
beta
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் - பல வண்மைகள் செய்வோம்
An eye for an eye will only make the whole world blind - Mahatma Gandhi

அஞ்சல் |
1.ஞாநியின் படைப்புகள் பற்றிய கருத்துக்களை அந்தந்தப் பக்கத்திலேயே உள்ள கருத்துப் பெட்டி வழியே அஞ்சலிடலாம்.
2. படைப்புகள் அல்லாத வேறு விஷயங்கள் பற்றி ஞாநியுடன் தொடர்பு கொள்ள விரும்பினால் gnani@gnani.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அஞ்சலிடலாம்.
3. தீம்தரிகிட இணைய இதழுக்குப் படைப்புகளை அனுப்ப விரும்பினால் dheemtharikida@gnani.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அஞ்சலிடலாம்.
4. இந்த இணைய தளத்தில் சந்திக்கும் தொழில்நுட்பப் பிரச்சினைகள் பற்றிய தொடர்புக்கு மின்னஞ்சல் முகவரி: admin@gnani.net
67 Responses to “அஞ்சல்”
Leave a Reply
அணு உலை வேண்டாம் என்பதை அரசு மதிக்காததைக் கண்டித்து வாக்காளர் அட்டையை திருப்பித்தரும் போராட்டம்
- இதையும் அரசு அலட்சியப்படுத்தினாலும்,உலக கவனத்தை ஈர்க்க நிச்சயம் செய்யவேண்டும் (100%, 1 Votes)
- இதையும் அரசு அலட்சியப்படுத்தும் என்பதால் செய்வச்தில் பயனில்லை. (0%, 0 Votes)
Total Voters: 1

தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் இரு கட்சிகளிலும் குறைகளுக்கும் ஊழல்களுக்கும் பஞ்சமில்லை.தங்களை போன்ற ஒருவர் 49′O’ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது போல இளைஞர்களை அரசியலில் ஈடுபடுவது குறித்த விழிப்புணர்வை எற்படுதமுடியதா?ஏனெனில் தமிழகத்தில் இனி இந்த கட்சிகளால் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட போவதில்லை.நிலைமை மோசமாகாமல் வேண்டுமானால் இருக்கலாம்.இது குறித்து உங்கள் பதிலை ஆவலுடன் எதிர் பார்க்கின்றோம்…
மதிப்பிற்குரியதிரு.ஞானி அவர்களுக்கு
R.S.ஸ்வர்ணலதாவின் வணக்கங்கள்
நம்ம சென்னை இந்த மாத இதழில் தாங்கள், சென்னை வானொலி புகழ் மறைந்த திருமதி பார்வதி ராமநாதன் அவர்களைப்பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள்.
அந்தக் குரலரசியின் மகள் நான் என்று பெருமிதத்துடனும் பணிவுடனும் என்னை
தங்களுக்கு அறிமுகம் செய்து கொள்வதில் மிகுந்தமகிழ்ச்சி கொள்கிறேன். சில ஆண்டுகளுக்குமுன் திரு.மணியன் அவர்களின் பதிவுக்கூடத்தில்FM Radioவுக்காக
‘ஆனந்தக்கும்மி’ என்ற நிகழ்ச்சியில் நான் தொடர்ந்து பல வாரங்கள் தொகுப்பாளராக குரல்கொடுத்துவந்தேன்.அப்போது தங்களை சந்திக்கும் வாய்ப்புபெற்றேன். வேலையில் முனைந்திருந்ததால் அப்போது என்னை அறிமுகம் செய்துகொள்ள முடியவில்லை.என் அம்மாவை இன்றும் நினைவில் வைத்து அவர்களைப்பற்றி தாங்கள் எழுதியது எங்கள் இதயத்தை தொட்டது. என் அம்மாவை தாங்கள் நேரில் பார்த்ததில்லை என்பதால்,தாங்கள் விரும்பினால் என் அன்னையின் புகைப்படம் ஒன்றை தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் அனுப்பிவைப்பேன்
With Warm Regards,
R.S.Swarnalatha
உங்களின் காந்திய கட்டுரைகளால் ஈர்கபட்டவன் நான் அதனால்தான்…………sorry, ஞானி. நன்றி
11 03 12 அன்று நடந்த கேணி கூட்டம் சிறப்பாக இருந்தது. அழகிய பெரியவன் அவர்களின் உரை சிறப்பாக அமைந்தது.இறுதியாக அவர் காந்தியை பற்றி அவர் கூறிய கருத்து விழாவின் கரும் புள்ளி ஆக அமைந்தது. காந்தியவாதியான நீங்கள் ஏன் ஞானி மறுப்பு தெரிவிக்க வில்லை?அறிவு ஜீவிகள் ஒவொருவரும் ஒரு ஒரு கருத்தை கூறும் போது என் போன்ற சாதரணமானவர்கள் காந்தியை எவ்வாறு புரிந்து கொள்வது?
ஞாநி பதில்: கேணியில் நானும் பாஸ்கர் சக்தியும் அமைப்பாளர்கள். கூட்டத்தை வழி நடத்தும் நான், பேச்சாளருடைய கருத்தை மறுத்து அவ்ருடன் நான் விவாதங்களில் ஈடுபடுவதில்லை. பேச்சாலர் கருத்தை இன்னும் விரிவுபடுத்திப் பேசவும் ஆழமகப்பேசவும் உதவும் கேள்விகளைக் கேட்பதை மட்டுமே அவ்வப்போதுசெய்வேன். அதுவும் நேயர்களிடமிருந்து கேள்விகள் அடுக்கடுக்கக வரும்போது மிக அவசியமானாலொழிய நான் என் கருத்தை முன்வைப்பதில்லை. அழகிய பெரியவனின் காந்தி பற்றிய கருத்தை நேயர் ஒருவர் மறுத்து அவருடன் விவாதித்ததும் அதே கூட்டத்தில் நடந்தது. காதியைப் பற்றிய அவ்ர் கருத்தை நீங்கள் கரும்புள்ளி என்று கருதுவது போல வேறு நேயர் அந்தக் கருத்துதான் நிகழ்ச்சியின் சிறப்பு என்றும் கருத இடமுண்டு. கேணி ஒரு படைப்பாளியின் பார்வை என்ன என்பதை நேயர்கள் அறிய உதவுகிறது. அவை பற்றிய தொடர்ந்த சிந்தனைகள் விவாதங்கள் நேயர் மனங்களிலும் பின்னர் அவர்கள் வாழ்வின் வேறு தருணங்களிலும் நடக்க கேணி நிகழ்ச்சி ஒரு தூண்டுதலாக் அமையவேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கம்.
