is adapted and directed by Gnani into Tamil from the german playwright Bertolt Brecht’s Caucasian chalk circle. The play has a huge cast of 20 actors narrating a story starting in times of chieftains to modern days. Muniyamma, a local thief turned judge delivers verdict on who is the rightful owner of a baby – the biological mother Duraiyamma or the foster mother Kanniyamma.The play Gnani is a socio-political spoof touching on issues of women empowerment, tenants’ right over land, the role of the army, court doctors, architects,etc.,

பளிச்சுன்னு பத்து விஷயம்….
பளிச் 1 :

சசிகலாவை ஜெயலலிதா திரும்ப சேர்த்துகிட்டது பத்தி அரசியல்ல இருக்கற பெரிய தலைங்க யாரும் வாயைத் திறக்கல.   அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பான்னுதான் எல்லாரும் நினைக்கறப்பல தெரியுது. ஆனா எனக்கு இந்த மேட்டர், தமிழ்நாட்டு மக்களையெல்லாம் இந்த ஜெயலலிதாவும் சசிகலாவும் சரியான கேணப் பசங்கன்னு நிஜமாவே நம்பறாங்களோன்னு தோணுது. இல்லாட்டி கட்சியிலயும் ஆட்சியிலயும் ஜெயலலிதா பேரைக் கெடுக்கற வேலைங்களைத் தன் சொந்தக்காரங்க செஞ்சது 24 வருஷமா தனக்குத் தெரியாதுன்னு சசி சொல்றதை யாராவது நம்புவாங்களா? போயஸ் வூட்டை விட்டு வெளியில வந்ததும்தான் தனக்கு எல்லாம் தெரியவந்துச்சுன்னு சசி சொல்றதை ஏத்துக்கறேன்னு ஜெ சொல்றதை நாம ஏத்துக்கிட்டா, நாம எல்லாரும் கேணைங்கன்னுதானே அர்த்தம்?

இதெல்லாம் ஜெ, சசி சொந்த சமாச்சாரம்னு வுடமுடியாது. 24 வருஷமா ஏன் சசியைக் கூட வெச்சிகிட்டு அவங்க சொந்தக்காரங்கள்லாம் கட்சியிலயும் ஆட்சியிலயும் ஆடவுட்டாங்கன்னு ஜெ சொல்லணும். அவங்க கட்சியிலயும் ஆட்சியிலயும் என்னென்ன அக்கிரமம் பண்ணாங்கன்னும் சொல்லணும்.  அதுக்கு என்ன நடவடிக்கைன்னும் சொல்லணும். சசியை இப்ப திரும்ப சேத்துகிட்டது ஏன்னும் சொல்லணும். இனிமே என் சொந்தக்காரங்களுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. எல்லாரையும் கட் பண்ணிட்டேன்னு சசி சொல்றாங்க இல்ல, முதல்ல நடராஜனுக்கு டைவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பிட்டாங்களான்னு  சொல்லணும்.

ரெண்டு பேரும் எதுவும் சொல்லமாட்டாங்க. ராவணன், நடராஜன், திவாகரன், சுதாகரன்னு ஒவ்வொருத்தரா அடுத்து பழையபடி கட்சிவேலை, ஆட்சி வேலையிலல்லாம் மூக்கை நுழைக்கத்தான் போறாங்க. நாமும் பாத்துகிட்டு ஞேன்னு நிக்கப்போறோம். ஏன்னா நம்மதான் கேணைங்களாச்சே.

பளிச் 2:

ஒண்ணு ரெண்டு டி.வில ஒரு தரம் ரெண்டு தரம் காட்டினதோட சரி. பாதி பேப்பர்லஇந்த நியூசே வரல. பட்டப்பகல்ல நட்ட நடு ரோட்டுல ஒரு போலீஸ் அதிகாரி பொதுமக்களை அடிக்கறான். அவனை என்னான்னு கேக்க ஆளே இல்ல. தர்மபுரில ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப விநியோகத்துல குளறுபடி செஞ்சதுனால, வாத்யாருங்க சாலை மறியல் செஞ்சிருக்காங்க. தன் கிட்ட வந்து முறையிட்டு பேசற ஒரு ஆசிரியரை டி.எஸ்.பி சந்தனப் பாண்டியன் அடிக்கறாரு. வேணாங்க அடிக்காதீங்கன்னு கெஞ்சறாங்க அந்த ஆசிரியரோட மனைவி. அவங்களை அப்பிடியே புடிச்சுத் தள்ளறாரு பாண்டியன். அந்தம்மா அப்பிடியே பின்னால் மண்டை தரையில படறாமாதிரி ரோடுல விழறாங்க.

