
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் - பல வண்மைகள் செய்வோம்
An eye for an eye will only make the whole world blind - Mahatma Gandhi

1.ஜெயலலிதாவைக் கேளுங்கள் !2. கல்பாக்கத்துக்கு எரிமலை ஆபத்து ! மற்றும் நகர் வலம் 1/காற்றினிலே வரும்…… |
முதல் பக்கம்... |
1. ஜெயலலிதாவைக் கேளுங்கள்…
இன்னும் பத்து நாட்களுக்குள் ஜெயலலிதா யார் பக்கம் என்பது பகிரங்கமாகிவிடும். சஙக்ரன்கோவில் தேர்தல் வாக்குப்பதிவு மார்ச் 18 அன்று முடிந்ததும், கூடங்குளம் அணு உலை பிரச்சினையில் டெல்லிக்கு ஆதரவா, தமிழக மக்களுக்கு ஆதரவா என்பதை ஜெயலலிதா சொல்லியே தீரவேண்டியிருக்கும்.
தன் முடிவை ஜெயலலிதா சொல்வதற்கு முன்பு அவரிடம் மக்களாகிய நாம் கேட்கவேண்டிய கேள்விகள் கொஞ்சம் இருக்கின்றன. இந்த கேள்விகளுக்கு அவருக்கு பதில் தெரியுமா என்று அவர்தான் சொல்லவேண்டும். இந்தக் கேள்விகளை நீங்களும் அவரிடம் கேட்க விரும்பினால், இதை செராக்ஸ் எடுத்தோ ஸ்கேன் செய்தோ உங்கள் கையெழுத்திட்டு மாண்புமிகு முதலமைச்சர், தமிழ்நாடு அரசு, புனித ஜர்ஜ் கோட்டை சென்னை 9 என்ற முகவரிக்கோ cmcell@tn.gov.in என்ற முகவரிக்கோ அனுப்புங்கள்.
1.ஜப்பானின் மின் தேவையில் 31 சதவிகிதம் கொடுத்துவந்த அணு உலைகள் இப்போது தருவது வெறும் 2 சதவிகிதம்தான். காரணம் 52 உலைகளை அரசு மூடிவிட்டது. மீதி இரு உலைகளும் மே மாதத்தில் மூடப்படலாம். இதெல்லாம் ஏன் என்பது உங்களுக்குத் தெரியுமா?
2.கல்பாக்கம் அணு உலைகளில் இதுவரை சுமார் 200 விபத்துகள் நடந்துள்ளன என்பதும் ஒரு விபத்து நூலிழையில் மாபெரும் விபத்தாகாமல் தப்பித்தது என்பதும் உங்களுக்குத்தெரியுமா?
3. செர்னோபில் உலை விபத்தில் இரண்டாயிரம் பேர் இறந்ததாக சோவியத் அதிபர் கோர்பசேவ் சொன்னார். ஆனால் 57 பேர்தான இறந்ததாக அப்துல் கலாம் மட்டும் சொல்வது ஏன், எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா?
4. புற்று நோய்க்கான காரணங்களில் ஒன்று கதிரியக்கம் என்று அடையாறு புற்று நோய் நிலையம் அறிவித்திருக்கும்போது அதன் தலைவர் டாக்டர் சாந்தா மட்டும் கதிரியக்கத்தால் புற்று நோய் வராது என்று அணுசக்தித் துறை விளம்பரத்தில் சொல்வது ஏன், எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா ?
5. கூடங்குளம் அணு உலைக்கு இடம் தேர்வு செய்தபோது அங்கே மக்களே கிடையாது;அது ஒரு பாலைவனம் போலுள்ளது என்று அணு விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன் சொன்னது உண்மையானால்,இப்போது அங்கே ஆயிரக் கணக்கான மக்கள் வாழ்ந்துவருவது ஒரு மாயத்தோற்றம் என்பதுதான் உண்மையா என்பது உங்களுக்குத் தெரியுமா ?
6.பத்தாண்டுக்கொரு முறை அடுத்த பத்தாண்டில் இத்தனை மெகாவாட் அணு மின்சாரம் தயாரிப்போம் என்று இந்திய அணுசக்தித் துறை சொன்னது எதையும் 40 வருடங்களில் இதுவரை ஒருமுறை கூட நிறைவேற்றவில்லை என்பதும் சொன்னதில் ஐந்து சதவிகித மின்சாரம் கூட தயாரிக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?
7. இந்தியாவில் ஒரு அணு உலை கூட அதன் நிறுவப்பட்ட உற்பத்தித் திறனில் 50 சதவிகிதத்துக்கு மேல் உற்பத்தி செய்வதில்லை என்பதும் முப்பது வருடத்து கல்பாக்கம் 50 சதத்தை எட்டியதே சில வருடங்களாகத்தான் என்பதும் உங்களுக்குத் தெரியுமா ?
8. கூடங்குளம் உலையை உடனே இயக்கினாலும் ஆகஸ்ட்டில்தான் அது மின்சாரம் தரும் என்பதும், அதுவும் உற்பத்தி திறனாகிய 1000 மெகாவாட்டில் 40 சதவிகிதமான 400 மெகாவாட்தான் உற்பத்தி செய்யும் என்பதும் அதிலும் 48 மெகாவாட்டை அதுவே செலவழித்துவிடும் என்பதும், மீதி 352 மெகாவாட்டில் டிரான்ஸ்மிஷனில் 70 மெகாவாட் போய்விடும் என்பதும், எஞ்சிய 280 மெகாவாட்டில் நாராயணசாமியின் கருணையில் தமிழ்நாட்டுக்கு 50 சதவிகிதம் கொடுத்தாலும் கிடைக்கப்போவது வெறும் 140 மெகாவாட்தான் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
9. கல்பாக்கம் அணு உலை வளாகம் சுனாமியால் மட்டுமல்ல, இப்போதைய தானே புயலில் கூட பாதிக்கப்பட்டதும், கல்பாக்கத்துக்கருகே கடலில் எரிமலை இருப்பதும் அதைப்பற்றி அணுசக்தித் துறைக்கு எதுவும் தெரியாது என்பதும் உங்களுக்குத் தெரியுமா ?
10. கூடங்குளத்திலும் கல்பாக்கத்திலும் சுனாமி வராது என்று அணுசக்தித் துறை முதலில் சொன்னதும் சுனாமி வந்தபின் இனிமேல் 9 மீட்டருக்குமேல் வராது என்று சொல்லிக் கொண்டிருப்பதும் உங்களுக்குத் தெரியுமா?
11. கூடங்குளம் அணு உலையைக் கட்டியிருக்கும் ரஷ்ய ரோசாட்டம் கம்பெனி அந்த நாட்டில் ஊழல் குற்றச்சாட்டுக்கும் தரக்குறைவான் பணிகளுக்காவும் விசாரிக்கப்படுவது உங்களுக்குத் தெரியுமா ?
12. கல்பாக்கத்தில் பெரும் விபத்து ஏற்பட்டால் போயஸ் கார்டன், கோபலபுரம் முதல் பாண்டிச்சேரி வரை அழியும் ஆபத்து உள்ளது என்பதும் கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டால் தென் மாவ்ட்டங்களும் கேரளத்தின் ஒரு பகுதியும் அழியும் என்பதும் உங்களுக்குத்தெரியுமா
13.உலகத்தில் எங்கேயும் எந்த இன்சூரன்ஸ் கம்பெனியும் தனி நபர்களுக்கு விமான விபத்து முதல் ஆயுள் காப்பு வரை இன்சூரன்ஸ் கொடுத்தாலும், அணு உலை விபத்து பாதிப்பு இன்சூரன்ஸ் மட்டும் தருவது கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா ?
14. இந்திய அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியத்தால் அணுசக்தி துறையை கண்காணிக்க முடியவில்லை என்றும் வாரியத்தை விட துறைக்கு செல்வாக்கு அதிகம் இருப்பதால் உண்மைகளை தெரிந்துகொள்ள முடிவதில்லை என்றும் வாரியத்தின் முன்னாள் தலைவர் அணு விஞ்ஞானி கோபாலகிருஷ்ணன் சொல்லியிருப்பது உங்களுக்குத் தெரியுமா ?
15. தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு கோடி குண்டு பல்புகளை சி.எஃப் எல் குழல் பல்புகளாக மாற்றினால், உடனே 500 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும் என்று உங்கள் அரசின் சார்பில் சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட கொள்கைக்குறிப்பில் சொன்னதை ஏன் அதிகாரிகள் இன்னும் நிறைவேற்றாமல் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ?