Dear Gnani,
Do you know about bloom energy Server.. An easiest way to produce electric power, which is found by K.R. Sridhar, working at NASA.
For further reference please visit this site:
http://en.wikipedia.org/wiki/Bloom_Energy_Server
regards,
Srihari
“பார்ப்பனக் கூட்டம் நடுங்க வேண்டும்!’: கருணாநிதி உருக்கமான வேண்டுகோள்
கலைஞரின் இந்த கருத்து பற்றி நீங்கள் போன வார கல்கியில் எழுதுவீர்கள் என்று எதிர்பாத்து கொண்டிருந்தேன். உங்கள் கருத்து என்னவோ?
சார்,
நீங்கள் அறிவியலை நம்புவோர்(Atheist).
ஒரு பெண் வயதுக்கு வந்தபின், திருமணத்திற்கு முன் உட்லலுறவு கொண்டால்.
அது சரியா? தவறா?
If your answer is “yes” you are atheist but its against tamil culture.
If your answer is “NO” you are not atheist, you are hiding something
கருத்துகள் :
1.தமிழ்நாடு முன்னால் முதல்வர் கருத்து “yes”
2.குஷ்பூ கருத்து “yes” but its ok because she is selling her beauty.
3.உங்கள் கருத்து என்ன ?
ஞாநி பதில்: இது அபத்தமான கேள்வி. இதற்கும் நாத்திகத்துக்கும் சம்பந்தம் இல்லை. ஒரு பெண் திருமணத்துக்கு முன் உடலுறவு கொவது சரியென்று சில ஆத்திகர்களும் தவறென்று சில நாத்திகர்களும் கூட சொல்ல வாய்ப்பிருக்கிறது. உங்கள் கருத்து என்ன ? அதை முதலில் சொல்லுங்கள். பிறகு நான் சொல்கிறேன். என் கருத்து ஏற்கனவே பல முறை பதிவாகியிருக்கிறது.
வணக்கம், உங்களின் அணு உலைகள்- வரமா, சாபமா படைப்புகள்…இட் இஸ் டூ லேட்… உங்கள் மார்க்சிய அறிவும் பிரச்சார படைப்புகளும் துளிர்விட்டபோதே பீஸ் atom க்கான விழிப்பையும் எதிர்ப்பையும் துவங்கிஇருக்கமுடியும்.BILL MOYAR இன்
occupy wallstreet இயக்கங்களின் துவக்கமே anti nuclear movements (1977 )தான்.
விடாமல் போராடுங்கள்….
அழிவின் விளிம்பில் நாம்
சார், முதல்அமைச்சரைப்பற்றி நக்கீரன் எழுதியது சரியில்லை எனினும் நக்கீரன் அலுவலகத்தை ஆளும் கட்சி தொண்டர்கள் தாக்கியது சரியானதா?? சற்று விளக்கவும்.
அன்புடன், அ. சிவராமன்
ஞாநி பதில்: நிச்சயம் தவறு. நக்கீரன் செய்தது சொல் வன்முறை அ.தி.மு.க செய்தது கல் வன்முறை. இரு வன்முறைகளையும் நான் கண்டிக்கிறேன்.
வணக்கம்
மீட்டும் நான், எது தற்காலிகமானது, சாலைகளில் ஏற்பட்டும் விபத்தா அல்லது மின்சாரம் தாக்குவதா, இன்று நடந்த விபத்தை உங்கள்ளால் நாளை தடுக்க முடிமா,
இன்று பிரிந்த உயிரை நாளை உங்களால் திருப்பி தர மூடிமா.அணு கழிவுகள் பற்றி சிந்திக்கும் நாம் அதனால் ஏற்ப்படும் பாதிப்பை உங்களால் ஒரு எடுத்துகாட்டின் மூலம் சுட்டிகாட்ட முடிமா.
ஞாநி பதில்: தயவுசெய்தி ஏற்கனவே நான் எழுதியவற்றையும், இன்னும் இணையத்திலேயே கிடைக்கும் பல கட்டுரைகளையும் சற்று தேடிப் படியுங்கள். செர்னோபில் விபத்தின் கதிரியக்க பாதிப்பின் விளைவாக் இன்னும் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். சாலை விபத்து ஏற்பட்டால் அப்போது சாவது மட்டுமே நடக்கும். அணு உலை விபத்தின் விளைவு பல தலைமுறைக்கு தொடரும். எல்லா உயிரும் ஒன்றுதான். நான் ஒன்றும் சாலை விபத்து தொடர்ந்து நடக்கட்டும் என்று சொல்லவில்லை. எனவே என் கருத்தைத் திரித்து பதில் எழுதாதீர்கள். தூங்குகிறவர்களை எழுப்பலாம். தூங்குவது போல் பாவனை செய்பவர்களை என்னால் எழுப்ப முடியாது.
In India at present Nuclear Energy contributes only 2.7% (4,780 MW out of 1,82,000 MW) with massive amount of money…
Australia, which has got about 23% of Global deposits of Uranium, has not got even a single reactor and they are cleverly planning to sell Uranium to India. They are trying to do this as if they are trying to help our country.
the fundamental question is if we require “Power or Nuclear Power”?
வணக்கம், உங்களின் அணு உலைன் பற்றிய வாதம் என்னக்கு வியப்பை வரவழைத்தது.
காரணம், ஆபத்து இல்லாத எந்த ஒரு பொருளும் இன்று நம்மை சுற்றி இல்லை.