இப்பிடி செஞ்ச அதிகாரி மேல என்ன நடவடிக்கைன்னு கேட்டா மாவட்ட எஸ்.பி அவர்கிட்ட விளக்கம் கேட்டிருக்குங்கறாரு. இதுல விளக்கம் கேக்க என்னா இருக்குது. டி.வில போட்டதைப் பார்த்தலே அந்த எஸ்.பிக்கு புரிஞ்சுடுமே. கொறைஞ்சபட்சம் டி.எஸ்.பியை சஸ்பெண்ட் பண்ணிட்டுதானே விளக்கம் கேக்கணும்…இதுக்கு நடுவுல, அடிவாங்கின ரெண்டு பேரையும் ஸ்டேஷனுக்குக் கூட்டிகிட்டுப் போய் மிரட்டிக் கையெழுத்து வாங்கியிருக்காங்கன்னு ஒரு செய்தி சொல்லுது. இது என்ன நாடா, இல்ல காடா ?  ராஜபக்‌ஷே பண்ணின அக்கிரமத்துக்கு சட்டசபையில தீர்மானம் போடறாங்க. ஐ.நால தீர்மானம் போடறாங்க. உள்ளூர் ராஜபக்‌ஷேங்களைக் கேப்பாரே இல்லியா? சம்பளம் பஞ்சப்படின்னா சத்தம் போடற ஆசிரியர் சங்கமெல்லாம் இதுக்கு குரல் குடுக்க வரமாட்டாங்களா?

பளிச் 3:

அண்ணா பல்கலைக்கழகத்துல படிச்சுகிட்டிருந்த மாணவன் மணிவண்னன் தற்கொலை பண்ணிகிட்டது அவனைத் தெரிஞ்ச நண்பர்களுக்கெல்லாம் பெரிய அதிர்ச்சியா இருக்கு. தர்மபுரி மாவட்டத்துல செஙகல் சூளையில சிறுவனா இருந்தப்பவே கொத்தடிமையா இருந்த மணிவண்ணனை அதிகாரிங்க மீட்டு படிக்க் உதவி செஞ்சதுல மாநிலத்துலயே 13 வது எடத்துல ப்ளஸ் டூ பாஸ் பண்ணி வந்திருக்கான்.

அவ்வளவு கஷ்டத்தை அவன் தாண்டி வந்து சாதிச்சதோட மட்டும் இல்ல, இப்ப கார்ப்பரேஷன் பள்ளியில படிக்கற ஏழை பசங்ககிட்ட போய் பேசி அவங்களை ஊக்கப்படுத்தற வேலையெல்லாம் செஞ்சுருக்கான்னு கிழக்கு பத்ரி சொல்றாரு.   காசு திரட்டி ஏழை மாணவர்களுக்கெலாம் உதவி செஞ்சு வந்திருக்கான். ஐ.ஏ.எஸ் அதிகாரியாகணும், ஊர்ல குடிசைல இருக்கற அம்மாவுக்கும் பிரதருக்கும் நல்ல வீடு கட்டித்தரணும், அடுத்த மாசம் தன்னோட கவிதைத் தொகுப்பை வெளியிடனும்னெல்லாம் பேசிக்கிட்டிருந்தவன், ஏன் திடீர்னு தற்கொலை பண்ணிக்கணும் ?

அஞ்சு செம்ஸ்டர்ல மொத்தமா 26 பேப்பர்ல பாஸாகாம இருந்த்து ஒரு காரணம்கறாங்க. ஏதோ காதல் தோல்வி இன்னொரு காரணம்கறாங்க.  மாநிலத்துலயே .13வது எடத்துல வந்த பையன், காலேஜ்ல பேப்பர் அரியர்ஸ் வெக்கறான்னா, ஏன்னு ரெண்டாவது செமஸ்டர்லயே வாத்யாருங்க கவனிக்கமாட்டாங்களா? அவனைக் கூப்பிட்டு என்னாப்பா ப்ராப்ளம்னு பேசிக் கண்டுபிடிக்கமாட்டங்களா? லவ்வுதான் பிரச்சினை, அதுனாலதான் படிப்பை கவனிக்கலேன்னா அத்த எப்பிடி ஹேண்டில் பண்ணணும்னு சொல்லறதுக்கு டாக்டருங்க மாதிரி  யாரும் ஆளு காலேஜ்ல இல்லியா?