16. மத்திய அரசு அமைத்த குழு விஞ்ஞானிகளும் சரி நீங்கள் அமைத்த குழு விஞ்ஞானிகளும் சரி, ஏன் அணு உலைகளை எதிர்க்கும் விஞ்ஞானிகள் குழுவை சந்திக்க மறுத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ?
இதற்கெல்லாம் சரியான விடைகள் தெரிந்திருந்தும் சரியான முடிவு எடுக்காவிட்டால்….. சீச்சீ,வேண்டாம்.. நான் ஒன்றும் வேதாளம் இல்லையே..
2.கல்பாக்கத்துக்கு எரிமலை ஆபத்து !
கடலோரம் அமைக்கப்பட்டிருக்கும் கல்பாக்கம் அணு உலைகளுக்கு சுமார் நூறு கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கடியில் உறங்கும் எரிமலை இருப்பது பற்றிய தகவல்கள் இப்போது வெளியாகியிருக்கின்றன. வழக்கம் போல இந்திய அணுசக்தித் துறைக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது என்பதும் அக்கறையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுமார் 25 வருடங்களாக அணு உலை ஆபத்துகள் பற்றி ஆய்வும் பிரசாரமும் செய்துவரும் மருத்துவர்கள் சதுரங்கப்பட்டினம் வி.புகழேந்தி, கோவை ரா.ரமேஷ் இருவரும் இது தொடர்பாக ஆய்வு செய்து திரட்டியிருக்கும் பல அரிய தகவல்களை பூவுலகின் நண்பர்கள் சூழல் பாதுகாப்பு அமைப்பு இப்போது நூலாக வெளியிட்டிருக்கிறது.
பத்து மாதங்களுக்கு முன்னால் மே 2011ல் சர்வதேச அணுசக்திக் கழகம் உலக அளவில் எரிமலைகளும் அவற்றால் அணு உலைகளுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளைப் பற்றியும் ஒரு நூலை வெளியிட்டிருக்கிறது. அதில் கல்பாக்கம் அருகே இருக்கும் எரிமலை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கல்பாக்கத்துக்கு என்ன ஆபத்து நேரலாம், எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை நிலவியல், காலவியல், கடலியல் அடிப்படைகளில் ஆராயும்படி சர்வதேச அணுசக்திக் கழகம் அறிவுறுத்துகிறது. ஆனால் அவை எதையும் இந்திய அணுசக்தி துறை மேற்கொண்டதாகத் தெரியவில்லை. புகழேந்தியும் ரமேஷும் மூன்று அடிப்படைகளிலும் நடந்துள்ள பல்வேறு தனி ஆய்வுகளைத் திரட்டி அவற்றின் அடிப்படையில் சில எச்சரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்கள்.
கல்பாக்கம் அருகே இருக்கும் கடல் எரிமலை பற்றி இந்திய அணுசக்தித் துறைக்குத்தான் தெரியவில்லையே ஒழிய உலகின் மாபெரும் விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது. கடைசியாக 1757ஆம் ஆண்டு ஜனவரி 20 அன்று இந்த எரிமலை வெடித்திருக்கிறது. அந்த நிகழ்வு பற்றி உலகின் பரிணாமக் கொள்கையை வகுத்த அறிஞர் சார்லஸ் டார்வின் முதல் எரிமலை வெடிப்பை கடலில் நேரில் பார்த்த மாலுமிகள் சிலர் வரை எழுதிய பதிவுகளையெல்லாம் புகழேந்தியும் ரமேஷும் தேடி எடுத்துத் தொகுத்துள்ளனர்.
அதுமட்டுமல்ல கல்பாக்கத்தை ஒட்டிய கடற்பகுதியில் நிலவியல் அமைப்பு, ஏற்பட்ட பூகம்பங்கள், சுனாமிகள், அவை பற்றி நடந்த ஆய்வுகள் எல்லாவற்றையும் தங்கள் நூலில் விவரமாக அலசியிருக்கின்றனர். இந்த அலசலில் தெரியவரும் முக்கியமான விவரங்கள் மூன்று. 1. கல்பாக்கம் முதல் வேதாரண்யம் வரையிலான நிலப்பிளவு பகுதியின் காந்த மண்டலம் குறைந்து காணப்படுவதற்குக் காரணம் கடல்தரையிலிருந்து பிதுங்கி எழுந்திருக்கக்கூடிய அமைப்புதான். இதுதான் எரிமலைப்பகுதி. இதில் ஏற்படும் மாற்றங்கள் கல்பாக்கம் அணு உலையின் கீழாக செல்லும் நிலப்பிளவுடன் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கின்றன. இதைப்பற்றி இந்திய அணுசக்தித்துறை இதுவரை எந்த அக்கறையும் காட்டவில்லை. 2. கல்பாக்கம் பகுதி சுனாமிகள், பூகம்பங்கள் பற்றிய அணுசக்தித் துறையின் ஆய்வுகளும் மிகுந்த குறைபாடுகளுடனே இருக்கின்றன. சுனாமி 2004ல் வந்தபோது அங்கே சீஸ்மோகிராஃப் வேலை செய்யவே இல்லை. 24 மணி நேர எமர்ஜன்சிக் கட்டுப்பாட்டு அறை இயங்காமல் பூட்டியே கிடந்தது.3. கல்பாக்கம் அருகே கடலில் இருக்கும் பாலாற்றுப் பள்ளம் சுனாமி அலை வேகத்தை அதிகரிக்கக்கூடியது. இங்கிருந்து சுனாமி உலையை அடைய பத்து நிமிடம் போதுமானது.
கூடங்குளம் பகுதியிலும் நிலவியல், கடல்சார்ந்த சுனாமி பூகம்ப ஆய்வுகள் அணுசக்தி துறையால் முறையாகச் செய்யப்படவில்லை. அங்கே பழைய எரிமலைக் குழம்புகள் இளகிய நிலையில் பாறைகளாக உள்ளது பற்றிய ஆய்வை அணுசக்தித் துறை பொருட்படுத்தவே இல்லை. 2004ல் சுனாமி வரும் வரை,அந்தப் பகுதியில் சுனாமி வரவே வராது என்றுதான் அணுசக்தித் துறை சொல்லிக் கொண்டிருந்தது. வந்தபிறகு இனிமேல் 9 மீட்டருக்கு மேல் அலை வராது என்று சொல்லிக் கொண்டிருக்கிறது.
செர்னோபில், புகொஷிமா விபத்துகள் சுற்றிலும் 10 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பை முழுமையாக சிதைத்தவை. கல்பாக்கத்திலிருந்து அதே சுற்றளவில் இருப்பவை சென்னை நகரம், மணலி, புழலேரி, திருப்போரூர், செம்பரம்பாக்கம், தரமணி, கோயம்பேடு, எழும்பூர், கோவளம், மகாபலிபுரம், அம்பத்தூர், ஸ்ரீபெரும்புதூர், சென்னை துறைமுகம், சென்னை விமான நிலையம், காஞ்சிபுரம், செங்கற்பட்டு, திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், மேல்மருவத்தூர், திண்டிவனம் விழுப்புரம், பாண்டிச்சேரி ஆகியவை மட்டுமல்ல. தமிழ்நாட்டில் 75 சதவிகித தொழிற்சாலைகள் இங்கேதான் இருக்கின்றன. செர்னொபிலை விட 50 மடங்கு அதிக மக்கள் இங்கே வசிக்கிறார்கள்.
தென்மாவட்டங்களைக் காப்பாற்றுவதற்காக கூடங்குளத்தைத் தொடங்காதே என்று சொல்வது மட்டும் போதாது. வட தமிழகத்தைக் காப்பாற்றுவதற்காக கல்பாக்கத்தை மூடு என்றும் இனி அழுத்திச் சொல்லவேண்டும் என்ற அவசரத்தை உணர்த்துகிறது புகழேந்தி-ரமேஷின் அற்புதமான ஆய்வு நூல்.இந்த வாரப் பூச்செண்டு இவர்களுக்கே.