முதலில் நீங்கள் பயன் படுத்தும் கைபேசி முதல் நீங்கள் பயணம் செய்யும் வாகனம் வரை மிகவும் ஆபத்தானவை, இருந்தும் நீங்கள் ஏன் அதை பயன் படுத்த தவறுவது இல்லை. யோசியுங்கள்
ஞாநி பதில்: இந்த வாதத்துக்கு பல முறை பதில் சொல்லி அலுப்பாக் இருக்கிறது. இதுவே கடைசி முறையாக இருக்கட்டும் என்று விரும்புகிறேன். இதர தொழில்நுட்பங்கள் எல்லாமே ஆபத்தானவைதான்.ஆனால் அவற்றைன் ஆபத்துகளின் தன்மை வேறு.1. அதை முழுமையாகக் கட்டுப்படுத்தும் அறிவு ஏற்கனவே உள்ளது. 2. அவற்றால் பாதிப்பு ஏற்பட்டாலும், பாதிப்பு தற்காலிகமானது. உடனே சரி செய்யக் கூடியது. அணு தொழில்நுட்பத்தில் இந்த இரு அம்சங்களும் கிடையாது. கழிவுகளை பல ஆயிரம வருடங்களுக்கு எப்படி பாதுகாப்பது என்பது இன்ன்மௌம் உலகம் முழுவதும் சிக்கல்தான். விபத்து ஏற்பட்டால் விளைவுகள் பல தலைமுறைகளுக்குத் தொடரும். இந்த இரு காரணங்களினால் நான் ஒருபோதும் அணு சக்தியை ஆதரிக்க மாட்டேன்.
நடுநிலை வகிக்கும் வாக்காளர்களே ஜெயலலிதாவுக்கு இந்தமுறை பெருவாரியாக வாக்களித்தார்கள்.ஆனால் ஜெயலலிதாவின் போக்கு இந்த வாக்காளர்களுக்கு எரிச்சலும் வெறுப்பும் ஊட்டுகின்றது. பேருந்து கட்டணம் அறவே கொடுமையானது. நியாயமற்றது.கீழ்நிலை அதிகாரிகள் கண்டபடி கட்டணத்தை ஏற்றிவிட்டார்கள். கிலோ மீட்டருக்கு இருபத்தெட்டு பைசாவிலிருந்து நாற்பத்திரண்டு பைசா உயர்வு உண்மையில் ஐம்பது பைசா உயர்வாக அதிகாரிகள் மாற்றிவிட்டார்கள். இதை முதல்வர் கண்டுகொள்ளவே இல்லை.. இந்த அநியாயம் தொடர்ந்தால் முதல்வர் எத்தனை சசிகலாக்களை நீக்கினாலும் naduநிலை வாக்காளர்கள் இனி ஏமாறப்போவதில்லை. மின் கட்டணங்களை இருபத்தி ஐந்து சதவீதம் ஏற்றினால் ஒப்புக்கொள்ளலாம். அதற்குமேல் என்றால் அது ஜெயலலிதாவுக்கு பிற்பாடு வீழ்ச்சி உறுதி.
சசிகலா மாபியா போனால் வேறு ஒரு மாபியா வரும். மாபியாவின் உதவி இல்லாமல் ஜெயலலிதா இயங்க முடியாது.இயங்கவும் தெரியாது எப்படியும் சசி திரும்பிவருவார். பழைய காட்சிகள் புது வடிவில் தொடரும்.
ஞானி அய்யா, தங்களால் நாங்கள் நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்கிறோம். அதற்கு என் முதற்கண் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
சார்,
எனது மலையாள நண்பன் முல்லை பெரியாறு ஆணை கேரளாவில் தோன்றி கேரளவிலேலேயே ஓடும் செய்தி அறிந்தும் எதற்கு வீண் சச்சரவுகள் என்று கேட்கிறான். நான் தமிழனாக மறுக்கவா அல்லது இந்தியனாக oppukkollava
அன்புள்ள ஞானி அவர்களுக்கு,
நாங்கள் திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த கூட்டப்புளி என்கிற கிராமத்தை சார்ந்தவர்கள். உங்களுடைய படைப்புகளை பற்றியும் செயல்பாடுகளை பற்றியும் நன்கு கேள்வி பட்டிருக்கிறோம். எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் அநீதிக்கு எதிரான கருத்துக்களை பத்திரிகைகள் வாயிலாக வெளியிடுவதிலும் அநீதிக்கு எதிராக போராடுவதிலும் உங்கள் பங்கு மிக மிக முக்கியமானது என்பதையும் அறிவோம்.
தென் தமிழகத்தின் கூடன்குளம் பகுதியில் அமைந்துள்ள அணுமின்நிலையத்திற்கு எதிரான தற்போதைய போராட்டங்களை செய்திகள் வாயிலாக தெரிந்திருப்பீர்கள். கூடன்குளம் அணுமின் நிலையம் அமைப்பது குறித்த செய்திகள் வந்த நாள் முதலே அதற்கெதிரான போராட்டங்களை நடத்தியவர் நீங்கள் என்பதையும் அதற்காக ஒரு குறும்படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டதையும் நினைவில் கொண்டுதான் இந்த கடிதத்தை உங்களுக்கு அனுப்ப முடிவு செய்தோம்.
அப்படி என்ன தவறு செய்தோம்?
எங்கள் வாழ்வாதாரம் என்பதே கடல்தான், நொடிக்கொரு முறை ஆபத்துக்களை எதிர்கொண்டு கடலில் மீன்பிடிக்க போய் வருகின்றோம், இருந்தாலும் இதுவரை ஆபத்தை தந்ததில்லை இயற்கை. ஆனால் செயற்க்கையாக அரசு எழுப்பியுள்ள இந்த ஆபத்து எங்கள் வாழ்க்கையை நாசமாக்க காத்திருப்பது தெரியாமலே இருந்து விட்டோம் இத்தனை வருடங்கள். கடலின் உப்பு போல், வெள்ளையான மனதுடன் வாழும் ஏழை எங்களை, எங்கள் வாழ்வாதாரங்களை அழிக்கும் அளவுக்கு நாங்கள் என்னதான் தவறு செய்தோம்?