மணிவண்ணன் மீதி பசங்களுக்கு உற்சாகம் குடுத்து பண உதவி பண்ணி அவங்களும் தன்னைப்  போல நல்லா படிச்சு மேல வரணும்னு சொல்ற அறிவிருக்கற பையன். அவனுக்கு ஒரு பிரசினைன்னா இப்பிடி தீர்த்துக்கலாம்னு சொன்னா அவனால புரிஞ்சுக்கமுடியும். அத்த செய்யவே காலேஜுல ஆள் கெடையாதா? அப்ப, மணிவண்ணன் மாதிரி கூட இல்லாத சாதாரண பசங்க கதி என்னாகும் ? எல்லாரும் சினிமால தனுஷ் திரியறா மாதிரிதானே ஆவாங்க?  தனுஷ் படத்தைப் பாத்து பசங்க உருப்பட முடியுமா ? காலேஜுல பாடம் சொல்லித் தந்தா மட்டும் போதாது. மனசை எப்பிடி வெச்சுக்கணும்னு சொல்லித் தர்ற வாத்யாருங்களையும் கூடவே போடணும்.

பளிச் 4:

எவ்வளவு நல்ல மனுஷன்.. இப்பிடி கொடூரமா கொன்னுட்டாங்களேன்னு நான் பேசின ஒருத்தர் கூட சொல்லல… திருச்சி தி.மு.க பிரமுகர் ராமஜெயம் கொலையைப் பத்தித்தான் சொல்றேன். எல்லாரும் இப்பிடி கொடூரமா கொன்னிருக்கவேணாமேன்னு சொல்றாங்களே தவிர, நல்ல மனுஷன்னு சொல்லமாட்டேங்கறாங்க. இறந்தவரு யாரோ கொஞ்சம் பேருக்காவது நல்லவரா இருந்திருப்பார்ங்கறதுல எனக்கு சந்தேகம் இல்ல. ஆனா பெரும்பாலானவங்க அப்பிடி நினைக்கல. இதுதான் இன்னிக்கு தமிழ்நாட்டுல பெரும்பாலான அரசியல் பிரமுகர்களோட நிலைமை. ஜனங்க யாரும் அவங்களல ஒருத்தரையும் நல்லவங்கன்னு சொல்லக் கூடிய மன நிலையிலயே இல்லை. கொலை செய்யப்பட்டதும் கொலை செய்யப்பட்ட விதமும் பரிதாபத்தை ஏற்படுத்துதே தவிர, இருந்தப்ப இவங்கள்ல்லாம் என்னென்ன அக்கிரமம் பண்ணாங்கன்னுதான் சாதாரண மக்களே பேசறாங்க.

அரசியல்வாதிகளும் கட்சிகளும் இதைக் கொஞ்சம் தீவிரமா சிந்திக்கணும். மேலயிருந்து கீழ வரைக்கும் ஒவ்வொரு கட்சியிலயும் அதிகாரத்துல இருக்கறவங்கள்ல பெரும்பாலானவங்களுக்கு மக்கள் கிட்ட நல்ல பேரே இல்லை. தங்களுக்கு வேற வழியில்லாமதான் மக்கள் இவங்களை சகிச்சுகிட்டு இருக்காங்க. இப்பிடியே போனா இன்னும் பத்து வருஷத்துல ரெண்டுல ஒண்னுதான் நடக்கும். ஓட்டு போடவே ஜனங்க வரமாட்டாங்க. இல்லாட்டி, எவன் வந்தாலும் ரவுடித்தனம் பண்ணி காசை சுருட்டப்போறான். எனக்கு இப்பவே எவன் நிறைய குடுக்கறானோ அவனுக்கு ஓட்டு போட்டுத் தொலைக்கறேன்கற நிலைக்கு மக்கள் வந்துடுவாங்க. ரெண்டும் நாட்டுக்கு நல்லது இல்ல. மக்களுக்கும் நல்லது இல்ல, அரசியலுக்கும் நல்லது இல்ல.