——————
கல்கி 10.2.2012
————————————————
நகர் வலம் 1/காற்றினிலே வரும்……
எழுபதுகளிலும் எண்பதுகளிலும் தொண்னூறுகளிலும் சென்னை வானொலியில் மிகவும் பிரபலமாக இருந்த ஒரு நிகழ்ச்சி ‘நகர்வலம்’. தினசரி காலையில் ஒலிப்ரப்பாகும் இதில் நகரின் பல்வேறு தன்மைகள், பிரச்சினைகள், அனுபவங்கள் பற்றி பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் எழுதும் கட்டுரைகள் வாசிக்கப்படும். சில எழுதியவர்களாலேயே வாசிக்கப்படும். நான் அப்படி பல முறை எழுதி வாசித்திருக்கிறேன். என்னை விட 47 வயது மூத்தவரான என் அப்பா ஆங்கிலப் பத்திரிகையாளர் வேம்புசாமியும் நகர்வலம் எழுதியிருக்கிறார்.இந்த நகர்வலம் நிகழ்ச்சியை வானொலியில் அறிமுகப்படுத்தியவர் அப்போது அங்கே பெக்ஸ் என சுருக்கமாக அழைக்கப்படும் ப்ரொகிராம் எக்சிகியூடிவாக இருந்தார் நண்பர் ஏ.நடராஜன். பின்னால் தூர்தர்ஷன் இயக்குநராக பணியாற்றி அதிலிருந்து ஓய்வு பெற்றாலும் பொது வாழ்விலிருந்து ஓய்வே இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிற அதே நடராஜன்தான்.
இப்போதும் சென்னை வானொலியில் நகர்வலம் நிகழ்ச்சி காலை நேரங்களில் ஒலிபரப்பப்படுகிறதா என்பது எனக்குத் தெரியாது. பண்பலை வந்தபிறகு மீடியம்வேவ், ஷார்ட் வேவ் நிலையங்களைக் கேட்கும் பழக்கமே போய்விட்டது. தேர்தல் முடிவு வரும் நேரங்களில் மீடியம் வேவ் நிலையத்தில் முடிவுகளை ஆய்வு செய்து விவாதிக்க அழைப்பார்கள். நிலைய நண்பர்களிடம் இவற்றுக்கு நேயர்கள் இப்போதும் கணிசமாக உண்டா என்று விசாரிப்பேன். பல வெளியூர்களில் பண்பலை கிடையாது. அங்கெல்லாம் சிற்றலையும் இடையலையும் நேயர்களிடம் தொடர்ந்து பிரபலமாக இருக்கின்றன என்பார்கள்.இருந்தால் மகிழ்ச்சிதான்.
வானொலி ஓர் அற்புதமான மீடியம். எழுத்துக்கு அடுத்தபடி எனக்கு பிடித்த மீடியம் அது. வானொலி அனுபவங்களைப் பற்றி அதில் பணியாற்றிய சிட்டி, சுந்தா, பூர்ணம் விஸ்வநாதன் எழுதியதையெல்லாம் படித்திருக்கிறேன். படு சுவாரஸ்யமானவை அவை.வானொலி தயாரிப்பாளராக அந்தத் துறையில் மிகவும் மதிக்கப்பட்ட எழுத்தாளர் தி.ஜானகிராமன் தன் வானொலி அனுபவங்களைப் பற்றி எதுவும் எழுதவில்லை என்பது ஓர் இழப்புதான்.
1975ல் நான் சென்னைக்குக் குடிபெயர்வதற்கு முன்பே கடை நிலை குமாஸ்தாவாகவும் இதழியல் மாணவனாகவும் செங்கற்பட்டிலிருந்து சென்னைக்கு தினசரி வந்து போன காலங்களில் முதலில் ஓர் அலுவலகத்துக்கு சென்று கற்றுக் கொண்டது என்பது சென்னை வானொலி நிலையத்தில்தான். அப்பாவின் நண்பர் சௌமியநாராயணன் என்பவர் அப்போது வானொலியில் செய்தி ஆசிரியராக இருந்தார். சக்ரபாணி என்ற செய்திக் கதம்பத் தயாரிப்பாளர் இருந்தார். அவர்கள் மூலம் முறையான அனுமதி பெற்று வானொலியில் ரிகார்டிங், டப்பிங் எல்லாம் செய்வதற்குக் கற்றுக் கொண்டேன். டப்பிங் என்றால் இப்போது டி.வியிலும் சினிமாவிலும் பின்னணிக் குரல் கொடுப்பது, சேர்ப்பது என்ற அர்த்தத்தில் மட்டுமே புரிந்துகொள்ளப்படுகிறது. வானொலியில் டப்பிங் என்பது பதிவு செய்யப்பட்ட ஒலிகளை சேர்த்து தொகுத்து பிரதி எடுக்கும் வேலையைக் குறிக்கும். இப்போதும் அதே அர்த்தத்தில அங்கே சொல்கிறார்களா என்று தெரியவில்லை.
எழுத்தாளர் அகிலன் அப்பொது சென்னை வானொலியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். வானொலியில் கேட்டுக் கேட்டு பழக்கமான பல குரல்களுக்குரியவர்களை அங்கே நேரில் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஜெயஸ்ரீ என்று ஒரு பாடகி. ஞாயிறு மதியம் குழந்தைகள் நிகழ்ச்சியில் பாலராமாயணப் பாடல்களைப் பாடுவார். அற்புதமான குரல். குழந்தைகள் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த கூத்தபிரான் யாரை சந்திக்கும்போதும் வாஞ்சையோடு பேசுவார். மலர்க்கொடி சுகுமாரன் என்று இளைஞர் நிகழ்ச்சியில் இருந்த் என் வயதுக்காரர். யூத் ப்ரொகிராம் பொறுப்பாளராக இருந்த லீலா என்று பலரை அப்போது சந்திக்க முடிந்தது.
காப்புக்கட்டி சத்திரம், ஜனதா நகர் காலனி என்று பல முக்கியமான் வானொலி நாடகங்களையும் தினசரி மாநிலச்செய்திகளையும், நேயர் விருப்பம், தேன்கிண்னங்களையும் தவறாமல் கேட்டிருந்த எனக்கு அதில் பங்கேற்றவர்களின் முகங்கள் தெரியாது. அதுதான் வானொலியின் தனித்தன்மை. குரல் மூலம் மட்டுமே ஒருவரை நன்கு அறிந்திருப்போம். நேரில் அவரைப் பார்த்தால் அவர் பேசும்வரை அவர்தான் இவர் என்பது தெரியாது. இப்படி பலரை அங்கே பதிவுகள் நடக்கும் ஸ்டூடியோவில் மைக் வழியே ஒலி கேட்டு அட, அவரா, இவர் என்று சந்தோஷப்பட்டிருக்கிறேன். நான் கடைசி வரை பார்க்க முடியாமலே போன ஒருவர் உண்டு. அவர் பெயர் பார்வதி ராமநாதன். வானொலி நாடகங்களில் மிகப் பிரபலமாக அறுபதுகளின் கடைசியிலும் எழுபதுகளிலும் இருந்தவர். ரொமாண்டிக்கான பாத்திரம் முதல் சோகம் ததும்பும் குணச்சித்திர பாத்திரம் வரை விதவிதமான் பாத்திரங்களைத் தன் குரல் மூலம் மட்டுமே நம் முன் உருவாக்கிக் காட்டியவர். அவர் குரலைக் கேட்டால், நம் மனதில் மணியம் செல்வன் வரையும் ஓவியப் பெண்களின் தோற்றம்தான் தோன்றும்.
வானொலியின் யூத் விங் அறுபதுகளிலிருந்து எண்பதுகள் வரை நானறிந்து ஏராளமான இளைஞர்களுக்கு மீடியாவுக்குள் வர வாய்ப்பளித்த பிரிவு. எழுத, பேச கொஞ்சம் திறமை இருந்தாலே வாய்ப்பு பெற்று இரு திறமைகளையும் வளர்த்துக் கொள்ள அங்கே சூழல் இருந்தது. இன்று ஒரு தனி இசைப்பிரிவாக வளர்ந்திருக்கும் சேர்ந்திசை உருவாவதற்கே சென்னை வானொலியின் யூத் விங் நிகழ்ச்சிதான் காரணமாக இருந்தது. இப்போது கல்வி, மனித உரிமை துறைகளில் தீவிரமாக ஈடுபட்டுவரும் எழுபதைக் கடந்த முன்னாள் துணை வேந்தர் வசந்தி தேவி எழுபதுகளில் கல்லூரி ஆசிரியையாக இருந்தபோது மானுட ஒடுக்குமுறை சுரண்டல் பற்றி மாணவர்களைக் கொண்டு தயாரித்த வானொலி யூத் ப்ரொகிராமிற்கான பாடல்களுக்கு இசையமைக்க இசையமைப்பாளர் எம்.பி.சீனிவாசனை அழைத்தார். அப்போது சீனிவாசன் மாணவர்களைக் கொண்டு சேர்ந்திசை பாடல்களை உருவாக்கினார். அதில் இருந்து சென்னை இளைஞர் சேர்ந்திசைக் குழு பிறந்தது. இன்று வரை இயங்கிக் கொண்டிருக்கிறது.