என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இருக்கும் எங்களை, தீடிரென அவசர அவசரமாக எழும்பும் கட்டடங்களும், எங்கள் குடியுருப்புகளுக்கு அருகிலே அமைக்கப்படும் உலைகளும் (வீடுகளுக்கும் அணு உலைக்கும் அரை கிலோமீட்டர் இடைவெளி கூட இல்லை) பயமுறுத்துகின்றன.
இதற்கிடையே, ஊரைவிட்டு காலி செய்ய வேண்டும் என்ற செய்திகளை காதுகள் கேட்கும் போது நெஞ்சில் இடி இறங்குகிறது. இத்தனை ஆண்டுகள் தாயாக பிள்ளையாக வாழ்ந்த மண்ணை விட்டு வேறு இடத்திற்கு வலுக்கட்டாயமாக போக வேண்டுமானால் அதை விட கொடுமை என்ன இருக்க முடியும்? . . அதை விட சிட்டிசன் படத்தில் வருவது போல் கிராமம் கிராமமாக எங்களை கொன்று கடலில் வீசிவிட்டு உங்கள் அணு உலையை திறந்து கொள்ளுங்கள் என்று கத்த வேண்டும் போல் உள்ளது, இருந்தாலும் போராடாமல் மரணிப்பவன் மனிதனல்லவே. இதோ நாங்களும் போராட தயாராகிவிட்டோம்.
சென்ற மாதம் இருந்த உண்ணாவிரதப்போராட்டம் அரசு அதிகாரிகளாலும் காவல்துறையாலும் கண்துடைப்பு சமாதானம் கூறி கைவிட வைக்கப்பட்டது. இன்னும் வெள்ளேந்திகளாக இருக்கும் நாங்கள் இப்படியே எத்தனை காலம்தான் ஏமாந்து கொண்டிருப்பது.
நமீதாவின் நாய்க்கு சுகமில்லை என்றால் அலறிக்கொண்டு ஓடி புகைப்படத்துடன் செய்தி தரும் மீடியாக்களுக்கு (எல்லா மீடியாவும் அல்ல) மத்தியில் மனிதர்களாக வாழும் எங்களைப்பற்றியோ, எங்கள் கவலைகளையும் எங்கள் கேள்விக்குறியான வாழ்க்கையையும் பற்றி எழுதவும் எங்களுக்கு ஆறுதல் தரவும் இங்கே யாரும் இல்லையோ என்று எண்ணும் போது வருத்தமாக இருக்கிறது. நாங்கள் போராடுவது அதை இதை கேட்டு அல்ல, எங்கள் வாழ்க்கையை கேட்டு.
கோடிகளில் மோசடி செய்து கோட்டும் சூட்டும் போட்டுக்கொண்டும், வெள்ளை வெள்ளையாய் உடை உடுத்திக்கொண்டும் நாகரீக பேச்சோடு வெளி வேஷம் போடுவதில்லை நாங்கள். உப்பு கலந்த உடையும் உண்மை கலந்து பேச்சும் உறவுக்கான வாழ்க்கையும் வாழும் உண்மை மனிதர்கள், எங்களை அழித்துவிட்டு அந்த அரசு யாருக்காக அரசாங்கம் நடத்த போகிறது.
உங்களுக்கு ஏன் இந்த கடிதம்?
முதலில் மன்னிப்பு கேட்கிறோம், அன்றே உங்களது கரத்தை நாங்களும் சேர்ந்து வலிமைப்படுத்தி இருந்தால் ஒருவேளை இந்த நிலைக்கு ஆள் ஆகி இருக்க மாட்டோமோ என்று இப்போது தோன்றுகிறது. அதனாலே மன்னிப்பு. உங்களால் முடியும் பேனா என்ற சவுக்கால் இதுவரை நீங்கள் அநீதிக்கு எதிராக சுழற்றிய வீச்சுகளை விடவும் இனி உங்கள் வீச்சு வேகமாக இருக்கட்டும் அதற்காக உங்களுக்கு பின்புலமாக ஆயிரமாயிரம் குடும்பங்கள் இருக்கும்.
இன்றோடு இரண்டு நாட்களாக “இடிந்தகரை” என்கிற ஊரிலே தொடர்ந்து கொண்டிருக்கும் உண்ணாவிரத போராட்டம் அமைதியான வழியில் ஒரு அறப்போராக நடை பெற்று வருகிறது. தலைவர்கள் சிலரும் வந்து உரையாற்றுகிறார்கள், பலரும் வருகிறார்கள் போகிறார்கள், நாங்கள் மட்டும் கேட்பாரற்று நடு வீதியில் குழந்தைகளோடும் உறவுகளோடும் அநாதைகளாக கிடக்கிறோம்.
மீடியாக்களால் ஏற்ப்பட்ட மாற்றங்கள் எத்தனையோ உண்டு நம் நாட்டில், அந்த மீடியாக்களில் உங்கள் போன்ற மூத்த சமுதாய முற்போக்கு சிந்தனையுள்ள எழுத்தாளர்கள் எழுதும் எழுத்துக்கு வலிமை அதிகம், எங்கள் எதிர்காலம் என்ன ஆகும் என்பதையும் எங்கள் கண்ணீர் குரல்களையும் உங்கள் குரலாக உலகுக்கு தெரியப்படுத்துங்கள்.
ஏறக்குறைய 25000 குடும்பங்கள் வீட்டுக்கு நாலு பேர் என்றாலும் 1 லட்சம் மக்கள் நாதியற்று வாழ வழியின்றி நிற்கிறோம், எங்களுக்கு உங்கள் பேனா வாழ்க்கை தரும் என்ற நம்பிக்கையின் தூண்டுதலால் இந்த கடிதம் உங்கள் முகவரியில் வரைகிறோம்.
உங்கள் பேனாவில் ஊற்று எழுத எங்கள் ரத்தம் வேண்டுமானாலும் தருகிறோம், எங்களுக்காக எழுதுங்கள், எங்கள் எதிர்காலத்திற்காக எழுதுங்கள்.