பளிச் 5

இந்த பட்ஜெட்ல ராணுவ செலவு கிட்டத்தட்ட ரெண்டு லட்சம் கோடி ரூபாய்க்கு வந்துடுச்சு. (1,93,407 ! ). ஆனா ராணுவ தளபதி நம்ம கிட்ட இருக்கற ஆயுதம் வெடி மருந்தெல்லாம் போதாது. இன்னும் ரெண்டு நாளைக்குதான் வரும்,  எல்லா ஆயுதமும் பழசாப் போச்சு, அது இதுன்னு குண்டு போட்டுகிட்டே இருக்காரு. இவ்வளவு பணம் குடுக்கறாங்களே புச்சா வாஙவேண்டியதுதானேன்னா,  ஓட்டை உடைசல்லாம் வாங்கறதுக்கு லஞ்சம் குடுக்கறாங்கன்னு வேற சொல்றாரு. இதுக்கு முன்ன எந்த ராணுவ தளபதியும் இவ்வளோ ஒப்பனா எல்லாத்தையும் போட்டு உடச்சதே கெடையாது.

பொதுவா அரசாங்க அதிகாரிங்க, ராணுவ அதிகாரிங்களுக்கெல்லாம் ரிட்டையராயி ரெண்டு மூணு வருஷம் வேற போஸ்ட்டிங் எதுவும் வராதுன்னு தெரிஞ்சப்பறம்தான் மனசாட்சின்னு ஒண்ணு புச்சா வந்து உறுத்த ஆரம்பிக்கும்.  இவுருக்கு  ரிட்டையர் ஆவறதுக்கு முன்னாடியே மனசாட்சி கொஞ்சம் ஒர்க் ஆவுது போல..

மிலிட்டிரிக்கு ஆயுதம் வாங்கறதுக்கு லஞ்சம் குடுக்கறது ரொம்பப் பழைய விஷயம்.. போபர்ஸ் கேசே அதானே…அது வெளியில வந்து ராஜீவ் ஆட்சி அவுட்டானப்பறம் வந்தவரு தேவ கவுடா, அவுரு கிட்ட கூட லஞ்சம் குடுக்க வந்தாங்கன்னு அவரு மகன் குமாரசாமி சொல்லியிருக்காரு. கவுடா என்கிட்ட வரல,அவன்கிட்ட வந்திருப்பாங்கன்னு சமாளிக்கறாரு. ஒவ்வொரு ஆட்சியிலயும் வராங்க, குடுக்கராங்க, வாங்கிக்கறாங்கன்னு நமக்குத் தெரியாதா என்ன..மொதல்ல இந்த ராணுவ பட்ஜெட்டை கொறைக்கணும். வெட்டியா அங்கே கொட்டற பணத்தை விவசாயத்துலயும் ஆஸ்பத்திரிலையும் படிப்புலயும் செலவு பண்ணா நாடு நெஜமா ஆரோக்கியமா இருக்கும்.

ஆனா, அப்பிடி செய்ய அதிகாரிங்க வுடமாட்டாங்க. பொய்யாவாச்சும் எல்லையில ஆபத்து. இங்கே ஊடுருவல்னு கதை விட்டுகிட்டு இன்னும் ராணுவ செலவை ஏத்திவிட்டுகிட்டேதான் இருப்பாங்க. அப்பதான் கொள்ளையடிக்க முடியும். அதுல அவங்களும் அரசியல்வாதிகளும் பங்கு போட்டுக்க முடியும்.அதுக்காக பொய்யா தேசபக்தியைக் கெளப்பி விட்டுடுவாங்க.

ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு, செலவு எல்லாத்தையும் தனியா கணக்குத் தணிக்கை அதிகாரி மாதிரி ஒரு சுயேச்சையான அமைப்பை வெச்சு நடத்தினாதான்  இதையெல்லாம் சரி பண்ண முடியும்.

பளிச் 6

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தின அரசாங்கம் கேட்டுகிட்டபடி அவங்க சாகும்,வரை உண்ணாவிரதத்தை நிறுத்திகிட்டாங்க. ஆனா, அரசாங்கம் பதிலுக்கு தான் சொன்னபடி எதையும் ஒழுங்கா செய்யல. கைதான் 150 பேரை விடுதலை செய்யாம, வெறுமே ஜாமீன்ல மட்டும்தான் விட்டிருக்காங்க. இன்னும் பத்துப் பதினஞ்சு பேருக்கு ஜாமீனும் கொடுக்காம தொடர்ந்து காவலை நீட்டிச்சுகிட்டே இருக்காங்க. வேணும்னே பல தொண்டு நிறுவனங்கள்ல ரெய்டு நடத்திகிட்டிருக்காங்க.ஒரு எடத்துலயும் ஒண்ணும் உருப்படியா குற்றம் சாட்டறமாதிரி கிடைக்கல.