எழுபதுகளின் ஆரம்பத்தில் நான் வேலை தேடிக் கொண்டிருந்த நாட்களில் பாண்டிச்சேரி வானொலி தயாரிப்பாளர் வேலைக்கு விண்ணப்பித்து என்னை நேர்காணலுக்கு அழைத்திருந்தார்கள். முன்னிரவே பாண்டிக்குப் போய்விட்டேன். நேர்காணலுக்கு வந்திருந்த பலரும் ஒரே ஓட்டல் அறையில் தங்கியிருந்தோம். எல்லாருமாக…. குடிக்கவில்லை ! சீட்டாடினோம். அப்போது எனக்கு வயது 20. அதுதான் நான் என் வாழ்க்கையில் முதலும் கடைசியுமாக காசு வைத்து சீட்டாடிய ஒரே இரவு. மறுநாள் நேர்காணலில் என்னிடம் விதவிதமான் கேள்விகள் கேட்டு முடித்தபின்னர், நான் கடைசியாகப் படித்த நூல் எது என்று அரவிந்தர் ஆசிரமத்திலிருந்து வந்திருந்த தேர்வாளர் கேட்டார். வில் டூராண்ட்டின் ஸ்டோரி ஆஃப் பிலாசபி என்று பதில் சொன்னேன். அந்த நூலின் குறைபாடு என்ன என்று கேட்டார். முற்றிலும் மேலை தத்துவவாதிகள் பற்றி மட்டுமே அதில் உள்ளது. கீழை தத்துவங்கள் பற்றி எதுவும் இல்லை என்றேன்.
அவருக்கு என் பதில் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஏறத்தாழ நான் தேர்வாகிவிட்டேன். நானும் இன்னொருவரும் சம நிலையில் இருந்தோம் என்று பின்னர் தெரியவந்தது. இன்னொருவர் வானொலி நிலைய ஊழியரின் மகன். அப்போதைய விதிகள்படி போதுமான தகுதிகள் இருந்தால், ஊழியர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை உண்டு. அவருக்கு வேலை கிடைத்தது. எனக்கு கிடைத்திருந்தால், என் வாழ்க்கை வேறு திசையில் போயிருக்கலாம். ஏதாவது ஒரு நிலைய இயக்குநராக ஓய்வு பெற்றிருக்கலாமோ ? இல்லை அப்படி சொல்லமுடியாது,. என் இயல்புக்கு ஒரு சில வருடங்களிலேயே வேலையை உதறிவிட்டு இப்போது என்னவாக இருக்கிறேனோ அதுவாகத்தான் ஆகியிருப்பேன்.
வானொலி வேலையில் சேராதபோதும், எழுபதுகளின் மத்தியிலிருந்து தொண்ணூறுகள் வரை எனக்கு சென்னை வானொலி நிலையத்துடன் நல்ல தொடர்பு இருந்தது. நிறைய நகர்வலம், சட்டசபையில் இன்று நிகழ்ச்சிகள் வழங்கியிருக்கிறேன். தனி ஒலிச்சித்திரங்கள் தயாரித்திருக்கிறேன். என்னுடைய ஓர் ஒலிச் சித்திரம் இந்திய வானொலி நிலையங்கள் அனைத்துக்குமிடையிலான போட்டியில் சிறந்ததாகப் பரிசு பெற்றது. கேஷுவல் நியூஸ் எடிட்டர் என்று ஒரு பொறுப்பு வானொலியிலும் தூர்தர்ஷனிலும் உண்டு. பத்திரிகை துறையில் அனுபவம் உடையவர்களுக்கு மாதத்தில் பத்து நாட்களுக்கு தின்சரி வந்து வேலை செய்ய காண்ட்ராக்ட் தருவார்கள். அப்படியும் வேலை செய்திருக்கிறேன்.ஏ.நடராஜன், திருவேங்கடம், சம்பத் குமார், மேகநாதன், பாலசுப்பிரமணியன், சு.சமுத்திரம், ஞானசூரிய பகவான், சஞ்சய், கல்பனா, முத்துசாமி, ஜெயா பாலாஜி என்று பல நண்பர்கள் அங்கே இருந்தார்கள். நிலையத்தின் பல்வேறு ஸ்டூடியோ அறைகளுக்கு சென்று வேடிக்கை பார்த்துவிட்டு வருவது எனக்குப் பிடிக்கும். ஒவ்வொரு அறையில் ஒவ்வொரு விதமான நிகழ்ச்சிப் பதிவு நடந்து கொண்டிருக்கும். விவசாய நிகழ்ச்சி, மெல்லிசைப் பாட்டு, குழந்தைகள் நிகழ்ச்சி, விவாதம், பேச்சு, நாடகம் என்று பல சுவைகளில் இருக்கும்.
ஆல் இந்தியா ரேடியோவில் ஏதாவது நிகழ்ச்சிக்குக் காண்ட்ராக்ட் போட்டால் அதை செய்து முடித்ததும் உடனே செக் தருவார்கள். சிறிய தொகையாக இப்போது தோன்றலாம். ஆனால் 1980லிருந்து சுமார் பத்தாண்டுகள் நான் சந்தித்த கடுமையான வறுமைக் காலத்தில் அந்த ஒவ்வொரு தொகையும் மிக முக்கியமானவை. அப்போதெல்லாம் காண்ட்ராக்டில் கையெழுத்து இடும்போதே அந்தத் தொகை இன்னும் கொஞ்ச காலத்தில் கிடைக்கும் என்ற உறுதியே மனதுக்கு பெரும் ஆறுதலாக இருக்கும். அதை நம்பிக் கடன் வாங்கியிருக்கிறேன். வானொலி நிலையத்துக்குச் சென்று வேலை செய்வது மனதுக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். முற்றிலும் ஏர்- கண்டிஷன் செய்யப்பட்ட அறைகள். அப்போது அங்கே வேலை செய்பவர்கள் எல்லாரும் அவர்களுடைய அலுவல் அந்தஸ்து என்னவாக இருந்தாலும் சுதந்திரமாகவும் சமமாகவும் நட்போடும் இயங்கும் ஒரு சூழல் இருந்தது.
ஒரு தொழிலில், வேலையில் ஈடுபடுவதில் தொழில் ஒழுங்கு என்ற ஓர் அம்சம் மிக முக்கியமானது. இதை ஆங்கிலத்தில் ப்ரொஃபஷனிலிசம் என்கிறார்கள். ஆல் இந்தியா ரேடியோவில் எப்போதும் அதை நான் உணர்ந்திருக்கிறேன். தூர்தர்ஷன் உருவானபிறகு காட்சி மீடியத்தின் கவர்ச்சித்தன்மை அந்த ஒழுங்கை குலைத்ததையும் தூர்தர்ஷனில் பார்த்திருக்கிறேன். ஆனால் நான் பார்த்த காலம் வரையிலும் ரேடியோவில் அந்த ஒழுங்கு சீர்குலையவே இல்லை.
சென்னை வானொலி நிலையக் கட்டடமே அழகாகவும் பிரும்மாண்டமாகவும் இருக்கும். தூர்தர்ஷனுக்கு அப்படிப்பட்ட அழகான கட்டடம் வாய்க்கவில்லை. வானொலியின் முகப்பு பெரிய தூண்களுடன் கம்பீரமாக இருக்கும். நுழையும்போதே ஒரு முக்கியமான மதிப்புக்குரிய இடத்தில் நுழைகிறோம் என்ற உணர்வை ஏற்படுத்தும். மாடி அலுவலக அறை ஜன்னல்களிலிருந்து மெரீனா கடலைப் பார்க்க ரம்மியமாக இருக்கும்.
வானொலி மீடியத்தின் மீது எனக்கு இருந்த ஈர்ப்பு எப்போதும் குறையவே இல்லை. பின்னால் தொண்ணூறுகளில் பண்பலை ஒலிபரப்பு தொடங்கியதும் தனியாருக்கு ஸ்லாட்டுகளை விற்றார்கள். நண்பர் நேயம் வீரபாண்டியன், நாடகாசிரியர் ராது ஆகியோர் ஸ்லாட்டுகள் எடுக்க உதவி செய்தேன். வாராவாரம் அவர்களுடைய நிகழ்ச்சியை ஒரு நாள் தொகுத்து வழங்கினேன். முத்துக் குவியல் என்ற பெயரில் ஓராண்டு காலம் பாடல்களுக்கு இடையே சுவையான செய்திகளை தொகுத்து வழங்கி ரேடியோ ஜாக்கியாக் இருந்தேன்.