உங்கள் வருகையும் உங்கள் எழுத்தையும் எதிர்பார்த்து காத்திருக்கும்
குடிமக்களுக்கான பாதுகாப்பை இழந்து நிற்கும்
இந்திய குடிமக்கள்
கூடன்குளம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள கிராம மக்கள்
ஞானி சார், விகடன் , குமுதம் ..எல்லா magazines – களையும் பணம் கொடுத்து தான் வாங்கி படிக்கிறோம். நீங்களும் உங்கள் படைப்புகளை இணைய தலத்தில் படிக்க ஒரு சிறு தொகை வசூலிக்கலாமே.
ஞானி சார், எல்லோருமே ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கிறார்களே (ஜெயலலிதா, கருணாநிதி, மாயாவதி, எட்டியுரப்ப உள்பட) , trade unions, dabbawalas, corporates, lawyers association… எனக்கு ஒரு கேள்வி …..ஊழல் யார் தான் செய்கிறார்கள்
சார்
ஆதி அமெரிக்கர்கலான செவ்விந்தியர்கள் அழிந்ததை பற்றி தாங்கள் எழுத வேண்டும் என்பது என் அவா? எழுத முயற்சிக்கவும்
நன்றி
ஹயா,
கேணியில் பங்க்கு கொள்வதற்கு விதிமுரைல்கள் ஏதானும் உள்ளதா?
ஆகஸ்ட் 14 பங்குகொள்ள விரும்புகிறேன் .
நன்றி
ஞாநி பதில்: நேரே நிகழ்ச்சிக்கு வரலாம். பொது ஒழுங்கைக் கடைப்பிடித்தால் போதுமானது.
அய்யா,
மிக்க மக்ஹிழ்ச்சி .
நன்றி .
ஞானி அவர்களே ,
உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் .
எப்படி நான் தங்கள் பணியில் பங்குகொள்வது?
ஆப்பிள் தேசம் 24 க்கு அப்புறம் எங்கு படிக்கலாம்?
ஞாநி பதில்: ஆகஸ்ட்டில் நூலாக வெளிவரும்போது படிக்கலாம். இணையத்திலும் வெளியிடப்படும்.
இனிமே எந்த வார பத்திரிக்கையும் தேவை இல்ல ..
யாருக்கும் பயப்படவும் வேண்டாம் …
இங்கேயே சந்திப்போம் …
ஆப்பிள் தேசம் கீழிருந்து மேலாக படிக்க கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது… மாற்றி அமைக்கலாமே…
உங்கள் பின்னால் மிக பெரிய இளைஞர் படை இருக்கிறது.உங்களை பின்பற்றுகிறார்கள்.இன்னும் எழுதி மட்டும் கொண்டு இருக்க போகிறீர்களா? ஏன் எல்லா ரையும் ஒன்றினைக்க கூடாது?என்ன சொல்ல போகிறீர்கள்?விடைகழுக்காக காத்து இருக்கிறது நாளய இந்தியாவின் பெரும்பான்மை சமூகம் நான் உட்பட…
கேள்விகளுடன்,
வினேஷ்
ஞானி அவர்களே !,
இந்த முறை நம் பிரதமர் வாக்களிக்கவில்லை, அதை பற்றி தங்களது கருத்தென்ன ?
நன்றி
அ செந்தில் முருகன்
ஞாநி பதில்: இந்த தளத்தில் இருக்கும் என் எல்லா கட்டுரைகளையும் ஒழுங்காகப்படித்தால் இப்படி கேள்வி கேட்கமாட்டீர்கள். இதுபற்றிஏற்கனவே எழுதிவிட்டேன். தேசிய அவமானம்.
கருணாநிதி இனி மாநில சுயாட்சி தமிழர் தன்மானம் என்று இனி பேச ஆரம்பித்து விடுவார் சிபிஐ உண்மையாகவே நடவடிகை எடுத்தால் கருணாநிதிக்கு தமிழ் கூறும் ஓர் நன்மையை நினைவு படுத்த விரும்புகிறேன் வுழ்வினை உறுத்து வந்து ஊட்டுவதும் என்பதே அது
தங்களுடைய பரிக்ஷ நாடகங்களை வெளியூர்களில் நடத்துவீர்களா?தாங்கள் விருப்பப்பட்டால் இளம் thalaimuraiyinarai naangal hosuril கூட்டுகின்றோம்.இந்த முயற்சி அவர்களிடையே விழிபுனற்சியையும் ஆர்வத்தையும் அதிகரிக்கும்.
அசோக் குமார் -ஹோசூர் -Tamilnadu
Thangaludaiya anna hazare patriya katturaiyil kuripitirupathu pol namathu naatil meediyavin aathikathinal namathu naatin ilam moolaigal malungadikapatuvitana,ivatril irunthu namathu kulanthaigalai meetka பெற்றோர்களுக்கு எவ்வாறு அறிவூட்ட போகின்றோம்?
நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் மக்கள் விரோத ஆட்சியை வீழ்த்துவதற்கு ஏதுவாக
வாக்கு அளித்திருப்பார்கள் என்று நினைகிறேன் ஆனாலும் இனி வரும் ஆட்சி எப்படி இறுக்கும் என்று எப்போது நாம் சொல்லிவிட முடியாது இப்போது நாம் பெரும் நிம்மதி முழு திருடனை துரத்தி அடிப்பது மட்டுமே
Sir:
Please write and make awareness on this too:
http://cplash.com/post/Oppose-Biotechnology-Regulatory-Authority-of-India-BRAI-Bill-Sign-petition923.html
சார். மலேசியா வில் 5 வருடங்கள் இருந்துள்ளேன்.அங்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு நடுரோட்டில் நின்றுகொண்டு போக்குவரத்தை தடை செய்து பேசிக்கொண்டு இருக்க முடியாது.ஊடகங்களின் வழியாகத்தான் அதிக பிரச்சாரம் நடக்கும். ஆனால் இங்கு கடந்த வாரத்தில் எங்கள் ஊரில் நடிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு போக்குவரத்தை தடை செய்து பிரச்சாரம் என்ற பேரில் மக்களை சிரமப்படுதிவிட்டனர்.தேர்தல் ஆணையம் அடுத்த தேர்தல்களிலாவது இந்த கொடுமைகளுக்கெல்லாம் தடை விதிக்க வேண்டும்.மற்றபடி இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் முடிந்தவரை நடுநிலையாக,சிறப்பாக செயல்படுகிறது.பாராட்டுக்கள்.சண்முகம் பேராவூரணி
தங்களுடைய ஒ பக்கம் குமுதத்தில் வருவதில்லை ஆனால் குமுதம் வெப் தளத்தில் உங்களுடைய கருத்துக்கள் வருவது எதனால்?