அடுத்து உதயகுமார் மேல கிரிமினல் கேஸ் இருக்கறதுனால, அவரோட பாஸ்போர்ட்டை சரண்டர் பண்ண சொல்றாங்க.  அப்பிடிப் பாத்தா நம்ம பார்லிமென்ட்ல 160 எம்.பிகளோட பாஸ்போர்ட்டை பறிமுதல் பண்ணியிருக்கணும். அவங்க பேர்லயும் கிரிமினல் கேசெல்லாம் இருக்குது. ஸ்பெக்ட்ரம் தொடர்பான விசாரணையில கோர் ட் உத்தரவுப்படி  எஃப்.ஐ.ஆர் போட்டு விசாரிக்கற மாறன் பிரதர்சுடைய பாஸ்போர்ட்டை பிடுங்கி வெச்சுகிட்ட மாதிரி  தெரியல.

போபால் விபத்து நடந்த உடனே அதுக்குப் பொறுப்பான கம்பெனி தலைவர் ஆண்டர்சனுக்கு தனி விமானம் ஏற்பாடு செஞ்சு அமெரிக்காவுக்கு தப்பிச்சுகிட்டு போறதுக்கு வேலை பாத்தவனெல்லாம் அதை எதிர்க்கறவங்க பாஸ்போர்ட்டை பிடுங்கப் பார்க்கறாங்க. நாளைக்கு கூடங்குளத்துல விபத்து நடந்தா முத வேலையா தனி விமானத்துல ரஷ்யன்களையெல்லாம் அனுப்பிடுவாங்கங்கறதுல எனக்கு சந்தேகமே இல்லை.

பளிச் 7

இந்த சினிமா முதலாளிங்க அழும்பு தாங்கவேமுடியல… அவங்களுக்கும் தொழிலாளிகளுக்கும் சம்பள விஷயமா பிரச்சினைன்னா, சட்டப்படி அதைப் பேசி முடிக்க உதவி செய்யறதுக்குத்தான்  தொழிலாளர் நல ஆணையர் இருக்காரு. இத்தனை நாள் அவர் கிட்ட போய் பேசிகிட்டிருந்தவங்க  இப்ப பேச முடியாதுங்கறாங்க. அவுரு தொழிலாளருக்கு ஆதரவா இருக்கறாராம். ஆமா, அதுக்குத்தான்  அந்த டிபார்ட்மெண்ட்டே வெச்சிருக்கு. ரெண்டு தரப்புக்கும் பாதிப்பு இல்லாம சமரசம் செய்ய முயற்சிக்கறதுதான் அவர் வேலை. தொழில் தகராறுல அரசாங்கத்துகிட்டயே போய் பேச முடியாதுன்னு சொல்ற முதல் ஆளு இந்த சினிமா முதலாளிங்கதான்.  அவர்கிட்ட பேசி தீர்வு வராட்டி அடுத்த கட்டம் லேபர் கோர்ட்,லேபர் டிரிப்யூனல்தான்.  நல்ல முதலாளிங்க பொதுவா லேபர் கமிஷனர் மட்டத்துலயே பேசி தீர்வுக்கு வந்துடுவாங்க. பிரச்சினை முடியற சமயத்துல  க்ளைமாக்ஸ்ல வந்து சொதப்பாதீங்கப்பா…

பளிச் 8:

படிச்சதுல பிடிச்சதுன்னு இந்த வாரம் ஒண்ணை சொல்லணும்னா, அது ஒரு பழைய விஷயத்தைப் பத்தி புதுசா படிச்சதுதான். மார்ச் கடைசியிலதான்  ஷேக்ஸ் பியர் பொறந்த நாளை உலக நாடக தினமா உலகம் முழுக்க கொண்டாடறாங்க. தமிழ்நாட்டுல கொண்டாடற நிலைமை இல்லை. இங்கே நாடகம்னா என்னன்னே குழம்பிப் போச்சு இல்லையா.. டி.,வி சீரியலை நாடகம்னு சொல்லிகிட்டிருக்காங்க. தமிழ் நாடகக்காரங்க  மறக்கவே கூடாத கலைஞர்கள்ல ஒருத்தரான எம்.ஆர்.ராதா  1954ல  திருச்சில ராமாயணம்னு ஒரு நாடகம் போட்டப்ப அடிச்ச் போஸ்டரை ஃபேஸ்புக்ல சந்திரன் வீராசாமி எடுத்துப் போட்டிருக்காரு. படிச்சேன். என் ராமாயணம் நாடகத்தைப் பாத்துட்டு மனசு புண்படறங்க யாரும் என் நாடகத்துக்கு வரவேணாம். அவங்க காசும் எனக்கு வேணாம். மீறி வந்து மனசு புண்பட்டா நான் அதுக்கு ஜவாப்தாரியில்லைன்னு போஸ்டர்லயே அடிச்சிருக்காரு. இன்னிக்கும் எதுக்காவது மனசு புண்படறேன்னு சொல்றவங்களுக்கு இதுல ஒரு அட்வைஸ் ஒளிஞ்சிருக்கு, இல்லியா?