இந்தியாவில் தனியார் வசம் பண்பலை தாரை வார்க்கபடுவதற்கு காட்மாண்டுவில் தொண்டு நிறுவனம் நடத்திய பண்பலை நிலையத்துக்கு சென்றிருந்தேன். மிகக் குறைந்த செலவில் 50 கிலோமீட்டர் சுற்றளவுக்கு ஒலிபரப்பக்கூடிய வானொலி நிலையத்தை நம் வீட்டு மாடியிலேயே வெறும் 500 சதுர அடியில் நிறுவிக் கொள்ள்முடியும் என்பதை அங்கே பார்த்தேன். இங்கேயும் ஒரு கம்யூனிட்டி ரேடியோ நடத்துவது என் நீண்ட நாள் கனவுகளில் ஒன்று. ஆனால் அரசு தனியாரிடம் பண்பலை லைசன்ஸ் கொடுக்கும்போதே அதை பெரும் முதலீட்டுக்கான விஷயமாக சாமர்த்தியமாக மாற்றிவிட்டது. குறைந்த செலவில் ஒவ்வொரு சிற்றூரிலும் நடத்தக் கூடிய தொழில்நுட்பத்தை வேண்டுமென்றே பெரும் பணக்காரர்களுக்கானதாக அரசு மாற்றியிருக்கிறது.
இப்போதும் ஒவ்வொரு முறை மெரினா கடற்கரைக்குப் போகும்போதும், ஆல் இந்தியா ரேடியோ நிலையம் பக்கம் என் கண்கள் தன்னிச்சையாக திரும்பும்.அடுத்து அதன் எதிர்ப்பக்கம் பஸ் நிறுத்தத்தை ஒட்டி இருக்கும் டீக்கடையைப் பார்ப்பேன். ரேடியோ வேலையை முடித்தபின் நிலைய நண்பர்களுடன் பல சமயம் அங்கே டீ அருந்துவது வழக்கம்.அந்த நண்பர்கள் யாரும் அங்கே இப்போது தென்படுவதில்லை. வேறு இளைஞர்கள் அவர்களுடைய வானொலி நண்பர்களுடன் அங்கே டீ குடித்துக் கொண்டிருப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம்.
நம்ம சென்னை இதழ் மார்ச் 1, 2012
(இட நெருக்கடியினால் இதழில் சில வரிகள் இடம் பெறவில்லை.)
39 Responses to “1.ஜெயலலிதாவைக் கேளுங்கள் !2. கல்பாக்கத்துக்கு எரிமலை ஆபத்து ! மற்றும் நகர் வலம் 1/காற்றினிலே வரும்……”
Leave a Reply
அணு உலை வேண்டாம் என்பதை அரசு மதிக்காததைக் கண்டித்து வாக்காளர் அட்டையை திருப்பித்தரும் போராட்டம்
- இதையும் அரசு அலட்சியப்படுத்தினாலும்,உலக கவனத்தை ஈர்க்க நிச்சயம் செய்யவேண்டும் (100%, 1 Votes)
- இதையும் அரசு அலட்சியப்படுத்தும் என்பதால் செய்வச்தில் பயனில்லை. (0%, 0 Votes)
Total Voters: 1

நான் அணு உலைகளுக்கு எதிரான கருத்து உள்ளவன். என்றாலும், இந்தியாவில் பெருகி வரும் தேவைகள் கருத்தில் கொண்டு, கட்டி முடிக்க பட்ட அணு உலையை திறக்கலாம் என்ற நிலை பாட்டில் உள்ளவன் நான். ஆனால் “ஞாணியின்” ஒரு கருத்து என்னை மிகவும் யோசிக்க வைக்கின்றது. உலகத்தில் உள்ள எல்லா அணு உலைகளும் 50 % மின்சாரத்தைதான் தருகிறதா? ஏன் இத்தனை குறைவான மின்சாரத்தை தருகின்ற அணு உலையை இதுவரை உலக நாடுகள் உபயோக படுத்தி வருகின்றன? இல்லை இது இந்தியாவில் மட்டும் இருந்து வரும் பிரச்சனையா? இது பற்றி யாராவது கருத்து கூறலாமே?
Mr Gnani,
What is your alternative? Even though Natural Gas based power plants are cheapest, India doesnt have enough NG even for fertillizer production. Solar cost is prohibitive. Wind energy capacity factor is low(~35%). We cannot depend on wind energy alone for our energy needs. Someone has mentioned about Bloom Box here. Just read what wiki says about it. It’s highly cost prohibitive. One must realize that India is one of the fastest growing economies in the world. The total power demand in TN till 2006 was around 8500 MW. It will be around 13000 MW by this year end. Around 45% increase in 6 years compared to slow demand hikes for over 50 years.
If there is a Volcano eruption close to Chennai, we are all going to die anyways, whether there is a Nuclear power plant nearby or not.
My only suggestion is let’s not trivialize Nuclear energy by some Utopian ideals. Until technology has reached a stage where power production by other Non-Conventional energy sources are competitive, we have to include Nuclear energy also in our Power Generation Matrix.
Rgds…
Ashwin
gnani’s reply: already wind is giving more than nuclear, double the amount, at one tenth of the cost. solar is the next major alternative that needs government’s money. we need to divert the huge money in nukes to solar. remember 98 per cent of our electriicity is not nuclear and it will remain so for the next ten years that way. even after that even if nukes produce more elecrtricity, still 90 per cent would be non nuclear. so nuke is not an alternative to anything at all. it has to be dropped. japan has dumped it depsite getting 31 percent from it all these years. my booklet talks ind etail about the alternatives. it is in this site : ஏன் இந்த உலை வெறி under o pakkam category.
Is using Solar Energy so expensive to produce electricity [Aswin]? I don’t know the answer in comparision to nuclear or wind energy. But I am sure once we started using solar panels on a wider scale the production cost should come down, making it much cheaper. Ofcourse Govt should fund initially to help this industry which is safer and envirornmental friendly. Thanks.
Dear Gnani,
Compare to CFL bulbs now LED lights are getting popular and it consume even lesser power than CFL.
http://www.bbc.com/future/story/20120314-the-end-of-the-lightbulb
in Abu Dhabi, UAE, they started using this LEDs light for street lighting, even though there they dont have any problem in power generation, But considering the future and they are focusing more on Green environment they are doing this.
regards
Balaji S
sorry i forgot this link in my previous message
http://gulfnews.com/business/general/abu-dhabi-to-promote-low-energy-led-lights-1.570087
வயதானவர்கள் பழைய பஞ்சாங்கம் என்று சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன், ஞானியின் கட்டுரைகளை படிக்கும் பொது அது உண்மை என்று தெரிகிறது. அணு சக்தி துறையில் ஏற்பட்டு இருக்கும் வளர்சிகளை பற்றி தெரியாமல் சும்மா அணு மின் நிலையங்கள் ஆபத்தானது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். அணு சக்திபைவிட மிக ஆபத்தானது அனல் மின் நிலையங்கள் ஆனால் ஞானி அனல் மின் நிலையங்களை ஆதரிக்கிறார் அணு மின் நிலையங்களை எதிர்க்கிறார்…
ஞாநி பதில்: இந்த பழைய பஞ்சாங்கம் கமெண்ட்டுக்கள் இனி இங்கே அனுமதிக்கப்படமாட்டாது. என் கருத்தை மறுக்கலாம். ஆனால அசட்டு கமெண்ட்டுகளுக்கு அனுமதியில்லை. அணுசக்தி வளர்ச்சியில் எது எனக்குத்தெரியவில்லை என்று தெளிவாகச் சொல்லவேண்டும். சும்மா பொதுவாக அடித்துவிட்டுப் போகக்கூடாது. அனல் மின் நிலையங்களை நான் ஆதரிக்கிறேன் என்று பொய் எழுதுகிறீர்கள். என் கட்டுரையில் எங்கே அவற்றை ஆதரிக்கிறேன் ? இருக்கும் தொழில்நுட்பங்களிலேயே மிக ஆபத்தானது அணுசக்தி, பல தலைமுறைகளை பாதிகக்கூடியது அது என்றுதான் திரும்பத் திரும்பச் சொல்கிறேனே தவிர, இதர தொழில்நுட்பங்கள் 100 சதம் சரியானவை என்று எங்கேயும் நான் சொல்வதில்லை. மாற்று எரிசக்திகளான காற்று சூரிய சகதிகளையே நான் அதிகம் வலியுறுத்துகிறேன். அடுத்த முறை பொத்தாம் போக்கில் கமெண்ட் அடித்தால் இங்கே வெளியிடமாட்டேன்.