ஞாநி பதில்: குமுதம் நிர்வாகம்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். குமுதல் இதழ் ஒரு நிர்வாகியின் பொறுப்பிலும் குமுதம் வெப் தளம் இன்னொரு நிர்வாகியின் பொறுப்பிலும் இருப்பதே காரணம் என்று நான் நினைக்கிறேன்.
உயர்திரு
ஞானி அவர்களுக்கு
அனேக நன்றிகளுடன் தங்கள் வாசகன் அமிர்தகணேசன் எழுதுவது தங்கள் கொடுத்த தகவல் மூலம் அரு ராமநாதன் அவர்களின் வீரபாண்டியன் மனைவிபுத்தகம் வாங்கிவிட்டேன்
நன்றிகளுடன் மீண்டும் நல்லதொரு பொழுதிலே சந்திக்கும் ஆவலுடன்
வாசகன் amirthaganesan
சார் கற்பனையாக ஒரு கேள்வி.கோபமும் வருத்தமும் வேண்டாம். தேர்தல் நெருங்குகிறது தங்களின் எழுத்து தங்கள் ஆதரவு ஓட்டுக்களைப் பாதிக்கும் என கருதி ஆளும் தரப்பு சில கோடி ரூபாய்கள் தருகிறோம். தங்கள் எழுத்தின் வீச்சை குறைத்துக் கொள்ளுங்கள். என பேரம் பேசினால் ஏற்கெனவே சொந்தமாக கார் கூட வைத்துக்கொள்ளாத நீங்கள் உடன்படுவீர்களா?(மன்னிக்கவும்) சண்முகம் பேராவூரணி
சார் மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் எழுத்துக்கள் எனக்கு பிடிக்கும்.அவர் திரையில் மறைமுகமாகத்தான் எழுதுவார்.ஆனால் நீங்கள் நேரடியாக நெற்றிப்பொட்டில் அடித்தது போல எழுதுகிறீர்கள். சுஜாதாவோடு உங்களுக்கு பரிச்சயம் உண்டா? தினமணியில் மதி கார்ட்டூன் பார்க்கிறீர்களா அருமையாக இல்லை? சண்முகம் பேராவூரணி
ஞாநி பதில்: சுஜாதாவின் இரு கதைகளை நான் டி.வி தொடராக்கியுள்ளேன். அவரது சில நடவடிக்கைகளை ( பாய்ஸ் படம் போன்றவை) கடுமையாக விமர்சித்துள்ளேன். என் இணைய தளத்தின் உள்ளே சென்று எல்லாவற்றையும் படித்தால் இதெல்லாம் தெரியும். மதி ஒரு நல்ல கேலிச்சித்திரக்கரர் என்பதில் சந்தேகமில்லை.
the site has login issues.
after sign-in also it is asking to login again. if you navigate to other pages it shows that logged in. but come to ‘O-pages latest article, it is again asking to login…
take and resolve the issues.
ஆப்பிள் தேசம் எப்போ காண்பிக்கப்படும்
அன்பு வணக்கம்,
என்னை பொறுத்தவரை bus -day அல்ல, முற்றிலும் sexual harassment day பத்ரிகைகளும்,மற்ற ஊடகங்கள் அமைதி கத்து அல்லது கடுமையாக கண்டிக்காதது வருத்தம் அடையசெயகிறது..இதை eve-teasing ,ஜாலி,குறும்பு ,வயது கோளாறு என்று சொல்லிகொள்வது அதைவிட கேவலமானது.நீங்கள் எழுதுவிர்கள் என்று நம்புகிறேன்
என்றும் அன்புடன்,
முரளிதரன்.
டியர் சார் வணக்கம்
எனக்கு தங்களிடம் இருந்து ஒரு
தகவல்
வேண்டும் அரு.ராமநாதன் அவர்கள் எழு திய வீரபாண்டியன் மனைவி பு த்தகம் எங்கு கெடைக்கும்
தயுவு செய்து முகவரி எனது ஈமெயில் முகவரீக்கு தெரிவிக்கவும்
அநேக நன்றிகளுடன்
தங்கள்
வாசகன் ச அமிர்தகணேசன்
ஞாநி பதில்: http://www.viruba.com/final.aspx?id=VB0002156 என்ற இடத்துக்குப் போய் பார்க்கவும். இணையத்தில் நீங்களே தேடிக் கண்டுபிடிக்க எளிதான இந்த விஷயங்களுக்கெல்லாம் எனக்கு எழுதிக் கேட்பது அர்த்தமற்றது. இனி இவ்வாறு செய்யாதீர்கள்.
Want to kick off both parties in TN. 49′O awarness required for people.Pls expouse the same into the people for this coming 2011 election.