ராதாவுடைய நாடகங்களை ஒடுக்கறதுக்குன்னே  அந்த வருஷம் காங்கிரஸ் அரசாங்கம் பிரிட்டிஷ் காலத்து நாடகத் தணிக்கை சட்டத்தை திரும்பக் கொண்டு வந்தாங்க.  சட்டத்துலருந்து தப்பிக்க, ராதா தன் நாடகத்தோட பேரை மட்டும் மாத்திகிட்டே இருந்தாரு. பெரிய அவமானம் என்னன்னா, அந்த சட்டம் இன்னும் தமிழ்நாட்டுல நடைமுறையில இருக்கு…!  எந்த திராவிடக் கட்சியும் அதை நீக்கலே..

பளிச் 9

இந்த வாரம் எனக்குப் பார்த்ததுல பிடிச்சது ஒரு சினிமா. விண்மீண்கள். பழைய டைரக்டர் சங்கரோட பேரன் விக்னேஷ் எடுத்திருக்காரு. புது கேமராமேன் ஆனந்த். அவங்க சித்தப்பா பிரபலமான கேமெராமேன் மணிகண்டன். அப்பா சினிமா பற்றின புத்தகத்துக்கு ஜனாதிபதி விருது வாங்கின ஓவியர் ஜீவானந்தன். பொறக்கறப்பவே மூளை வளர்ச்சி குன்றின நிலையில பொறக்கற குழந்தை வாலிபனாகி காதலை சந்திச்சா என்ன ஆகும்னு சொல்ற கதை. சின்னச் சின்ன ஓட்டைங்க இருந்தாலும், மசாலா பண்ணாம, நல்லா சொல்லியிருக்காங்க. கேரக்டர் ரோல்ல காமெடியன் பாண்டியராஜனுக்கு வித்யாசமான வாய்ப்பு.  கூட நடிச்சவங்க எல்லாரும் பெரும்பாலும் புதுசு. ஆனா நல்லா நடிச்சிருக்காங்க. நல்ல ஒளிப்பதிவு. ஆனா இந்தப் படத்தை படிச்ச, எலைட், ஐ.டி க்ரூப்ஸ் உட்பட இண்ட்டெக்சுவலுங்க யாரும் சரியாவே ஆதரிக்கல. எல்லாரும் கொலை வெறிலதான் அலையறாங்களே தவிர கலைவெறியைக் காணோம். அப்பறம் எப்பிடி நல்ல படம் வரும் ?

பளிச் 10

அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்யற நேரம் வந்துடுச்சு.போன தடவை நான் எழுத்தாளர் மகாஸ்வேத தேவி பேரை ரெகமெண்ட் பண்னேன். யார் கேக்கறாங்க. பிரதிபா வைப் போட்டுட்டாங்க. சரி மொத பெண்மணின்னு ஓகே சொன்னோம். அது தேறல.. சொந்தபந்தங்களோட ஊர் சுத்தறதுக்கே 200 கோடியை அழிச்சுடுச்சாமே. இந்த தடவை பாத்து போடணும். தமிழ்நாட்டுல மாபெரும் ஊழல் அரசியலுக்குப் பிதாமகரா இல்லாம இருந்திருந்தார்ன்னா நிச்சயம் கலைஞர் கருணாநிதியை ஜனாதிபதி ஆக்கணும்னு சொல்லியிருப்பேன். இப்ப ம்ஹூம். என்னோட

சாய்ஸ் காந்தியோட பேரன் கோபாலகிருஷ்ண காந்தி. உங்க சாய்ஸ் வேற இருந்தா எழுதி அனுப்புங்க..

கல்கி 7.4.2012