Who cares whether you post my comment or not, I dislike your attitude and unpatriotic articles so I am leaving. Enjoy with your JALRAs. Don’t waste your time in publishing this comment I won’t come back to this site again in my life time.
BYE
கோபக்கார குமாரவேலு, கோபம் வந்தா அறிவு மழுங்கி போய்விடும் என்பார்கள். அந்த பிரச்னை தான் உங்களுக்கும். முழுவதும் படிக்காமல் உங்களுக்கு தெரிந்ததை வைத்துகொண்டு கமெண்ட் பண்ணவேண்டாம் என்கிறார் ஞாநி. இதில் எங்கே அவருடைய நாட்டுப்பற்று இல்லாததையும், தவறான குணத்தையும் கண்டுபிடித்தீர்கள். இந்த வெப்சைட்டில் உங்க கமெண்ட் வருவதை பற்றி நீங்களே கவலைப்படவில்லை என்றால் அதை பற்றி மற்றவர்களுக்கு என்ன கவலை. இதுல ஜால்ராகளோடு என்ஜாய் பண்ணுங்கனு அறிவுரை வேறு. இந்த இணையதளத்திற்கு நீங்கள் வராமல் போனால் ஞாநி உட்பட யாருக்கும் நஷ்டமில்லை ஆனால் உங்களுக்கு? உங்களுக்கு எல்லாம் தேசபக்தினா எந்த முட்டாபயலுக வல்லரசுனாலும் “காணாத நாய் கருவாட்ட கண்டமாதிரி” பின்னாடியே ஓட வேண்டியது. எதையும் முழுசா படிக்காம கேள்வி கேட்கிறவங்கள எல்லாத்தையும் திட்ட வேண்டியது. படிச்சிட்டு பேசுங்கடானு சொன்னா. மூஞ்சிய திறிப்பிட்டு ஓடிரவேண்டியது. அதுசரி குமாரவேலு “நீங்க தமிழ்ல கமெண்ட் பண்ணுனீங்க? ஞாநியும் தமிழ்ல பதில் சொன்னாரு! அப்புறம் எதுக்கு இங்கிலிஷ்ல பிலிம் காட்டுறீங்க? காந்தி தான் சொல்லுவாரு “எந்த நோக்கமும் இல்லாமல் வெறுமனே இலக்கியம் படிப்பதை விட ராட்டையில் நூல் நூற்பது சிறந்தது” என்று அதுமாதிரிதான் சும்மா வெட்டியா இணையத்தில் உலவுவதை விட, அணு உலை இல்லையென்றால் மின்சாரமே கிடைக்காது, அணு உலையை எதிர்பவர்கள் தேச துரோகிகள் என்று வெட்டியாக இங்கே வந்து பிரசாரம் செய்வதை விட, உங்க கணினிக்கான மின்சாரத்தை சின்ன சோலர் உபகரணம் பொருத்தி மின்சாரம் கிடைக்க வேலை செய்யுங்க அதுதான் ராட்டையில் நூல் நூற்பதைவிட இப்போதைய தேவை. செய்வீர்களா?
அதற்கு ஒரே வழிதான் இருக்கு மாணவர்களை அரசியலுக்கு அழைத்து வரவேண்டும்
வணக்கம்!
இதில் பரிதாபம் என்னவென்றால் கூடங்குளம் அணு உலையின் ஆபத்தை தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான மக்கள் உணராமல் இருபத்தி நான்கு மணி நேர மின்சாரத்திலேயே குறியாக இருகின்றனர். மத்திய அரசு அனைத்தையும் மக்கள் நலனுக்காகவே செய்வதாக நம்புகின்றனர். கூடங்குளத்தில் போராடுபவர்களை தீவிரவாதிகல் என்று முத்திரை குத்துகின்றனர். அவர்களை எவ்வாறு உணர செய்வது? கேரளத்தில் இருக்கும் நூறு சதவீத ஒற்றுமை நம்மிடம் இல்லையே …..இதை திருத்துவது யாரின் கையில் கையில் இருக்கிறது?
எதிர்பார்ப்புடன் பிரதீப்
Sent an email to Ms. Jayalalitha asking her to impose Solar lighting in all buildings like water harvesting. Bcced Gnani’s hot mail id in the mail. Thanks
இந்த கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமுடியவிட்டால், நாகரிகமான முறையில் ஞாநியின் கேள்வி பதில் தொகுப்பை படிக்க http://gnani.net/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95/ கிளிக் செய்யுங்கள் அல்லது (வடிவேலு பாணியில் “நல்ல பிஞ்ச செருப்ப எடுத்து சாணியில் முக்கி அடிச்சா மாதிரி சொன்ன தான் எங்களுக்கு எல்லாம் புரியுமடா மடபயளுகளா” என்று சொல்லும் நபர்கள் என்றால் http://www.4shared.com/get/YvQyg45V/Koodangulam.html
பைலை டவுன்லோட் செய்து படியுங்கள் )
Though I completely agree with Gnani’s stand on anti nuclear energy, I feel sorry for Ms. Jayalalitha – Most of our Tamil nadu public also have bought in arguments for the nuclear energy – with or without enough knowledge on the dangers and the technology, they are asking for the nuclear plant to be opened. Congress and DMK are insisting to start the functioning of the nuclear plant. If the CM decides not to proceed with opening of the plant, DMK and other elements will lodge a PIL and stay her decision. In Samacheerkalvi, exactly the same thing happened. The TN govt wanted to revise the syllabus before it was launched and there were so many oppositions.
சார், what could be the jayalalitha’s role on this? This is central goverment’s project when she being a CM for a state?
gnani;s reply: a state government has to provide land, water, electricity facilities, law and order protection to any project situated in that state. It can refuse permission like governments of kerala and west bengal who have refused to allow asny nuclear plant in their states.
அனைவரும் சிந்திக்க வேண்டிய கேள்விகள். அணு உலையின் ஆபத்து மற்றும் அதன் அவசியமின்மை பற்றியும் எடுத்துக்கூறும் தங்களின் தொடர்ந்த பணிக்கு என் வாழ்த்துக்கள். உங்களை போல் இதை உணர்த்த அனைவரும் (நான் உட்பட) தங்களால் ஆன எதிர்ப்பை காட்டுவதின் அவசியம் புரிகிறது. கண்டிப்பாக நானும் email செய்கிறேன் (வெளிநாட்டில் வாழ்வதால் இதை மட்டுமே செய்யும் நிலை).
முன்பு நீங்களும் மற்ற படைப்பாளிகளும் இது தொடர்பாக ஜெயாவை சந்திக்க முயன்று முடியாமல் போனதை கூறியிருந்தீர்கள். அதன் பின் ஏதேனும் வாய்ப்புக்கிட்டியதா? வெயில் வாட்டி எடுக்கும் நம் ஊரில் எந்த காரணத்தினால் அதன் சக்தியை (Solar energy) இன்னும் நாம் பயன்படுத்தாமல் தவிர்த்து வருகிறோம்? தங்களின் விளக்கம் கிடைத்தால் மகிழ்ச்சி.
நன்றி, கார்ல்
வணக்கம்.
உங்கள் பதிவைப் படிப்பதற்கு முன் – நான்கு நாட்களுக்கு முன் வெளியிட்ட பதிப்பு இது – எளிய மொழியில் சுருக்கமான கேள்விகள்.
http://pudhiavan.blogspot.com/2012/03/blog-post_08.html
விந்தை என்னவென்றால், இந்தப் பதிப்புக்கு வலையுலக நண்பர்களிடமிருந்து கருத்துகள் அதிகம் வரவில்லை. இன்று ஒரு நண்பர், இதை நான் ஏன் எதிர்க்கிறேன் என்பது பற்றி என்னுடன் நேராக விவாதிக்க வேண்டும் என்று மற்றொரு நண்பரிடம் கூறியதாக செய்தி கிடைத்தது. நடுத்தர-மேல்நடுத்தர மக்கள் மத்தியில் கூடங்குள ஆதரவு மனநிலை ஊன்றி விட்டது. இன்றும் இதுகுறித்து ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். இதுகுறித்து உங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் திரும்பி விட்டது.
திரு ஞாநி அவர்களே, சமீபத்தில் நான் படித்த ஒரு விடயத்தை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.
கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.
இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர்.
மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.
செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை.
முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார்.
ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை.
அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார்.
அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது. இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார்.