சார்,வணக்கம்.முன்பு நீங்கள் புகைப்பட கலை படிப்பு பற்றி எழுதி அதை துணை முதல்வர் பார்த்து நடவடிக்கை எடுத்தது போல இன்னொரு பெரிய பிரச்னை பற்றி நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டும்.அது மக்களின் மோசமான நுகர்வு கலாசாரத்தால் மாநிலமெங்கும் நகரம்,கிராமம்,விளைநிலங்கள்,நீர்நிலைகள் என எங்கு பார்த்தாலும் நிறைந்து மண்ணை மாசுறச் செய்யும் பிளாஸ்டிக் எனும் அரக்கனை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை என்பதே.மனிதன் பயன்படுத்தும் மளிகை பொருள்களில் இருந்து தண்ணீர் வரை பிளாஸ்டிக்.வருடங்களாகத்தான் மிகவும் மோசம்.மக்களின் மாறிவிட்ட பழக்க வழக்கங்கலால்தான் இந்த பிளாஸ்டிக் குப்பைகள் பெருகி விட்டன என்றாலும் அதை ஒழிக்க அரசு மற்ற வளந்த நாடுகலை போன்று மிக கண்டிப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியமான,பொறுப்பற்ற தன்மையினால்தான் இந்நிலை.நான் வாழும் கிராமப் பகுதிகளில் கூட எங்கு காணினும் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள். எனவே இந்நிலை போக்க அரசு மாபெரும் பிரசார இயக்கமாக மக்களிடம் நடத்தி பிளாஸ்டிக் உபயோகத்தை முறைப்படுத்த வேண்டும் , அல்லது தயாரிப்பையே முற்றிலும் தடை செய்ய வேண்டும். இதை தங்களின் பேனா மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுகொள்கிகிறேன். சண்முகம்
பேராவூரணி
சார் ராஜா கைது என தற்போதுதான் பார்த்தேன்.காலம் கடந்த நடவடிக்கைதானே அல்லது கூட்டணிக்காக மிரட்டும்,நடவடிக்கையாக இருக்குமா?விரைவில் உங்கள் கருத்தை கல்கியில் எதிர்பார்க்கிறேன்.சண்முகம் பேராவூரணி
என் நல்வாழ்த்துகளை இங்கே எழுதி வைக்கின்றேன்.
ஜோதிகணேசன்
தேவியர் இல்லம்
திருப்பூர்
அன்புள்ள ஞானி அவரகளே! இந்திய அரசு கறுப்புப் பணக்காரர்கள் பெயரை வெளியிட மறுப்பது ஏன்? இதைப்பற்றிய தங்கள் கருத்தை கட்டுரையாக விரைவில் எதிர்பார்க்கிறேன்..
நன்றி…
அன்புடன் ஜீவா
Dear Gnani,
We wish you to be a full time online (blog) writer instead of updating the O pakkangal from KALKI and Apple Desam from Dinamani. And you may put your voters page here everyday as the same like in exhibition.
Ashiq
Dubai
அன்புள்ள ஞானி,
கடைசி கட்டுரை எங்கே திடீரென்று காணோம்?
நல்ல கட்டுரை அது. நீங்கள் எடுத்து விட்டீர்களா அல்லது என் கணினியில் தவறா ?
அன்புடன்,
ஷ்யாம்
sir, ungal adharsanangalana periyaridamum, gandhiyidamum, eduthadhu enna ? vittadhu enna?
இணைய தளத்துக்கு அடிக்கடி சென்று விமர்சனங்களை அனுப்புவதற்கு வசதியும், நேரமும் இல்லையே என்று இந்த சாமானியன் வருத்தபடுகிறேன். சண்முகம் பேராவூரணி
Dear sir,
I wish u a happy new year to you!!!!!!!!
Hope your work on creating awareness on these corrupt politicians goes on this year also. I have seen your interview on “Captain TV” I thank you for Pulling out the truth on that interview.
sir congrats
“vote podu” is accepting more than 1 vote from the same user. You may want to fix it!
உங்கள் ஆப்பிள் தேசம் படித்து முடிக்கும் போது அமெரிக்க மண்ணை நிதானமாக தேனீர் அருந்திகொன்டே சுற்றி பார்க்க வேண்டுமென்ற ஆசை வருகிறது …என் வேலையில் அதை அடையகூடிய சாத்தியமமும் இருக்கிறது …இது போன்ற பயண கட்டுரைகள் நெறய படிக்கச் வேண்டுமேன்டற ஆசையும் மேலோங்குகிறது .குமுதத்தில் உங்களை பிரிந்தது.. சாருவால் உங்கள் வலைத்தளம் முகவரி கிடைத்தது ….நன்றி ஞாநி.
அன்புள்ள ஞானி
நான் உங்கள் ரசிகன் இல்லை. நீங்கள் மக்களுக்காக செய்யும் முயற்சிகள் அனைத்தும் பாராட்டுக்கு உரியது. இதை பற்றி பலரும் தெரிவித்து இருப்பதால் நான் அதை பற்றி எழுதப்போவது இல்லை.
நான் உங்களை விஜய் தொலைகாட்சியில் “நீயா நானா” என்ற நிகழ்ச்சியில்தான் அதிகம் பார்த்திருக்கிறேன். நான் பார்த்த வரையில் உங்களிடம் ஒரு வகையான “எதிர்மறை” குணம் நிரம்பி இருப்பது தெரிகிறது. உங்களது சமூகத்தின் கோபத்தை என்னால் உணர முடிகிறது. ஆனால் அது உங்கள் உடலையும், மனசையும், உயிரையும் பாதிக்க வல்லது. நீங்கள் எவ்வளவுதான் சமூக சீர்திருத்தம் கொண்டு வந்தாலும் உலகில் எதோ ஒன்று சரியாக இல்லாமல் தான் இருக்கும். உங்கள் பெயரோ ஞானி! ஆனால் நீங்கள் தன்னை உணரும் பாதையில் போகாத வரையில் பெயர் அளவில் மட்டுமே ஞானியாக இருக்க முடியும் என்பது என் தாழ்மையான கருத்து. நீங்கள் அந்த பாதையில் இருந்தால் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இல்லை எனில், தயவு செய்து நான் சொல்வதை சில நாட்கள் சிந்தித்து பார்த்து முடிவு எடுக்கவும். என் மனதில் பட்டதை எழுதி இருக்கிறேன். தப்பாக இருந்தால் மன்னிக்கவும்.
உங்கள் நலம் விரும்பி
வைத்தி
நீங்கள் சொல்வது தவறு.