மேலும் விவரங்களுக்கு:
http://en.wikipedia.org/wiki/K._R._Sridhar
http://tech.fortune.cnn.com/2010/02/19/is-k-r-sridhars-magic-box-ready-for-prime-time/
http://www.bloomenergy.com/
இதைப் பற்றியக் கருத்தை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.
Dear Gnani Sir,
You have been insisting for years that nuclear power plant is not 100% and the same has been said by our civil society leaders to our PM in an open letter.This has been published in below link
http://www.ndtv.com/article/india/we-are-not-china-write-angry-civil-society-leaders-to-pm-182880
ப்ளீஸ் note the list of persons and their profile in the letter.They also clearly mentioned the reasons for their ideas(as like you) against nuclear power plant.
Gnani sir, please forward this link to all and its of great worth.
கல்கியில் “ஒ” பக்கங்களை தொடர்ந்து படித்து வருகிறேன். இப்போது தான், “கேள்விகளை” படித்துவிட்டு, ஒருவேளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு கிடைத்தால், தமிழ்நாட்டில் நடப்பதை அறியாத பிற மாநிலத்தை சேர்ந்த நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்று வலை தேட துவங்கினேன். timely questions, the mainstream media has been sandbagged with embedded news this morning to ensure not much on 1st anniversary of Fukushima appears. Hope you don’t mind a translated version being shared with others.
All strength to you!
நீங்களும் எவ்வளோவோ லெட்டர் எழுதிவிட்டீர்கள். ஜெயலலிதா உங்களை seriousagave எடுத்துக்கொள்ளவில்லை. இப்போ எங்களை எழுத சொல்கிறீர்கள். நல்ல காமெடி http://www.enecho.meti.go.jp/topics/energy-in-japan/english2010.pdf
ஞானி அவர்களே, இந்தியாவில் 4800 மெகாவாட் அணுமின் உற்பத்தி செய்யப்படுகிறது. அரசாங்க நிறுவனமான இது, 2032 ல் 6300 மெகாவாட்டாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது உற்பத்தியாகும் காற்றாலை உற்பத்தி அளவு 6200 மெகாவாட் ஆகும். இது மொத்த இந்திய மி உற்பத்தியில் 1.6 % ஆகும்.
என் தந்தையும் சென்னையில், ரயில்வேயின் மின்சார பொறியிலராகத்தான் இருந்தார். எனக்கும் ஆற்காட்டார் சிறிதுகாலம் ஆறுதலாக இருந்தார்.
நீங்கள் கிரீன்பீஸ் அல்லது கிறிஸ்தவ நிறுவனங்களின் ஆதரவளாலராக கூடங்குளம் விஷயத்தை எதிர்த்தால் அதில் என் உடன்பாடில்லை. இதுபோல்.. -Prominent among those who were part of the Koodankulam Anti-nuke Confederation, the organisation that sought to stir the consciousness of the people all over Tamil Nadu and also in places such as Mumbai and Delhi after its launch in 1988 were: Gomez, Mani, an engineer-turned journalist G Ramesh, Fr Samy of Indian Catholic Youth Federation and Dr C N Deivanayagam of Chennai.- http://www.dianuke.org/koodankulam-struggle-25-years-of-sweat-and-toil/ – .
நான் இளங்கலை இயற்பியல் படித்தவன், முதுகலை பாதுக்காப்பியல் துறையும், ஆராய்ச்சி படிப்பும் படித்தவன்.. நான் தேவையில்லாததை(மிக மதிப்புமிக்கதானதாக இருந்தாலும்) தேவையிலாதவர்களிடம் கூறுவதால் தோல்விகளை சந்தித்துவருகிறேன் .
என்னுடைய கல்வியறிவு கோணத்தில்(பாதுகாப்பு) குடங்குளத்தை 1999 திலிருந்து பலநிலைகளில் எதிர்த்து எழுதி வருகிறேன். ஆனால் எவ்வித மதிப்பும் அன்னுடைய கருத்துக்கு இருந்ததில்லை. தற்போது அமெரிக்க – ரஷிய வியாபார போட்டியில் பிரபலமாகிறதா தெரியவில்லை?.
பொறுத்திருந்துதான் நானும் கருத்தெழுத வேண்டும் !.
எல்லாம் சரியான kELvigaL … ஆனால் டிரான்ஸ்மிஷனில் 70 மெகாவாட் போய்விடுமென்று சொல்வது தவறு.நமது மாநிலத்தில் 18% தான் இழப்பு .
http://www.tn.gov.in/policynotes/pdf/energy.pdf
ஞாநி பதில்: நடைமுறையில் 20 சதவிகிதத்துக்கு மேல் என்பது எனக்கு மின்வாரிய நண்பர்கள் தெரிவிக்கும் தகவல். எனவே 20 சதவிகிதம்தான கணக்கிட்டிருக்கிறேன்.
“கல்பாக்கத்தில் பெரும் விபத்து ஏற்பட்டால் போயஸ் கார்டன், கோபலபுரம் முதல் பாண்டிச்சேரி வரை அழியும்”
ரைட் – அப்போ தலைங்களே ஆபத்துல தேன இருக்குங்க… வாளுங்களுக்கு என்ன பிரிச்சனை?
மக்கள் வழியே தலைவர்கள் வழியாக இருக்க வேண்டும்.
தலைவருக்கு 3 wife என்பதால் நாமும் அவ்வாறு இருக்கலாம் என்ற வாதம் சரி அல்ல.
It is surprise to hear that there is a dormant volcano near Kalpakkam because there is no plate boundary near kalpakkam. We have one active volacano in Barren island and inactive one at Narcondam. Both are belonging to andaman group of islands. It is there indian plate is meeting sunda plate. So the presence of volacano is natural there. But when you say that there is a volcano near Kalpakkam it is difficult to believe.Because you havent quoted any strong sources.
I want to quote places where volacanos will be present
1.pacific ring of fire(due to presence of plate activities of pacific,northa america ,eurasia)
2.mid atlantic ridge(due to diverging plate boundaries of america and europe-africa plates)
3.east african valley(due to intra plate movements)
4.mid continental belt(volcanoes in italy, turkey and iran)
But location of kalpakkam is noway near intra plate or inter plate movements. Then how you are justifying there is dormant volcano?
It seems to me you are following the Goebbels principle (Repeat the lie 1000 times , then it will be accepted as the truth).And you are getting the supporters too.God save the nation.
gnani’s reply: your last para is unwarranted and if you write again in such atone you will be banned from this site. you are free to express your differing views but you cannot slander mehere.
My article is only an introduction to the book written by Dr.pugazhendhi and Dr.Ramesh. Please buy and read the book. It has all the sources you want. And remember Ramesh and Pugazh did not discover the volcano. It is the International Atomicd energy agency ( IAEA) that first mentioned it in its warning book on volcanoes.
Hi Sasi,
I would like to ask you one question.
Are all the 4 referenced regions (eg. the ring for fire) discovered on the same day ? If you answer “no” to the above question, your answer cannot prove what Gnani says might be wrong.
What makes you think just because you dont know, it can not be true.?
I liked you wanted to clarify; but you must not have jumped to any conclusion while you seek clarification.
sir.I will refer you the book related to geomorphology written by Strahler and strahler. It will make you clear how volcanos are forming and in which region.
வானொலிப்பற்றிய சிறந்த பதிவு..
சந்தேகமே வேண்டாம் திரு ஞானி அவர்களே, சீப் மினிஸ்டர் அவர்கள் அணு உலைக்கு ஆதரவு தருவார் என்று தான் நினைகரன். அவர்கள் bye election இக்கு வெயிட் செய்கிறார்கள். இது என் கணிப்பு. இது மாறினால் மகிழ்சி.
வானொலி ஒழிப்பு மறு காலனியாக்கத்தின் ஒரு செயல்பாடு. நம் நாடு மக்களை விட நம் அரசுகளுக்கு எப்போதுமே அமெரிக்கா மற்றும் ஐரோபாவிடம் தான் அன்பு, நேசம், பாசம் அதிகம். அதனால் தான் மன்னுமோஹனும், போலி விஞ்ஞானி அப்துல் கலாமும் போட்டி போட்டு வெளி நாட்டுக்கு சப்பை கட்டுகிறார்கள். இன்றும் வாணலியை நினைவு படுத்துகிறேன். அதற்கு உங்களுக்கு என் நன்றி.
சிறு வயதில் கேட்ட சரோஜ் நாராயணசுவாமி, தென்கச்சி சுவாமிநாதன் ஆகியோரின் குரல் இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது. இந்த தலைமுறையினர் வெகுவாக வானொலியை miss செய்கிறோம். தொலைக்காட்சி, இணையத்தளம் இரண்டையும் விட வானொலி மற்றும் புத்தகத்தில் தான் distractions குறைவு. தகவல்களை முழுமையாக உள்வாங்கலாம்.