மன்மதன் அம்பு பற்றிய உங்கள் விமர்சனம் விரைவில் எதிர் பார்கிறேன். உங்கள் அன்புள்ள ரசிகன் இப்படிக்கு. கமலின் தீவிர ரசிகன், ஆனால் இந்த படத்தில் கமலின் நடிப்பிற்கு தீனி போடாதது போல, இவர்கள் சுற்றி பார்க்க ஐரோப்பா சுற்றலா செல்லமே… அதை ஏன் படமாக ஆக்க வேண்டும்.
அன்புள்ள ஞானி ,
உங்கள் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களுக்காகவே இடையில் குமுதம் வாராந்தோறும் வாங்கி வந்தேன். இப்பொது கல்கியில் எழுதுகிறீர்கள். கல்கி படிக்குக்கும் அளவுக்கு எனக்கு பொறுமை இல்லை. நல்லவேளையாக நண்பர்களின் மூலம் (Facebook) இத்தலம் எனக்கு அறிமுகம். கிட்டத்தட்ட பாதி படித்துவிட்டேன். நீங்கள் சில விஷயங்களை பகிர்ந்துக்கொள்ளும் போது படங்களையும் போடலாம் என்பது என் கருத்து. உதாரணம் ஆப்பிள் தேசம்.
அய்யா, எனது நண்பரும் அவரது பெற்றோரும் இன்று பேருந்தில் கோவில்பட்டி பயணிக்கிறார்கள்,
அரசியல் வாதி திருமாவளவனின் அரசியல் கூட்டத்தினால் பேருந்துகள் வண்டலூருக்கு பிறகு கேளம்பக்கத்திற்கு திருப்பிவிடப்பட்டு 5 மணி நேரமாக செங்கல்பட்டு கூட தாண்டமுடியாமல் அவதிப்படுகிறார்கள். இதனை நீங்கள் ஊடகத்திற்கு எடுத்து செல்ல கோருகிறேன்.
27/12/2010 1:10 AM ஆறு மணி நேரத்திற்கு பிறகு பேருந்து G.S.T சாலையை அடைந்துள்ளது.
அன்புள்ள ஞானி,
1 . ராகுல் காந்தியை சந்தித்தீர்களா?
2 . ஒரு மாறுபட்ட அரசியல்வாதியாக ராகுல் தெரிகிறாரா?
3 . என்ன இருந்தாலும், தமிழர்களை கொன்றழித்த செயலுக்கு துணைநின்ற ஒரு கட்சியின் இளம் தலைவரை, தமிழகத்தின் அறிவு ஜீவிகள் அனைவரும் ஓடோடிச்சென்று சந்தித்தது நியாயமா?
4 . மன்மதன் அன்பு படம் எப்படி?
5 . ஒரு விமர்சகராக மனுஷின் ஒளிப்பதிவு பற்றி உங்கள் கருத்து என்ன?
புத்தாண்டு வாழ்த்துக்கள்…
அன்புடன்,
ஷ்யாம்
மதிப்பிற்குரிய திரு ஞானி அவர்களுக்கு சாமானியர்களின் மனசட்ஷியாக பத்திரிகை தளத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் நீங்கள் மேலும் சிறப்பாக பணிபுரிய வாழ்த்துக்கள்.
சார் நீங்கள் ஜெயா டிவியில் பேசியதாக நண்பர் மூலம் கேள்விப்பட்டேன். நடுநிலையாக எழுதும் நீங்கள் இதுவரை மாறி மாறி ஆண்டவர்களிடம் செல்ல வேண்டாம்.இவர்கள் இருவரை தவிர மூன்றாவது தரப்பு ஆட்சிக்கு வர உங்கள் பேனா உதவட்டும் . தினமணி நாளிதழிலும் எழுதுங்கள் இன்னும் நிறைய பேரை உங்கள் எழுத்து சென்றடையட்டும்.சண்முகம் peravoorani
ஞாநி பதில்:எனக்குப் பேசவும் எழுதவும் வாய்ப்பு தரும் இடங்களிலெல்லாம் பேசுகிறேன் எழுதுகிறேன். என் நடுநிலைக் கருத்துகளில் மாற்றம் இல்லை.
அன்புள்ள ஷான்,
தமிழகத்தின் மிகப்பெரிய சிக்கலே மூன்றாவது சக்தி விஜயகாந்த் என்பதுதான்.
முதல் இரு சக்திகளை தீயவர்கள் என்று ஒதுக்கிவிடலாம்.
ஆனால் விஜயகாந்த் நல்லவர் போல நடிக்கும் கெட்டவர்.
இவரைப்போன்று நல்லவர்களாக வேஷம் போடும் தீயவர்களே உலகின் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம்…
எனவே மூன்றாவது அணிக்கு உதவுவது என்பது தமிழகத்தை பொறுத்தவரை மூன்றாவது திருடனுக்கு உதவுவதைப போன்றது…
நடுநிலையான கருத்துகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு இருக்கும் இடங்கள் எதிலும் நம் கருத்தை பதிவு செய்யலாம் என்பது எனது தாழ்மையான கருத்து…
ஞானி மேலவைக்கு சென்றால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் மூன்று பக்கங்களுக்கு குறைகளும், மூன்றே வரிகளில் பூச்செண்டு கொடுக்கும் அவரது attitude ஐ நினைத்தால் தான் பயமாக இருக்கிறது. நல்ல மற்றும் கெட்ட விஷயங்களை நிறைய கவனித்து நேர்மறையான செய்திகளை நிறைய வெளிபடுதுபவரே நல்ல அரசியல்வாதியாக முடியும்.
சார் பத்திரிக்கை உலகத்தின் இந்த செய்தியை தாங்கள் வெளி கொண்டு வர வேணும்
http://buzznewslive.com/barkha-dutt-nira-radia-conversations-tapes-video/
சார் நீங்கள் மேலவைக்கு செல்லவேண்டும் .என விரும்புகிறேன்.ஆனால் இதை எப்படி படித்தவர் மத்தியில் கொண்டு செல்வது என்பது தான் தெரியவில்லை.மேலும் இந்த இணைய தளத்தை பற்றியும் நாளிதழ்களில் செய்தி வந்தால் எல்லோரையும் சென்றடையும் .சண்முகம் peravurani