ஞானி அவர்களே, சென்னை வானொலி எப்படி ஒரு கேட்டு மகிழ கூடிய அலைவரிசியோ, அது போலவே இப்போது மக்கள் டிவி சினிமா , சீரியல், கேம் ஷோ என்று இல்லாமல் சென்னை வானொலியின் விடியோ மீடியம் ஆகா இருக்கிறது. ஆனால் மற்ற சேனல் கள் எல்லாம் வர்த்தக நோக்குடன் நல்ல நிகழ்சிகளை எல்லாம் ஒளிபரப்பாமல் சினிமா மற்றும் மெகா சீரியல்கலையே ஒளிபரப்பி டிவி பார்பதையே வெறுக்கும் படி செய்து விட்டனர்.
மக்கள் டிவி உங்கள் கருத்து என்ன?
திரு ஞானி அவர்களே, 85 – 91 தி.மு.க பொதுக்குழு உறுப்பினராக இருந்துள்ளேன். வி.பி.சிங் எல்லா கூட்த்திற்கு சென்றிருக்கிறேன்- முரசொலி மாறன் மொழி பெயர்த்தது ஞாபகம் உள்ளது, ஞானியை கவனிக்கவில்லை. ஆனால் உங்கள் மனைவியுடன் உங்களை, சேலம் அருள்மொழி, ஸ்டீபன் கென்னடி(விடுதலை) யுடன் சந்தித்திருக்கிறேன்.
தற்போது எல்லாம் புதிதாக மாறியுள்ளது. இலங்கையையும் ஆப்கானிஸ்தான் லிருந்துதான் அணுகவேண்டியுள்ளது.
இஸ்லாமிய மயப்படுத்துதலுகும்(பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்ரா, உ.பி., ..), சீன செல்வாக்குமிடையிதான்(பெங்கால், பீகார், ஒரிசா, சட்டிஸ்கர், ஆந்திரா) இந்தியாவில் போட்டி(இந்திய ஒரிஜினாலிட்டி இல்லையென்றால்).
இதில் ஜாதியை மையமாக வைத்து உ.பி. யில் நடக்கும் விஷயங்கள். இந்திய தலைமை தளபதி சிங் கின் முரண்பாடுகள்(ராஜ்புத்), தலித்துக்களை ஆதரிக்கும் மேற்குலக அரசுசாரா நிறுவனங்கள், இவர்களுடன் பிராமணர்களை ஐக்கியப்படுத்தும் காலனித்துவ நிர்வாகம்- இவர்களின் சீன முரண்பாடு.
இவைகளைப்பற்றி, தற்போதைய உத்திரபிரேதச தேர்தல் முடிவுகளை வைத்து ஞானியின் கருத்துக்களை எதிபார்க்கிறேன் !.
குறிப்பு: இலங்கையில் சிங்களவர்கள்தான் கணிசமான செல்வாக்குடன் உள்ளனர். சத்தம் அதிகமாக விடும் தமிழர்கள் ஜனத்தொகையில் – சிங்களவர், முஸ்லிம்கள், மலையாக தமிழர்கள் களுக்கு அடுத்தபடியாக உள்ளனர்- ஆகையால், மேற்குலகம் தங்கள் கொள்கைகளுக்கு, சிங்களவர் மத்தியில் உள்ள எதிர்ப்பு சக்திகளையே நம்பியிருக்கிறது. இந்தியாவும் அப்படிதான் போகிறது.
இதை தமிழ்நாட்டில் சவுண்டு விடுபவர்கள் எப்போது உணரப்போகிறார்களோ!.
இலங்கத்தமிழர்களும், சிங்களவர்களுக்கு “தலையையும்” , தமிழ்நாட்டுக்கு “வாலையும்” நாசுக்காக காட்டுகிறார்கள்(ONLY BUSINESS). இது எப்போது முரண்பட்டு வெடிக்கப் போகிறதோ தெரியவில்லை!.
அந்தக்கால நினைவுகள் என்பார்களே… அதே போல்தான் தங்கள் கட்டுரை என்னையும் அழைத்துச் சென்றுவிட்டது. திருமதி பார்வதி ராமநாதன் மற்றும் கூத்தபிரான் இவர்களது ரசிகன் நான். ஜெயம்கொண்டான் வழங்கிய நேயர்விருப்பம் இப்போதும் எனது இனிய நினைவில் இருக்கிறது. ரேடியோ நாடக விழா நடைபெறும் நாட்களில் அப்பா அம்மாவோடு உட்கார்ந்து ரசித்தக் கேட்ட அனுபவம் மறக்க முடியாத ஒன்று. அதே போல் காரைக்குடி கம்பன் விழா தொகுப்பு. இப்போதும் கூட ரேடியோவில் கிரிக்கெட் வர்ணனை கேட்கத்தான் பிடிக்கும். பார்ப்பதை விட கேட்டல் சுகமான ஒன்று.
ஹாய் ஞானி
அந்த காலத்தில் நீங்கள் இலங்கை வானொலி கேட்டதே இல்லையா ?
அதை பற்றி ஒரு வரி கூட காணோம்
ஞாநி பதில்: தமிழ் நாட்டில் இலங்கை வானொலி என்பது தென் மாவட்டங்களில் மட்டுமே பிரபலமாக இருந்தது. வட மாவட்டங்களில் அந்த அளவுக்கு இலங்கை வானொலிக்கு ஆதரவு இருக்கவில்லை.
சூப்பர் சார் !..உங்க வீட்லலாம் கரண்ட் போகாதா…
ஞாநி பதில்: சென்னையில் வசிப்பதால் தினம் இரண்டு மணி நேரம் மின்வெட்டு எனக்கும் உள்ளது.
நான் சிறு வயதில் (15 முதல் 22 வரை ) AIR இல் இளைஞர் இசை பகுதியில் ஒரு சில முறை மிருதங்கம் வாசித்து இருக்கிறேன். நிலையத்திற்கு முதல் முறை சென்ற பொது பிரமிப்பாக இருந்தது. ஒவ்வொரு முறையும் பல புகழ் பெற்ற கலைஞர்களை பார்க்க முடியும். TV வந்தபின் வானொலியி மவுசு குறைந்துவிட்டது வருத்ததிற்குரியது. இன்றும் FM Gold, FM Rainbow நிகழ்சிகள் தரமானதாகவே உள்ளன என்பது என் தாழ்மையான கருத்து.
நகர்வலம் செய்திக்கோவை, 86 – 91 சேப்பாக்கம் வாளகத்தில், அண்ணா சமாதிக்கு எதிரான பல்கலை நூலக பின்புற கட்டிடத்தில் படிப்பு, காம்பெளண்ட் ஒட்டிய கடையில் டீ குடிப்பு- மறக்க முடியுமா மனங்கவர் மந்தகார சுழலை !.
/அந்த நூலின் குறைபாடு என்ன என்று கேட்டார்(அரவிந்தர் ஆசிரமத்திலிருந்து வந்திருந்த தேர்வாளர்). முற்றிலும் மேலை தத்துவவாதிகள் பற்றி மட்டுமே அதில் உள்ளது. கீழை தத்துவங்கள் பற்றி எதுவும் இல்லை என்றேன்./-
The central theme of Sri Aurobindo’s vision was the evolution of human life into life divine.
Sri Aurobindo synthesized Eastern and Western philosophy, religion, literature, and psychology in writings. Aurobindo was the first Indian to create a major literary corpus in English.
The amalgamation of eastern and western philosophies(theology or theosophy) was an explosive mixture rather than a harmonious unification- evident from the expriments of Adyar Thesophical society, Kalashetra, Annie Besant, Arundale…
ஞானி(உணர்ச்சி அல்ல) அவர்களே, “கீழை தத்துவங்கள் என்றால் என்ன?”- இதில்தான் என் மனம் கிடந்து அல்லாடுகிறது !.
நல்ல பதிவு,சார், நீங்க வானொலியிலும் பனிபுரிந்ததீர்களா? நீங்கள் இன்னும் சொல்லாதா அனுபவங்கள் எவ்வளவோ? திரைதுறையின் தொழில்நுட்ப விஷயங்கள்/முன்னேற்ங்களை உங்கள் பார்வையில் வாசிக்க காத்திருக்கிறேன்.
தமிழக / வட இந்திய வித்தியாசமான பயண அனுபவ கட்டுரை (யாரவது கேட்டால் தான் எழுதுவிர்கள்) எதிர்நோக்கியுள்ளேன்